Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க பிராஜவுரி, விமானப் பயணச் சீட்டு குறித்து நாமல் விளக்கம்

Featured Replies

இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந் நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

EI-U7fIUwAA7NKG.jpg

இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது டுவிட்டர் பதிவொன்றில் அமெரிக்க பிராஜாவுரிமையை கோத்தாபய ராஜபக்ஷ கைவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான சான்றிதழ்களையும் பதிவேற்றியிருந்தார்.

EI8k4SMU0AAzaWP.jpg

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்கப் பிரஜை என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனை கைவிட்டு மாற்று பொய்ப் பிரசாரம் ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்.

அத்துடன் கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்தால் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள விமானச் சீட்டு போலியானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

EI7jq0sUcAEZ8Yd.jpg

எனினும் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள குறித்த ஆவணமானது கடந்த மே மாதத்திற்குரியது. எனினும் அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டவர்கள் பட்டியலிலேயே கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/68618

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் வேலையை காட்டிட்டாரோ?!

  • தொடங்கியவர்

அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடையாது - தேர்தல் ஆணைக்குழு

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் ஆராய்வதற்கான அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. 

இவ்விடயம் குறித்து நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டால் மாத்திரமே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார். 

அமெரிக்க குடியுரிமையை நீக்கியவர்கள் தொடர்பில் அமெரிக்கா கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டிருக்கும் பெயர் பட்டியலில் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்து சமூக வலைத்தளங்களிலும், இணைய தள ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. 

அவற்றில் குறிபிடப்பட்டிருப்பதைப் போன்று கோத்தபய ராஜபகஷவின் குடியுரிமை நீக்கப்படாவிட்டால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராந்துள்ளதான என்று வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

https://www.virakesari.lk/article/68641

நான் இப்படி ஒரு கருத்தை Twitter இல் வாசித்தேன்.

This isn't necessarily true. Both the FBI & the IRS  (IRS = federal register) compile lists of individuals who renounced their US citizenship, but the fed register often has a shorter list of names than the FBI & the FBI list isn't made public.

Here's an explanation of the phenomenon:

https://www.forbes.com/sites/robertwood/2015/09/21/irs-and-fbi-track-americans-who-renounce-citizenship-why-is-fbi-list-longer/#25f1b4c84142

In short, another official source is needed to verify as to whether or not Gota successfully renounced his US citizenship.

  • தொடங்கியவர்

கோதாபய குடியுரிமை விவகாரத்தில் அமெரிக்காவின் சர்வதேச அரசியல் வெளிப்பட்டுள்ளது - சுஜீவ சேனசிங்க 

(எம்.மனோசித்ரா)

அமெரிக்க குடியுரிமையை நீக்காமல் கோத்தாபய ஜனாதிபதியானால் நிச்சயம் அந்த நாட்டின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பயந்து செயற்பட வேண்டிய நிலைமை உருவாகும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குற்றஞ்சுமத்தினார். 

sujeeva.jpg

அத்துடன் அமெரிக்க குடியுரிமையை நீக்கியவர்கள் தொடர்பில் அமெரிக்கா கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டிருக்கும் பெயர் பட்டியலில் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. 

எனினும் கோத்தாபயவின் சகாக்கள் அவரது அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டுவிட்டதாக போலியான பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

எவ்வாறிருப்பினும் சர்வதேச ரீதியில் பலம் மிக்க நாடாகக் காணப்படும் அமெரிக்க இந்த விடயத்தில் அமைதியை பேணுகிறது. நாட்டில் இவ்வாறு பாரிய குழப்பம் ஏற்பட்டிருப்பதையும் அவதானித்துக் கொண்டிருந்தும் கோத்தாபயவின் குடியுரிமை நீக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை அறிவிக்காமல் இருக்கிறது. 

இவ்வாறு அமெரிக்கா அமைதியாக இருப்பதற்கான காரணம், கோத்தாபய தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க பிரஜையான அவரை தனது ஆதிக்கத்தின் கீழ் செயற்பட வைப்பதேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சுமத்தினார். 

https://www.virakesari.lk/article/68643

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.