Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குப்பை வியாபாரம்

Featured Replies

எவ்வளவு காலமாக தொடருகிறது குப்பை வியாபாரம்?

இலங்கைக்குக் கொண்டு வரப்படும் மேற்படி குப்பை மீள்சுழற்சி செய்யப்பட்டு (பெறுமதி சேர்க்கப்பட்டு) வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மீள்சுழற்சி செயற்பாட்டின் போது மிகுதியாக அல்லது மிச்சமாக வரும் படிவம் நச்சு கலந்ததாக இருக்கக் கூடும். இது எவ்வாறாவது அகற்றப்பட வேண்டியதாகும்.

இது எவ்வாறு அகற்றப்படுகிறது? இந்த மிகுதியான படிவம் வேறு ஒரு வறிய நாட்டுக்கு அனுப்பப்படுகிறதா அல்லது இந்து சமுத்திரத்தில் கொட்டப்படுகிறதா? அல்லது கொழும்புக்கு அருகில் உள்ள மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் சேர்கிறதா? இவ்வாறான நச்சுப் படிவங்கள் குப்பையுடன் சேரும் போது அது தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. அதேநேரம் 2017 இல் மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் இடம்பெற்ற குப்பைச் சரிவு சில உயிர்களை பலியெடுத்தது இன்னும் மறக்கப்படவில்லை.

முன்னைய காலத்தைப் போலன்றி குப்பையும் இப்போது பணம்தான். குப்பையை இறக்குமதி செய்து மீள்சுழற்சி செய்வதன் மூலம் மேலும் பணம் சேர்கிறது. எனவே இந்த வியாபாரத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்க பல நிறுவனங்கள் இப்போது போட்டி போடுகின்றன.

உலகில் நாளாந்தம் சேரும் குப்பைகள் அகற்றப்பட வேண்டும். அல்லது மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். அது அவசியமாகும். ஆனால் இந்த விடயத்தில் நாட்டில் இதனை இலஞ்சம், கமிஷன், கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகளின் மூலம் பணம் சேர்ப்பதே குறிக்கோளாக உள்ளது.

சராசரி அரசியல்வாதிகள் சிலரை எடுத்துக் கொள்வோம். தெரிந்தவரை பொதுமக்களுக்கு சேவை செய்வதிலேயே அவரது காலம் கழிந்திருக்கும். ஆனால் அவரது வாழ்க்கைத்தரம் பணக்கார வாழ்க்கையாகவே இருக்கும். எவ்வளவு அதிகமாக அவரிடம் பணம் இருக்கிறதோ அந்தளவுக்கு மீண்டும் அரசியலில் தெரிவாகும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. இது மூன்றாம் உலகத்தின் நடைமுறையாக உள்ளது.

சம்பந்தபப்ட்ட அரசியல்வாதி பல்வேறு வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவார். எனினும் அவர் ஒரு அரசியல்வாதியாகத்தான் கருதப்படுவார்.

மறைமுக செயற்பாடுகள், ஏராளமான முகவர்கள், உதவியாளர்கள், பெருமளவில் சொத்துகள் சேர்த்தல் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபடுவர். நாட்டின் பொருளாதார நடைமுறைக்கு அவர்களது பங்களிப்பு அவ்வளவாக இருக்காது. ஆனால் தனிபபட்ட ரீதியில் சொத்து சேர்ப்பதில் அவர்கள் அதிக அக்கறை காட்டுவர். இவ்வாறான நபர்கள் மூலம் மொத்த சமூகமும் பாதிக்கப்படும்.

இந்த நாட்டின் எரிபொருள் துறையை எடுத்துக் கொள்வோம். அங்கு இடைத் தரகர்கள் கோலோச்சுகின்றனர். அவர்கள் எண்ணெய்க் கம்பனிக்கு நேரடியாக வேலை செய்பவர்களும் அல்ல. ஆனால் இவர்கள் மூலம் அதிக விலையில் எண்ணெயை விற்பதற்கு முடிகிறது. அதிக விலைக்கு எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு பாடசாலைகள், வைத்தியசாலைகள் நடத்துவதற்கோ வீதிகளைச் செப்பனிடவோ பணம் இல்லாமல் போகிறது.

