Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பின்லாந்து கல்வி முறை நம் நாட்டிலும் சாத்தியம்தானா? ஓர் அலசல்


Recommended Posts

பதியப்பட்டது

கல்வி பற்றிய எந்தவொரு விவாதத்திலும் தவறாமல் பின்லாந்து நாட்டின் பெயர் இடம் பெற்றுவிடும். தமிழக அரசுப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்விச் சுற்றுலா செல்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உண்மையில், பின்லாந்து நாட்டின் கல்விச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்ற நிலையை இந்தியாவில் பின்பற்ற முடியாதா... என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசனிடம் கேட்டோம்.

``ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் கல்வி குறித்து தரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்துவிடுகின்றன. அவற்றில் பின்லாந்து மற்றும் டென்மார்க் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது. இந்தளவு தொடர்ச்சியாகச் சாதிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் பின்லாந்தில் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருவது மிக இயல்பானதே. பின்லாந்து நாட்டில் கல்வி தொடங்குவதே மிக ஆரோக்கியமான வயதில்தான். ஆம்! ஒரு குழந்தையின் ஆறு வயதில்தான் முறையான கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால், நமது ஊரில் இரண்டரை வயதிலிருந்தே ஃப்ரி ஸ்கூலுக்குக் குழந்தைகளை அனுப்பத் தொடங்கிவிடுகிறோம். அங்கும் 6 வயதுக்கு முன் ஃப்ரீ ஸ்கூல் இருக்கிறது. ஆனால், அங்கு எந்தப் பாடமும் கிடையாது. இசை, நீச்சல், ஓவியம் போன்ற கலைகளைப் பயிற்றுவிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி. புத்தகங்கள் கிடையாது.

ஆறு வயதில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஒரு வருடம் பாடங்கள் கிடையாது. பெரிய அறையில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு, அங்கிருக்கும் விளையாட்டுப் பொருள்களில் விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். அதன்பின், 7 வயதில்தான் பாடங்களே தொடங்குகின்றன. அதிலும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரேங்க் கார்டு எனும் முறையே கிடையாது. இதை நம் ஊரில் நினைத்துப் பார்க்க முடியுமா? எல்.கேஜியிலேயே முதல் மார்க் குறைந்துவிட்டது எனக் குழந்தையிடம் கோபித்துக்கொள்ளும் பெற்றோர்களே அதிகம். இவ்வளவு பணம் கட்டிப் படிக்க வைக்கிறனே என்று கரித்துக்கொட்டவும் செய்வார்கள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ரேங்க் கார்டு என்பது மாணவர்களுக்கு இல்லை. உங்கள் பிள்ளைக்கு இந்த வயதில் இந்தந்த திறன்கள் இருக்கவேண்டும். அவற்றில் இருக்கும் போதாமைகளை, பெற்றோரிடம் சொல்வது மட்டுமே நடக்கும். அதிலும் கண்டிப்போ நிர்பந்தமோ இருக்காது. 7 வயது முதல் 16 வயது வரையிலான கல்வி முழுக்க பின்லாந்து நாட்டின் ஃபீனிஷ் மொழியில்தான் அளிக்கப்படுகிறது. இது என்னளவில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். ஏனெனில், தாய்மொழியில் கல்வி கற்கும்போதே அக்கல்வி அர்த்தம் புரிந்துகொண்டு ஆழமாக அம்மாணவரின் மனதில் தங்கும். அதன் தாக்கம்தான், ஐ.நா, நாசா உள்ளிட்ட பல இடங்களில் பின்லாந்து நாட்டினர் தற்போது கணிசமான அளவு இடம்பெற்றுவருகிறார்கள். 7- 16 வயதுக்குரிய கல்வியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலம், பிரெஞ்சு என அம்மாணவரின் விருப்பத்துக்கு ஏற்ப மற்றொரு மொழியைக் கற்க முடியும்.

