Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீரிமலை சொகுசு மாளிகை: இழப்பீடு வழங்க தீர்மானம்

Featured Replies

யாழ். கீரிமலையில் கடற்படை முகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உரிமைகோரப்படும் பட்சத்தில் இழப்பீடு அல்லது காணிகை வழங்கவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

கீரிமலை பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 62 ஏக்கர் காணியை கடற்படையினர் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கின்றனர். இந்த காணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சொகுசு மாளிகை ஒன்றையும் அமைத்திருந்தனர்.

குறித்த மாளிகை அமைந்துள்ள காணியையும், அதனை சூழவுள்ள காணியையும் உள்ளடக்கி, சுமார் 62 ஏக்கர் காணியை சுற்றுலா அதிகாரசபைக்காக சுவீகரிப்பதற்கு அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது. 

மேற்படி அளவீட்டு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவிருந்த நிலையில், இன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 62 ஏக்கர் காணிக்கு 26 குடும்பங்கள் உரிமைகோரும் நிலையில், 20 குடும்பங்களின் தொடர்பு மட்டுமே தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மிகுதி 6 குடும்பங்களின் தொடர்புகள் தமக்கு கிடைக்கவில்லை. எனவும் பிரதேச செயலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி நாளை மறுதினம் குறித்த காணிகளை அளவீடு செய்வதெனவும், அளவீட்டின் போது அடையாளப்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடமே மீள கையளிக்கப்படும். 

சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை எவரும் உரிமை கோரவில்லை எனவும், அதனை யாரும் உரிமை கோரினால், அந்த காணி உரிமையாளர் தனது காணியை தரும்படி கேட்டால் காணியை கொடுப்பதெனவும், இழப்பீடு பெற விரும்பின் இழப்பீட்டை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையயே வலி. வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் எழுந்து 4ம் திகதி அளவீடு முடிவடைந்த பின்னர் காணி சுவீகரிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என ஆளுநரிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தன்னுடைய காலம் இன்னும் 4 மாதங்களுக்கு இருப்பதாக கூறியிருக்கும் ஆளுநர் அந்த காலப்பகுதிக்குள் ஜனாதிபதியுடன் பேசி உரிமைகோரப்பட்ட மக்களுடைய காணிகளை மக்களிடமே மீளவும் கையளிப்பேன் என பதிலளித்திருக்கின்றார்.

இதேவேளை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி 62 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு கடற்படை இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கீரிமலை-சொகுசு-மாளிகை-இழப்பீடு-வழங்க-தீர்மானம்/71-234852

இந்த இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

10 hours ago, ampanai said:

இந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 62 ஏக்கர் காணிக்கு 26 குடும்பங்கள் உரிமைகோரும் நிலையில், 20 குடும்பங்களின் தொடர்பு மட்டுமே தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மிகுதி 6 குடும்பங்களின் தொடர்புகள் தமக்கு கிடைக்கவில்லை. எனவும் பிரதேச செயலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி நாளை மறுதினம் குறித்த காணிகளை அளவீடு செய்வதெனவும், அளவீட்டின் போது அடையாளப்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடமே மீள கையளிக்கப்படும்.

நகு­லேஸ்­வ­ரத்­தில் – 62 ஏக்­கர் நிலத்­தைக் கைய­கப்­ப­டுத்த நடவடிக்கை!!

யாழ்ப்­பா­ணம்,  கீரி­மலை, நகு­லேஸ்­வ­ரத்­தில் உள்ள அரச தலை­வர் மாளி­கை­யு­டன் இணைத்து 62 ஏக்­கர் நிலத்­தைக் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் நாளை­ம­று­தி­னம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

அன்­றைய தினம் நில அளவை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணம், தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வில் உள்ள ஜே-226 கிராம அலு­வ­லர் பிரி­வான நகு­லேஸ்­வ­ரம் பகு­தி­யில் மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யில் இருந்­த­போது அரச தலை­வர் மாளிகை ஆடம்­ப­ர­மாக அமைக்­கப்­பட்­டது.

அந்த மாளிகை உட்­பட 62 ஏக்­கர் நிலப்­ப­குதி கடற்­ப­டை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளது. அந்­தப் பிர­தேச விடு­விக்க வேண்­டும் என்று நீண்­ட­கா­ல­மா­கக் கோரிக்கை விடுக்­கப்­பட்டு வந்­தது.

கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 62 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் 20 ஏக்­கர் பகு­தி­யி­லேயே அந்த மாளிகை அமைந்­துள்­ளது. அந்த மாளி­கைத் தவிர்த்து ஏனைய நிலப் பகு­தியை விடு­விக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­ரா­ஜா­வும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

அங்கு ஆடம்­பர மாளிகை அமைக்­கப்­பட்­டுள்­ள­தைக் கார­ணம் காட்டி அந்­தப் பகு­தியை விடு­விப்­ப­தற்கு மறுப்­புத் தெரி­விக்­கப்­பட்டு வந்­தது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பின்­னர், அந்த மாளி­கை­யைச் சுற்­று­லாத் திணைக்­க­ளத்­துக்கு வழங்­கு­வ­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்­கம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­த­நி­லை­யில் தற்­போது அந்த நிலப்­ப­கு­தி­யைக் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. நிலத்­தின் உரி­மை­யா­ளர்­கள், பிர­தேச சபை, பிர­தேச செய­ல­கம் என அனைத்­துத் தரப்­புக்­க­ளும் நில அளவை தொடர்­பான அறி­வித்­தல் நில அள­வைத் திணைக்­க­ளத்­தால் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

தமது நிலங்­கள் விடு­விக்­கப்­ப­டும் என்ற எதிர்­பார்ப்­பில் இருந்த நிலத்­தின் உரி­மை­யா­ளர்­கள் இந்­தத் திடீர் நட­வ­டிக்­கை­யால் ஏமாற்­றத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­னர்.

அதே­வேளை, இந்த விட­யம் தொடர்­பில் நிலத்­தின் உரி­மை­யா­ளர்­கள் இன்று தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­ல­கத்­தில் வடக்கு மாகாண ஆளு­ந­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­னர் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

https://newuthayan.com/story/08/நகுலேஸ்வரத்தில்-62-ஏக்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.