Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9) நீங்கள் ஈழத்தமிழ் குடிமகன் ? சொந்த ஊரு என்ன ? உங்க சொந்த ஊரில் பள்ளிக்கு சென்றுள்ளீர்களா ? அல்லது பிறந்ததே புலத்தில்தானா ? இருப்பினும் உங்கள் பள்ளி நாட்கள் அதில் நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செய்த குழப்படிகள் வாங்கிய அடிகள் என்பவற்றை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா ?

ஓம் , நான் ஈழத்தமிழ் குடிமகன். சொந்த ஊர் யாழ்ப்பாணத்திலுள்ள கந்தர்மடம் . இதற்கு தெற்கே யாழ் . நகரும் , மேற்கே வண்ணார் பண்ணையும் , வடக்கே யாழ் . பல்கலைக்கழகமும் , கிழக்கே நல்லூர் கந்தனும் சூழப்பெற்ற எப்போதும் பரபரப்பான அழகிய இடம் .

ஆரம்ப கல்வியை யாழ்.மத்திய கல்லூரியிலும் , உயர் கல்வியை யாழ் . இந்து கல்லூரியிலும் பயின்றேன் .

எனது அப்பா மிகுந்த கண்டிப்பானவர் . பொழுது படக்கு முன்னர் ( மாலை ஆறு மணி ) வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று கட்டளை . என்றாலும் வயதுக்கோளாறு யாரை விட்டது .

பாடசாலை முடிந்த பின் இளம் பெண்கள் உள்ள வீதிகளால் சைக்கிளில் மணி அடித்துக்கொண்டு நண்பர்களுடன் ஒரு சிறு சைக்கிள் ஊர்வலம் வைப்போம் . சில இடங்களில் பேச்சு விழும் , சில இடங்களில் புன்சிரிப்பு கிடைக்கும் . நாங்கள் பேச்சுகளை கருத்தில் எடுப்பதிலை . சில வீடுகளுக்கு முன்னால் மதிலுக்குள் செவ்விளநீர் மரம் அழகாக காய்த்து இருக்கும் . அது எங்கள் கண்களுக்கு உறுத்தியபடியே இருக்கும் . ஒரு நண்பனின் ஆலோசனைப்படி மதிலில் சைக்கிளை சாத்தி வைத்து , மதிலில் ஏறி செவ்விளநீர் எல்லாவற்றையும் பிடுங்கி ஒரு இடத்தில் இருந்து ஆறுதலாக குடித்துவிட்டு , மனத்திருப்தியுடன் வீட்டிற்கு போனேன் . வீட்டு வாசலில் அப்பா பூவரசம் தடியுடன் எனக்காகவே காத்திருந்தார் . இந்த வயதில் கள்ளக்குணம் வந்திட்டுதா என்று சொல்லி தடி முறியுமட்டும் கத்த , கத்த நல்ல அடி வாங்கினேன் . இதற்குள் நான் பாவம் என்று குறுக்கே மறிக்க வந்த அம்மாவிற்கும் பூவரசம் தடி பதம் பார்த்து விட்டது . காட்டிக் கொடுப்போர் தமிழனுடன் என்றும் இருக்கின்றார்கள் போல் உள்ளது . சில வருடங்களுக்கு முன் தாயகம் போனபோது , அவ் வீதியால் போய் பார்த்தேன் . அந்த செவ்விளநீர் மரம் ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்துக்கு வளர்ந்து , நிமிர்ந்து நின்றது .

  • Replies 160
  • Views 16.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

10)அடுத்த முக்கிய விடயம் யாழில் கலகல என கருத்தாடி வந்த ஜம்மு பேபி காய்ச்சல் காரணமாக யாழ் வராமையையிட்டு இங்கு பலர் ஜம்முக்கு திருமணாமாகியது என நையாண்டி செய்கின்றனரே . இது பற்றி உங்கள் எண்ணம் என்ன ?

ஜம்மு பேபி , தினமும் யாழ்களத்துக்கு வந்து எல்லோருடனும் கலகலப்பாக கருத்து எழுதி ஒரு பஞ்ச் கொடுத்து விட்டுப்போவார் .