இது போன்ற பிரச்சினைகள் பல்வேறு துறைகளில் இடம்பெறும் நிலையில், புதிதாக சேர்ந்துள்ள பிரச்சினைதான் பிரிட்டனில் இருந்து வந்த குப்பைப் பிரச்சினை!

நாம் மேலே சுட்டிக் காட்டியதைப் போல் குப்பையை மீள்சுழற்சி செய்வது சட்டப்படியான வியாபாரம்தான். ஆனால் அது மனிதர்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இடம்பெற வேண்டும்.

எனவே, இது தொடர்பாக கடுமையான சட்ட திட்டங்கள் உருவாக்கப்படுவதுடன் சீரான கண்காணிப்பும் தேவை. எனினும் பிரிட்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பை கொள்கலன்கள் விடயத்தில் மெத்தனப் போக்கே இடம்பெற்றுள்ளது. கடுமையான சட்டதிட்டங்களோ சீரான கண்காணிப்போ இந்த விடயத்தில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. எனவே இப்போது மறுப்புகளும் குற்றச்சாட்டுகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த விடயம் தொடர்பான விசாரணையை அடுத்துத்தான் அது பற்றி மேலும் பேச முடியும். எனினும் இவ்வாறான குப்பை கொண்டு வரப்பட்ட பின்னணியைப் பற்றிப் பார்ப்போம். அவ்வாறு பார்க்கும் போது எமது உயர் மட்ட அதிகாரிகளின் கவனக்குறைவுகள் மற்றும் பொறுப்பின்மை பற்றித் தெரிய வருகிறது.

இலங்கை முதலீட்டுச்சபையானது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறுவதை ஊக்குவிக்கும் முன்னணி நிறுவனமாகும். அதேநேரம் அந்த நிறுவனத்தின் ஊடாக செயற்படும் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் பொறுப்பும் முதலீட்டு சபைக்கு உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட குப்பை இறக்குமதியும் முதலீட்டுச் சபையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தக குழுமம் ஒன்றின் இணைத்தலைவரும் பிரதான பங்குதாரருமான ஒரு தொழில் அதிபர் பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். முன்னைய அரசாங்கம் இவரை இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக்கியது. பின்னர் இவர் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயலாளரானார். இவ்வாறான நிர்வாக அதிகாரங்களுடன் அரசாங்கத்தின் உள்ளக செய்பாடுகளிலும் அவருக்கு அதிகாரம் இருந்தது.

குப்பைகளை இறக்குமதி செய்து மீள்சுழற்சி செய்யும் இந்தத் திட்டத்துடன் மேற்படி தொழில் அதிபருக்கு தொடர்பு இருந்ததா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் இது போன்ற நியமனங்கள் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு எந்த பங்களிப்பும் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அதிகாரத்தில் இருக்க வேண்டிய தகுதியுடையவர்களை நியமிக்கும் விடயத்தில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டிருந்தால் அதன் பாதிப்பு நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்லும் என்பதற்கு ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் எயார் விமான சேவைகளை உதாரணமாகச் சொல்லலாம். இந்த இரு விமான சேவைகளுக்கும் செலவிடப்பட்ட நிதி மிகவும் அதிகமானதமாகும்.

இவ்வாறான விமான சேவைகளை திறம்பட நடத்துவது எளிதான விடயமல்ல. ஆனால் இரண்டு விமான சேவைகளினதும் நிர்வாகத்தை நடத்திச் செல்லும் சபைகளில் அரசாங்கத்தின் தலைமைகளின் குடும்ப அங்கத்தவர்கள் இருந்தால் போதும். விமானங்கள் ஓடும், வேறென்ன வேண்டும்?

