Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதி கயிறுகளை மாணவர்கள் கட்ட தமிழக அரசு தடை

Featured Replies

` எதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்?' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள்

தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.

இச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர், ``2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில மாணவர்களின் கையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள், அதுகுறித்து விசாரித்துள்ளனர்.

`பள்ளியில் விளையாடும்போது டீம் பிரிப்பதற்காக மாணவர்களைத் தேர்வு செய்வோம். அப்போது, எங்கள் சமூக மாணவனை அடையாளம் காண்பதற்காகக் கையில் கயிறு கட்டியுள்ளோம். இந்த அடையாளத்தை வைத்து எங்கள் சமூகத்தவர்கள் மட்டுமே ஒரு டீமாக விளையாடுவோம்’ எனப் பதில் வந்துள்ளது. ஒருசில இடங்களில் ஒரே சாதி மாணவர்கள், ஒரே டிசைன் மோதிரம், ரப்பர் பேண்டு அணிந்துகொள்வது, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது எனச் செயல்படுவதையும் பார்த்துள்ளனர்.

திடுக்கிட்டுப் போன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இப்பழக்கத்தை உடனடியாகத் தடைசெய்யுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனடிப்படையில்தான் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக, கையில் பல வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிக்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்தப் பள்ளிகளில் இதுபோன்ற கயிறு கட்டும் பழக்கம் உள்ளது என்பதையும் அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்களைக் கேட்டுள்ளோம். சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை
 
பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் இருந்து கடந்த ஜூலை 31-ம் தேதி அளிக்கப்பட்ட இச்சுற்றறிக்கைக்கு, அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாகப் பதில் அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒருசில அரசுப் பள்ளிகளில் சாதிய அடையாளக் கயிறுகளுக்குத் தலைமை ஆசிரியர்கள் தடைவிதிக்கும் பட்சத்தில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிலை இருந்து வந்தது. தற்போது பள்ளிக் கல்வித்துறையே சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான கயிறுகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

https://www.vikatan.com/government-and-politics/education/tamilnadu-school-education-department-banned-colour-bands-in-schools

  • கருத்துக்கள உறவுகள்

சாதியம் என்பது ஒரு நம்பிக்கை அல்லவா? நமது முன்னோர்கள் கைக்கொண்ட ஒரு நடைமுறை அல்லவா?

சிலருக்கு மத நம்பிக்கை அடையாளம் எப்படி அத்தியாவசியமோ அதே போல் இன்னும் சிலருக்கு அவர்களின் சாதிய அடையாளம் இன்றியமையாததாக இருக்கலாம் அல்லவா?

இந்த இளைஞர்கள் தாமே தமக்குள் கடைப்பிடிக்கும் சாதிய பழக்கவழக்கங்களில் இந்த சாதிகளை சேராதோர் அல்லது சாதியே இல்லை என்போர் மூக்கை நுழைப்பது தவறு என்று இந்த இளஞர்கள் சார்பாக யாரேனும் கூறக்கூடுமா?

Just thinking out aloud. 

Edited by goshan_che

17 minutes ago, goshan_che said:

சாதியம் என்பது ஒரு நம்பிக்கை அல்லவா? நமது முன்னோர்கள் கைக்கொண்ட ஒரு நடைமுறை அல்லவா?

சிலருக்கு மத நம்பிக்கை அடையாளம் எப்படி அத்தியாவசியமோ அதே போல் இன்னும் சிலருக்கு அவர்களின் சாதிய அடையாளம் இன்றியமையாததாக இருக்கலாம் அல்லவா?

இந்த இளைஞர்கள் தாமே தமக்குள் கடைப்பிடிக்கும் சாதிய பழக்கவழக்கங்களில் இந்த சாதிகளை சேராதோர் அல்லது சாதியே இல்லை என்போர் மூக்கை நுழைப்பது தவறு என்று இந்த இளஞர்கள் சார்பாக யாரேனும் கூறக்கூடுமா?

Just thinking out aloud. 

சரியாகவே கணிப்பிட்டுள்ளீர்கள்.ஏற்கனவே  ஒருவர் கூறிவிட்டார். அவர் தான் எச் ராஜா. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஓ எச்(ச) ராஜா சர்மாவே சொல்லீட்டாரா?