7-16 வயதுக்குள் சர்வதேச அளவிலான மூன்று தேர்வுகளை எழுதிவிடுகிறார்கள். அவற்றை எழுத வைக்கப்படுவதில்லை. அந்தளவுக்குத் திறன்கள் அக்கல்வி முறையில் இருக்கின்றன. மேலும், அக்கல்வி முடிவடையும்போது கொடுக்கப்படும் சான்றிதழ் வெறுமனே தேர்வு வைத்துக்கொடுக்கப்படுவது அல்ல. இந்தக் காலகட்டத்தில், விவாசயம், மெக்கானிக்கல், மின்சாரம் தொடர்பான துறைகளில் பணியாற்றி டிப்ளோமா சான்றிதழ்கள் பெற வேண்டும். பின்னாளில் இத்தனை துறைகளில் வேலை வாய்ப்பு இருக்கின்றன என்பதும், ஒரு தொழில் செய்யப்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களை நேரிலும் பழகிக்கொள்ளும் நல்ல வாய்ப்பாக அது அமையும்.

இந்தப் பள்ளிக் கல்வி முடிந்தது, மூன்று வகை பிரிவுகள் படிப்பதற்காக மாணவர்கள் தேர்ந்தெடுக்க முடியும். முதலாவது அகாடமிக் பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பைத் தரும் லூக்கியோ ( Lukio). இதன் வழியே டெக்னாலஜி அல்லாத படிப்புகளான பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் படிக்கலாம். அடுத்தது, அம்மக்யூ குலு ( Ammaqi kolu) இந்தப் பிரிவில் தொழில் கல்வி தொடர்பான பிரிவுகளைப் படிக்கலாம். உதாரணமாக, மூன்று மணிநேரம் பாடம் என்றால், அடுத்த மூன்று மணி நேரம் பொருள்களை உற்பத்தி செய்யும் இடங்களுக்கு நேரடியாகப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். இதன்மூலம் படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், கல்வி இலவசம்தான். மூன்றாவது பிரிவான லிபரல் ஆர்ட்ஸ் என்பது மாணவர்களின் கலைத்திறன்களை வளர்ப்பது. இதில் இசை உள்ளிட்ட 216 பிரிவுகளை வைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு பிரிவுகளை முடித்தவர்கள் அதன் மேல்கல்விக்காக பல்கலைக்கழகத்தில் சேரலாம். அம்மக்யூ குலு முடித்தவர்களில் பலரும் நேரடியாகத் தொழில் சார்ந்த பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்.

பொதுவாக பின்லாந்து கல்வி முறையில் நாம் ரொம்பவே சிலாகித்துச் சொல்லும் அம்சம் ஒன்று உண்டு. ஒரு வகுப்பில் அரையாண்டுத் தேர்வுக்கான பகுதியாக A - Z வரை கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது ஊரில், அந்தப் பாடப் பகுதியை நடத்திவிட்டுத் தேர்வு முறைக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், வகுப்பின் அனைத்து மாணவர்களும் A - Z வரை புரிதலுடன் கற்றிருப்பார்கள் என்று சொல்லமுடியாது இல்லையா? சில A - Z வரை படித்திருப்பார். சில D யிலேயே நின்றுகொண்டிருப்பர். அதனால், எந்தப் பகுதி ஒரு மாணவருக்குப் புரியவில்லையே அதை அவர் தெரிந்துகொள்ளும் சரியான வாய்ப்பை பின்லாந்து கல்வி முறை அளிக்கிறது.

உதாரணமாக, 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு அல்ஜிப்ரா தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அல்ஜீப்ரா 6-ம் வகுப்பில்தான் கற்றுத்தரப்படுகிறது எனில், அந்த மாணவர் ஒரு வாரம் இருந்து படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்படிக் கற்றுத்தர ஓர் ஆசிரியர் ஒதுக்கப்படுவார். ஆசிரியர் மட்டுமல்ல, ஒரு மாணவர் பல்கலைக்கழகப் படிப்பு படிக்கும் வரையில் பள்ளியில் ஏதேனும் சந்தேகத்தைத் தீர்க்க அவர் வேண்டும் எனில், அப்பள்ளி அவருக்கு கடிதம் எழுதும். அவர் பல்கலைக்கழகத்தில் விடுப்பு எடுத்து பள்ளி வர வேண்டும். அந்தளவுக்குப் பள்ளியோடு இணைப்பில் ஒரு மாணவரை வைத்திருக்கிறார்கள்.

