Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்

Featured Replies

இன்னிசை அவர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து பதில் அளிப்பா

757675483413b3edbe4a01tz6.jpg

  • Replies 160
  • Views 16.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)யாழ்களத்துக்கு நீங்கள் எவ்வாறு அறிமுகமானீங்கள்,யாரால் அறிமுகபடுத்து பட்டீர்கள் என்பதை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் யாழ்ப்பானத்தை சேர்ந்தவர் அதனால் சும்ம கூகிலில் ஒருநாள் யாழ் என்டு தேட இந்த யாழ் வந்தது. எனக்கு தமிழில் டைப் பண்ண தெரியாதால் கனகாலம் வாசகியாக மட்டும் இருந்தேன் பின்னர் மோகன் அண்ணா, மதன் அண்ணாவின் உதவியுடன் டைப் பண்ண பழகி விட்டேன்இன்னிசை என்ற பெயர் உங்கள் பெயரா அல்லாவிடில் அந்த பெயரை நீங்கள் தெரிவு செய்த்தன் காரணம் என்ன?

இது என்னுடைய பெயர் இல்லை. ஆனால் எனக்கு இசையில் நல்ல ஈடுபாடு உள்ளதால் இந்த பெயரை தெரிவு செய்தேன்அத்துடன் யாழில் நுழையும் போது எவ்வாறான மனநிலையில் இருந்தனீங்க?

தமிழீழ மக்களை சந்தித்து கருத்துக்களை பரிமாற வேண்டும் என்று நினைத்தேன்

2)நீங்கள் ஒரு புதிய உறுப்பினர் உங்களை எவ்வாறு பழைய உறுப்பினர்கள் வரவேற்றார்கள்?அவர்களில் நீங்கள் மிகவும் நெருங்கிய உறவாக நினைப்பது யாரை அவர்களை பற்றி சில வரிகள் சொல்லுங்கோ?நீங்கள் யாழில் குருவாக நினைப்பது யாரை?

பழைய உறுப்பினர்கள் நன்ராகவே வரவேற்றர்கள். இவரிகளுல் எனக்கு ஜம்மு அண்ணாவை தான் பிடிக்கும். இவர் தான் முதலில் என்னை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என நினத்தவர். குரு என்று யாரும் இல்லை

3)இப்போது டைகர்பமிலி பற்றி பலதரபட்ட விமர்சங்கள் வந்தபடி உள்ளது அதை பற்றி உங்கள் கருத்து என்ன?அரட்டையும் தற்போது பலதரபட்ட விமர்சனத்திற்கு உள்ளாகபட்டுள்ளது இதை பற்றி உங்கள் கருத்து என்ன?அரட்டை அடிக்க வேண்டாம் என்று பக்கம் திறந்து அரட்டை அடிப்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?

டைகர் பமிலியை பிடிக்காதவகள் அதை கவனிக்காமல் விடலாம். செய்தி பிரிவு தவிர மற்ற இடங்களில் அரட்டை அடிப்பது எனக்கு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை

அத்தோடு ஜமுனாவும்,வானவில்லும் யாழிற்கு தேவையில்லை என்ற தொணியில் சில அன்பர்கள் இன்று கதைத்தார்கள் நீங்களும் பார்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

யாரும் தெவைஇல்லை என்று சொல்ல கூடாது எப்பவும் சீரியசாக இருந்தால் பிரசர் வரும் அதனால் அதை தடுக்க ஜம்மு வானவில் தேவை என்பது எனது கருத்து. இவர்கள் தேவை இல்லை என்பவர்கள் இவர்கள் எழுதும் கருத்துக்களை வாசிக்காமல் விடுகிறார்களா இல்லை. அகையால் இவர்களும் களத்துக்கு தேவை

4)யாழில் இப்பொது வரும் பழைய உறுப்பினர்கள் தங்களுக்கு ஒருபக்கத்திலும் எழுதமுடியவில்லை என்று மோகண் அண்ணாவோடு சண்டை பிடிப்பதை பார்த்திருக்கலாம் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?அவர்கள் செய்வது சரியா அல்லது பிழையா உங்கள் பார்வையில்?

சில கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் எதுவுமே ஒழுங்காக நடக்காது. அதனால் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தேவை. பிறகு அவைகளுக்கு எழுத மோகன் அண்ணா அனுமதி தருவேன் என்டு தானே சொன்னவர்

5)சிலர் யாழில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை வைப்பார்கள் அல்லது வில்லங்கமான கருத்துகளை வைப்பார்கள் இவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?இவர்களுக்கு நீங்க சொல்வது என்ன?இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவை தானா?

யாழின் வளர்ச்சிக்கு இவர்கள் தேவையா என்று சொல்ல முடியாது ஆனால் இவர்கள் தங்களுக்கு தேசியத்தை பற்றி விளங்காவிட்டால் தெரிந்தவர்களை கேட்கலாம் சும்மா குறை கூறக்கூடாது. அதே நேரம் நாங்கள் இப்படியானவர்களின் வாயை அடைக்க கூடிய மாதிரி பதில்கள் ச்ரியாக சொல்லி இவர்களுக்கு விளங்க படுத்த வேண்டும். நாளை தமிழீழம் பிறந்தால் இவர்களின் உதவியும் நமக்கு தேவை வரலாம்

தொடரும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6)நீங்கள் ஈழத்தில் பிறந்தனீங்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றிய அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பா,அம்மாட்ட வாங்கிய திட்டு,அடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

அதை சொல்ல வெளிக்கிட்டால் இந்த யாழ் பக்கமே காணாது அப்பாட்டை முதலும் கடைசியுமாக அடி வாங்கியது 7 வயதில். பிறகு அம்மா தான் பூசை தாறவா. நாங்கள் குழப்படி செய்தால் அப்பா தற தண்டனை அண்டைக்கு தான் சாப்பிட மாட்டார். அது எனக்கு பிடிக்காது என்டு அவருக்கு நல்லாவே தெரியும் சொ அது தான் எனது தண்டனை

