Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம்

Featured Replies

Elephant Tikiiri

மனிதர்கள் சூழ் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. பல்வேறு அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சில உயிரினங்கள் மொத்தமாக அழிந்தேவிட்டன. உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றே கூறவேண்டும்.

காடுகள் ஆக்கிரமிப்பு, மனிதத் துன்புறுத்தல், உணவுப் பற்றாக்குறை, வேட்டை போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் தங்கள் இருப்பிடத்தை விடுத்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்ந்து வருகின்றன. இப்படியான சூழலில் சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மனதை உலுக்கும் இந்தப் படத்தின் கதை கொடூரத்தின் உச்சம்.

’இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி இன்று இரவுடன் நிறைவடையவுள்ளது. இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்பர். திருவிழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று.

Elephant Tikiiri

டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.

டிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை.

விழா என்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒன்று. ஆனால் அது பிறருக்கு எந்த கஷ்டத்தையும் அளிக்காமல் இருக்க வேண்டும். டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசீர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்கும். டிக்கிரியின் புகைப்படம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருந்தால் நம்மால் அவற்றுக்கு எப்போதும் அமைதியான வாழ்வைத் தர முடியாது. அன்பு செய்வது, எந்தத் தீங்கும் செய்யாதது மற்றும் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றுவது போன்றவை புத்தரின் வழி. அதைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

https://www.vikatan.com/living-things/animals/srilanka-festival-elephants-shocking-photos-revealed

Elephant Tikiiri

?type=3&theater

  • தொடங்கியவர்

இந்த செய்தி, ஒரு பெரிய 'வைரலாக' பரவி வருகின்றது.
 
#1 சி,என்,என். உல்லாசத்துறை பக்கம்:: 
Campaigners are urging a boycott of Sri Lanka's elephant attractions after these photos emerged
https://www.cnn.com/travel/article/elephant-festival-sri-lanka-intl-scli/index.html

#2 Oh my Lord! Campaigners are urging tourists to #boycottSriLanka's #elephant attractions after these photos emerged #torture

#3: Starving elderly elephant’s emaciated body is hidden by festival costume

Twitter: https://twitter.com/MetroUK | Facebook: https://www.facebook.com/MetroUK/

boycottsrilanka

?type=3&theater?type=3&theater

?type=3&theater

  • தொடங்கியவர்

புத்த கோயிலில் எலும்பும் தோலுமாக யானை : விசாரணைக்கு உத்தரவிட்ட வனவிலங்கு அமைச்சகம்

இலங்கையில் புத்த ‘பற்கள்' கோவிலில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 50 மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும். திருவிழாவில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று . எலும்பும் தோலுமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த யானை ஊர்வலத்தில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டது குறித்து சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சர் ஜான் அமரதுங்கா  விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.  

டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.

டிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை. என்று குறிப்பிட்டிருந்தது. 

இந்த பதிவுக்கு பின்னர் அந்த யானையை திருவிழாவை விட்டு விலக்கிக் கொண்டனர். சமூக வலை தளங்களிலும் யானைக்கு ஆதரவு தெரிவித்தும் கோயில் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

https://www.ndtv.com/tamil/70-year-old-bony-elephant-tikiri-paraded-at-sri-lanka-fest-kandy-esala-perahera-probe-ordered-read-i-2085940?pfrom=home-lateststories

Edited by ampanai

  • தொடங்கியவர்

Heartbreaking photos of emaciated elephant have people calling for action
"No one sees her bony body or her weakened condition, because of her costume."

Heart-rending images of an emaciated elephant at a festival in Sri Lanka have recently surfaced, prompting animal activists to urge tourists to boycott some attractions in the island nation.

"This is Tikiri, a 70 year old ailing female. She is one of the 60 elephants who must work in the service of the Perahera Festival in Sri Lanka this year," reads an Aug. 13 Facebook post written by Lek Chailert, founder of Save Elephant Foundation.

https://www.today.com/news/photos-emaciated-elephant-sri-lanka-spur-calls-action-t160853

Emaciated elephant forced to perform for festivalgoers in Sri Lanka

Animal rights campaigners have called on tourists in Sri Lanka to boycott elephant attractions after photographs of a malnourished female used in a festival were circulated online.

Images of the emaciated elephant were shared by Save Elephant Foundation to raise awareness of exploitation in captivity.

https://q13fox.com/2019/08/16/emaciated-elephant-forced-to-perform-for-festivalgoers-in-sri-lanka/

  • தொடங்கியவர்
26 minutes ago, ampanai said:

இலங்கையில் புத்த ‘பற்கள்' கோவிலில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 50 மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும்.