அவர் வரவில்லை என்றவுடன் அவரை சீண்டி வரவைப்பதற்கான தந்திரமாகவோ , அல்லது

அவரது பஞ்ச் வசனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் இல்லாத நேரம் பார்த்து அவரது காலைவாரியதாகவோ எனக்கு தெரிகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

11)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது என்ன ? கொடிய யுத்தகாலத்தில் மாட்டிக்கொண்டதுண்டா . அவ்வாறாயின் அவ்வனுபவம் பற்றி சொல்ல முடியுமா ?

எனக்கு தமிழீழ மக்களிடம் மிகவும் கவர்ந்தவை :

கபடமற்ற, மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தும் உள்ளம்

விடுதலை வேட்கை

விடாமுயற்சி, எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்கும் தன்மை.

சேமிக்கும் பழக்கம்.

கல்வி கற்பதில் உள்ள ஆர்வம் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான் கொடிய யுத்த காலத்தில் மாட்டிக்கொண்ட அனுபவம் இல்லை . அதனால் ஏற்பட்ட பேரழிவுகளை கண்டு மனம் வேதனைப்பட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

12)பெண்களுக்கு ஏற்ற உடை எது என்ற வாக்களிப்பில் நீங்கள் எந்த உடைக்கு வாக்களித்தீர்கள். ஆண் பெண் நட்பைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? ஆண் நண்பர்களாலா இல்லை பெண் நண்பிகளாலா அதிகம் பாதிப்படைந்திருக்கிறீர்கள்?

அந்தப்பக்கம் நான் எட்டியே பார்க்கவில்லை . நீங்கள் கேட்டதற்காக சேலை , பாவாடைத்தாவணி போன்றவை நன்றாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் .

ஒழிவு , மறைவு இல்லாத வெளிப்படையான பேச்சு ஆண் , பெண் நட்புக்கு பலத்தை சேர்க்கும் .

நான் யாருடனும் கதைக்கும் போதும் வார்த்தகளை அளந்தே கதைப்பதால் இது வரை அந்தபாதிப்பு இருபாலாரிடம் இருந்தும் எற்படவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: 13)நீங்கள் 1000 கருத்துக்களை எழுதவே மூச்சு வாங்குது என சொன்னீர்களே. அப்போ ஒரு நாளைக்கு நீங்கள் 10000 கருத்துக்களை தாண்டும் போது உங்கள் மனநிலை எபப்டி இருக்கும் என நினைக்கிறீங்க?

மாரடைப்பு வந்தாலும் வந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

14)நீங்கள் மிகவும் விரும்பி பார்க்கும் தளம் என்ன ? ஏன் இதுவரையில் யாழில் எந்த சொந்த படைப்புக்களையும் படைக்கவில்லை ? உங்களிடம் நீங்கள் காணும் தனித்திறமை என எதை உணருகின்றீர்கள் ?

நான் மிகவும் விரும்பி பார்ப்பது யாழ்.களம் மட்டுமே . எனக்கு பொறுமை மிகவும் குறைவு . ஆதலினால் ஒரு சொந்த படைப்பும் படைக்கவில்லை . இனி வரும் காலங்களில் நேரமும் கிடைத்தால் பார்ப்போம் .

என்னுடைய தனித்திறமையை நான் சொல்வதை விட நீங்கள் சொன்னால் நன்றாக இருக்குமே ?

  • கருத்துக்கள உறவுகள்

15)நீங்கள் நண்பன் / நண்பி என பழகியவர்கள் யாராவது உங்களோடு பகைத்து சென்ற அனுபவம் ஏதும் உண்டா? எனினும் நீங்கள் ஒரு பகையாளியிடம் இருந்து என்னத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?

நண்பன் / நண்பி என பழகியவர்கள் என்னோடு பகைத்து சென்ற அனுபவம் இல்லை . ஆனால் பாவம் என்று இரங்கி உதவி செய்தவர்கள் பின்பு தலைக்கனம் பிடித்து திரிந்தார்கள் . அவர்களை விலக்கி வைத்துவிட்டேன் . ஒருவரின் பின்புலம் , தராதரம் பார்த்து உதவி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் .