7)தற்போது நீங்கள் அவுஸ்ரெலியாவில் இருக்கிறீங்க உங்களை கேட்டா அவுஸ்ரெலியா நல்லதா அல்லது சொந்த மண் நல்லதா என்று கேட்டா உங்கள் பதில் என்ன?அவுஸ்ரெலியாவிற்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?எவ்வாறு அவுஸ்ரெலியர்கள் உங்களுடன் பழகினார்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

எந்த நாடுமே எனது தாய் நாட்டிற்கு ஈடாகாது. வந்த புதிதில் சரியான பயம் . முதல் நாள் கடைக்கு போக நண்பி வரச்சொல்ல நான் எனது பாஸ்போட்டையும் கொண்டு தான் போனனான். அவ அதை இப்பவும் மற்றவர்களுக்கு சொல்லி சிரிப்பா. அவர்கள் நல்லா தான் பழகினார்கள் ஆனாலும் எனக்கு அவர்களை கண்டா ஒரு பயம் ஏனோ தெரியாது. இப்ப அப்படி ஒன்றும் இல்லை. வேலை இடத்தில் சொல்வார்கள் வந்து சேர்ந்த பொழுது நான் இருக்கும் இடமே தெரியாது ஆனா இப்ப சரியான சத்தம் என்டு

8)அடுத்தது காதல் எல்லாருக்கும் காதலை பற்றி தெரியும் உங்கள் பார்வையில் காதல் என்றா என்ன?அந்த அநுபவம் இருக்கா?இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ?காதலை வெறுப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?

காதல் என்றால் பரஸ்பர நட்பு, மரியாதை, உதவி. நல்லா இருக்கு. காதலை வெறுக்காதீர்கள் ஒருவர் ஏமாற்றி விட்டார் என்பதற்காக எல்லோரும் அப்படி என்று இல்லை. நம்பிக்கை வையுங்கள் எல்லாம் நன்றாகவே நலக்கும். அம்மா அப்பா சம்மதத்துடன் கூடிய காதல் திருமணம்

9)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனியும் யாழில் யாரை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க அதற்கான காரணம் என்ன?

கனபேரை சந்திது இருக்கிறேன். இன்னும் கனபேரை சந்திக்க வேண்டும். அப்ப்படி யாரும் இல்லை

10)உங்கள் முன் கடவுள் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டா நீங்கள் என்ன கேட்பீங்க?அதற்கான காரணம் என்ன?

தமிழீழம் வேண்டும் என்று அப்ப தானே நான் போய் எனது குடும்பத்தினருடன் இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11)ஈழத்தில் நீங்கள் அநுபவித்த இன்னல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?அதில் உங்களை மிகவும் பாதித்தது எது?தற்போது நம் தலைவன் விமானம் ஓட்டுகிறார் அதை பற்றி என்ன சொல்லுறீங்க?

கன கஸ்டம் சொல்ல கடினம்.மிகவும் பாதித்தது எனது நெருங்கிய தோழியை நவாலி தேவாலய குண்டுவீச்சில் பலி கொடுத்தது. நாங்க வேண்டினதுக்கு எல்லாம் வட்டியும் குட்டியும் சேர்த்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும்

12)பெண்களுகு இப்ப சமைக்க தெறியாது என்று பலர் சொல்லினம் தாங்கள் எப்படி?உங்களுக்கு சமைக்க தெறியுமா?ஆண்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

எனக்கு சமைக்க நல்ல விடுப்பம் விதம் விதமாக சமைப்பேன். இன்ரனெட் எனக்கு எல்லா நாட்டு செய்முறையும் தரும். ஆண்கள் - எனக்கு கருத்து ஒன்டும் இல்லை

13)நீங்கள் உங்கள் தோழிகள் எல்லாம் சேர்ந்தா என்ன குழப்படி எல்லாம் செய்வீங்கள்?அப்படி செய்து யாரிட்டையும் அடி அல்லது திட்டு வாங்கிய சந்தர்ப்பம் இருந்தா எங்கள் நெயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

நாங்க நல்ல பிள்ளைகள்

14)யாழில் புலத்தில் பிறந்தவர்கள் (இளைஞர்கள்) வருவது மிகவும் குறைவு அவர்களை யாழுக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீங்க?

எனக்கு தெரியாது

15)உங்களுக்கு எத்தனை பேர் இதுவரை காதல் கடிதம் தந்தவை அவைக்கு நீங்கள் சொன்ன பதில் என்ன?யாராவது அடி வாங்கிய சந்தர்ப்பங்களும் உண்டா? அப்படியாயின் அதையும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கோ?

படிச்சு முடிச்சு ஒரு வெலையை எடுங்கோ பிறகு பார்ப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[*]டண்- புலநாய்

[*]பொன்னி - தெரியாது

[*]குட்டிஸ்- வானொலி அறிவிப்பாளர்

[*]சோணு - ஆண்டி

[*]ஜன்னி- அக்கா

[*]பிரியசகி-

[*]வானவில்- லொல்லு

[*]புத்தன் - ஞானம்??