இவ்வாறான நிர்வாக சபைகளில் அங்கம் வகிப்பவர்கள் முதலில் தமது அரசியல் தலைமைகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள் சொன்னதை செய்வார்கள். நாடு தொடர்பான அக்கறை அவர்களுக்கு இரண்டாவது விடயம். அதேநேரம் நிறுவனத்தில் இலாபம் வந்தால் வெளிநாட்டு பயணங்கள் போன்றவை நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்குக் கிடைக்கும்.

இருக்கும் வரை அனுபவிப்போம் என்பதுதான் அவர்கள் கொள்கை. அதைக் கடைப்பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

gabage_01082019_SPP_CMY.jpg

https://www.thinakaran.lk/2019/08/02/கட்டுரைகள்/38018/எவ்வளவு-காலமாக-தொடருகிறது-குப்பை-வியாபாரம்

ஒரே வகையிலான கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அதனை மீள் ஏற்றுமதி செய்யும் வர்த்தக நடவடிக்கைகள் தற்போது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் காணப்படுவதாக சிலோன் மெட்டல் ப்ரோஷஸிங் கோப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் வெள்ளி மாலை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தமது நிலைப்பாட்டை தெரிவித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சசிகுமரன் முத்துராமர் இதனைக் குறிப்பிட்டார்.

 

  • உலகிலுள்ள ஏனைய நாடுகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பெரிய வருமானத்தை ஈட்டி வருவதாக கூறிய சிலோன் மெட்டல் ப்ரோஷஸிங் கோப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சசிகுமரன் முத்துராமர், நாடு முன்னேற்ற பாதைக்கு செல்ல இதுவொரு சிறந்த திட்டம் எனவும் சுட்டிக்காட்டினார்.
  • 2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
  • கட்டுநாயக்க பகுதியிலுள்ள கிடங்கு ஒன்றில் 130 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 27,685 மெற்றிக் டன் எடையுடைய கழிவுகள், 50,000 அடி நீளத்திற்கு வைக்கப்படடுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றது.
  • இந்த கழிவுப் பொருட்களில் மனித உடற்பாகங்கள் காணப்படுகின்றன என பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுப் பொருட்கள் மீள்சூழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, இதுவரை 27 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகுமரன் முத்துராமர் கூறினார்.
  • தாம் இறக்குமதி செய்த கொள்கலன்களில் எந்த வகையான மனித உடற்பாகங்களும் கிடையாது என்பதனை சுங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியதாக தெரிவித்த சசிகுமரன் முத்துராமர், மருத்துவ கழிவுப் பொருட்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49138262

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

உலகளாவிய அளவில் உள்ள வேறுபட்ட மீள் சுழற்சி பற்றிய வியாபாரங்களை இந்த தளம் தந்து உதவுகின்றது

https://global-recycling.info/

மீள்சூழற்சி வியாபாரத்தில் கூடுதலாக தமது நாட்டில் வ்ருமானம் பெறக்கூடிய வழியில் செய்ய முடியாத துறைகள், 
மற்றும் சூழல் மாசடைவது சட்ட  சிக்கல் காரணமாகவும் மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது.

இவ்வாறான மீள்சூழற்சி தொழில்முறையில் அதிகளவு புற்று நோய் வருகின்றது எனவும் கூறப்படுகின்றது. உதாரணமாக கணனிகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் கூடிய கப்பல்கள். 

  • தொடங்கியவர்

மூன்றாம் உலகில் கொட்டப்படும் கழிவுகள்: உனது குப்பைக்கா எனது வளவு?

கழிவகற்றல் கடினமான பணி. கழிவுகளின் வகையும் தொகையும் அதைச் சவாலானதாக ஆக்கியுள்ளன.  

உலகமே குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், யாரோ உற்பத்தி செய்யும் கழிவுகள், வேறு யாருடையதோ பொறுப்பாகிறது. எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் மனிதனின் இழிநிலை, மனிதகுலத்தின் மாண்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.   

இவை, மனித அறம்சார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. அறம் அடிபட்டுப்போன காலத்தில், மனிதகுல மீட்சிக்கான சில குரல்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுகின்றன. ஊடகங்கள் சொல்லும் கதைகளை விட, இக்குரல்கள் ஆதரவையும் பரவலையும் வேண்டி நிற்கின்றன.   

