Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ

Featured Replies

(ஆர்.யசி)

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும்  இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 

2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் தமிழகத்தில் இது குறித்த கருத்து முன்வைப்புகள் மற்றும் விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழ் தரப்பின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென வினவிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

அகதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புபட்டுள்ள ஒன்றாகும். அதாவது அகதிகள் விடயத்தில் அவர்களின் அக்கறையும் உள்ளது.

அத்துடன் இந்திய அரசாங்கமும் இது குறித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக அவர்களிடம் முன்வைத்து வருகின்ற காரணியாகும். இன்றும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். 

அவர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னைய ஆட்சியின் போதும் நாம் கூறினோம். அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அவர்களை இங்கு வரவழைக்கும்  வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/70998

  • தொடங்கியவர்
  • 1947-48, இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு, கிட்தத்தட்ட 4-5 இலட்ச்சம் தமிழர்களுக்கு,  அன்றைய இலங்கை அரசு குடியுரிமையை மறுத்தது.  அதனால் கிடைத்த ஒருவர் எம் ஜி ஆர் என்பதும் உண்மை.  
  • உலகில் நீ எங்கு இருந்தாலும் நீ இஸ்ரேலுக்கு வந்தால், உனக்கு இந்த இஸ்ரேல் நாட்டின் பிரசா உரிமை தரப்படும் என்கின்றது இஸ்ரேல். 
  • தொடங்கியவர்
14 hours ago, ampanai said:

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும்  இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் பிறந்த சோனியாகாந்தி ஒரு இந்திய குடிமகளாக மட்டுமல்லாது இந்தியாவின் பிரதமராகவே வரும்பொழுது ஏன் இலங்கை அகதிகள் இந்திய வல்லரசின் குடிமகனகா வரமுடியாது?, வரலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

இத்தாலியில் பிறந்த சோனியாகாந்தி ஒரு இந்திய குடிமகளாக மட்டுமல்லாது இந்தியாவின் பிரதமராகவே வரும்பொழுது ஏன் இலங்கை அகதிகள் இந்திய வல்லரசின் குடிமகனகா வரமுடியாது?, வரலாம் 🤣

சோனியா  காந்தி,  
எந்த  ஆண்டில்... இந்தியாவின் பிரதமாராக இருந்தவ   :rolleyes: :grin:

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

குடியுரிமை திருத்தச் சட்டம்: ‘இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்’ - மனோ கணேசன்

இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பில் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய உள்நாட்டு பிரச்சனைக்குள் தலையீடு செய்ய தான் விரும்பவில்லை என கூறிய மனோ கணேசன், இலங்கையிலிருந்து அகதிகளாக சென்ற மக்கள் தொடர்பிலேயே கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வருகைத் தந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை திருத்த மசோதாவின் ஊடாக குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை அகதிகள் அந்த மசோதாவில் உள்வாங்கப்படாதது பாரபட்சமான விடயம் என அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கை அகதிகளுக்கு மாத்திரம் ஏன் இந்த பாரபட்சம் என பலரும் கேள்வி எழுப்புவதை அவர் நினைவூட்டினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50791997

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் அதேவேளை, இலங்கை குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் கோரிக்கை விடுக்கின்றார்.

இலங்கை தமிழர்களின் ஜனநாயக போராட்டங்களும், ஆயுதப் போராட்டங்களும் தோல்வி அடைவதற்கு பிரதான காரணம் தமிழ் மக்களின் ஜனத் தொகை குறைவு என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

தமிழர்களின் போராட்டத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கான ஜனத்தொகை குறைவே, போராட்டங்கள் தோல்வி அடைவதற்கான காரணம் என அவர் கூறுகின்றார்.

தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் கனவுகள் எல்லாம் கனவுகளாகவே முடிவடைவதற்கு ஜனத்தொகை பற்றாக்குறையே காரணம் என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், வாழ்கின்ற தமிழர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு வர மாட்டார்கள் என அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு அவர்களை வருமாறு அழைத்தால், தமது உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது என புலம்பெயர் தமிழர்கள் கேள்வி எழுப்புவதாக கூறுகின்ற அவர், இலங்கையில் தற்போது வாழ்கின்ற தமிழர்கள் யாருடைய உத்தரவாதத்தில் வாழ்கின்றோம் என வினவினால் அதற்கு பதில் இல்லை எனவும் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதில் எந்தவித பயனும் கிடையாது என மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

எனினும், இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை தமிழ் அகதிகள் மாத்திரமே இலங்கைக் வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

இந்தியாவில் சுமார் 98000 இலங்கை அகதிகள் உள்ளதாகவும், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இலங்கையில் தற்போது தமிழர்கள் வாழக்கூடிய சூழ்நிலையை தாம் தமது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தியதாகவும், எதிர்வரும் காலங்களில் சமாதானம் தொடரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு இந்தியாவிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதன் ஊடாகவே, தமிழர் ஜனத்தொகை அதிகரிக்கும் எனவும், அதனூடாகவே அரசியல் பலத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், அரசியல் பலம் அதிகரிக்கும் பட்சத்தில் மாத்திரமே தமிழர்களின் ஜனநாயக இலக்குகளை அடைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

இதன்படி, இந்திய மத்திய அரசாங்கம் குடியுரிமை சட்டத்தில் மற்றுமொரு திருத்தத்தை கொண்டு வந்து, இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுக்கின்றார்.

இலங்கை தமிழர் பிரச்சினை முடிந்து விட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து குறித்தும் மனோ கணேசன் பதில் வழங்கினார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்தை அவசரப்பட்டு அவதானிக்கக்கூடாது என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் யுத்தம் கிடையாது, கடத்தல் காணாமல் போதல் கிடையாது, தொல்லை கிடையாது என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விடயத்தை தெரிவித்திருக்கலாம் என அவர் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழர் பிரச்சனை உள்ளதை அடிப்படையாகக் கொண்டே, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களுக்கு பிரச்சனை உள்ளதாக கூறுகின்ற மனோ கணேசன், நாட்டில் யுத்தம் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விடயத்தை கூறியிருக்கலாம் எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

 

  • தொடங்கியவர்

சிங்கள ஊடகங்களில் இந்த செய்தி, அதாவது பல ஆயிரம் ஈழதமிழர்கள் மீண்டும் இந்தியாவில் இருந்து வரலாம் என்ற செய்தி பெரிதாக வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது, பௌத்த இனவாதிகள் மத்தியில் வெறுப்பை அதிகரிக்க செய்யும்.  

 

உதயநிதி ஸ்டாலின் கைதாகி...  

https://tamil.oneindia.com/news/chennai/dmk-started-a-protest-against-citizenship-amendment-bill-udhayanidhi-arrested/articlecontent-pf421707-371227.html

  • தொடங்கியவர்

மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு விசேட அலகு ஆரம்பம்

-எஸ்.குகன்

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பி தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் நலன் கருதி, தென்மராட்சி பிரதேச செயலகத்தில் விசேட அலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அலகு, பிரதேச செயலகத் திட்டமிடல் கிளை அலகில் இயங்குகின்றது.

021-2271014 / 0766363131 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென, பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மீளக்குடியமர்ந்துள்ள-மக்களுக்கு-விசேட-அலகு-ஆரம்பம்/71-242465

இலங்கை , இந்தியா அரசுகளுடன் பேசி இலங்கை மக்களை மீண்டும் இங்கேயே குடியேற்ற வேண்டும். இவர்களை திருகோணமலை, அம்பாறை போன்ற பிரதேசங்களில் குடியேற்ற வேண்டும் அல்லது தங்கள் சொந்த , விரும்பிய இடஞலகில் குடியேற்ற வேண்டும். இதட்குரிய வசதிகளை இரண்டு அரசும் செய்து தர வேண்டும். இதன்மூலம் இங்கு தமிழர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.