[*]சித்தன் - கேள்வி

[*]சுண்டல் - குளப்பம்

[*]கு.சா- தாத்தா

[*]வடிவேலு- 007

[*]தூயவன் - சாமி

[*]அனிதா- அக்கா

[*]லீசா- லீசான்

[*]மோகண்- உதவி

[*]வெங்கட்- தெரியாது

[*]யாழ்ரவி-தெரியாது

[*]யாழ்கவி-தெரியாது

[*]யாழ்பிரியா-தெரியாது

[*]தூயா- சமையல்

[*]ஜம்மு- அன்பான அண்ணா

[/லிச்ட்]இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

1 யாழில் சேர்ந்திருப்பது - அரட்டையும் செய்தியும்

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது - குழப்பம் செய்வோர்

3 யாழின் பலம் - களவிதிகள்

4.யாழின் பலவீனம் - கன முகம் கொண்ட ஒருவர்

5.யாழில் மறக்க முடியாதவர் - ஜம்மு

6.யாழில் மறக்க கூடியவர்? யாரது

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?

8.யாழின் வால்கள்

9.ஆசைக்கு?

10.அறிவுக்கு நான்[/ஃஉஒடெ]

தன்னுடைய பொன்னான நேரத்தை எங்களுக்காக பகிர்ந்து கொண்ட இன்னிசைக்கு டைகர்வானொலி சார்பாகவும் டைகர் குடுமபம் சார்பாகம் நன்றிகள் மிகவும் சுவாரசியமான பேட்டி நேயர்கள் ரசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இனிவருங்காலங்களில் ஒரு புதியவரின் பேட்டியும் ஒரு பழையவரின் பேட்டியையும் டைகர்வானொலி தர ஏற்பாடு செய்துள்ளது அதன் முதல்படி தான் இது

நீங்கள் தரும் ஆதரவில் தான் யாழ்டைகர்வானொலியின் வெற்றி தங்கயுள்ளது என கூறி உங்களிடன் இருந்து விடைபெறுபவர்கள் ஜம்முவும்,வானவில்லும்.

மீண்டும் அடுத்த முறை இனிய பேட்டியுடன் உங்களை சந்திக்கிறோம்

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வணக்கம் நேயர்களே!

இன்றைக்கு உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இரு பேட்டிகள் வழங்கப்பட்டது, பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

எங்களுக்காக தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்தனைக்காக இன்னிசை மற்றும் வடிவேல்007க்கு நன்றிகள்

என்னுமொரு பேட்டியில் உங்களை சந்திக்கிண்றேன்

Edited by வானவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்தமைக்கு வடிவேல்007க்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துகளை இங்கே பதியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=2192

வேலை செய்யவில்லை.

வணக்கம் நேயர்களே மற்றுமொரு வெள்ளி இனியமாலை பொழுதில் டைகர்வானொலி பேட்டியினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இன்று பேட்டிகாணபடுபவர் யாழில் பழைய எல்லாருக்கும் மிகவும் அறிமுகமான உறுப்பினர்.

Edited by Jamuna

இன்று பேட்டி காணும் நபர் யாழில் பழைய உறுப்பினர் உங்களுக்கு எல்லாம் தெரிந்தவா அவா தான் தூயா(பாப்ஸ்)உடாங்சம்பல் என பல பெயர்களால் அழைக்கபடுபவா........

:o

photo1043gp3.jpg

வணக்கம் தூயா பலசிரமங்கள்,வேலைபளுகளுக்கு மத்தியில் எங்கள் அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளை தெறிவித்து கொண்டு பேட்டிக்கு போவோமா

*யாழில் நீங்கள் ஒரு பழைய உறுப்பினர் என்பது யாவரும் அறிந்ததே இருந்தாலும் புதியவர்களுக்காக உங்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுக்கு தாருங்கள்?

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் தூயா என்பது உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

2)யாழில் நீங்கள் இணைந்த போதிலும் பார்க்க தற்போதைய பல மாற்றங்கள்,புது நபர்கள் என பலதரபட்ட மாற்றங்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் எற்பட்ட மாற்றம் ஆரோக்கியம் வளர்ச்சியா இல்லையா என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

3)நீங்கள் ஒரு பெண் ஆனால் பலர் பலதரபட்ட குற்றசாட்டுகளை அதாவது நீங்கள் ஆண் எனவும் தூயா பையன் எனவும் குறிபிட்டு இருந்தார்கள் அதை நீங்கள் எவ்வாறு ஏற்று கொண்டீர்கள்?அவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

4)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரடை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அத்தோடு ஜம்மு,வானவில் யாழுக்கு தேவையில்லை அவர்களை நிற்பாட்ட சொல்லியில் அவர்கள் வந்த பின் யாழின் தனித்துவம் இழந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

5)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?

தொடரும்........

6)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்,செயற்பாடுகளும் இருகின்றன இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவைதானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

7)யாழில் ஒரு துன்பியல் நிலை அதாவது புதிய உறுப்பினர்,பழைய உறுப்பினர் என்று பாகுபடுத்துவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் இது யாழின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியம் தானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

8)யாழில் நீங்கள் பல படைப்புகள்,சமையல்குறிப்புகள

Edited by Jamuna

தூயா அவர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அள்ளிப்பா காணதவறாதீர்கள்

photo1043gp3.jpg

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது

:o :P :rolleyes:

வணக்கம் யம்மு,

நலமறிய ஆவல். என்னை பேட்டி காண அழைத்தமைக்கி நன்றிகள். என் மனதில் தோன்றியவற்றை எழுதியுள்ளேன்.

தூயா

---------------------------------------------------------------------------------------------------------------------

*யாழில் நீங்கள் ஒரு பழைய உறுப்பினர் என்பது யாவரும் அறிந்ததே இருந்தாலும் புதியவர்களுக்காக உங்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுக்கு தாருங்கள்?

ஏன் யம்மு உங்களுக்கு இப்படி என் மேல் கோவம்? "பழைய" "புதிய" என்று ;) ஹி ஹி ஹி ஹி தூயாவின் அறிமுகமே யாழ் தான். புலத்தில் தமிழர்களே இல்லாத இடத்தில் இருந்த எனக்கு, யாழ் தான் தமிழை தந்தது, உறவுகளை தந்தது. இதை தவிர என்னை பற்றி ஒரு அறிமுகம் இருக்க முடியாது என நினைக்கின்றேன்.

