Jump to content

வேள்விக்கு தயாராகும் "கிழக்கின் விடிவெள்ளி"!!!!


Recommended Posts

கருணா குழுவிற்குள் பிளவு- பிள்ளையான தப்பி ஓட்டம்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 05:56 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர்.

கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளார்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையானும் கருணாவும் மரதன் ஓட்டம்.

(ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007 , யோகராஜன் )

சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையானின் சகாக்கள் 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளனர். கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையானின் முக்கிய சகா கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்தக் கொலை முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையானின் உதவியாளன் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

kpmd4.png

சிறிலங்கா இராணுவத்தினரின் ஒட்டு இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த கூலிக்குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான், கருணா கூலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பிய நிலையில் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளான். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளான். இந்த சிந்துஜனே கடத்தப்பட்ட தமிழர் புணர்வாழ்வுக் கழக உறுப்பினரான பிறேமினியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக் கொலை செய்தவன. கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர். கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளான்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கருணா ஒட்டுக்குலிக்கும்பலிடையே தோன்றிய பிளவு தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின்படி, இப்பிளவை சரி செய்ய இலங்கை இராணுவ புலனாய்வுத்துறை பெரும் முயற்சி எடுத்து தோல்வியடைந்த நிலையில், கருணா கூலிக்கும்பலை மட்டக்களப்பிலும், பிள்ளையான் கூலிக்கும்பலை திருமலையிலும் தங்க வைக்க முயற்சி எடுப்பதாக தெரியவருகிறது. இதேவேளை கூலி பிள்ளையானின் 40 விசுவாசிகளை, கருணா கூலிக்கும்பல் கடத்தி படுகொலை செய்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

இக்கூலிகளின் இடையே தோன்றியுள்ள பிளவையடுத்து பிள்ளையான் கும்பல் எந்நேரமும் புலிகளிடம் சரணடையலாம் என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கருணா கும்பலிடையே பலமாக ஊடுருவியிருக்கும் புலிகளின் உளவுப்பிரிவினர், இப்பிளவையடுத்து தக்க தருணத்தில் களையெடுக்கத் தொடங்கலாம் எனவும் நம்பகரமாகத் தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

நம்பினால் நம்புங்கள், எமக்கு விடுதலையை பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றவர்கள் "கருங்காலி" கருணாவும், "அத்தியடிக்குத்தி" டக்கிலஸும்தான்!!! ....

அண்மையில் விடுதலையான கிழக்குத்தீமோர் இதற்கு ஓர் நல்ல உதாரணம்!! கிழக்குத்தீமோர் விடுதலைக்கு முன்னர் அங்கு நிலை கொண்டிருந்த இந்தோனேசிய துருப்பகளுடன் ஒட்டிச் செயற்பட்ட ஒட்டுக்குழுக்கள் செய்த படுகொலைகளே உலக கண்களை திறந்தன!! கிழக்குத்தீமோரின் விடுதலையில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் அந்த ஒட்டுக்குழுக்களே!!

இவ்வாறே எமது விடுதலையிலும் கூலி கருணாவும், கூலி டக்கிலஸின் பங்கு நிச்சயமாக மிக முக்கிய பங்கு வகிக்கும்!! இன்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பார்வை எம் பக்கம் திரும்பவும் இவர்கள்தான் காரணம்!! அது மட்டுமல்ல பல நாடுகளின் இன்றைய என் நோக்கிய சில மாறுதலுக்கும் இவர்களே காரணம்!!!

ஆகாவே இந்தப் பிளவு, கூலிகளின் அட்டகாசங்களை குறைக்குமா???? அது நல்லதல்ல!!!! கூலிகள் கட்டுக்கடங்காமல் அட்டகாசங்கள் செய்தால்தான் எமக்கு நல்லது!!! அது வெதமாத்தயா மகிந்தவின் ஆட்சிக்கும் உலகில் நல்ல பெயரைக் கொடுக்கும்!!! ஆகவே .....

.... குழம்புகிறனோ??? குழப்புகிறனோ????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.