மூன்றாம் உலக நாடுகள், குப்பைத் தொட்டிகளாக மாறி, நீண்ட காலங்கள் ஆயிற்று. இதன் தாக்கம், இன்னமும் உணரப்படவில்லை. இடைக்கிடையே, கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் வெளியாகும் செய்தி, சலசலப்புகளை ஏற்படுத்தினாலும், அவை விரைவில் அடங்கி விடுகின்றது.   

மேற்குலக நாடுகளின் கழிவுகளை, மூன்றாம் உலக நாடுகளில் கொட்டுவது, நீண்ட காலமாக நடந்து வருகிறது. அதன் மோசமான விளைவுகளை, மூன்றாம் உலக நாடுகளின் மக்களே அனுபவிக்கிறார்கள்.   

அபிவிருத்தியின் பெயராலும் வியாபாரத்தின் பெயராலும் இது நடந்த வண்ணம் உள்ளது. மாறுகின்ற காலச்சூழலில், இது குறித்த விழிப்புணர்வும் செயலாற்றுகையும் அவசியமாகிறது.   

அண்மையில், பிரித்தானியாவில் இருந்து, இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கழிவுகள் தொடர்பில் வெளியான செய்தி, மேற்குலக நாடுகளின் குப்பைகள், இலங்கையில் கொட்டப்படுவது தொடர்பான கவனத்தைப் பெற்றுள்ளது.   

இது பேசுபொருளாக இருக்கின்ற போதும், அதன் பாதிப்புகள் குறித்தும் நோக்கங்கள் குறித்துமான உரையாடல்கள், மிகக் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிகழ்கின்றன.   

இந்தப் பிரச்சினையை, ‘கழிவுகளைத் திருப்பி அனுப்புவது’ என்பதாகச் சுருக்கி, இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கமும் தொடர்புடையவர்களும் முயல்கிறார்கள். திருப்பி அனுப்புவதன் மூலம், தமது கடமையை நிறைவேற்றி விட்டதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் பின்னணியில், கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன.   

முதலாவது, இவ்வாறான கழிவுகள், இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு, அனுமதி அளித்தது யார்?   

இரண்டாவது, இறக்குமதி செய்யப்படும் கழிவுகள், எவ்வகையானவை என்பது பற்றிய, முழுமையான தரவுகள், அரசாங்கத்திடம் இருக்கின்றனவா?   

மூன்றாவது, இக்கழிவுகளை மீள்சுழற்சியின் பெயரால் இறக்குமதி செய்யும் நிறுவனங்களிடம், அதை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் தொழில்நுட்பம் இருக்கிறது என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளதா?  

நான்காவது, இறக்குமதியாகும் கழிவுகளில், எத்தனை சதவீதம் மீள்சுழற்சிக்கு உள்ளாகிறது?   

ஐந்தாவது, மீள்சுழற்சிக்கு உள்ளாகாத கழிவுகளுக்கு என்ன நடக்கின்றன, அவற்றின் சுகாதார, சூழலியல் பாதிப்புகள் என்ன?   

மேற்சொன்ன எந்த ஒரு கேள்விக்கும், இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. இக்கேள்விகள், இலங்கைக்கு மட்டுமானவையல்ல; மேற்குலக நாடுகளில் இருந்து, கழிவுகளை இறக்குமதி செய்யும் அனைத்து, மூன்றாம் உலக நாடுகளிலும், இதே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கான பதில்களை, இதுவரை எந்தவோர் அரசாங்கமும் வழங்கவில்லை.   

எமது எதிர்காலச் சந்ததிகளின் வளமான வாழ்வு குறித்துப் பேசுவதாக இருந்தால், முதலில் நாம், எமது கழிவுகள் குறித்தும், இறக்குமதி செய்யப்படும் கழிவுகள் குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் திறந்த மனதுடனும் நேர்மையாகவும் ஓர் உரையாடலை மேற்கொண்டாக வேண்டும். அதைச் செய்யத் தவறினால், எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்.  