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் தூயா என்பது உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

யாழில் இணைவதற்கு காரணம் என் மாமா. ஊருக்கு சென்ற போது கேள்விப்பட்டேன், இணைந்தேன். தூயா என்பது என் மாமா எனக்கு வைத்த பெயர்.

2)யாழில் நீங்கள் இணைந்த போதிலும் பார்க்க தற்போதைய பல மாற்றங்கள்,புது நபர்கள் என பலதரபட்ட மாற்றங்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் எற்பட்ட மாற்றம் ஆரோக்கியம் வளர்ச்சியா இல்லையா என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதை பற்றி சொல்லப்போய் தான் சில மாதங்களுக்கு முன்னர் காரசாரமான விவாதங்கள் நடந்தன. மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். புதிய முறைகளை என்னை எப்பொழுதும் பாதித்ததில்லை. அதனால் எனக்கு அது பற்றி

கூற முடியவில்லை. புதிய உறுப்பினர்கள் வரவேற்க்கப்பட வேண்டியவர்கள். அதிகம் பேர் வருகின்றனர், ஆனால் வரவேற்பு பகுதியோடு போய்விடுவது மனதிற்கு சங்கடமான ஒரு விடயம். நல்ல கருத்தாடல்களில் பங்களிப்பு, ஆக்கங்கள் என எழுதுவது நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். யாழின் எந்த ஒரு மாற்றமும் எனக்கும் யாழுக்குமான உறவை பாதித்ததில்லை.

3)நீங்கள் ஒரு பெண் ஆனால் பலர் பலதரபட்ட குற்றசாட்டுகளை அதாவது நீங்கள் ஆண் எனவும் தூயா பையன் எனவும் குறிபிட்டு இருந்தார்கள் அதை நீங்கள் எவ்வாறு ஏற்று கொண்டீர்கள்?அவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

இது என்னை துளியளவும் பாதிக்காத விடயம். அவர்களுக்கு நேரம் இருக்கின்றது, அதனால் இப்படியெல்லம் பேச முடிகின்றது. இதில் பதில் சொல்ல எதுவுமே இல்லை என நினைக்கின்றேன். எங்கள் வீட்டிலிருந்தும் யாழுக்கு வருவார்கள், இதை பற்றி வாசித்து வீட்டில் என்னை கிண்டலடிப்பார்கள். :o ஆனால் என்னை சற்றே ஆச்சர்யப்படுத்திய விடயம் இது...யாழில் சில உறவுகள் இதற்கு பதிலையும் தாங்களே தந்திருந்தார்கள்..

4)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரடை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அத்தோடு ஜம்மு,வானவில் யாழுக்கு தேவையில்லை அவர்களை நிற்பாட்ட சொல்லியில் அவர்கள் வந்த பின் யாழின் தனித்துவம் இழந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரட்டை என்பது யாழில் ஆரம்பத்தில் இருந்தே வரும் விடயம். ஆனால் அளவாக இருந்தது. பின்னர் ஒரு காலகட்டத்தில் கொஞ்சம் அதிகமானது உங்களுக்கே தெரியும். ஆனால் தற்போது அப்படியல்ல என்பது என் கருத்து. ஒரு சில பக்கங்களில் மட்டுமே அரட்டை நடப்பதை நான் பார்க்கின்றேன். யம்மு, வானவில் பற்றிய எதையும் நான் சொல்வது நல்லதல்ல. அது தனிப்பட்ட இருவரை பற்றியது. கருத்து சொல்வது அழகல்ல. ஆனால் யம்முவும், வானவில்லும் நல்ல படைப்புக்களை தரக்கூடியவர்கள்.விழித்தெழுங

Edited by தூயா

எங்களுடைய கலையகத்துக்கு பல சிரமத்துக்கு மத்தியிலும் வந்து பேட்டி அளித்த தூயாழுக்கு டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்து மிகவும் சுவாரசியமான பேட்டியாக இந்த பேட்டி அமைந்திருந்தது பேட்டியை நேயர்கள் எல்லோரும் ரசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் எமக்கு ஆதரவு தந்த நேயர்கள் மற்றும் என் நண்பன் வானவில்லுக்கும் நன்றிகளை கூறிஉ ங்களிடம் இருந்து விடை பெறும் நான் உங்கள் அன்பின் ஜம்முபேபி.

மீண்டு மறுமொரு வெள்ளி சந்திப்போம் நேயர்களே

:o

Edited by Jamuna

  • தொடங்கியவர்

எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்த தூயாவுக்கு டைகர் பமிலி சார்பாக நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

இன்று யாழின் பிரபல நபர் ஒருவரின் பேட்டி நடைபெற இருக்கிறது காணதவறாதீர்கள்

இன்று நாம் பேட்டி காணபோகும் நபர் யாழின் எல்லாருக்கும் அறிமுகமான ஒருவரே,கோபத்தின் சிகரம் என்று கூற சொல்லலாம்,இவரின் தயாரிப்பில் பெயர் போனது கேசரி,விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்,அவர் தான் சகி என அழைக்கபடும் பிரியசகி.

avatarko7tj6.jpg

வணக்கம் சகி அக்கா பல சிரமங்களுக்கும் மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பம் சார்பாகவும் நன்றிகளை தெரிவிப்பதோடு

உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுக்காக தரமுடியுமா?

