Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களால் 480 மில்லியன் டொலர் மானியத்தை இழக்கும் இலங்கை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mcc.jpg

எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களால் 480 மில்லியன் டொலர் மானியத்தை இழக்கும் இலங்கை?

2020 ஆம் ஆண்டுக்கான மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை.

குறித்த பட்டியல் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில், இலங்கையின் பொருளாதாரம் மேல் நடுத்தர வருமான நிலைக்கு மாறிய பின்னர் குறித்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதாக வட்டார தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ளது. அத்தோடு இந்த மானியம் தொடர்பாக தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பதால், 480 மில்லியன் டொலர் மானியத்தை நாடு இழக்கும் தருவாயில் காணப்படுகின்றது.

அந்தவகையில் அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்தின் அடுத்த வருடாந்த கூட்டம் டிசம்பரில் இடம்பெறவுள்ளது. இதன்போது செயற்திறனை மதிப்பாய்வு செய்து 2020 ஆம் ஆண்டுக்கான பொருத்தமான நாட்டைத் தெரிவு செய்வதோடு, சில நாடுகளை நீக்கும் நடவடிக்கையையும் முன்னெடுக்கவுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் கொடைக்கு அமைச்சரவை அனுமதியளித்தது. இதனை அடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து எதிர்க்கட்சிகள் அந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றதாக அரசாங்க தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையுடன் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் அந்த உடன்படிக்கைக்கு இலங்கை நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிக்கவேண்டியது அவசியம் என அமெரிக்க தூதரகம் கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.

அத்தோடு இந்த ஒப்பந்தம் 11 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை அர்த்தமுள்ளதாக மற்றும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

உண்மையில் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தால் வழங்கப்படும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடை என்பது அமெரிக்காவிலிருந்து இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் உதவியே என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அத்தோடு இந்த ஒப்பந்தம் இராணுவ ஒப்பந்தமோ, இலங்கையை சொந்தமாக்கும் முயற்சிக்காகவோ இந்த நிதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/எதிர்க்கட்சிகளின்-பொய்ய/

அமெரிக்காவாவது அபிவிருத்தி ஆவது. அதுவும் ட்ரம்பின் அமேரிக்கா தனக்கு இலாபம் இல்லாமல் எதுவும் செய்யாது. 

இந்த உதவி விடயத்தில் சீன மற்றும் ஹிந்தியை அரசுகள் பரவாயில்லை. காரணம், அவர்கள் உதவிகளை மக்கள் பார்க்கலாம், தொடலாம், அனுபவிக்கலாம் - வீதிகள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள். 

அமெரிக்காவின் உதவிகலால்  சுவிஸ் வங்கிக்கே இலாபம் . 

3 hours ago, தமிழ் சிறி said:

அந்தவகையில் அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்தின் அடுத்த வருடாந்த கூட்டம் டிசம்பரில் இடம்பெறவுள்ளது. இதன்போது செயற்திறனை மதிப்பாய்வு செய்து 2020 ஆம் ஆண்டுக்கான பொருத்தமான நாட்டைத் தெரிவு செய்வதோடு, சில நாடுகளை நீக்கும் நடவடிக்கையையும் முன்னெடுக்கவுள்ளது.

முன்பு MCC விடயம் குழம்பிய போது புதிய அரசு அமைந்ததும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி டிசம்பரில் இது பற்றி முடிவெடுக்கப்படும் என நம்பப்பட்டது. இப்பொழுது தேர்தலுக்கு முன்னம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி மீண்டும் இவ்விடயம் சூடு பிடித்துள்ளது. பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்று.

Edited by Lara

2 hours ago, தமிழ் சிறி said:

உண்மையில் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தால் வழங்கப்படும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடை என்பது அமெரிக்காவிலிருந்து இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் உதவியே என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

5 வருட காலத்தில் 480 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி முடிப்பதற்குள் அமெரிக்க நிறுவனங்கள் பல உள்ளே புகுந்து விடும்.

வெளிக்கு அபிவிருத்தி போல் தோன்றினாலும் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன.

இது கூட எதிர்கால அமெரிக்க தேவைக்காக.

EIlxvUAUYAA0q2u?format=jpg&name=large

Edited by Lara

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் அறிக்கை

மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) அபிவிருத்தி நிதியுதவிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை இன்று (06) வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அங்கீகாரம் அளிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்கிறது. அரசாங்கத்தினது மற்றும் தனியார் துறையினது - அடையாளங் காணப்பட்ட தேவைகளுக்கான நிதியளிப்பின் ஊடாக குறைந்தது 11 மில்லியன் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உதவியை இலங்கையே கோரியிருந்தது.

இந்த நிதியுதவியினால் ஆதாரமளிக்கப்படும் திட்டங்களானது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்பதுடன், கொழும்பில் பொது போக்குவரத்தையும் மேம்படுத்தும். அத்துடன், மாகாண வீதிகளை மேம்படுத்த செயற்படும் என்பதுடன், காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையர்களின்காணி உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் தற்போதிருக்கும் இலங்கை அரசாங்கத்தின்முன்னெடுப்புகளை விரிவாக்கழும் செய்யும்.

இலங்கை அரசாங்கம் இந்த நிதியுதவி ஒப்பந்தத்தின் வரைவொன்றை நிதியமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதுடன், அது தற்போது இலங்கை மக்களின் மீளாய்வுக்கு அங்கு கிடைக்கக்கூடியதாக உள்ளது. இந்த அபிவிருத்தி நிதியுதவியின் கீழ், அமெரிக்கா எந்தவொரு காணிக்கும் உரித்துடையதாகவோ அல்லது குத்தகையை கொண்டதாகவோ இருக்காது.

இந்த ஐந்து வருட நிதியுதவி ஒப்பந்தத்தின் அமுலாக்கம் முழுவதும் நிதியுதவி அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இலங்கையே மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்யும்

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நிதியுதவி கைச்சாத்திடல் மற்றும் நாடாளுமன்ற அங்கீகாரம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

29 பங்காளி நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட எமது கொள்கைக்கு அமைய, இந்த நிதியுதவியை மீளாய்வு செய்து ஒப்புதலளிக்கும் சந்தர்ப்பம் இலங்கை நாடாளுமன்றதுக்கு கிடைக்கும் இலங்கையுடனான எமது பங்காண்மையை தொடர்வதற்கும் பொருளாதார வளர்ச்சியின் ஊடாக வறுமையை குறைப்பதற்கான இலங்கையின் முயற்சிகளில் உதவுவதற்கும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது..

image_0dfe5ae805.jpg

image_834922fde3.jpg

image_1e4f2530e7.jpgimage_04dc1a4cfa.jpg

image_d239453a07.jpg

image_03ed0dd950.jpg

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அடததககடட-நடவடகககள-தடரபக-அமரகக-ததரகம-அறகக/150-240756

Edited by Lara

MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் அதனால் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள், முக்கியமாக கிழக்கு தமிழர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.