Jump to content

Johnson & Johnson பேபி பவுடரால் கேன்சர் - ரூ.5334 கோடி அபராதம் விதித்து அதிரடி


Recommended Posts

Johnson & Johnson பேபி பவுடரால் கேன்சர் ஏற்பட்டதாக கூறி அமெரிக்காவில் 4 பேர் தொடர்ந்த நஷ்ட ஈட்டு வழக்கில், அந்த நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் 5 ஆயிரத்து 334  கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எனினும் அங்கு மாநிலங்களுக்கு மாநிலம் சட்டவிதிகள் மாறுபடுவதால் இது சுமார் ஆயிரத்து 316 கோடியாக குறையும் என்று கூறப்படுகிறது. Johnson & Johnsonபேபி பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதாகவும், அது குறித்து வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனம் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு.

இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் மீது  16 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் கிரிமினல் குற்ற விசாரணையும் நடக்கிறது.
குற்றச்சாட்டை மறுத்துள்ள Johnson & Johnson நிறுவனம் தவறான விவரங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/99610/Johnson-&-Johnson-பேபி-பவுடரால்கேன்சர்---ரூ.5334-கோடி-அபராதம்விதித்து-அதிரடி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.