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் பிரியசகி

என்பது உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

2)யாழில் நீங்கள் இணைந்த போதிலும் பார்க்க தற்போதைய பல மாற்றங்கள்,புது நபர்கள் என பலதரபட்ட மாற்றங்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் எற்பட்ட மாற்றம் ஆரோக்கியம் வளர்ச்சியா இல்லையா என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

3)அவதாரில் சினிமா கலைஞர்களின் படம் போடகூடாது என்று நீக்கியது சிறந்தக்டு என்று நினைக்கிறீங்களா இதை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்?

4)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரடை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

5)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?

6)யாழில் சில மாதங்களுக்கு முன் கோவித்து கொண்டு வரமாட்டேன் என்று சொன்னீங்கள் அதை நீங்கள் சொல்லும்போது எப்படியான மனநிலையில் இருந்தீங்கள்?திடிரேன அந்த் முடிவை மாற்றி எல்லாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினீங்கள் திடிரென மாற ஏதாவது விசேட காரணங்கள் இருந்தா அறிய தரமுடியுமா?

7)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்,செயற்பாடுகளும் இருகின்றன இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவைதானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

8)யாழில் ஒரு துன்பியல் நிலை அதாவது புதிய உறுப்பினர்,பழைய உறுப்பினர் என்று பாகுபடுத்துவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் இது யாழின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியம் தானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

9)வாழ்கையில் மறக்க முடியாத நாள் என நினைக்கும் அளவுக்கு ஏதாவது விசேடமான நாள் இருக்கா,அப்படியாயின் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

10)காதலை பற்றி யாழில் பல கருத்துகள் நிலவி வருகிறது காதலை பற்றி எல்லாருக்கும் தெறியும்(ஜம்முபேபியைதவிர) காதலை பற்றிய உங்கள் கருத்து என்ன?நீங்கள் யாரையவது காதலித்த அநுபவம் உண்டா?

தொடரும்..............

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5)வெண்ணிலா தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)தூயா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

இடைவேளையின் பின் பேட்டி மீண்டும் தொடர்கிறது

Edited by Jamuna

11)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களைம் இகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது விசேடமாக இருக்குதா?

12)தமீழிழத்தில் இருந்து புலத்திற்கு சென்ற போது புதிய மனிதர்கள் புதிய மொழி இவற்றுக்கு எல்லாம் எவ்வாறு நீங்கள் இசைவாக்கம் பெற்றீங்கள்?போன புதிடில் எப்படி உங்கள் மனநிலை என்ன?தற்போது உங்கள் மனநிலை என்ன?

13)தேச விரோத செயல்களை செய்யும் கும்பல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவர்களால் எமது தேசிய போராட்டத்தில் தடை ஏற்படும் என்று நினைக்கிறீங்களா?

14)எங்களுக்கு என்று ஒரு தனிநாடு கிடைக்க பெறும் நிலையில் தற்போது இருக்கும் நாட்டை விட்டு அங்கு செல்வீர்களா அல்லது புலத்திலேயே இருப்பீர்களா?அதற்கான காரணத்தையும் கூறுவீர்களா?

15)உலகம் அழிவதற்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்குது என்று வைத்து கொள்ளுங்கள் உங்களுடைய மனநிலை எவ்வாறிருக்கும் அந்த ஒரு நாளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

16)பெண்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு கோபம் அடிகடி வருமா ? அவ்வாறான நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?அத்துடன் பல பெண்களுக்கு தற்போது சமைக்க தெறியாது நீங்கள் எப்படி ?எவ்வாறான உணவுகளை சமைப்பீர்கள்?உங்கள் கண்ணோட்டத்தில் ஆண்கள் பற்றி?

இவர்கள் பற்றி

*வானவில்-

*இன்னிசை-

*குட்டிஸ்-

*அனிதா-

*தூயா-

*ஜனனி-

*தூயவன்-

*கலைஞன்-

*டங்கிளஸ்-

*ரசிகை-

*சிநேகிதி-

*ரசிகை-

*மணிவாசகன்-

*வெண்ணிலா-

*வினித்-

*வடிவேல்-

*சின்னப்பு-

*வலைஞன்-

*நெடுக்காலபோவான்-

*ஆதிவாசி-

*ஜம்முபேபி-

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது?

2)யாழில் கிளசுகள்?

3)யாழின் இளசுகள்?

4)சகியின் கேசரி?

5)சகியின் கோபம்?

6)யாழில் மறக்கமுடியாதவர்?

7)யாழின் பலம்?

8)யாழில் டைகர்பமிலி?

9)யாழில் ஜம்மு,வானவில்?

10)ஆசைக்கு?

11)அறிவுக்கு?

சகிஅவர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அள்ளிப்பா காணதவறாதீர்கள்

avatarko7tj6.jpg

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது

:icon_idea: :P :D

Edited by Jamuna

வணக்கம் சகி அக்கா பல சிரமங்களுக்கும் மத்தியிலும் எமது

அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பம் சார்பாகவும் நன்றிகளை தெரிவிப்பதோடு...

வணக்கம் ஜம்மு, எனக்கொரு சிரமமும் இருக்கவில்லை. பதில்கள் எழுத

கொஞ்சம் தாமதமாகி விட்டது. அதற்கு மன்னிக்கவும் :lol: .

உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுக்காக தரமுடியுமா?

என்னை தான் யாழில் எல்லாருக்குமே தெரியுமே. வேறு என்ன சொல்ல..?!

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் பிரியசகி

என்பது உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

எண்ட அண்ணா "என்னோட கூட கதைக்காம அப்பிடி என்ன செய்றார் இந்த

வெப்சைற்றில...?" எண்டு பார்க்க வந்தன். கொஞ்ச நாள் யாழ் வாசகியா இருந்துட்டு அப்புறம் பிரியசகி ஆக வந்தேன்.