புத்த பிரானின் பல், அதனுடன் இணைந்த மகாவம்சம், மனித வதை, புத்த பிக்குகள் .....

  • தொடங்கியவர்

இலங்கைக்கான உல்லாசத்துறையை தவிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன 

Boycott call for Sri Lanka's animal attractions as photos emerge of malnourished elephant Tikiri

Amy Woodyatt
CNN  Friday, 16 August 2019 12:01 am
 
Animal rights campaigners have called on tourists in Sri Lanka to boycott elephant attractions after photographs of a malnourished female used in a festival circulated online.

Images of the emaciated elephant were shared by Save Elephant Foundation to raise awareness of exploitation in captivity.

In the video above: An elephant charges at a jeep full of tourists on a safari in South Africa

"This is Tikiri, a 70-year-old ailing female. She is one of the 60 elephants who must work in the service of the Perahera Festival in Sri Lanka this year," Save Elephant Foundation shared to Facebook.

"Tikiri joins in the parade early every evening until late at night, every night for ten consecutive nights, amidst the noise, the fireworks, and smoke," the post read.

"She walks many kilometres every night so that people will feel blessed during the ceremony."

Petition

The Save Elephant Foundation, based in Thailand, provides care to captive elephants in the region.

"At this stage, we are asking people to lobby the Sri Lankan government to take immediate action," Save Elephant Foundation said.

A petition urging the country's leader to "end this barbaric torture and abuse" has gained more than 8,000 signatures.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

புத்த பிரானின் பல், அதனுடன் இணைந்த மகாவம்சம், மனித வதை, புத்த பிக்குகள் .....

இப்படி புத்த மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால், யாராவது நவீன பெளத்த மத இரட்சகள் கொதித்தெழும் அபாயம் இருக்கிறது. கவனம். 😂

16 minutes ago, goshan_che said:

இப்படி புத்த மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால், யாராவது நவீன பெளத்த மத இரட்சகள் கொதித்தெழும் அபாயம் இருக்கிறது. கவனம். 😂

ஏனைய மதங்களிலுள்ள குறைகளை விட்டிட்டு தனியே இந்து மதத்தை விமர்சிப்பதாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் கடவுள் இல்லை என்ற கொள்கையை திணிப்பதாலும், கடவுளை வணங்குவோரை மட்டம் தட்டுவதாலும் பலர் அதற்கு எதிராக இங்கு கருத்து எழுதுகிறார்கள்.

சிங்கத்துக்கும் இளவரசிக்கும் சிங்கபாகு பிறந்திருக்க முடியாது என்பது தெரிந்தாலும் சிங்களவர்கள் தம்மை சிங்கத்தின் பரம்பரையாக தான் கூறி வருகிறார்கள். 😀

அவர்களிடம் போய் அவர்கள் கடைப்பிடிக்கும் தேரவாத பௌத்தம் பற்றி பாடம் எடுத்து பாருங்கள். 😊

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Lara said:

உண்மைதான் இதனால்தான் நான் யாருக்கும் அவர்கள் மத நம்பிக்கை பற்றி பாடம் எடுப்பதில்லை. 

ஆனால் மதவாதிகள் மட்டுமில்லை, கடவுள் மறுப்பாளர்களிடம் போய் கடவுள் இருக்க கூடுமோ? என்ற ஐயத்தையேனும் சொல்லிப் பாருங்கள், பிச்சு மேய்ந்து விடுவார்கள். 😂.

இவ்வளவு ஏன் சதிக்கோட்பாட்டாளர்களிடம் போய், அவர்களின் ஒரு கோட்பாடு அவ்வளவாக நம்பும் படியாக இல்லை என ஒரு வார்த்தை தவற விட்டுப் பாருங்கள் - பக்கம் பக்கமாக தன்னிலை விளக்கம் தருவார்கள். 😂

எதன் மீதும் அதிக பற்றுக் கொண்டால் இதுதான் நிலை.

4 minutes ago, goshan_che said:

சதிக்கோட்பாடு வேறு கடவுள்/மத நம்பிக்கை வேறு.

கடவுள் மறுப்பாளர்களிடம் கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை இங்கு யாரும் திணிப்பதில்லை, கடவுள் மறுப்பாளர்கள் தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் தமது கொள்கையை திணித்து எழுதிய கருத்துகளை நான் வாசித்திருக்கிறேன்.

அதேபோல் தொடர்ச்சியாக பல திரிகளில் இந்து மதத்தை, அதை பின்பற்றுவோரை விமர்சித்தால் அதனால் கோபம் வருவது நியாயம்.

