Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்': குமார் ரூபசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்': குமார் ரூபசிங்க

"எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்" என்று சிறிலங்காவின் போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவரும், ஆய்வாளருமான குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் 'த ஐலன்ட்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த மாதத்தில் அரசின் முக்கிய மையங்களை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பல தடவைகள் தாக்கிவிட்டு எதுவித சேதங்களும் இன்றி தளம் திரும்பிவிட்டன.

முதாலாவது தாக்குதல் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நிகழ்த்தப்பட்டது. இது அதிகளவு சேதங்களை ஏற்படுத்தவில்லை. எனினும் அரசுக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் தமது வான்கலங்களின் மூலம் ஒரு போராட்ட அமைப்பு அரசின் மீது முதன் முதலாக தாக்குதலை நடத்தியுள்ளது.

இரண்டாவது தாக்குதல் மிகவும் பலம் வாய்ந்த பலாலித் தளத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட பலர் காயமடைந்தனர். மிகவும் அண்மைய தாக்குதலாக முத்துராஜவல எரிவாயு சேமிப்பு நிலையம், கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது தலா இரு குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கொலன்னாவையில் வீசப்பட்ட குண்டுகள் வெடிக்காத போதும் முத்துராஜவலவில் வீசப்பட்ட குண்டினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இது பேரை முற்று முழுதாக புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எதிர்காலத்தில் போரின் செலவுகள் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், எதிர்வரும் வருட வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவு குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும். இதனை சமாளிப்பதற்கு அரசு வரிகளை அறவிட வேண்டும், பணத்தை அச்சிட வேண்டும், தனியாரிடம் கடன்களை பெற வேண்டும், அல்லது வேறு ஒரு நாட்டுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் வான்படைப் பலம் என்ன என்பது அரசுக்கு தெரியாது. விடுதலைப் புலிகள் செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் இலகுரக வானூர்திகளை தென் ஆபிரிக்காவில் இருந்து கொள்வனவு செய்ததாக கூறப்படுவதுடன், கொள்கையளவில் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வானூர்தியின் பாகங்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளிடம் மூன்றுக்கு மேற்பட்ட வான்கலங்கள் இருப்பதுடன், அவர்கள் வெளிநாடுகளில் பயிற்சிகளை பெற்ற வானோடிகளையும் கொண்டுள்ளனர்.

என்ன நோக்கத்திற்காக அவர்கள் வான்கலங்களை கொள்வனவு செய்தார்களோ, வானோடிகளை பயிற்றுவித்தார்களோ அதனை அரசுக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் மிகவும் தெளிவாக செய்து காட்டிவிட்டனர். குறிப்பாக அவர்களின் வானூர்திகள் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குள்ளும் ஊடுருவி தாக்குதலை நடத்திவிட்டு சவால்களுக்கு மத்தியில் தளம் திரும்பக்கூடியது என்பதனை நிரூபித்து விட்டனர்.

விடுதலைப் புலிகளிடம் உள்ள வானூர்திகள், இலகுரக வானூர்திகள் என்பதும், அவற்றினால் துல்லியமாக குண்டுகளை வீசமுடியாது என்பதும் மட்டுமே அரசுக்கு ஆறுதல் அளிக்கும் விடயம். அரச படையினர் கடந்த 20 வருடங்களாக வன்னியின் மீது வான்குண்டுகளை வீசி வருகின்றனர். இது கடந்த ஆண்டு தீவிரம் பெற்றுள்ளது. அங்கு பொதுமக்களின் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. தென்பகுதி மக்களும் இத்தகைய ஆபத்துக்களை தற்போது எதிர்கொண்டுள்ளனர். எனினும் அங்கு பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்படவில்லை.

விடுதலைப் புலிகளால் அண்மையில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் தென்பகுதி மக்களிடம் அச்சத்தையும், திகிலையும் ஏற்படுத்தியுள்ளது. தென்பகுதி மக்களுக்கு இத்தகைய அனுபவங்கள் இதுவே முதற் தடவை. உலகக்கிண்ண இறுதிப் போட்டியை பெரும்பாலான மக்கள் திறந்த வெளிகளில் உள்ள அகண்ட திரைகளைக்கொண்ட தொலைக்காட்சிகளில் தான் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

எனவே படையினரின் தாக்குதல்களில் அவர்கள் பெருமளவு அச்சமடைந்துள்ளனர். ரேசர் ரவைகளும், உந்துகணைகளும் வானில் ஒளியைப் பரப்பியதை தாம் கண்டதாக பலர் கூறியுள்ளனர். மக்களிடம் இது அச்சத்தையும், உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தாத வண்ணம் அதனை மூடிமறைக்க அரசு முற்பட்டிருந்தது. இந்த தாக்குதலின் எதிரொலியாக அரசு தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை தென்பகுதி மக்களிடம் தகர்ந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலின் உளவியல் தாக்கம் மிகவும் அதிகமானது. இந்த தாக்கம் வெசாக் பண்டிகையின் போதான மக்களின் குறைவான நடமாட்டங்கள் மூலம் பிரதிபலித்துள்ளது.