"பிரியசகி..வருவேன் வாசல் தேடி" அந்த பாடலால் இந்த பெயரை அண்ணா செலெக்ட்

பண்ணினார். வேறு காரணங்கள் இல்லை.

2)யாழில் நீங்கள் இணைந்த போதிலும் பார்க்க தற்போதைய

பல மாற்றங்கள்,புது நபர்கள் என பலதரபட்ட மாற்றங்கள் அதை பற்றிய உங்கள்

கருத்து என்ன?யாழில் எற்பட்ட மாற்றம் ஆரோக்கியம் வளர்ச்சியா இல்லையா

என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

யாழுக்கு இது புது மாற்றமில்லை என்று நெக்குறன். ஏனென்றால் தொடர்ந்து

வரும் மாற்றம் இது. குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்தால் சந்தோசம் தானே.

கவலைப்பட மாட்டாங்க தானே.

3)அவதாரில் சினிமா கலைஞர்களின் படம் போடகூடாது என்று நீக்கியது சிறந்தக்டு

என்று நினைக்கிறீங்களா இதை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்?

சிறந்தது என்று நான் நினைக்கவில்லை. எதற்காக நீக்கினார்கள் என்றும் தெளிவாக

விளங்கவில்லை. பிடிக்காத போதும் யாழ் கட்டுப்பாட்டுக்கிணங்க மாற்றினேனே தவிர

அது நல்லதென்று சொல்ல மாட்டேன். யாழில் இன்னும் சினிமா பகுதி இருந்துகிட்டு

தானே இருக்கு!

4)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரடை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை

சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு

உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரட்டை இருக்கணும். ஆனால் அளவாக. இதுவே என் கருத்து.

அத்தோடு நானும் அரட்டை அடிப்பதுண்டு.

5)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?

யாரையும் சந்திக்கவில்லை. ஜெனனியை என்று சொல்லலாம்.

எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?

யாழ் உறவுகளை சந்திக்க முடிந்தால்..எனக்கு விருப்பம் தான்.

யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?

யாழில் அண்ணாக்கள், தம்பிக்கள், தங்கைகள், அக்காக்கள், நண்பர் & நண்பிகள் என்று

பலர் இருக்கினம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதத்தில் பழக்கம். யாரை என்று சொல்ல.

6)யாழில் சில மாதங்களுக்கு முன் கோவித்து கொண்டு வரமாட்டேன்

என்று சொன்னீங்கள் அதை நீங்கள் சொல்லும்போது எப்படியான மனநிலையில் இருந்தீங்கள்?

திடிரேன அந்த் முடிவை மாற்றி எல்லாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினீங்கள் திடிரென மாற

ஏதாவது விசேட காரணங்கள் இருந்தா அறிய தரமுடியுமா?

ம்..நான் எங்கம்மாவோடு நேற்று சின்ன கோவம். ஆனால் பின்னேரமே கோயில் போகும் போது நானாக போய் கதைத்தேன். கோவிக்கும் போது கோவமாக இருந்தேன்.

கவலைப்பட்டேன். அப்புறம் திரும்ப பேசும் போது மறந்து விட்டேன்.

காரண்ம் என்றால் யாழை விட்டு விலக முடியவில்லை! யாழ் உறவுகளின் அறிவுரையாலேயே வந்தேன் என்று

சொல்லலாம். ஆனால் அது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதா..?நீங்கள்

சொல்லித்தான் அறிகின்றேன்.

7)யாழில் தேசத்துக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் சிலரின் கருத்துகளும்,செயற்பாடுகளும் இருகின்றன இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவைதானா

இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

யாரென்று தெரியவில்லை. ஆனால் அது அவர்களின் வளர்ச்சிக்கும் அவதூறு

விளைவிக்குமோ என பயம்மா இருக்கு. :lol:

8)யாழில் ஒரு துன்பியல் நிலை அதாவது புதிய உறுப்பினர்,பழைய

உறுப்பினர் என்று பாகுபடுத்துவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் இது யாழின் ஆரோக்கிய

வளர்ச்சிக்கு அவசியம் தானா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

தெரிஞ்சு பேசுற பாஷை தமிழ். இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும் போது மட்டும் வருதில்லையே. ;)

9)வாழ்கையில் மறக்க முடியாத நாள் என நினைக்கும் அளவுக்கு ஏதாவது

விசேடமான நாள் இருக்கா,அப்படியாயின் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

என்னோட பிறந்த நாள் தான். பிறந்தேன் என்பதற்காக இல்லை.

அன்று தான் ஊரை விட்டு வெளியேறினேன் என்பதற்காக.

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஊராக்கள்,சொந்தங்களிடம் கண்ணீரோடு

விடை பெற்றது ஞாபகம் வரும்.

10)காதலை பற்றி யாழில் பல கருத்துகள் நிலவி வருகிறது காதலை

பற்றி எல்லாருக்கும் தெறியும்(ஜம்முபேபியைதவிர) காதலை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நீங்கள் யாரையவது காதலித்த அநுபவம் உண்டா?

எல்லாரும் சொல்லுறாங்க. இனி நாம என்னத்த சொல்ல.

காதல்..அது இருக்குற மனதை பொறுத்து இருக்கும் என்று நெக்குறன்.

தண்ணீர் போல..அதுவும் அது இருக்கும் குவளை வடிவமாகவே இருக்கும்.

காதலை பற்றி தெரியாத பேபி கிட்ட எல்லாம் அனுபவங்கள் சொல்வது

பேபியை நான் கெடுத்த மாதிரி ஆகி விடாதா?? :P

11)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன்

தமீழிழத்தில் உங்களைம் இகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக

உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது விசேடமாக இருக்குதா?