  • தொடங்கியவர்

இந்தியாவில் பல அமைப்புக்கள் உள்ளன, மிருகவதைகளை தடுக்க. அதில் ஒன்று பீட்டா (PETA) . 

இவர்கள் மத்தியில் அரசியல் நோக்கமே இல்லை என நம்புவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு.
 
தமிழகத்தின் பாரம்பரியமான, தமிழர்கள் கலாச்சாரத்துடன் இணைந்த காளைச்சவாரியை ( ஜல்லிக்கட்டு) இது குறிவைத்தது. மக்களின், மாணவர்களின் போராட்டத்தால் இது தோற்கடிக்கப்பட்டது.

இந்த பீட்டா அமைப்பு இலங்கையில் இல்லை என்று தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Lara said:

எல்லாம் நம்பிக்கைதான். 

ஒருத்தருக்கு கடவுள்/ தன் மதம் மீது அசையாத நம்பிக்கை.

இன்னொருவருக்கு கடவுள் இல்லை என்பதன் மீது அசையாத நம்பிக்கை.

மற்றையவருக்கு தன் சதிக் கோட்பாடு சரி என்பதில் மீது அசையாத நம்பிக்கை.

எமது நம்பிக்கை அடிப்படையில் நாம் செய்யும் ஒரு செயலை வேறு ஒருவர் தட்டிக் கேட்டால் பொத்துக் கொண்டு வரும் கோபம், இன்னொருவரின் நம்பிக்கையை நாம் கேள்விக்குள்ளாக்கும் போது வருவது இல்லை.

உ+ம் : முன்னேஸ்வரத்தில் பலி கூடாது, முஸ்லீம்கள் போயாவில் மாடு வெட்டக் கூடாது எனும் பெளத்த புண்ணியவாங்களுக்கு 70 வயது என்புதோல் போர்த்திய யானையின் துயரம் கண்ணுக்குப் படாது. இது மறுவழமாக இந்துக்களுக்கும் ஏனைய எல்லா நம்பிக்கையினருக்கும், நம்பிக்கை இல்லாதோருக்கும் கூட பொருந்தும்.

எல்லாம் தக்காளி சோஸ்/இரத்தம் கதைதான் 😂

32 minutes ago, ampanai said:

இந்தியாவில் பல அமைப்புக்கள் உள்ளன, மிருகவதைகளை தடுக்க. அதில் ஒன்று பீட்டா (PETA) . 

இவர்கள் மத்தியில் அரசியல் நோக்கமே இல்லை என நம்புவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு.
 
தமிழகத்தின் பாரம்பரியமான, தமிழர்கள் கலாச்சாரத்துடன் இணைந்த காளைச்சவாரியை ( ஜல்லிக்கட்டு) இது குறிவைத்தது. மக்களின், மாணவர்களின் போராட்டத்தால் இது தோற்கடிக்கப்பட்டது.

இந்த பீட்டா அமைப்பு இலங்கையில் இல்லை என்று தெரிகின்றது. 

இது போல் ஒரு அமைப்பு இதில் தலையிட்டதாக எங்கோ படித்தேன்.

  • தொடங்கியவர்

உலகம் முழுவதுமாக 28000க்கும் அதிகமானோர் கையொப்பம் இட்டு விழிப்புணர்வையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறார்கள். 

https://www.change.org/p/ranil-wickremesinghe-save-tikiiri-from-barbaric-abuse

To love, to do no harm, to follow a path of kindness and compassion, this is the Way of Buddha. It is time to follow.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

நல்ல விசயம். ஆனால் டிக்கிரியை 2ம் நாள் பெரெஹெரவோடு நிறுத்திவிட்டதாய் படித்தேன். ஆனால் இவர்கள் இன்னும் கையொப்பம் எடுக்கிறார்கள்?

  • தொடங்கியவர்
15 minutes ago, goshan_che said:

நல்ல விசயம். ஆனால் டிக்கிரியை 2ம் நாள் பெரெஹெரவோடு நிறுத்திவிட்டதாய் படித்தேன். ஆனால் இவர்கள் இன்னும் கையொப்பம் எடுக்கிறார்கள்?

We ask you the prime minister of Sri Lanka to end this barbaric torture and abuse

தொடர்ந்தும் இது நடக்க கூடாது என்ற நோக்கத்துடனேயே இந்த பிரச்சாரம் தொடர்கின்றது,

இதை இவர்கள் யானையை சின்னமாக கொண்ட இரணில் அவர்களிடம் சேர்ப்பிற்க முயலுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் உலகத்தின் கவனம் இன்னொரு பக்கம் திரும்ப மறுபடியும் இதையோ அல்லது இதைபோல இன்னொரு வதையையோ ஆரம்பிப்பார்கள்.