அரசிடம் தற்போது உள்ள வான் எதிர்ப்பு முறையானது தரைப்படையினரையும், உயர்ந்த கட்டடங்களில் உள்ள சில படையினரையும் கொண்டதாகவே உள்ளது. எனவே விடுதலைப் புலிகளிடம் உள்ள வானூர்திகளால் நாடு முழுவதிலும் உள்ள பெருளாதார, இராணுவ இலக்குகள் இலகுவான தாக்குதல் மையங்களாக உள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள இராணுவ முகாம்கள், பாரிய போர்க்கப்பல்கள், துறைமுகங்கள், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதராமான பொருளாதார மையங்கள் என்பவற்றை படையினர் இவ்வாறு நீண்ட காலம் பாதுகாக்க முடியாது. அதாவது படையினரின் வான் எதிர்ப்பு ஆயுதங்களின் தன்மை அதிகரிக்கப்பட வேண்டும்.

இதனால் போர்ச் செலவுகள் அதிகரிப்பதுடன், அதிக பாதுகாப்பு நிதிகளும் தேவைப்படும். இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட ராடார்கள் முறையாக உபயோகப் படுத்தப்பட்டிருந்தால் தாழ்வாகப் பறக்கும் வானூர்திகளையும் கண்டறிந்திருக்காலம். எனினும் எம்மிடம் தாக்குதல் நடத்தும் வசதிகள் இல்லை.

எனவே மிகவும் நவீனமான வான் எதிர்ப்பு சாதனங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ளவற்றை விடுத்து நவீன ராடார்கள் மற்றும் தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்தல் வேண்டும் இவை விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கண்டறிவது மட்டுமல்லாது தாக்கி அழிக்கக் கூடியனவாகவும் இருத்தல் வேண்டும்.

விடுதலைப் புலிகளின் வான் பலம் படையினரை தமது போர் வியூகங்களை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியள்ளது. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான வான் தாக்குதல் அவர்கள் கிழக்கில் இழந்த படைச்சமநிலையை பெற்றுவிட வழிவகுக்கும்.

பொருளாதாரத்தை பெறுத்தவரை எமிரேற்ஸ், கதே பசுபிக் போன்ற வானூர்தி நிறுவனங்கள் தமது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இரவு வேளைகளில் வானூர்தி நிலையத்தை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இது உல்லாசப்பயணத் துறையை பெருமளவில் பாதிக்கும். சிறிலங்காவின் பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது முதலீடுகளையும் பாதிக்கும். பாதுகாப்புச் செலவு அதிகரிக்கும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது. மக்கள் அதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

சிறிலங்கா அபிவிருத்தி அடைந்து வரும் நாடு. அதன் பொருளாதாரம் உறுதியற்றது. எனவே நாடு எவ்வாறு இந்த போர்ச செலவுகளைத் தாங்கும்? அரசுக்கு பல வழிகள் உள்ளன. ஒன்று மக்களின் மீது பாதுகாப்பு வரிகளை போடலாம், இது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கும். இரண்டாவது மேலதிக பணத்தை அச்சிடலாம் அல்லது தனியார் கடன் வசதிகளை பெறலாம். இறுதியாக வான் மற்றும் கடல் பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு வேறு மேற்குலக நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்து கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் வான் படை தொடர்பாக இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஆய்வாளர்களிடம் பெரும் கவலைகள் தோன்றியுள்ளன. விடுதலைப் புலிகளின் வான்பலம் அழிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா விரும்புகிறது. ஏனெனில் அவர்களிடம் உள்ள இலகுரக வானூர்திகளை பல நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இது மக்களிடம் உளவியல் தாக்கங்களை அதிகரிக்க வல்லது. அவர்கள் உயிர்தப்புவதற்காக எதிர்காலத்தில் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டியும் ஏற்படலாம். அவர்களின் வான்படை அரசின் வான்படையைப் போல் வளர முடியாது. எனினும் அவர்கள் ஆட்களை இடமாற்ற, ஆயுதங்களை நகர்த்த, தற்கொலைத் தாக்குதலை நடத்தவும் இந்த வானூர்திகளைப் பயன்படுத்தலாம்.