என் ஊர்,நண்பர்கள்,பள்ளி என்று பல விடயங்கள் கவர்ந்திருக்கின்றன.

இன்னும் எல்லாமே என் ஞாபகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் இழந்த

ஒரு துரதிஷ்டசாலி என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

போரினால் எத்தனையோ கொடுமைகள். சந்தித்தவை, கேள்விப்பட்டவை என பல.

எல்லாமே எல்லோர் மனதையும் பாதித்தவை தான். என் மனதையும்.

12)தமீழிழத்தில் இருந்து புலத்திற்கு சென்ற போது புதிய மனிதர்கள் பு

திய மொழி இவற்றுக்கு எல்லாம் எவ்வாறு நீங்கள் இசைவாக்கம் பெற்றீங்கள்?போன புதிடில்

எப்படி உங்கள் மனநிலை என்ன?தற்போது உங்கள் மனநிலை என்ன?

இந்த கேள்வியை பார்த்தவுடன் எனக்கு நான் இங்கு வந்த காலத்தில்

" இங்க வேணாம்..ஊருக்கு போவம்" என்று கேட்டது ஞாபகத்துக்கு வந்திச்சு.

இப்பவும் வீட்டில சொல்லி சிரிப்பாங்க.

ஆரம்பத்தில் பள்ளி போகும் போது மாறி தூரமாக பஸ்ஸால் இறங்கி நிற்கும் இடம் தெரியாமல் அழுதிருக்கிறேன். அதே நாட்டிலே தான் இப்போ படித்து வேலை

செய்கிறேன். மாற்றங்கள் எல்லாம் நன்மைக்குத்தான்! இல்லையென்றாலும் நன்மையாக நாம் மாற்றிக்கொள்ளணும் என்று தற்போது நினைக்கிறேன்.

13)தேச விரோத செயல்களை செய்யும் கும்பல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவர்களால் எமது தேசிய போராட்டத்தில் தடை ஏற்படும் என்று நினைக்கிறீங்களா?

பிடிக்காதவர்களை பற்றி என்ன கருத்து சொல்ல..?

இவர்களால் அவர்களுக்கே ஏதும் ஏற்படுமோ தெரியல..ஆனாலும் தேசியத்துக்கு

ஏற்படக்கூடாது என்பதே என் வேண்டுதல்!

14)எங்களுக்கு என்று ஒரு தனிநாடு கிடைக்க பெறும் நிலையில் தற்போது

இருக்கும் நாட்டை விட்டு அங்கு செல்வீர்களா அல்லது புலத்திலேயே இருப்பீர்களா?அதற்கான காரணத்தையும் கூறுவீர்களா?

ஊரை விட்டு நான் வெளியேறுவேன் என்றும் நான் நினைக்கவில்லை.

அதேபோல் மீண்டும் என் ஊரில் நான் வாழும் பாக்கியம் கிடைக்குமா

என்று சொல்ல தெரியவில்லை.

15)உலகம் அழிவதற்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்குது என்று வைத்து

கொள்ளுங்கள் உங்களுடைய மனநிலை எவ்வாறிருக்கும் அந்த ஒரு நாளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

ஊரில் இருக்கும் போது யாரோ 2000ம் ஆண்டு தொடங்க உலகம் அழிந்து விடும்

என்று வசந்தியை சீ வதந்தியை கிளப்பி விட்டார்கள். அப்போது நான் ஒரு முறையாவது வெளிநாட்டை பார்க்கணும் என்று ஆசைப்பட்டேன்.

இப்போது அப்படியென்றால்..என் ஊருக்கு போகணும் என்று தான் நினைப்பேன்.

இதுவும் அது போல யாரோ கிளப்பி விட்ட வதந்தி என்று நினைத்து நல்லா நித்திரை கொள்ளுவேன்.

16)பெண்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு கோபம் அடிகடி வருமா ? அவ்வாறான நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறிருக்கும்?

பெண்களுக்கு கூட கோவம் வருமாமா? சொல்லவே இல்லை.. :lol:

என்னோட கெட்ட பழக்கம் கோவம் தான்! கோவம் வந்தால் கோவம் தான் கண்ணுக்குள் நிக்கும். வேறு இல்லை. ஆனால் நான் சிறிது நேரத்திலேயெ

மறந்து திரும்பி சென்று கதைப்பேன். (அது நபர்களை பொறுத்து தான்)

என்ன பிரச்சனை என்றால்..என்னுடைய கோவம் தெரியும் பலரின் கண்களுக்கு, நான் மறந்து திரும்பி கதைப்பது தெரிவதே இல்லை.

அத்துடன் பல பெண்களுக்கு தற்போது சமைக்க தெறியாது நீங்கள் எப்படி ?எவ்வாறான உணவுகளை சமைப்பீர்கள்?

நான் ஓரளவு சமைப்பேன் ஜம்மு. உண்மையாக தான். :) அசைவம் இல்லை. சைவம் மட்டுமே.அசைவம் இந்த லீவில் பழக இருக்கிறேன்.

உங்கள் கண்ணோட்டத்தில் ஆண்கள் பற்றி?

ஆடவர் பலவிதம்!! :o

இவர்கள் பற்றி

*வானவில்- என் நீண்ட கால நண்பன்! வரமாட்டன் என்று அடம் பிடித்து வந்தவர்..இப்போது போக சொன்னாலும் போக மாட்டார்!

*இன்னிசை- யாழில் கண்டிருக்கேன். ஆனால் பெரிதாக பழக்கமில்லை.

*குட்டிஸ்- குட்டீசும் கண்டிருக்கேன். பழக்கமில்லை.

*அனிதா- என் நண்பி! கணணி வேலைகள்,எடிட்டிங்,பெயின்ரிங் எண்டு பிச்சு வாங்குவா.