  • தொடங்கியவர்
On 8/15/2019 at 8:06 PM, ampanai said:

#1 சி,என்,என். உல்லாசத்துறை பக்கம்:: 
Campaigners are urging a boycott of Sri Lanka's elephant attractions after these photos emerged
https://www.cnn.com/travel/article/elephant-festival-sri-lanka-intl-scli/index.html

#2 Oh my Lord! Campaigners are urging tourists to #boycottSriLanka's #elephant attractions after these photos emerged #torture

இலங்கைக்கு வரும் உல்லாச பிராணிகளை அங்குள்ள யானைகளை வைத்தும் கவரும் நெறிமுறைகள் நீண்ட காலமாக உள்ளது. அதை புறக்கணிக்கும் கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன.

நலிந்து மெலிந்து போயுள்ள இலங்கை உல்லாசத்துறை இந்த 'உலக கவனத்தை' விரும்பவில்லை. 

2 hours ago, goshan_che said:

எல்லாம் நம்பிக்கைதான். 

ஒருத்தருக்கு கடவுள்/ தன் மதம் மீது அசையாத நம்பிக்கை.

இன்னொருவருக்கு கடவுள் இல்லை என்பதன் மீது அசையாத நம்பிக்கை.

மற்றையவருக்கு தன் சதிக் கோட்பாடு சரி என்பதில் மீது அசையாத நம்பிக்கை.

எமது நம்பிக்கை அடிப்படையில் நாம் செய்யும் ஒரு செயலை வேறு ஒருவர் தட்டிக் கேட்டால் பொத்துக் கொண்டு வரும் கோபம், இன்னொருவரின் நம்பிக்கையை நாம் கேள்விக்குள்ளாக்கும் போது வருவது இல்லை.

உ+ம் : முன்னேஸ்வரத்தில் பலி கூடாது, முஸ்லீம்கள் போயாவில் மாடு வெட்டக் கூடாது எனும் பெளத்த புண்ணியவாங்களுக்கு 70 வயது என்புதோல் போர்த்திய யானையின் துயரம் கண்ணுக்குப் படாது. இது மறுவழமாக இந்துக்களுக்கும் ஏனைய எல்லா நம்பிக்கையினருக்கும், நம்பிக்கை இல்லாதோருக்கும் கூட பொருந்தும்.

எல்லாம் தக்காளி சோஸ்/இரத்தம் கதைதான் 😂

மதம் என்பது ஒருவர் பிறந்ததிலிருந்து கூட வருவது. இலங்கையில் இப்பொழுதும் சமயம் பாடசாலைகளில் ஒரு பாடமாக உள்ளது. அதை படித்து வளர்ந்து வருகிறார்கள். (பின் அதில் நம்பிக்கையில்லாமல் விலகுவது வேறு).

முன்னேஸ்வரத்தில் பலி கூடாது, முஸ்லிம்கள் மாடு வெட்ட கூடாது போன்றன சிங்கள பௌத்தர்கள் ஏனைய மத/இனங்கள் மீது தமது அரசியலை பிரயோகிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர ஜீவகாருண்யம் கிடையாது.

இன்று இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்தர்களின் ஆக்கிரமிப்பு, முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு/மதமாற்றங்கள், கிறிஸ்தவ மதமாற்ற குழுக்கள் இந்துக்களை மதம்மாற்றுதல் போன்றன முக்கிய பிரச்சினையாக உள்ளன. அவை பற்றி எழுதினால் பயனுண்டு.

Edited by Lara

எமது மக்களும் பல புல வாசிகளும் கடைசி 3 நிலைகளிலேயே சிக்கி இருப்பதாக புரிகிறது. உங்கள் கருத்து என்ன? (bottom 3) 🙂🤣

Maslow's_Hierarchy_of_Needs.svg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராஜராஜசோழன் said:

எமது மக்களும் பல புல வாசிகளும் கடைசி 3 நிலைகளிலேயே சிக்கி இருப்பதாக புரிகிறது. உங்கள் கருத்து என்ன? (bottom 3) 🙂🤣

Maslow's_Hierarchy_of_Needs.svg

கடைசி படிக்கும் கீழாக ஒரு படி இருக்கணுமே 😂 என்றுதான் எனக்குத் தோன்றுகிறது 😂.

