Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமியில் வெப்பம் அதிகரித்தலும், கியோட்டோ ஒப்பந்தமும்

Featured Replies

பூமியில் வெப்பம் அதிகரித்தலும், கியோட்டோ ஒப்பந்தமும்

சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காரணத்தால், உயிருள்ள கிரகமாக கூறப்படுவது நமது பூமியாகும். நிற்காமல் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பூமி பந்தில் இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகான வளங்கள் ஏராளம். கவின் மிகு காட்சிகள் நிறைந்த எழில் கொஞ்சும் உருண்டை பந்து நமது உலகம். உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆன நிலையிலும் சக்கரம் தேயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த பூமி, பல அழிவுகளுக்கு முகம் கொடுத்த பின்னும் துவளாமல் உயிர் வளர்த்து, உயிர் வாழ வளம் கொடுத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையதாக கூறப்படும் இந்த பூமி ஏற்கனவே 5 அல்லது 6 பேரழிவுகளை, பிரளயங்களை சந்தித்து, கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு பின் காலப்போக்கில் செழுமைக் கண்டு நிலைத்துள்ளது என்று அறிவியலர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த பேரழிவில்தான் டைனோசார்கள் உள்ளிட்ட நாம் இன்று கேள்விபடும் ஆனால் பார்க்க இயலாத விலங்கினங்கள் அழிந்துபோனதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூமி தழைத்து, உயிரினங்களின் தொடர்ச்சி நீண்டுகொண்டுதான் இருக்கிறது. இதற்கு முந்தைய பேரழிவுகள், பிரளயங்களுக்கு காரணம் என்ன என்பது நமக்கு முக்கியம் இல்லை. காரணம் அப்போதைய அழிவுகளில் மனிதனுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அடுத்து வரும் பேரழிவுக்கும் மனிதனுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும், தொடர்பு என்ன அவன் தான் அந்த அழிவுக்கு வித்திடுபவனாகவே இருப்பான் என்பது இன்றைக்கு அறிவியலர்களும், அறிஞர்களும், அரசியல் தலைகளும் ஏற்றுக்கொள்கிற உண்மையாகியுள்ளது. என்ன ஒன்றும் புரியவில்லை என்று கொஞ்சம் குழம்புபவர்களுக்கு மட்டும் இரண்டே வார்த்தையில் பதில் சொல்கிறேன். உலக வெப்பமேறல், குளோபல் வார்மிங்.

இந்த உலக வெப்ப ஏறல் பற்றி உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நாடுகள் கென்யத் தலைநகர் நைரோபியில் கூடி விவாதித்துக் கொண்டுள்ளனர். பருவ நிலை மாற்றாத்தால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்பதை முக்கியமாக இந்த பருவ நிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்களும், வல்லுனர்களும் கலந்தாய்வு செய்வர். அதேவேளை தொழில்மயமான நாடுகளின் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை கட்டுபடுத்துவது குறித்த உடன்பாடு தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றும் அல்லது கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் இம்மாநாட்டில் நிலவுகிறது. கியோட்டோ ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை என்பதை நம்மில் பலர் கேள்வி பட்டிருப்போம். இந்த கியோட்டா ஒப்பந்தம்தான் உலக வெப்ப ஏறலுக்கு காரணமான பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளை இணங்கச் செய்யும் கொள்கை ஆவனமும், கோட்பாட்டு குறிப்புமாகும்.

இந்த கியோட்டோ ஒப்பந்தம், கையொப்பமிட்ட நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு பசுங்கூட வாயு வெளியேற்ற அளவை விதிக்கிறது. இந்த அளவுக்குள்ளாகவே தமது பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை இந்த உறுப்பு நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும். ஐ நா அவையின் பருவ நிலை மாற்றம் தொடர்பான வரைவுத் தீர்மானத்துக்கு இணங்க உருவாக்கப்பட்ட உடன்படிக்கையே இந்த கியோட்டோ உடன்படிக்கையாகும். 1997ம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டோவில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், 1998ம் ஆண்டு மார்ச் திங்கள் 16 முதல் 1999ம் ஆண்டு மார்ச் திங்கள் 15 வரை கையொப்பமிடுவதற்காக அனுமதிக்கப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு ரஷ்யா 2004ம் ஆண்டு நவம்பர் திங்களில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் சுமார் 166 நாடுகள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ஏற்று அதன் விதியை பின்பற்றுவதை மறுத்து நிற்கும் நாடுகளில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் குறிப்பிடத்தக்கவை. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைபடுத்த ஒப்புக்கொண்டுள்ளன என்றாலும், உடன்படிக்கை படி இந்த இரு நாடுகளுக்கு விலக்கு உள்ளது. தற்போதுள்ள ஒப்பந்தத்தின் படி இந்த இரு நாடுகளும் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுபடுத்தவேண்டிய கட்டாயம் இல்லை.