கழிவுகளின் கதை  

ஒவ்வொரு நொடியிலும், கழிவுகள் உற்பத்தியாகின்றன. உற்பத்தியாகும் பெரும்பாலான கழிவுகளின் தீவிரத் தன்மை பற்றிய அக்கறை எதுவுமற்று, அக்கழிவுகள் மனிதர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. கழிவுகளின் தீவிரம் தொடர்பான, மிக எளிய மூன்று புள்ளி விவரங்கள், இதன் தீவிரத்தை உணர்த்தப் போதுமானவை.   

1. ஒவ்வொரு 30 வினாடிக்கும், நான்கு பெரிய பஸ்களை முழுமையாக நிரப்பக் கூடிய அளவுக்கான  பிளாஸ்டிக்கை, பிரித்தானியா கழிவாக வெளியேற்றுகிறது.  

image_5656d015ca.jpg

2. மூன்றாம் உலக நாடுகளில், ஒவ்வொரு கணத்திலும் இரண்டு பெரிய பஸ்களில் கொள்ளக்கூடியளவான பிளாஸ்டிக் எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது.   

3. கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் நோய்களால், ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு முப்பது வினாடிக்கும் ஒரு மனிதர், குப்பைகளின் விளைவால் மரணிக்கிறார்.   

மேற்சொன்ன தரவுகள், குப்பைகளாக வெளியேற்றப்படும் கழிவுகள், இவ்வளவு பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை விளங்கப் போதுமானவை ஆகும்.   

கழிவுகள் என்று பொதுப்படையாக நாம் சொன்னாலும், அக்கழிவுகளைப் பிரதானமாக ஐந்து வகையாகப் பிரிக்க முடியும்.   

1. உக்கக் கூடிய, இலகுவில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகள் (உணவுப்பொருள்கள், காகிதங்கள்)  

2. பிளாஸ்டிக் கழிவுகள்  

3. இலத்திரனியல் கழிவுகள்  

4. மருத்துவக் கழிவுகள், மனித உடற்பாகங்கள்  

5. ஆபத்தை விளைவிக்கக்கூடிய கழிவுகள் ( தீப்பிடிக்கக் கூடியவை)  

இவற்றில், இலகுவாக உக்கக் கூடியதும், மீள்சுழற்சிக்கு உள்ளாக்கக் கூடியதுமான கழிவுகள், அந்தந்த நாடுகளிலேயே தங்குகின்றன. ஏனைய நான்கு வகைக் கழிவுகளும் ஏதோ ஒரு வழியில், வேறு வேறு நாடுகளை வந்தடைகின்றன.   

ஏனெனில், ஏனையவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதோ புதைப்பதோ மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தும். இதனால், கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கழிவுகள், மிகப்பெரிய வியாபாரமாகி உள்ளன.   

image_56200ce1c6.jpg

கடந்த ஆண்டு, இந்த வியாபாரம் பாரிய மாற்றம் ஒன்றைக் கண்டது. உலகில் அதிகளவான குப்பையை இறக்குமதி செய்யும் நாடான சீனா, கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது.   

கடந்த வாரம், கம்போடியா 1,600 தொன் கழிவை, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் திருப்பி அனுப்புவதாக அறிவித்தது.  

மே மாதம், பிலிப்பைன்ஸ், 69 கொள்கலன்களில் உள்ள, மீள்சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கழிவைக் கனடாவுக்குத் திருப்பி அனுப்பியது.   

இதே காலப்பகுதியில், ஸ்பெய்னில் இருந்து வந்த கழிவுகளை, மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது.   

முதன்முதலாக, கழிவுகள் குறித்த அக்கறை, சில மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ளது; இது வரவேற்கத்தக்கது. ஆனால், இன்று நிறுவனமயப்பட்ட, வியாபாரமாகிவிட்ட கழிவகற்றலைத் தடுக்க, புதிய சட்டங்களும் நடைமுறைகளும் விழிப்புணர்வும் அவசியமாகின்றன.   