பின்லாந்தில் பள்ளிகள் என்பது கல்விக் கட்டடங்களாக மட்டுமல்லாமல், மக்களின் பண்பாட்டோடு இணைந்திருக்கிறது. அறுவடைக் காலங்களில் தானியங்களை உலர்த்த பள்ளியைப் பயன்படுத்துவார்கள். அதேபோல வெள்ளக் காலங்களில் ராணுவம் தங்கும் இடமாகவும் இருக்கும். ஊர்த் திருவிழாக் கொண்டாட்டக் களமாகவும் பள்ளிகள் இருக்கும். அதுதான் பள்ளி என்பது நம்முடையது என்கிற ஒரு நெருக்கத்தை அது அளிக்கிறது. இந்த உணர்வை நம் நாட்டில் பார்ப்பது மிகவும் அரிது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று, கல்வி முழுக்க முழுக்க அரசின் வசம் மட்டுமே இருக்கிறது. தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசு இலவசமாகக் கல்வி அளிக்கிறது. மேலும், நான்கு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறுவர் இலக்கிய விழா ஒன்றிற்காக சிங்கப்பூர் சென்றபோது, அங்கு வந்த பின்லாந்து ஆசிரியர்களைச் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் இசை, நடனம் உள்ளிட்ட பல்திறன் கொண்டவர்களாக இருந்தனர். அதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படியான ஆசிரியர்களிடம்தானே இயல்பாக மாணவர்களுக்குத் திறன்களைக் கற்றுத்தர முடியும்.

 

பின்லாந்து நாட்டின் அருமையான கல்வி முறையை நம் நாட்டிலும் பின்பற்ற முடியுமா என்ற கேள்விக்கு வருவோம்.

இதில் இருக்கும் முக்கியமான சிக்கல் நம் நாட்டின் மக்கள் தொகை. பின்லாந்தை விடவும் சுமார் 40 மடங்கு மக்கள் தொகை கொண்டது நம் நாடு. ஆனாலும் அரசியல்வாதிகள் நினைத்தால் சாத்தியம்தான். அதற்கு அரசு முன் வரவேண்டும். ஏனெனில், பின்லாந்து ஜிடிபியில் 24 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது; ஆனால், நம் நாட்டில் 3 சதவிகிதம் மட்டும்தான். இதை 6 சதவிகிதமாக மாற்றுவதற்கு கோத்தாரி வைத்த கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. தற்போது வெளியான தேசியக் கல்விக் கொள்கை வரைவில் ஜிடிபி 6 சதவிகிதம் பயன்படுத்த தனியாரைக் கல்வியில் ஈடுபடுத்தச் செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுகிறது அரசு.

அடுத்து, பெற்றோரின் மனநிலை மாற வேண்டும். ஏனெனில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிரிலியன்ட் என்று இவர்கள் நினைக்கிறார்கள். திறன்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதுமே பிரிலியன்ட் மாணவருக்கான அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹோம் வொர்க் அதிகம் கொடுக்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்ற மனப்பான்மையிலிருந்து வெளியே வர வேண்டும். பெற்றோர்களைப் போலவே சமூகம், திறமை உள்ள மாணவர்களைப் பாராட்டுவதற்கு முன் வந்தால் மட்டுமே இங்கே பின்லாந்து கல்வி முறை சாத்தியமாகும். ஏனெனில், பின்லாந்து கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு ஜெ.கிருஷ்ணமூர்த்தி கல்வி நிலையங்கள் இயங்கின. ஆனால், அரசு இம்முறையைக் கையிலெடுத்து மாற்றும்போதே முழுமையான பலன் கிடைக்கும்.

