Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FA8044-D6-9-AAD-4638-9282-87-BD6-D59735-

பனிச் சறுக்கலுக்காக யேர்மனியில் இருந்து
விடுமுறைக்கு ஒஸ்ரியாவுக்குச் சென்ற பயணிகளுக்கு நடந்த அனர்த்தம் பற்றிய தகவல்கள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது.

ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில்  20 தொடக்கம் 25 வயதிலான யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டதுமன ஒரு துயரச் சம்பவம்  05.01.2020 அன்று அதிகாலை 1:00 மணிக்கு  நடந்திருக்கிறது. மது போதையில் கார் ஓட்டி வந்த Kiens நகரைச் சேர்ந்த 28 வயது Stefan.L. என்ற இளைஞனது கார் மோதியதாலேயே இந்தத் துயரம் நடந்திருக்கிறது.

இதில் படுகாயம் அடைந்தவர்களில் இன்னும் ஒரு பெண் நேற்று (06.01.2020) வைத்தியசாலையில் மரணமானார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பஸ்ஸில் இருந்து இறங்கி தாங்கள் தங்கயிருந்த விடுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருக்கும் போதே சம்பவம் நடந்திருக்கிறது. அதிவேக குதிரைப் பளு கொண்ட தனது Audi காரில் மது போதையில் பயணித்த Stefan நிலை தடுமாறி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மீது மோதியிருக்கிறார் என முதற்கட்ட விசாரணையில்  தெரிய வந்திருக்கிறது

இரத்தத்தில் காணப்படும் 1,9 அளவிலான மதுச் செறிவு ஒருவரை தன்னை மறக்கும் அளவுக்குக் கொண்டு செல்லாது என்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம்விபத்து நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர்தான் Stefan தனது காதலியைப் பிரிந்திருந்தார். அவர்  Hexenkessel Disco விற்கு சென்று கொண்டிருக்கும் போதே இந்த அனர்த்தம் நடந்திருக்கிறது. மற்றவர்களுக்குப் பதிலாக தான் இறந்திருக்கலாம்என்று தனது கட்சிக்காரர் சொல்கிறார் என  Stefanஇன் சட்டத்தரணி ஊடகங்களில் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

“பனி படர்ந்த நேரம். புகை மூட்டமாக இருந்திருக்கும். சாலையில் போதுமான வெளிச்சம் இருந்திருக்காது.  Stefan ஒரு நல்ல இளைஞன். மது அருந்திய பின்னர் அவன் காரில் ஏறி இருக்கக் கூடாதுஇந்த நிலை ஒரு இளைஞனுக்கு மிகமிகக் கடுமையானது. அவன் தனது வாழ்க்கையை சிக்கலுக்குள் கொண்டு வந்திருக்கிறான்என Stefanஇன் சக தொழிலாளியான Lorenz தெரிவிக்கிறார்.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்  Stefan   இப்பொழுது ஒஸ்ரியாவில் உள்ள Bozen சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறான். இந்த விபத்தை ஏற்படுத்தியதற்காக அவனுக்கு 18 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு சாகும் வரை மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மகிழ்ச்சிக்காக குடித்தவர் இனி மனசாட்சியை கொல்ல குடிக்கப்போறார் ........!  

அநியாயமாய் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.