இது ஒரு புறமிருக்க உலக வெப்பமேறல் காரணமான விளைவாக பருவ நிலை மாற்றங்களும், இயற்கைச் சீற்றங்களும் உலகை அலைகழித்து, சீரழித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏதாவது செய்து இந்த அழிவுகள் மேலும் உக்கிரமடைவதையும், உலகம் மீண்டும் ஒரு பிரளயத்திற்கு பலியாவதை தவிர்ப்பதற்காகவும் செய்ய வெண்டியவை என்ன என்பதை ஆய்வு செய்யவே நைரோபியில் கடந்த 6ம் நாள் முதல் 17ம் நாள் வரை பருவ நிலை தொடர்பான மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ள வெப்பமடைந்த நமது உலகம் பற்றிய அறிவியல் ஆய்வுகளை இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அறிஞர்களும், வல்லுநர்களும் மூடிய கதவுகளுக்குள்ளே ரகசியமாக, நெருக்கமாக கண்டு அறியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரகசியமாய் அவர்கள் அறியப்போகும் எந்தத் தகவலும் நமக்கு நிம்மதி பெருமூச்சை வெளிபடுத்த போவதில்லை என்பது வேறு கதை. கடந்த செப்டம்பரில் அமெரிக்க பருவநிலை அறிவியலாளர்கள் வெளியிட்ட ஒரு தகவலை உங்களுக்கு சொன்னால் நீங்களே புரிந்துகொள்வீர்கள், உலக வெப்பமேறல் எந்த நிலையில் இருக்கிறது என்று. உலக பருவ நிலையில், கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத உயர்வு அண்மைக்காலத்தில் பதிவாகியுள்ளதாம். கடந்த 30 ஆண்டுகால உலக வெப்பமேறலின் உதவியோடு இந்த வெப்பநிலை உயர்வு சாத்தியமாகியுள்ளது என்கிறார்கள் அறிவியலர்கள். அமெரிக்கா நாசா அமைப்பினர் வெளியிட்ட இரு தகவல், க்ரீண்லான்டில் உள்ள பனிப்பரப்பில் ஆண்டுக்கு 41 கியூபிக் மைல் அளவு பனி உருகிக்கொண்டிருப்பதாக கூறுகின்றது. ஆண்டுக்கு பனிப்பொழிவின் மூலம் 14 கியூபிக் மைல் பனியே இப்பகுதியில் கூடுகிறது. வரவு எட்டணா செலவு பத்தணா என்பது போல்.

இது மட்டுமல்ல நேயர்களே, பருவ நிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளை சீக்கிரத்தில் கண்டறிந்து செயபடுத்தாவிட்டால், பூமியின் மூன்றில் ஒரு பகுதியை தீவிர வறட்சி ஆட்கொண்டு அழிக்கும் அபாயமுள்ளது என்று பிரிட்டன் நாட்டு ஹாட்லி பருவநிலை ஆய்வு மையத்தினர் எச்சரிக்கின்றனர். கடந்த நூற்றாண்டின் 1 டிகிரி ஃபாரன் ஹீட் அளவு வெப்பநிலை உயர்வுக்கு முக்கியமான காரணம், மின் உற்பத்தி மற்றும் வாகனங்களின் எரிபொருட்களின் எரியூட்டலால் வெளியாகும் உப பொருட்களான, வளிமண்டலத்தில் வெப்பத்தை தடுத்து வைக்கும் அல்லது தக்கவைத்துக்கொள்ளும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள்தான் என்று அறிவியலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைத்தான் கட்டுபடுத்துமாறு 35 தொழில்மயமான நாடுகளை கோருகிறது இந்த கியோட்டோ ஒப்பந்தம்.

புவி வெட்பநிலை அதிகரிப்பு - Global Warming,

f_UpdatedPlanm_e7f4a76.jpg

சூரியனைச் சுத்தி இவ்வளவு கோள்கள் இருக்கும் பொழுது நம்ம பூமியில் எப்படி உயிரினங்கள் தழைத்து செழிக்க முடிந்ததுன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? அதுக்கு முக்கியமான காரணம் நம்ம உலகின் தட்பவெட்ப நிலைதான். இந்த மாதிரி தட்ப வெட்பநிலை இருப்பதால்தான் நம்ம பூமியில் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஆவியாகப் போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாய் இருக்கிறது. நீரின்றி அமையாது இவ்வுலகு அப்படின்னு எல்லாரும் படிச்சு இருக்கிறதுனால இதுக்கு மேலச் சொல்லத் தேவையில்லை. அதே சமயம் ரொம்ப குளிராப் போயி நம்மால இங்க இருக்கவே முடியாமப் போகாம ஒரு மிதமான தட்பவெட்பநிலை இருக்கு.

