Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்கவிலிருந்து வான்படைத் தளம் மாற்றம்?

Featured Replies

வான்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்கவிலிருந்து வான்படைத் தளம் மாற்றம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வர்த்தக வானூர்தி நிலையத்தை அண்மித்த வான்படைத் தளத்தை வேறுபகுதிக்கு சிறிலங்கா அரசாங்கம் மாற்றக்கூடும் எனத் தெரிகிறது.

கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி விவரம்:

கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு ஒரு மாதம் சரியாக கடந்த நிலையில் மீண்டும் கட்டுநாயக்கவில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் அச்சம் ஏற்பட்டிருந்தது.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு தளத்தையும் வான்புலிகள் தாக்கிவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்த இரு நிகழ்வுகளின் போதும் பீதியடைந்த முப்படையினரும் வானத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

கட்டுநாயக்கவுக்கு அப்பால் பலாலி, முகமாலை, மயிலிட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் விடுதலைப்புலிகளின் விமானத்தை வீழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் படையினர் வானை நோக்கி தாக்குதலை நடாத்தியிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக அவர்களின் தளப்பகுதியில் தரையிறங்கி விட்டது.

வவுனியாவானது வர்த்தக வானூர்திகளின் பாதையாகும். வர்த்தக வானூர்தி ஒன்றை விடுதலைப் புலிகளின் வானூர்தி என நினைத்து படையினர் தாக்குதலை நடத்தியிருந்தனர். அந்த வானூர்தியின் மீது பட்டிருந்தால் பெரும் விபரீதங்கள் ஏற்பட்டிருக்கும்.

கட்டுநாயக்க தாக்குதலைத் தொடர்ந்து வான் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசாங்கம் தரமான ராடார்களை கொள்வனவு செய்யவும், பதில் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு முன்னரே விடுதலைப் புலிகள் மற்றுமொரு வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துல்லியமாக இலக்கைத் தாக்குவது தான் வான்புலிகளின் வெற்றியல்ல, தாக்குதலை நடாத்திவிட்டு அவர்கள் தமது தளத்திற்கு வெற்றிகரமாக திரும்பிச் செல்வதும், இராணுவத்தினரிடமும் மக்களிடமும் பீதியை ஏற்படுத்துவதும், பொருளாதாரத்தில் சேதங்களை ஏற்படுத்துவதும் அவர்களுக்கு பெரும் வெற்றியாகும்.

விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் கடந்த வியாழக்கிழமை புத்தளம் வான்பரப்பில் இருந்து 40-50 மைல் தொலைவில் பயணிப்பதை வான்படையினர் கண்டுள்ளனர். அந்த தகவல் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் அதிகாரிகளிடம் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. ஆனால் அன்றும் வான்படையினரின் வான்பாதுகாப்பு சாதனங்கள் வழமையான மறுசீரமைப்பு பணிகளுக்காக மீண்டும் அகற்றபட்டிருந்தன.

இந்த தாக்குதல் முயற்சியின் மூலம் ராடார் தொகுதிகள் இயங்குகிறதா இல்லையா என அறியும் தொழில்நுட்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்களா என்ற அச்சம் கொழும்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் துறையினர் தொடங்கியுள்ளனர்.

எனவேதான் ஏப்ரல் 26 ஆம் நாள் வானை நோக்கி சுடுமாறு அதிகாரிகள் தமது படையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். கடுமையாக பீதியடைந்த இராணுவத்தினர், இலக்குகள் இன்றி வானை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை மட்டுமல்லாது பல வர்த்தக வானூர்திகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த சமயத்தில் இரு பயணிகள் வானூர்திகள் 20,000 மற்றும் 30,000 அடி உயரங்களில் குறைந்த வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தன. எனினும் 10-15 நிமிடங்களில் அவை திசைதிருப்பப்பட்டன.