இனி ஏது அப்பீல்? நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு எல்லாம், “ஆண்டி இந்தியன்”, “ஆண்டி ஹிந்து” பட்டமளிப்பு செய்தால் போச்சு 😂 

  • தொடங்கியவர்

மேலைத்தேய உலகில் இருந்த சாதியம் இன்று பணம் மற்றும் அதி உயர் தொழில்களில் உள்ளது, உதாரணத்திற்கு, ஒரு வங்கியில் பெரிய பதவிகளை நாலாம் தலைமுறையாக ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் வகிக்கும் நிலை உண்டு. தமிழகத்தில் மற்றும் இந்தியாவில்  அரசியல் தலைவர்களை பார்த்தால், அதுவும் ஒரு சாதியம் தான் 
 
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இது சாதியம் என்பதை விட, வர்க்க/குடும்ப ஆதிக்கம் எனலாம். ஆனால் இந்த முறையில், ஒப்பீட்டளவில் ஒரு சிறிய முன்னேற்றகரமான விசயம் என்னவென்றால் இங்கே social mobilityக்கு கொஞ்சமேனும் வாய்பிருக்கிறது.

உதாரணதுக்கு இந்த வங்கிகளில் ஆதிக்கம் செலுத்தும் கோல்ட் ஸ்மித் குடும்பத்தில் வெளியாளான இம்ரான்கான் இணைந்த போது, ஜெமைமாவை யாரும் வர்க்கம் மாறி கல்யாணம் கட்டிவிட்டாய் என தலைமுழுகி விடவில்லை. இம்ரானையும் தம்மோடு ஒருவராக்கி இழுந்துக் கொண்டனர். இதேதான் எதிர்கால ராணியார் கேட் மிடில்டன் விசயத்திலும் நடந்தது.

ஆனால் சாதிய முறையில் இதுக்கு வாய்ப்பே இல்லை. சாதிக்கு வெளியே கலக்கும் போது, கலந்தவர் கீழிறக்கப்படுவாரே ஒழிய, இருவரையும் மேலே எடுப்பதில்லை.

இதற்க்கான காரணம்? மதம். எப்படி? வர்ணாசிரமம் சொல்கிறது சாதி பிறப்பால், இறைவனால் தீர்மானிக்கபடுகிறது, அதை நடுவில் மாற்ற முடியாது.

நான் நாளைக்கே ஒரு கோல்ட்ஸ்மித் பொம்பிளையை கட்டி, எனது மூளை, பணம் சேர்க்கும் உத்திகளை பயன்படுத்தி அவர்களில் ஒருவனாக ஏற்கப்பட வாய்புள்ளது. எனக்கு இல்லாவிடினும் என் மகனாவது ஏற்கப்படலாம் ( கவனிக்க: பொரிஸ் ஜோன்சனின் பாட்டன் ஒரு துருக்கிய முஸ்லிம்). 

ஆனால் தலை கீழாக நிண்டு தண்ணி குடிச்சாலும் என்னால், என் சந்ததியாலே பிராமணன் ஆக முடியாது. 

5 hours ago, goshan_che said:

ஆனால் தலை கீழாக நிண்டு தண்ணி குடிச்சாலும் என்னால், என் சந்ததியாலே பிராமணன் ஆக முடியாது. 

ஏன் அப்படி ஆக முடியாது என்ற கேள்வியை நான்  கேட்டால்  இந்து மதத்தை கேவலப்படுத்துவதாக ஆளாளுக்கு உணர்ச்சி வசப்படுவார்கள். 

  • தொடங்கியவர்
6 hours ago, goshan_che said:

ஆனால் தலை கீழாக நிண்டு தண்ணி குடிச்சாலும் என்னால், என் சந்ததியாலே பிராமணன் ஆக முடியாது. 

ஆனால், சிலர் அதையும் ஒரு தொழிலாக, வேறு சில மதங்களில் உள்ள மாதிரி, சேவையாற்ற விரும்புவார்கள் படித்து பட்டம் பெறலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

ஆனால், சிலர் அதையும் ஒரு தொழிலாக, வேறு சில மதங்களில் உள்ள மாதிரி, சேவையாற்ற விரும்புவார்கள் படித்து பட்டம் பெறலாம். 

👆🏼பெரியாருக்கு நன்றி.  ஆனாலும் அர்சகர் ஆகலாமே ஒழிய, பிராமணர் ஆக முடியாது.

