Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்திடம் நீதி கோரி தமது பிள்ளைகளை புகைப்படங்களாக தாங்கிச் செல்லும் பெற்றோர்!

Featured Replies

ஈழபோராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக சென்றனர்.

அங்கு ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும், அரசு நீதியை தரவேண்டும், ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ச. சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலாங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/126937

காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலும் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலும்  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களின் விடுதலையை வேண்டி அவர்களது உறவுகளால் தீச்சட்டி எடுக்கப்பட்டு, தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?’, ‘சர்வதேசமே பதில் கூறு’ உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Missing-Protest-Kilinochchi-6.jpg

Missing-Protest-Kilinochchi-1.jpg

http://athavannews.com/காணாமலாக்கப்பட்டோர்-தின/

  • தொடங்கியவர்

நூற்றுக்கணக்கானோரின் கண்ணீருடன் மன்னாரில் மாபெரும் போராட்டம்!

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு யுத்தம் நிறைவடந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் ஒழுங்கான தீர்வு வழங்காத நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் விடுவிக்க கோரியும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரு கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

இந்த போராட்டம் இன்று மன்னார் பாலத்திற்கு அருகில் காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் காணமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் உறவினர்கள் அருட்தந்தையர்கள் மத குருக்கள் சமூக ஆர்வலர்கள் மன்னார் நகரசபை தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.

போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் கலந்த கொண்டனர்.

அந்த வகையில், நிலைமாறுகால நீதி எங்கே, இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா?

உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்று எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியவாரு கண்ணீருடன் போரட்டத்தில் கலந்து கொண்டனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91

https://www.ibctamil.com/srilanka/80/126936

இலங்கை அரசே உண்மையை மறைக்காதே!- மன்னாரில் உறவுகள் ஆர்ப்பாட்டம்

“இலங்கை அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச்  செயலக்ததிற்கு முன் குறித்த போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், குறித்து அரசாங்கம் உரிய பதிலை இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள், சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள், அருட்தந்தையர்கள், மத குருக்கள், சமூக ஆர்வலர்கள்,  மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், ‘நிலைமாறுகால நீதி எங்கே?’, ‘இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும்’, ‘இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா?’, ‘உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்’ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள்  எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி கண்ணீருடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

3-15.jpg

4-6.jpg

http://athavannews.com/இலங்கை-அரசே-உண்மையை-மறைக/

  • தொடங்கியவர்

நாம் வீதிகளில் நின்று கதறுவது சர்வதேசத்திற்கு கேட்கவில்லையா..?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்றையதினம் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கல்முனையில் மாபெரும் பேரணி ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்றையதினம் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கல்முனையில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் அவர்களிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் தலைவிகள், உறவினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

அதில் 10 வருடங்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணைந்து வெயில், பனி, மழை பாராது தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள்.

நாம் வீதிகளில் நின்று கத்தும் ஒலி சர்வதேசத்திற்கு கேட்கவில்லையா? அரசியல் தலைவர்களின் மாற்றங்களினால் நாங்கள் கூட காணாமல் போவதற்கு சாத்தியகூறுகள் உள்ளன.

அரசாங்கம் மாற முதல் சர்வதேசம் கவனத்தில் கொண்டு எங்களுடைய உறவுகளை மீட்டுத்தர முயற்சி செய்ய வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். இன்று வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் போராட்டம் இடம்பெற்றது.

அனைத்து தமிழ் உறவுகள், பொது அமைப்புகள், என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியில் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்களால் வெள்ளைவானில் கொண்டு சென்றவர்கள் எங்கே? பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய், கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே? கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? Omp வேண்டாம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் தாங்கி தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/224655?ref=home-feed

Enforced Disappearances are heinous crimes - Hanaa Singer

UN Resident Coordinator in Sri Lanka Hanaa Singer, in a statement issued in view of the International Day of Victims of Enforced Disappearances, said Sri Lanka also has a long history of disappearances and this is evidenced by the numerous national commissions of inquiry which have looked into such allegations over many decades, as well as by UN reports.

The statement says, “In 2010 the UN General Assembly declared that the date of 30 August would be observed as International Day of Enforced Disappearances. Enforced Disappearances are heinous crimes and the UN marks on this date its solidarity with victims and to express deep concern about the continuation of enforced or involuntary disappearances in various regions of the world, as well as harassment, ill-treatment and intimidation of witnesses of disappearances or relatives of persons who have disappeared.

Today we are reminded of all the families, across the country, that are still looking for answers to the whereabouts and fate of their disappeared loved-ones and accountability for the perpetrators of these crimes.

Therefore, the UN was encouraged by Sri Lanka’s ratification of the International Convention for the Protection of All Persons from Enforced Disappearance in 2016 and particularly by the establishment of the Office of Missing Persons in 2017.

The Office of Missing Persons has a colossal task ahead. It will need the full support of all relevant State authorities in order to fulfill its very challenging mandate. Only with long term sustained efforts it could provide answers and relief to the suffering of many thousands, and thus contribute, along with other institutions, to the commitments of the Government to advance the right to truth, serve justice, provide reparations and guarantee that no such crimes will occur in the future. The UN stands ready to continue supporting the government of Sri Lanka in the fulfillment of this commitment,”.

http://www.dailymirror.lk/breaking_news/Enforced-Disappearances-are-heinous-crimes-Hanaa-Singer/108-173733

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக மலையகத்திலும் ஒன்றிணைந்த உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்துக்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நோர்வூட் சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வினை வெகுவிரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என இதன்போது போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை போராட்டகாரர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்துக்கு ஆசி வேண்டி சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியதோடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடாத்திவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/127044

2017 :: சா்வதேச வலிந்து காணாமல் போகச்செய்ப்பட்டோா் தினம் அனுஷ்டிக்கப்பட்டபோது அமொிக்கத் தூதுவா் அதுள் கேஷாப்பும் கலந்து கொண்டாா் 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 9 பà¯à®°à¯, பலர௠நினà¯à®±à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©à®°à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à®°à®µà¯

23 hours ago, ampanai said:

சம்பந்தன் போன்ற அரசுவாதிகளுக்கு இப்ப இதெல்லாம் என்னென்டு ஞாபகம் இருக்குமோ தெரியா?

2017 ல ஷோ காட்டினதோட சரி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.