என்னை பேட்டி கண்ட வெண்ணிலாவுக்கும், பேட்டிக்கு ஒத்தாசை புரிந்த ஜமுனாவுக்கும், மற்றும் விளம்பர உதவி புரிந்த வணிக நிறுவனர்களுக்கும், பேட்டியை வெளியிட்ட யாழ். களத்துக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்ல முடியுமா ?

*கந்தப்பு-------------------------------நல்ல கருத்தாளர்.

*இன்னிசை---------------------------களத்திற்கு அமைதியாக வந்து செல்வார்.

*வசிசுதா------------------------------ சகல பாடல்களும் இவரிடம் உண்டு.

*அனிதா-------------------------------அமைதியானவர்.

*தூயா----------------------------------யாழ். களத்தின் சமையல் அரசி.

*வல்வைசாகரா-----------------------நல்ல கவிஞர்.

*நுணாவிலான்----------------------- சகல கலா வல்லவர்.

*இனியவள்----------------------------நல்ல கவிதாயினி.

*கறுப்பி--------------------------------காலையில் கணனியை திறக்கும் போது, முக்கிய செய்திகளை எமக்காக பதிந்து வைத்திருப்பார்.

*சாத்ரி----------------------------------நல்ல நகைச்சுவை கதை எழுத்தாளர்.

*ஜம்முபேபி---------------------------களத்தில் இவர் எல்லா பகுதிகளுக்கும் துணிச்சலாக சென்று பஞ்ச் வைப்பார்.

*முரளி----------------------------------வதந்தி பரப்புபவர்.

*மணிவாசகன்-------------------------தமிழ் ஆர்வலர்.

*வலைஞன்----------------------------கண்ணில் எண்ணை விட்டு களத்தை கண்காணிப்பவர்.

*நெடுக்காலபோவான்---------------ஆணித்தரமான சிறந்த கருத்தாளர்.

*ஆதிவாசி------------------------------நல்ல நகைச்சுவையாளர்.

*புத்தன்---------------------------------நல்ல சிறுகதை எழுத்தாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரி பதில்கள்

1)யாழில் உங்களுக்கு பிடித்ததுது?------------------கருத்தாடல்.

2)யாழில் உங்களுக்கு பிடிக்காதது?-----------------தனி நபர் தாக்குதல்.

3)யாழின் ஆண் உறுப்பினர்கள்?--------------------துணிச்சலானவர்கள்.

4)யாழில் பெண் உறுப்பினர்கள்?--------------------வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது.

5)யாழில் கவிதை/ கதை?------------------------------தாய் நாட்டு வாசனையுடன் மிக அருமை.

6)யாழில் மறக்கமுடியாதவர்?-------------------------மோகன்.

7)யாழின் பலம்?----------------------------------------அவுஸ்திரேலியா தொடக்கம் அமெரிக்கா வரை உள்ள வாசகர்கள்.

8)யாழில் டைகர்பமிலி?--------------------------------நல்லதொரு குடும்பம்.

9)யாழில் ஜம்மு,நிலா?----------------------------------நல்ல கூட்டணி.

10)ஆசைக்கு?-------------------------------------------அளவில்லை.

11)அறிவுக்கு?-------------------------------------------எல்லையில்லை.

பொறுமையாகவும் திறமையாகவும் பதில் அளித்த தமிழ்சிறி அங்கிள் அவர்களுக்கு டைகர் பமிலி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றிகள் தமிழ்சிறி

மீண்டும் ஒரு பேட்டியில் சந்திக்கும்வரையில் உங்களிடமிருந்து வணக்கங்கள் கூறி விடைபெற்றும் செல்லும் நான் :D வெண்ணிலா.

அடுத்த பேட்டியை ஜம்முபேபி சிறப்பிக்கும் என்பதை கூறிச்செல்கின்றேன் :wub:

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நீங்களும் சிறப்பாக பேட்டி கண்டமைக்கு நன்றி வெண்ணிலா.

வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.