  • தொடங்கியவர்

இலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை

உடல்நலம் குன்றி, மெலிந்துபோன வயதான பெண் யானை ஒன்றை பௌத்த உற்சவத்தில் பங்கேற்க வைத்தது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதை நேர்த்திக்கடன் செலுத்தவே உற்சவத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், இனிவரும் காலங்களில் அதை உற்சவங்களில் பங்கேற்க வைப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யானை உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது போல் இந்த யானை உற்சவத்தில் 10 தினங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படவில்லை என்று அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறும் பௌத்த உற்சவம் இலங்கையில் மிக முக்கியமானதொரு உற்சவமாக கருதப்படுகின்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குப்பற்றுதலுடன் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமான கொண்டாடப்பட்டு வருகின்றது.

குறிப்பாக புத்தரின் புனித சின்னங்கள் வீதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது இந்த உற்சவத்தின் பிரதான நிகழ்வாக காணப்படுகின்றது.

இந்த உற்சவத்தை அலங்கரிக்கும் வகையில் சிங்கள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றமை வழமையாகும்.

யானை

இந்த நிலையில், இந்த ஆண்டு உற்சவத்தில் கலந்துக்கொண்ட 'டிக்கிரி" என்ற பெயரை கொண்ட யானை குறித்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

டிக்கிரி என்றழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு சுமார் 70 வயது என கூறப்படுகின்றது.

மிகவும் வயதான நிலையில் காணப்படும் இந்த யானை தொடர்பில் தாய்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகள், தீ பந்தங்கள் மற்றும் புகை ஆகியவற்றுடன் இந்த யானை பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிரமமான ஒன்று என தாய்லாந்து விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.

வயதான நிலையில், சுகயீனமுற்றுள்ள இந்த யானை தொடர்பில் கவனம் செலுத்தி, அதனை எதிர்வரும் உற்சவங்களில் பங்குப்பற்றுவதனை நிறுத்துமாறும் விலங்குகள் நல செயற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் யானைகளுக்கு பொறுப்பான சங்கத்தின் செயலாளர் தம்சிறி பண்டார கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு உற்சவத்தின் பின்னர் டிக்கிரி யானையின் உடல் நலம் குன்றியதாகவும், அதனை குணப்படுத்தும் வகையில் விஷ்ணு கடவுளுக்கு நேர்த்தி கடன் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

யானையின் உரிமையாளர் இந்த நேர்த்தி கடனையை செலுத்த வேண்டும் என தம்மிடம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே, இந்த யானை உற்சவத்தில் பங்குப்பற்றியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த யானை நோய்வாய் பட்டிருந்த போது, அது குணமானால் அதை பெரஹரவில் ஒரு நாள் கலந்து கொள்ள வைப்பேன் என்று, தான் நேர்த்தி வைத்திருந்ததாகவும், அதற்கமைய வைத்தியர்களின் பரிசோதனைக்குப் பிறகே யானையை உற்சவத்துக்கு கொண்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

டிக்கிரி யானைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

டிக்கிரி யானை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க எந்தவொரு பிரச்சனையும் கிடையாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்தமையை அடுத்தே இந்த யானை உற்சவத்தில் கலந்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

டிக்கிரி யானையின் மீதுள்ள அன்பினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என கூறிய அவர், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடத்தப்படும் உற்சவத்தில் கலந்துக்கொள்ளும் யானைகளை நிறுத்தும் சூழ்ச்சிக்காகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், டிக்கிரி யானையை இனிவரும் காலங்களில் உற்சவங்களில் பங்குப்பற்றுவதனை நிறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி விஸ்ணு தேவாலயத்திற்கு பொறுப்பான பஸ்நாயக்க நிலமே மகேந்திர ரத்வத்த தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49385923

  • தொடங்கியவர்

image_60a9481a4f.jpg

கேள்விகளும் பதில்களும் (With that in mind the Daily Mirror spoke to several individuals to find out what had happened to Tikiri, the status of captive elephants in Sri Lanka and the way forward.) 

Her worn-down, skeletal frame flooded social media posts in a matter of seconds. Online petitions were signed, others called for justice, some called to boycott peraheras while the international wildlife community criticised us once again. 

1. அமைச்சர் : இது பற்றிய அறிக்கைக்காக காத்திருக்கின்றேன் 

2. விகாரை பொறுப்பாளர் : இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் பொழுது இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கள் கேள்வி எழுப்புவது இல்லை 

3. வேறு : காட்டில் இருந்திருந்தால் இந்த யானை இறந்திருக்கும் 

http://www.dailymirror.lk/news-features/Captive-elephants-and-the-way-forward-As-Tikiri-continues-to-live/131-173098

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.