இரு ஏமிரேற்ஸ் வானூர்திகளும், 1 கதே பசுபிக் வானூர்தியும் தென் இந்திய வானூர்தி நிலையத்ததிற்கு திருப்பிவிடப்பட்டன. கொச்சி, புதுடில்லி, துபாய் ஆகிய பகுதிகளில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த வானூர்திகள் சென்னைக்கு திருப்பபட்டதுடன், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏமிரேற்ஸ் மற்றும் கதே பசுபிக் நிறுவனங்களைச் சேர்ந்த இரு வானூர்திகளும் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

துபாயில் இருந்து வந்த மேலும் 1 ஏமிரேற்ஸ் வானூர்தி மாலைதீவுக்கு திருப்பிவிடப்பட்டது.

இப்படியான திருப்பி விடுதலின் போது சில வானூர்திகள், பயணிகளை மாலைதீவு, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் இறக்கிவிட்டு விட்டுச் சென்றுவிட்டன. பின்னர் அவர்களை சிறிலங்காவின் வானூர்தி நிறுவனத்தின் வானூர்திகள் அங்கிருந்து கொழும்புக்கு ஏற்றி வந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் இந்த முறை வர்த்தகத்துறையில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வர்த்தக வானூர்திகள் ஏறி இறங்கும் பகுதியில் படையினர் கண்மூடித்தனமாக சுட்டது அதனை நிறைவேற்றியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வானூர்தி ஓடு பாதையானது 45 நிமிடங்கள் மூடப்பட்டது. ஆனால் கடுமையான துப்பாக்கிப் பிரயோகங்களின் பின்னர் வானூர்தி ஓடுபாதை திறக்கப்படுவதற்கு முன்னர் அது சேதமாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

பயணிகள் வானூர்திகளின் ஓடுபாதை சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகார சபையினால்தான் மீண்டும் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இது இலகுவாக அரசாங்கத்தை குற்றம் சுமத்த போதுமானது.

அதாவது விடுதலைப் புலிகளின் வானூர்திகள், இரண்டாவது முறை மேற்கொண்ட முயற்சி முதலாவது தாக்குதலை விட அதிக சேதங்களை விளைவித்துள்ளது.

30 நிமிடங்கள் நகரம் இருளில் மூழ்கியது, உத்தியோகபூர்வமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. ஆனால் மக்கள் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளதனைப் போல் நடந்து கொண்டனர்.

ஏப்ரல் 26 ஆம் நாள் நிகழ்ந்த தாக்குதல் அச்சத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. எனினும் மக்களின் மனதில் ஏற்பட்ட பீதி கொழும்பிற்கு வரும் வர்த்தக வானூர்திகளுக்கு ஏற்பட்ட அச்சம் என்பன கடுமையானது.

எனினும் சிறிலங்காவுக்கு வரும் வர்த்தக வானூர்திகளின் காப்புறுதிப் பெறுமதி அதிகரித்துள்ளதாக வெளிவந்த செய்திகளை சிறிலங்கா வானூர்தி நிறுவனத்தின் பொது முகைமையாளர் சந்தான வீரக்கோன் மறுத்துள்ளார்.

கட்டுநாயக்கா வான்படைத்தளத்தை இடம் மாற்றுவதற்கு தற்போதும் நேரம் கடந்துவிடவில்லை. அதாவது வர்த்தக வானூர்திகள் பயன்படுத்தும் கட்டுநாயக்கா வானூர்தி ஓடுபாதையை பயன்படுத்தாது கிபீர், மிக்-27 ரக வானூர்திகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

மிக்-27 ரக வானூர்தியைப் பெறுத்தவரை இது பிரச்சனை இல்லை. ஏனெனில் அதற்கு அனுராதபுரத்தில் உள்ள வானூர்தி ஓடுபாதை போதுமானது. ஆனால் கிபீர் வானூர்திகளுக்கு மிக நீளமான ஓடுபாதை தேவையானது. எனினும் அது ஹிங்குரான்கொட வான்படைத் தளத்திற்கு மாற்றப்படுவது உகந்தது.