ஒரு அங்கீகரிக்கப்படாத தேசம் கொண்டுள்ள முதல் வான்படையாக விடுதலைப் புலிகளின் வான்படை உள்ளது. இயந்திரமும், உதிரிப்பாகங்களும் இருந்தால் இந்தகைய வானூர்திகளை சில மாதங்களுக்குள் வடிவமைத்து விடலாம் என பெறியியலாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே விடுதலைப் புலிகள் தரையில் இருந்து வானுக்குப் பாயும் ஏவுகணைகளையும் கொள்வனவு செய்யலாம். இது அவர்களிடம் ஏற்கனவே இருந்தது. இந்த ஏவுகணைகள் படையினர் எதிர்கொள்ளப் போகும் மற்றுமொரு தலையிடியாகும். ஏவுகணைகளை சந்தைகளில் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

எப்போதும் எனது கருத்தின் படி இது வெல்ல முடியாத போராகும். இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு போர் உதவாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் அல்லது மனிதாபிமான ரீதியில் எழுந்த கருத்தல்ல. இது. உண்மையாகவே பேரை அரசினால் சமாளிக்க முடியாது.

எனது 25 வருடகால பார்வையில் ஒவ்வொரு அரசும் சமாதானத்துக்கான போர் என்ற உத்தியின் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தன. ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனை உறுதியாக நம்பினார். சந்திரிகாவும் அதனையே பின்பற்றினார். எல்லாம் தோல்வியடைந்து விட்டது. ஏனெனில் அவர்கள் படையினரை தவறாக வழிநடத்தியிருந்தனர். படையினரின் நடவடிக்கைகளில் பெருமளவு அரசியல் புகுத்தப்பட்டது.

இந்த அரசும் விதிவிலக்கல்ல. நவீன ஆயுதங்கள் இருப்பின் பேரை விரைவாக முடித்துவிடலாம் என இராணுவத் தளபதி கூறுகின்றார். சிலர் இந்த வருடத்தின் முடிவுக்குள் போரை முடிப்பதாக தெரிவிக்கின்றனர். எனினும் பாதுகாப்புச் செயலாளர் இவற்றில் சிறு திருத்தங்களை செய்து மூன்று வருடத்தில் போரை முடிக்க முடியும் என கூறியுள்ளார். அவர் தனது கூற்றிற்கு நிபந்தனையாக மகிந்த அதற்கான வளங்களை தேடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல காரணிகளால் இந்த போர் வெல்லப்பட முடியாது. அதில் முக்கியமானது நாடு போருக்கான செலவுகளைத் தாங்க மாட்டாது. இது மக்களுக்கு பெரும் சுமைகளை உண்டு பண்ணும். நாம் எண்ணை வளமுள்ள நாடு அல்ல.

நாம் அனைத்துலக உறவுகள், மேற்குலக சந்தைகளில் தங்கியுள்ளோம். போரின் விளைவான மனித உரிமை மீறல்கள் தடைகள், உதவி நிதிகளின் நிறுத்தம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

மற்றுமெரு முக்கிய காரணியாக நவீன ஆயுதங்கள் சந்தைகளில் தற்போது தாராளமாக கிடைக்கின்றன. எனவே விடுதலைப் புலிகள் அவற்றை கொள்வனவு செய்ய முடியும்.

உலகில் சக்திவாய்ந்த படையைக் கொண்ட அமெரிக்கா ஈராக் மீதான தனது போர் விரைவில் முடிந்துவிடும் எனக் கூறியது. ஆனால் இன்று அது தற்கொலைத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது.

பலருடன் நான் நடத்திய கலந்துரையாடல்களில் இருந்து இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வே உகந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே அரசு போருக்கு கொடுக்கும் அதே அளவு சக்தியை அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும் கொடுக்க வேண்டும். இதனைத் தவிர வேறு வழிகள் இல்லை" என்றார் குமார் ரூபசிங்க.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்வினைதன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எனவே மிகவும் நவீனமான வான் எதிர்ப்பு சாதனங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ளவற்றை விடுத்து நவீன ராடார்கள் மற்றும் தாக்குதல் வானூர்திகளை கொள்வனவு செய்தல் வேண்டும் இவை விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கண்டறிவது மட்டுமல்லாது தாக்கி அழிக்கக் கூடியனவாகவும் இருத்தல் வேண்டும்."

சிறிலங்காவின் போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவரும், ஆய்வாளருமான குமார் ரூபசிங்க

ஆஹா! போருக்கெதிரானவரே போர் புரியும் முறைபற்றி பேசுகிறாரே!

"எங்களை தாக்காதேங்கோ நாங்கள் உங்களைத் தாக்கமாட்டோம்" என்றுதானே புலிகள் சொல்கிறார்கள்! இதில் யார் அமைதி விரும்பிகள் என தெள்ளத்தெழிவாகத் தெரிகிறதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.