Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலீடுகளுக்கு திறக்கப்படுகிறது கொழும்பு துறைமுக நகரம்

Featured Replies

கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது.

image_4ce3250d53.jpg

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று (07) இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க

அழைப்பு விடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது. 

குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மதலடகளகக-தறககபபடகறத-கழமப-தறமக-நகரம/150-242155

  • தொடங்கியவர்

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF..

 

கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டயர்  காணி பிரதமர் தலைமையிலான நிகழ்வில் நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நகரில் புதிய முதலீட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/229767/நாட்டுடன்-இணைக்கப்பட்டுள்ள-காணி

  • தொடங்கியவர்

சீனாவின் கடலுளுக்குள் கட்டப்படும் உலகளாவிய திட்டத்தில், இலங்கையின் கொழும்பு நகரின் துறைமுத்தில்  269 ஹெக்ட்டர் நிலம் செயற்கையாக இணைக்கப்பட்டு, இலங்கையின் ஒரு பாகமாக அறிவிக்கப்பட்டது. 

image_851e2cb743.jpg

 

சீன நாட்டின் பத்திரிக்கை 
http://www.china.org.cn/world/Off_the_Wire/2019-12/08/content_75489793.htm  

Sri Lanka to firmly support, accelerate Port City development: PM

COLOMBO, Dec. 7 (Xinhua) -- Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa said on Saturday that his government will firmly support and accelerate the development of the Colombo Port City project constructed by China to ensure that it will emerge as a new business hub in the island country.

Rajapaksa visited the Colombo Port City along with Chinese Ambassador to Sri Lanka Cheng Xueyuan and other government ministers to officially declare the 269 hectares of land reclaimed from the sea for the project as part of the Colombo district.

A commemorative stamp and a first day cover were also issued at the grand ceremony followed by a mega fireworks display.

The prime minister pledged to accelerate the implementation of the preferential policies of the Colombo Port City from the government level as early as January 2020 and strive to build the project into a new business card for Sri Lanka at the earliest, the Colombo Port City said in a statement following discussions with the prime minister.

The Colombo Port City is Sri Lanka's largest Foreign Direct Investment project and is expected to attract billions of U.S. dollars of investments in the coming years.

It will also create over 80,000 jobs and will transform Sri Lanka into a regional business and financial hub. 

 

 

 

  • தொடங்கியவர்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கோத்தா கும்பலின் பணத்தை முதலீடு செய்ய திறக்கப்படுகிறது என்று சொல்லனும். 

  • தொடங்கியவர்

சீனாவுடனான நட்புறவை மேலும் வளர்ப்பதில் அரசாங்கம் நாட்டம்: பிரதமர் மஹிந்த

சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா அளித்து வருகின்ற உறுதியானதும், நீண்டகால அடிப்படையிலானதுமான ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். சீனாவினால் முன்னெடுக்கப்படும் மண்டலமும், பாதையும் செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு கறித்து சில மேற்குலக ஊடகங்கள் வர்ணிப்பதைப் போன்ற கடன்பொறியாக அமைகிறது என்று தான் நம்பவில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் சீனாவின் ஹார்பர் என்ஜினியரிங் கொழும்பு போர்ட்சிட்டி கம்பனியும் இணைந்து நிர்மாணித்துவரும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட வேளையில் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவிற்கு நேர்காணலொன்றை வழங்கிய போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

virakesari.jpg

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக கடலிலிருந்து நிறப்பப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பு கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக அன்றையதினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதையொட்டிய நிகழ்விற்காக அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த பிரதமருடன் கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் சியூயுவானும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

'சீனாவும், இலங்கையும் பலம் பொருந்திய நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்றன. இந்த நட்புறவு நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பிற்கு வலிமை வாய்ந்த அத்திவாரத்தை அமைத்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா வழங்கிவருகின்ற நீண்டகால ஆதரவையும், ஒத்துழைப்பையும் அரசாங்கம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. மண்டலமும், பாதையும் செயற்திட்டத்திலான இலங்கையின் பங்கேற்பு ஒரு கடன்பொறிக்குச் சமனானது என்று மேற்குலகின் சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. சீனாவின் ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பேரார்வம் மிக்க அந்த செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பை அவ்வாறு ஒரு கடன்பொறியாக நான் நினைக்கவில்லை.

'அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காகவும், ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பெறப்பட்ட கடன்களை இலங்கையினால் தெளிவாக மீளச்செலுத்த முடியும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது. ஆனால் நாம் அதை மீளக்கட்டியெழுப்பும் போது கடனை மீளச்செலுத்துவது ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.

'அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்தை ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாகப் பரபரப்பாக்கியிருக்கின்றன. உண்மையில் அவர் சீனாவுடனான அந்த உடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த பின்புலத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் ஊடகங்கள் அதுகுறித்து செய்தியை வெளியிட்டுள்ளன. 

இந்த உடன்படிக்கையினால் இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி அதனைக் கூறவில்லை. முன்றைய அரசாங்கத்தைப் போலன்றி எமது அரசு பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்குவதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறினார்.

'இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் நெருக்கமான நட்பு நாடுகள் என்ற வகையில் அவற்றை எமக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்.

இலங்கையில் ஒரு புதிய வர்த்தக மையமாக கொழும்புத் துறைமுக நகரம் தோன்றுவதை உறுதி செய்வதற்கு அந்தத் திட்டத்தை நிர்மாணிக்கும் சீனாவின் பணிகளுக்கு எனது அரசாங்கம் உறுதியான ஆதரவை வழங்கும். கொழும்பு துறைமுக நகரத்தின் முன்னுரிமைக் கொள்கைகளை அரசாங்க மட்டத்தில் துரிதப்படுத்தும் பணிகளை 2020 ஜனவரியிலிருந்து முன்னெடுக்கப்போவதாகவும் பிரதமர் ராஜபக்ஷ நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகருக்காக கடலிலிருந்து மீட்கப்பட்ட நிலப்பரப்பை கொழும்பு மாவட்டத்தின் பகுதியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில் நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகளும் இடம்பெற்றன. கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் எதிர்வரும் வருடங்களில் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களைக் கவருமெனவும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜீயின் தூதுவராக வூ ஜியாங் ஹுவா கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு டிசம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சீனத்தூதரகம் விடுத்த அறிக்கையொன்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும், நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இணங்கிக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உட்பட பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒத்துழைப்பை தற்போது நடைமுறையிலிருக்கும் கருத்தொருமிப்பின் அடிப்படையில் இருநாடுகளும் துரிதமாக நடைமுறைப்படுத்தும் என்றும், எதிர்கால ஒத்துழைப்புக்கான புதிய திட்டவரைவொன்று உருவாக்கப்படும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/70767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.