13 minutes ago, goshan_che said:

👆🏼பெரியாருக்கு நன்றி.  ஆனாலும் அர்சகர் ஆகலாமே ஒழிய, பிராமணர் ஆக முடியாது.

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கமைய பக்தியுடன் ஆகம விதிகளை முறையாக கற்று தேறிய 200 க் கு மேற்பட்டவர்கள்,  பிராமணர்களின் கடும் எதிர்ப்பினால் பல வருடங்களாக   இன்னமும் சேவைக்கு சேர்த்து கொள்ளப்படவில்லை. 

  • தொடங்கியவர்
3 hours ago, tulpen said:

இதில் பிராணமார்கள் மீது எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. மாற்றத்தை அதில் இலாபம் வருப்பவர்கள் தடுக்க முயற்சிப்பது இயல்பானதே, 

இதை, கோயில்கள் தான் மாற்ற வேண்டும். அங்குள்ள தர்மகத்தா சபைகள் இளையவர்களை இணைக்கும்பொழுது இல்லை மக்கள் நிர்வாக சபையை வேண்டும்பொழுது மாற்றம் வர வேண்டும். 

இவ்வாறான சனநாயக விழிப்புணர்வுகள் பாடசாலைகளில் கற்பிக்கப்படல் வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்பினால் மட்டும் காணாது, அவற்றிற்கு உழைக்கவும் வேண்டும். பெற்ற மாற்றங்களை பேண விழிப்பாயும் இருக்க வேண்டும்.  

6 hours ago, ampanai said:

இதில் பிராணமார்கள் மீது எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. மாற்றத்தை அதில் இலாபம் வருப்பவர்கள் தடுக்க முயற்சிப்பது இயல்பானதே, 

இதை, கோயில்கள் தான் மாற்ற வேண்டும். அங்குள்ள தர்மகத்தா சபைகள் இளையவர்களை இணைக்கும்பொழுது இல்லை மக்கள் நிர்வாக சபையை வேண்டும்பொழுது மாற்றம் வர வேண்டும்..  

இவர்களுக்கு  அர்ச்கசர் நியமனம் வழங்குவது ஆகமவிதிகளுக்கு முரணானது என்று கூறி நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி தடுத்தவர்கள் பிராமணர்களே. நீதிபதிகளும் அவர்ளே என்பதால் இன்னமும் அதே நிலை தான் .   

( எவ்வளவு  அடிச்சாலும் தாங்குறாண்டா. இவன் ரொம்ப நல்லவன்டா என்று வடிவேலுவை பார்த்து  ரவுடிகள் சொன்னது போல்  பிராமணர்கள் உங்களைப் ப்பார்த்து சொல்லப்போகிறார்கள்.)😂😂 

  • தொடங்கியவர்
40 minutes ago, tulpen said:

இவர்களுக்கு  அர்ச்கசர் நியமனம் வழங்குவது ஆகமவிதிகளுக்கு முரணானது என்று கூறி நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி தடுத்தவர்கள் பிராமணர்களே. நீதிபதிகளும் அவர்ளே என்பதால் இன்னமும் அதே நிலை தான் .   

இதற்கும் ஒரு தீர்வு உள்ளது. அதை நாம் இன்னும் அறிய, இல்லை அமுல்படுத்த முடியவில்லை. 

9 hours ago, ampanai said:

இதற்கும் ஒரு தீர்வு உள்ளது. அதை நாம் இன்னும் அறிய, இல்லை அமுல்படுத்த முடியவில்லை. 

அது என்ன தீர்வு? பிராமணீயமும் அது பரப்பிய மூடத்தனங்களையும் தூக்கி எறிந்து அறிவுள்ள மக்களாக மாறுவது தானே அது. 

  • தொடங்கியவர்
3 hours ago, tulpen said:

அது என்ன தீர்வு? பிராமணீயமும் அது பரப்பிய மூடத்தனங்களையும் தூக்கி எறிந்து அறிவுள்ள மக்களாக மாறுவது தானே அது. 

இது போன்ற பல பிரச்சனைகளுக்கு, "இது தான் தீர்வு" என்று ஒரு சனநாயக சமூகம் அவ்வளவு இலகுவாக ஏற்பதில்லை. காரணம் அவரவர் பலம் பலவீனம். 

உலகத்தில் எங்குமே 'அறிவுள்ள மக்களும்' இல்லை. எல்லாம் ஒப்பீடே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.