இலாபவெறி ஒருபுறமும் சுயநலம் மறுபுறமும் கோலோட்சும் மூன்றாமுலக நாடுகளில், பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகள் இறக்குமதியாவதைத் தடுப்பது இலகுவானதல்ல.   

காரணமும் காரியமும்  

1980களில் மேற்குலக நாடுகளின் குப்பைகள், மூன்றாம் உலக நாடுகளில் கொட்டப்படுவதற்கு எதிராகப் பல குரல்கள் எழுந்தன. இதன் விளைவால், ஐக்கிய நாடுகள் சபையில், சில மூன்றாம் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் விளைவால், 1989ஆம் ஆண்டு, ‘பாசல் சமவாயம்’ (Basel Convention) உருவாக்கப்பட்டது.   

இது பாதிப்புத் தரக்கூடிய குப்பைகளை, எல்லை தாண்டிக் கொண்டு செல்லுதல், அகற்றுதல் தொடர்பிலான சமவாயமாகும். இது கழிவுகளை, எல்லைகளைத் தாண்டிக் கடத்துவது தொடர்பிலான, சில அடிப்படையான விதிகளை உருவாக்கியது. இன்று, மூன்று தசாப்தங்களின் பின்னரும், இந்தப் பட்டயத்தின் வினைத்திறனும் செயலாற்றுகையை கட்டுப்படுத்தும் தன்மையும் கேள்விக்குறியாகவே உள்ளன.   

இன்று பேசப்படும் கழிவுகளில் பெரும்பான்மையானவை, பிளாஸ்டிக் கழிவுகள் பற்றியதாகவே இருக்கின்றன. ஏனைய கழிவுகள் குறித்த பார்வை, மிக குறைவானதாகவே இருக்கிறது. அதேவேளை, பிளாஸ்டிக் கழிவுகளின் தீவிரத்தன்மை, மிக ஆழமாகப் பேசப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  

மருத்துவக் கருவிகளும் கழிவுகளாக ஏற்றுமதி செய்யப்படும் உடற்பாகங்களும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை. இவை, பெரும்பாலும் மீள்சுழற்சிக்கு உள்ளாக்கப்பட இயலாத கழிவுகளாகும். இவற்றை, எரிக்கவோ புதைக்கவோ இயலாத அளவு,மோசமான சுகாதார, சூழலியல் பாதிப்புகளைக் கொண்டவை.  

 இதனால் தான், இத்தகைய கழிவுகளை மேற்குலக நாடுகள், இரகசியமாக மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்புகின்றன. அவை, மூன்றாம் உலக நாடுகளில் எரிக்கவும் புதைக்கவும் படுகின்றன. இவை, மிக அவதானமாக, கவனத்தை வேண்டி நிற்கும் கழிவுகளாகும். ஆனால், இக்கழிவுகளின் தீவிரத்தன்மை குறித்துப் பேசப்படுவதில்லை.   

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய சவால்களைக் கொண்டவையாக இவை இருப்பதால், குறித்த உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.   

இந்தக் கழிவுகள், நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன; நிலத்தை உபயோகமற்றதாக்குகின்றன. இதிலிருந்து வெளியாகும் மருத்துவ, உடலியல் பாகங்கள் சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் பாதிக்கின்றன.   

இவ்வாறான கழிவுகளின் பாதிப்புகள், மிக நீண்ட காலத்துக்கு இருக்கும். இந்தக் கழிவுகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், மிகப்பெரிய இலாபத்தைப் பெறுகின்றன. அவர்களது இலாபவெறிக்கு எமது மண்ணும் மக்களும் பலியாகிறார்கள். இது குறித்த, பரந்த உரையாடலும் விழிப்புணர்வுமே, இன்றைய அவசியத் தேவை ஆகும்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மூன்றாம்-உலகில்-கொட்டப்படும்-கழிவுகள்-உனது-குப்பைக்கா-எனது-வளவு/91-236137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.