*தூயா- கதைக்க நேரம் இல்லாவிட்டாலும் இடைக்கிட சுகம் கேட்கும் நண்பி.

*ஜனனி- தங்கை!

*தூயவன்- நல்ல சகோதரன்!

*கலைஞன்- மாப்பு! பல திறமைகளை கொண்டவர். அவர் கதையில் இன்னொரு தடவை நான் ஊரில் வாழுவதாக ஒரு உணர்வு!

*டங்கிளஸ்- DAN = Dan Asia Network = எனக்கு ரிரின் தான் பிடிக்கும்.

*ரசிகை- என்னோட அக்கா! அத்தோடு வாசகனோட வாசகி!

*சிநேகிதி- என் சிநேகிதி! ஊர் ஞாபகங்களை வர வழைப்பவர். சேரனோட தங்கை!

*ரசிகை- யாழில் ஒரு ரசி அக்கா தானே? :lol:

*மணிவாசகன்- ரசிகையோட ரசிகன்!

*வெண்ணிலா- என் வானத்தில அமாவாசை தான்! அதுதான் நெட் இல்லை என்று சொன்னேன்.

*வினித்- நான் அடிக்கடி சண்டை போடும் அண்ணா! பலாப்பழம் போல. வெளியில் முள்!

*வடிவேல்- நன்றாக நடிப்பார்!! அதுதான் சினிமாவை சொன்னேன்.

*சின்னப்பு- சி.அப்பு! நல்ல நகைச்சுவையாக பேசுவார். இவர் "ஓய்" போட்டு பேசும் அழகே தனி.

*வலைஞன்- வலையில் கலைஞன்!

*நெடுக்காலபோவான்- களத்தில் மட்டுமே பெண்களுக்கு எதிரா வாதாடும் ஒருவர். சண்டை போட்டாலும் நல்ல அண்ணா என்று எனக்கு பாசம் உண்டு. B)

*ஆதிவாசி- பெரிய வால்! யார் வெட்ட போயினமோ தெரியல.

*ஜம்முபேபி- பேபி என்றாலே அழகு தான். (ஆனால் பேபி போல இருந்தால் அழகா தெரியவில்லை.)என்றாலும் ஜம்முவாலும் அவர் நண்பர்களாலும் யாழில் ஒரு

கலகலப்பு இருப்பதை நான் எப்போதுமே வரவேற்கிறேன்.

உங்கள் அனுமதியோடு மேலே பெயர் குறிப்பிடப்படாத உறவுகள் பற்றி:

தற்போது யாழுக்கு வருவது குறைவென்றாலும் ஒரு காலத்தில் பழகிய உறவுகள்(சிலர் தற்போதும் என் நண்பர்கள்): தமிழ் அக்கா,குருவி அண்ணா,கவிதன் அண்ணா,மழலை,நாரதர்,தல அண்ணா, மதன், அருவி, மு.அங்கிள்.

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது? தமிழ்

2)யாழில் கிளசுகள்? பலர்

3)யாழின் இளசுகள்? யாரவர்கள்?

4)சகியின் கேசரி? செங்கலில்லை!

5)சகியின் கோபம்? வானவில்! (வானவில் போல)

6)யாழில் மறக்கமுடியாதவர்? காணாமல் போனவர்கள்!

7)யாழின் பலம்? மோகன் அண்ணா

8)யாழில் டைகர்பமிலி? முன்னேற்றம்!

9)யாழில் ஜம்மு,வானவில்? நண்பர்கள்!

10)ஆசைக்கு? யாரு?

11)அறிவுக்கு? அறிவேயில்லை!

யாழின் உறவென்ற முறையில் என்னை பேட்டிக்கு அழைத்த வானவில் & ஜம்முக்கு

நன்றிகள். முகமறியாமல் வாழும் நம்மை சேர்த்து வைத்தது யாழ்.

முகமறியாவிட்டாலும் நம் எண்ணங்களை கருத்துக்களை அறியவே இவ்வாறொரு

பேட்டியை நீங்கள் ஒழுங்கு செய்திருப்பது அழகு.

என்னை பற்றி பலருக்கு தெரியும். இன்னும் பல நமக்கு நல்ல பரீட்ச்சயம் இல்லாத உறவுகள் யாழில் இருக்காங்க. அவர்களையும் நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்பது எனது சிறிய வேண்டுகோள்.

அத்தோடு உங்கள் யாழ்ரேடியோ பணியும் மென் மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள்.

நன்றி

வணக்கம் :)

Edited by பிரியசகி

எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்த பிரியசகிக்கு டைகர் பமிலி சார்பாக நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

எங்களுக்காக நேரத்தை ஒதுக்கு சுவாரசியமான பேட்டியை தந்த சகிஅக்காவுக்கு டைகர்வானொலி,டைகர்குடும்பம் சார்பாக நன்றிகளும் வாழ்த்துகளும்.

நேயர்கள் யாவரும் இதுவரை நடந்த பேட்டியை கண்டு ரசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,மீண்டும் மற்றுமொரு இனிய வெள்ளிமாலைபொழுதில் உங்கள் அனைவரையும் சந்துக்கும்வரை உங்களிடம் வணக்கம் கூறி விடைபெற்று செல்லும் நாம் வானவில்,குட்டி இவர்களுடன் ஜம்மு

வணக்கம் நேயர்களே

இன்று பேட்டி காணும் நபர் குறும்புகளில் மன்னன்,பெண்களிடன் கண்ணன்.காதல் மன்னன் யார் என்று தெறிந்திருக்கும் என்று நினைகிறேன் அவர் தான் குட்டிஸ் மற்றும் குட்டி மாமா என்று செல்லமாக அழைக்கும் குட்டிதம்பி

av3557cd0.jpg

:P :blink:

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.