ஏனெனில் அங்கு தான் சிறிலங்காவிலேயே இரண்டாவது நீளமான வானூர்தி ஓடுபாதை உள்ளது. அது மேலும் நீளமாக்கப்படலாம்.

70 முதல் 90 மைல் வேகத்தில் பயணிக்கும் இலகுரக வானூர்தியை கிபீர் மற்றும் மிக் வானூர்திகளால் கண்டறிவது கடினமானது.

ஆனால் எம்.ஐ - 24 மற்றும் பெல் - 212 ரக உலங்குவானூர்திகளினால் இந்த வானூர்திகளைத் தாக்க முடியும். எனினும் அனுரதபுரத்தில் இருந்து மேலெழுந்த எம்.ஐ - 24 ரக ஊலங்குவானூர்தி இயந்திரக்கோளாறு காரணமாக சேதமடைந்துள்ளது. விரைவாக மேலெழுந்த சில கே-8 ரக பயிற்சி வானூர்திகள் என்ன செய்தன என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

பலாலி மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதலை மேற்கொண்ட போது தளத்தின் மீது பீரங்கித் தாக்குதல்களையும் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர். இது முன்னரங்க நிலைகளில் உள்ள இராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்பி அவர்களை வானூர்தியை அவதானிக்க விடாது செய்யும் தந்திரமாகும்.

எனினும் முகமாலையில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படைப்பிரிவின் முதலாவது பற்றாலியன் மற்றும் விஜயபாகு படைப்பிரிவு ஆகியவற்றின் இராணுவத்தினரே வானூர்திகளின் ஓசையை முதலில் கேட்டனர். பின்னர் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தளத்தில் இருந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகளின் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முறையும் நாட்டின் பாதுகாப்புத் தரப்பை விட விடுதலைப் புலிகள், பலாலி தளம் மீதான வான் தாக்குதல் தொடர்பான செய்தியை விரைவாக வெளியிட்டுள்ளனர். அதிகாலை 2.30 மணிக்கே அவர்களது செய்தி வெளிவந்து விட்டது. பாதுகாப்புத் தரப்பினரின் இந்த தாமதம் தாக்குதல் தொடர்பாக பல தவறான ஊகங்களுக்கு வழிவகுத்துவிடும்.

சிறிலங்கா அரசாங்கம் முதலில் பலாலி தாக்குதலை மறுத்திருந்தாலும் பின்னர் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தாமதங்கள்தான் விடுதலைப் புலிகள் அனைத்துலகத்தின் கவனத்தை பெருமளவில் பெறுவதற்கு ஏதுவாகியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழபக்கம்

ஆக நிகழும் தொடர் தாக்குதல்கள் சொல்கின்ற செய்தியை உலகமும் இலங்கையும் சரியாகப் புரிந்து கொண்டிருக்கும். ராமன் தனது கருத்தைத் தாமதமாகத் தெரிவித்தாலும் இராணுவத்தீர்வு சாத்தியப்படாதென ஏகாதிபத்திய நாடுகள் ஏமாற்ற நினைத்தாலும் உண்மை நிலையைப் பிரசவிக்கும் தருணத்திலாவது இவர்கள் யாவரும் நடந்துகொண்டிருக்கும் நிலைமை எத்தகையது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எமது வலியைப் பொருட்படுத்தாத ஸ்ரீ லங்காவும் கவனத்திலெடுக்க மறுக்கும் பல உலக நாடுகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்குத் தடுமாறுகின்றன என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. யாராவது ஏதாவது சொல்லி இந்தத் தாக்குதலை நிறுத்த மாட்டார்களா? என ஹெல உறுமய ஜே வி பி என்பன தங்களது குரல்களைத் தாழ்த்தி எதிர்பார்த்து நிற்கின்ற பரிதாப நிலையும் தெளிவாகத் தெரிகின்றது. இவற்றிற்கெல்லாம் தீர்வு எது என்பதை தமிழர் தரப்பு தீர்மானிப்பதற்கான நிலையும் தெளிவாகத் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.