இப்படி இருக்கக் காரணம் என்னன்னு யோசிச்சா அதுக்கு முக்கியமான காரணம் நம்மை சுற்றி இருக்கும் இந்த காற்றுவெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி.இதுல கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் சேர்ந்து என்ன செய்யறாங்கன்னா, சூரியக் கதிர்களால் நம் பூமி சூடாகுது இல்லையா, அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன.

இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் எரிபொருட்களை எரிப்பதாலும், காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது எனப் பார்க்கலாமா?

கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார்.

கேட்டகிரி 4 அல்லது 5 எனத் தரப்படுத்தப்பட்ட சூறாவளிகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகி இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உருகிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது.

இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது

உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது.

மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது.

கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)

என்ன படிக்கும் பொழுது அப்படி ஒன்றும் கலவரப்படும் விஷயம் மாதிரி தெரியலையே, இதுக்கா இம்புட்டு பில்டப் அப்படின்னு தோணுதா? இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போச்சுன்னா என்ன ஆகும் அப்படின்னு பார்க்கலாமா?

1990 முதல் 2100 வரை சராசரி வெப்பம் 1.1 முதல் 6.4 °C வரை (2.0 முதல் 11.5 °F வரை) உயரலாம். (இப்பவே 100 டிகிரி அடிக்கும் வெய்யிலோட இதையும் கூட்டிக்கிட்டு பாருங்க.)

துருவப் பனிப் பாறைகள் தொடர்ந்து உருகுவதால், கடல் மட்டம் 20 அடி முதல் 35 அடி வரை உயரலாம். (மெரீனா பீச்சை நினைச்சுப் பாருங்க. அதைவிடுங்க, இப்பவே கடல்மட்டத்துக்குக் கீழ இருக்கும் ஹாலந்து நாட்டின் நிலை?)

2050ஆம் ஆண்டிற்குள் ஆர்டிக் கடலில் பனிப்பாறைகளே இல்லாமல் போகும்.

உலகில் வெப்ப அலைகள் (Heat Waves) மிக அதிகமாகவும் வீரியத்தோடும் இருக்கும்.

வறட்சியும் காட்டுத்தீக்களும் மிகவும் அதிகமாகும்.

அடுத்த 25 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றங்களால் வருடத்துக்கு 3,00,000 பேர்கள் வரை மாண்டு போகலாம்.

பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் இவ்வுலகில் இருந்து மறைந்தே போய்விடும்.

இவையெல்லாம் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நிகழும். ஆனால் மனித நடவடிக்கைகளால் உண்டான வெப்பநிலை அதிகரிப்பின் விளைவுகள் அதற்குப் பின் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தொடருமாம். இப்போ கேட்கவே பயமா இருக்கா? இதுதாங்க புவி வெட்பநிலை அதிகரிப்பு.

ஆனா எந்த விஷயத்துக்கும் மாற்றுக் கருத்து இருப்பது போல இதுக்கும் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்க என்ன சொல்லறாங்கன்னா

புவி வெட்ப அதிகரிப்பு என்பது ஒரு இயற்கை நிகழ்வு. பூமியில் இது போன்ற நிகழ்வு முன்பு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனை நம்மால் தடுக்க முடியாது என்று ஒரு வாதம்.

கரியமில வாயு போன்றவை அதிகரிப்பது இயற்கை நிகழ்வு. எரிமலைகள், உயிரினங்கள், மரம் செடிகள் என அனைத்துமே கரிமல வாயுவை வெளியிடுகின்றன. எரிபொருட்களை எரிப்பதால் உண்டாகும் கரிமல வாயுவின் அளவு மிகவும் கம்மிதான் எனவும் சொல்கிறார்கள்.

இந்த வாயுக்களை விட வெப்பத்தை அதிகமாக்குவது நீராவிதான். இதனை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்பது மற்றொரு வாதம்.

கடந்த நூற்றாண்டில் வெப்பம் அதிகமானாலும் கடந்த 10 - 15 வருடங்களாக வெப்பநிலை ஏறவில்லை, குறைகிறது என வேறு ஒரு கருத்து.

இப்படி இரு புறமும் கருத்துகள் வெளியிடுவதும் அதற்கு மறுப்புகள் வருவதுமாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.