Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கோரி அமெரிக்காவின் வெளிவிவகார பிரதிநிதிகளிடம் கோரிக்கை

Featured Replies

மாறி வருகின்ற தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பிலான ஐனநாயக போராளிகள் கட்சிக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார செனட் பிரதிநிதிகளுக்குமிடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

0DD5AC7D-0D08-490E-BF60-D746670249EA.jpg

இலங்கையின் ஏப்ரல் 21 தாக்குதல்கள், தெற்கின் சமகால அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்புப் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுகள் சம்பந்தமான ஜனநாயகப் போராளிகளின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். 

தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்புப் பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்களை அமெரிக்கத் தூதுக்குழுவிடம் எடுத்துரைத்த ஜனநாயகப் போராளிகள், அமெரிக்க மற்றும் இந்தியாவின் இடையீட்டு முயற்சிகளூடாக கொண்டு வரப்படுகின்ற 13 திருத்தச்சட்ட ஏற்பாடுகளின் நடைமுறைகள் புரையோடிப்போயிருக்கின்ற தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்ளும் ஓர்  திருப்புமுனைக்கு தாம் வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழர் அரசியலில் நிலவும் வேற்றுமைகளும் இடர்பாடுகளும் தீர்வு முயற்சிகளில் தமிழர் தரப்பின் வகிபாகத்தை சீர்குலைக்கும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 

தாயகப் பிரதேசங்களில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கும்  போராளிகளின் நிலைப்பாடுளுக்கு செவிமடுத்து, அமெரிக்காவின் நலன்களுக்கெதிரான செயற்பாடுகளில் புலிகள் ஒருபோதும் குறுக்கிடாமையையும் கவனத்திற்கொண்டு ஜனநாயக வழிமுறைகள் மூலமான தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள இலங்கையில் விடுதலைப்புலிகள் கொண்டுள்ள கடப்பாட்டிற்கு மதிப்பளித்து, போராளிகள் அனைவருக்கும் ஜனநாயக விழுமியங்களின் பால் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்காவினால் விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குமாறும் ஜனநாயகப் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

FBED803B-78FF-42C7-A273-6A6A1C0514D0.jpg

தமிழரின் நியாயப்பாடான அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக தமிழர் தரப்பின் அனைத்து அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஜனநாயகப் போராளிகளின் முயற்சிக்கு அமெரிக்காவின் இராஜரீக ஆதரவும் கோரப்பட்டது.

குறித்த சந்திப்பின் முக்கியத்துவம் சம்பந்தமாக கூறிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் குழுவின் சிரேஷ்ட துரைசார் அலுவலர் டேமியன் மெர்பி இந்தச் சந்திப்பு தமிழர் அரசியற் பரப்பை மேலும் புரிந்துகொள்ளக் கிடைத்த இராஜரீக வாய்ப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/59899

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. சோரம் போகாத அரசியலை நோக்கி இவர்கள் பயனித்தால்.. மக்களுக்கு நன்மையே. 

அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டுமென்றும் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதன் முறையாகச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

மாறி வரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், இலங்கையின் தென் பகுதியில் அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்பின் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளன.தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்பு பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக துளசி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தலையீட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள் மற்றும் புரையோடிப் போயிருக்கின்ற தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு ஆகியன குறித்தும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என்று அவர் இச்சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் தமது அனுபவங்களை இலங்கைப் படையினருடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக முன்னர் துளசி செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.thinakaran.lk/2019/07/08/கட்டுரைகள்/36851/அமெரிக்க-நலன்களுக்கு-எதிராக-புலிகள்-செயற்பட்டது-கிடையாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.