Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 அடுக்கு பாதுகாப்பை மீறி 11 திபெத்தியர்கள் போராட்டம்

Featured Replies

Dkn_Tamil_News_2019_Oct_10__737423121929169.jpg

* பெங்களூருவில் இருந்து விமானத்தில் வந்தவர்களும் கைது
* கிண்டி நட்சத்திர ஓட்டல் முன்பு பரபரப்பு

சீன அதிபர் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய விடுதலை போராளிகள் மற்றும் திபெத்திய மாணவர்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீன அதிபர் வரும் நேரத்தில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த அவர்கள் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு தாம்பரம் அருகே தங்கியிருந்த 8 திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு அறை எடுத்து தங்க உதவிய தனியார் கல்லூரி பேராசிரியரும் கைது செய்யப்பட்டார். மேலும், சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்லும் சீன அதிபருக்கு கருப்பு கொடி காட்ட கோவளம் அருகே உள்ள குன்றுக்காடு கிராமத்தில் தங்கியிருந்த 5 திபெத்தியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சீன அதிபர் செல்லும் பாதையான சென்னை விமான நிலையம், சீன அதிபர் தங்கும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் மாமல்லபுரம் வரை 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடுமையான பாதுகாப்புகளையும் மீறி சீன அதிபர் தங்கும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே நேற்று பகல் 11.30 மணிக்கு திடீரென 2 பெண்கள் உட்பட 5 திபெத்திய மாணவர்கள் தங்களின் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் திபெத்திய மாணவர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சீன அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். 7 அடுக்கு பாதுகாப்பை மீறி திபெத்திய மாணவர்கள் 5 பேர் போராட்டம் நடத்திய சம்பவம் கிண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் 6 திபெத்தியர்கள் நேற்று காலை வந்தனர். திடீரென விமான நிலையத்தில் சீன அதிபருக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர்.

சீன அதிபர் வருகையின் போது அடுத்தடுத்து 5 பெண்கள் உட்பட 11 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்ைனயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தியர்கள் அடுத்தடுத்து நடத்தும் போராட்டத்தால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் திணறினர். திபெத்தியர்கள் தொடர் போராட்டத்தால் சென்னை விமான நிலையம் மற்றும் கிண்டி நட்சத்திர ஓட்டல் முதல் மாமல்லபுரம் வரை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீன அதிபர் வருகையின் போது பெங்களூருவில் இருந்து சென்னை உள்நாட்டு முனையத்திற்கு வந்த விமானத்தில், பயணிகள் போல் 2 பெண் உட்பட 3 திபெத்தியர்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து பைகளை சோதனையிட்டனர். அப்போது பையில் கருப்பு கொடிகள் இருந்தது. மேலும், சீன அதிபருக்கு கருப்புகொடி காட்ட டெல்லியில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு அவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். நேற்று மாலை வரை சென்னை விமான நிலையத்தில் 4 பெண்கள் உட்பட 9 பேர் மற்றும் கிண்டி நட்சத்தில் ஓட்டல் அருகே 5 பேர் என மொத்தம் 14 திபெத்தியர்களை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532704

  • தொடங்கியவர்

சீன மொழியில் ட்ரெண்டாகும் gobackmodi : ’ஷி ஜின்பிங்கை வரவேற்போம்; மோதியை எதிர்ப்போம்’

இன்று (வெள்ளிக்கிழமை) சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் சூழலில், மீண்டும் #gobackmodi இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

சீன அதிபரின் வருகையால் gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டாகி வருகிறது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழி பதிவை ஹாஷ்டேகில் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் எதிர்ப்பு

பொதுவாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகைதரும்போதெல்லாம் gobackmodi என்பது ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவது வழக்கம். அதற்கு பதிலடியாக tnwelcomesmodi என்பதும் ட்ரெண்டாகும்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய சமயத்தில் மோதி இந்தியா வந்திருந்தபோதும் இந்த ஹாஷ்டேக்குகள் டிரண்டானது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது சுமார் 10,000 ட்வீட்டுகளில் ஆரம்பித்த #gobackmodi மதியத்திற்கு பிறகு உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

தற்போதுவரை gobackmodi ட்ரெண்ட் ஆகி வந்தாலும், முன்பு இருந்ததுபோல தீவிர எதிர்ப்புகளை காணமுடிவதில்லை.

முன்னதாக, மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு குறித்து அறிக்கை ஒன்றில் குறிப்பிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாமல்லபுரத்துக்கு வரும் சீன அதிபரை தான் வரவேற்பதாக தெரிவித்தார்.

ஸ்டாலினின் இந்த அறிக்கைக்கு பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-50009993

GN39562C_EN.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

2019´ல் .... மோதி, எந்த நாட்டிலிருந்து,  இந்தியாவுக்கு வந்தார்?

-பி.பி.சி.-  விசர் செய்திகளை இணைப்பதில், ஈடு இணையற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.