Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

Featured Replies

Sushma Swaraj,சுஷ்மா,சுஷ்மா சுவராஜ்,பா.ஜ,BJP,காலமானார்,passes away,no more 

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார்.

பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

கவலைக்கிடமாக அவர் இருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. முன்னதாக சுஷ்மாவை பார்க்க மத்திய அமைச்சர்கள் ஹர்சவர்தன் ஸ்மிருதி இரானி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் , மற்றும் பா.ஜ. மூத்த தலைவர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தனர்.\

சுஷ்மா மறைவு குறித்த தகவல் அறிந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் விரைந்துள்ளார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2337840

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்... அனுதாபங்கள் தெரிவிக்க, மனம் இடம் கொடுக்கவில்லை .
பதவியில் இருக்கும் போது... எல்லாரும் பக்குவமாக நடந்தால்... 
அனுதாபம்.... தன்னுடைய பாட்டில் வரும். 
பத்தோடு... பதினொன்று....  என்று, நாங்கள் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா .....
என்று அவர் மூச்சு இளைப்பாறி இருக்கிறது
நேரு சொல்ல வந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்

சுஷ்மா ஸ்வராஜ்: இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலமானார்

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார்.

அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், "நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்" என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @SushmaSwaraj
 

प्रधान मंत्री जी - आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. @narendramodi ji - Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @SushmaSwaraj

வழக்கறிஞரான சுஷ்மா ஸ்வராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.

எமெர்ஜென்ஸியை எதிர்த்து போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார்.

1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.

சுஷ்மா ஸ்வராஜ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், ட்வீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கிறார்.

"இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்படத்தின் காப்புரிமைTWITTER
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi
 

Sushma Ji’s demise is a personal loss. She will be remembered fondly for everything that she’s done for India. My thoughts are with her family, supporters and admirers in this very unfortunate hour. Om Shanti.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைAFP

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதைத் தடுக்க எல்.கே.அத்வானி மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஆதரவாக இருந்தார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எனினும் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மோதி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா ஸ்வராஜ் முக்கிய அங்கம் வகித்தார்.

"மிக சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஸ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்" என்று ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். 

மேலும், "இந்த துக்கமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் இளைபாறட்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @RahulGandhi
 

I’m shocked to hear about the demise of Sushma Swaraj Ji, an extraordinary political leader, a gifted orator & an exceptional Parliamentarian, with friendships across party lines.

My condolences to her family in this hour of grief.

May her soul rest in peace.

Om Shanti 🙏

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @RahulGandhi

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @mkstalin
 

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் #SushmaSwaraj

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @mkstalin

சுஷ்மாவின் உடல் புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் பின்னர் லோதி ரோட்டில் உள்ள மின் தகன மேடையில் எரியூட்டப்படும் என்றும் அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-49253426

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.