Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிங்கள வர்த்தகர்கள் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்குங்கள் : அத்துரலிய ரத்ன தேரர்

Featured Replies

தமிழ் வர்த்தகர்களும் சிங்கள வர்த்தகர்களும் இணைந்து தனியாக வர்த்தக சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியிருக்கின்றார்.

திருகோணமலை-குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராக இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகின்ற முஸ்லிம் மக்களையும் நாம் எம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

தெற்காசியாவில் மிக முக்கியமான இடமாக கிழக்கு மாகாணமும் அதிலும் மிக முக்கியமாக திருகோணமலையும் காணப்படுகிறது.

திருகோணமலையில் காணப்படுகின்ற இயற்கை துறைமுகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் நாளை 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது மதத்தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இதிலே இது தொடர்பான விடயங்கள் பேசப்பட உள்ளது.

இதேவேளை சீனாவிலுள்ள கூட்டுறவு வங்கி முறைமையை இலங்கையிலும் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்டால் வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து மூன்று தசாப்தங்களாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை உயர்த்துவதற்காக எவ்வாறான வழிகளை செய்ய வேண்டும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான வியாபாரங்கள் செய்யக்கூடியவர்கள் முஸ்லிம்களாக காணப்படுகின்றார்கள். எங்களுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.

அவர்கள் நாங்கள் விற்கும் விலையை விட குறைவான விலைக்கு விற்கிறார்கள் எனவும் அதனால் அவர்களையே தேடி செல்வதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பியந்த பத்திரன, மற்றும் மொட்டு சின்னத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தயானந்த ஜெயவீர மற்றும் திருகோணமலை நகர சபையின் பொதுஜன பெரமுன மொட்டு அணியைச் சேர்ந்த சுசந்த ஜெயலத், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

https://www.jvpnews.com/srilanka/04/224435

"தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.

தமிழர்கள் இலங்கையில்  தமது பொருளாதார வலிமையை நிச்சயம் உயர்த்தல் வேண்டும். நாட்டிற்குள் பிராந்திய ரீதியில் உள்ள சங்கங்களை பலப்படுத்தலாம். இதற்கு பரத்து வாழும் நம்மவர்கள் ஒன்றாக உதவமுடியும். புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து பல முயற்சிகளை முன்னெடுக்கலாம். 

இன்றைய உலக பொருளாதார வளர்ச்சிற்கு ஏற்ப எமது மக்களை வளம்படுத்தக்கூடிய வலிமை உள்ளது, ஆனால், அவற்றை ஒருங்கிணைக்கவும் அதற்கு உள்நாட்டில் அரசியல் ஆதரவும் பெறக்கூடிய தமிழர் அரசியல் ஆதரவும் தேவை.  

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள்... முஸ்லீம் கடைகளில்தான் பொருட்களை வாங்குவார்கள்.
அதற்காகத் தன்னும்... தமிழ், சிங்கள வர்த்தகர்கள்... இணைந்து  சங்கத்தை உருவாக்குவது 
நல்ல யோசனையாகவே தெரிகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.