 

https://www.vikatan.com/government-and-politics/education/educationist-natarasan-talks-about-finland-education

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வினா இலக்கங்கள் 5, 24, 26 5 ) எல்லா போட்டியாளர்களும் சிறிதரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள்.  24) 24 போட்டியாளர்கள் சாணக்கியன் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள்  26) குகதாசன் வெற்றி பெறுவார் என சரியாக சொன்னவர்கள் 22 போட்டியாளர்கள்.  1)பிரபா - 39 புள்ளிகள் 2)வீரப்பையன் - 34 புள்ளிகள் 3) வாதவூரான் - 34 புள்ளிகள் 4) வாலி - 34 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 33 புள்ளிகள் 6) கந்தையா 57 - 32 புள்ளிகள் 7) Alvayan - 32 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 32 புள்ளிகள் 9) நிழலி - 32 புள்ளிகள் 10) ரசோதரன் - 31 புள்ளிகள் 11) சுவைபிரியன் - 30புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 13)நூணாவிலான் - 30 புள்ளிகள் 14)வில்லவன் - 30 புள்ளிகள் 15) நிலாமதி - 30 புள்ளிகள் 16)கிருபன் - 29 புள்ளிகள் 17)goshan_che - 29 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 28 புள்ளிகள் 19) வாத்தியார் - 26 புள்ளிகள் 20) புலவர் - 26 புள்ளிகள் 21)புத்தன் - 26 புள்ளிகள் 22)சுவி - 23 புள்ளிகள் 23) அகத்தியன் - 21 புள்ளிகள் 24) குமாரசாமி - 21 புள்ளிகள்  25) தமிழன்பன் - 16 புள்ளிகள் 26) வசி - 16 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 18, 22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 59)
    • இதுக்கே டென்சன் ஆனா எப்படி… அனுர ப்ரோ தரப்போவது இதுக்கும் மேலே இருக்கும்.
    • அவர்தான் தைரியமான ஆளேச்சே…யாருக்கும் எதிர்க்க திராணியில்லையே… எல்லாரையும் வேண்டாம் ஒரு ஒற்றை சிப்பாய் மீது, வெறும் token gesture ஆக போர்கால அத்து மீறலுக்கு ஒரு வழக்கை போடட்டுமே.. ஒரே ஒரு அடி மட்ட சிப்பாய் மீது மட்டும். அதே போல் 75 வருடம் கட்டி எழுப்பிய இனவாதத்தை 2/3, நிறைவேற்று அதிகாரத்தை வைத்து ஒரு நொடியில் அழிக்கலாமே?
    • கிழக்கு மாகாணத்தில் வாய்ப்பு 4 சீட்டுக்கே ஆனால் 5 தமிழ் தேசிய கட்சிகளுக்கு. இவர்களை எந்த பஸ்சில் ஏத்தி விட உத்தேசம்? எமக்காக கடைசிவரை போராடிய ஒரு மனிதனை பற்றி இப்படி எழுத உறுத்தவில்லை. அன்றும் கூட வர்க அடிப்படையில் கூட ஒன்று சேராமல் அவரை இனவாதம் பேசி காயடித்த கட்சி ஜேவிபி. அதில் மிக முக்கிய புள்ளி அனுர, அப்போதும். அப்ப தமிழ் ஈழம் கொடுப்போம் என சொல்ல சொல்லி பார்க்கலாமே…. சரி அது கொஞ்சம் ஓவர்… 13 + கூட வேண்டாம்…. காணி அதிகாரத்தை முழுமையாக மாகாண சபைக்கு கொடுக்கிறோம் என சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்? அனுர எதிர் க்கும் படி எதையும் சொல்லமாட்டார், அவர் பல்கலைகழகத்தில் பெளத்த சங்க தலைவர். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.