Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அறிவியலை எளிமையாகப் புரிய வைத்தவர் சுஜாதா' #SujathaMemories

Featured Replies

எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர்.

Image result for சுஜாதா

சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.

 

 

சந்தோஷ் நாராயணன்:

"சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் யாராலும் முடியவில்லை. சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் ஒரு சாதாரண தமிழ் வாசகனுக்கு அறிவியலை எளிமையாகப் புரிய வைக்கும் வல்லமை படைத்தவை. விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு படித்து வியந்து போனவர்களில் நானும் ஒருவன். பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய தொடர்கள் வியக்க வைக்கின்றன.

தற்பொழுது உள்ள இந்த டிஜிட்டல் உலகில் சுஜாதா இருந்திருந்தால், டெக்னாலஜி குறித்து மிகவும் எளிமையாக எழுதி இருப்பார் என்பது உறுதி. சுஜாதா ஓர் இலக்கியவாதியா? இல்லையா என்ற கேள்வியைத் தாண்டி பல புதுக்கவிஞர்களை தமிழ் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இலக்கியச் சண்டைகளில் அதிகம் ஈடுபடாதவர். தமிழ் வாசகர்களுக்கு சுஜாதாவின் இழப்பு மிகப்பெரியது"

 

கவிஞர் சாம்ராஜ்:

தமிழ் உரைநடைகளில் புரட்சி செய்தவர் சுஜாதா. ஒரு சூழலை அல்லது குறிப்பிட்ட இடத்தை வருணனை செய்துக் கொண்டிருந்த காலத்தில் மிகவும் கூர்மையாகத் தெளிவாக ஓர் இடத்தைப் பற்றி எழுதியவர்இவர். ஒரு கதையில் மதுரையில் உள்ள சுவரைப் பற்றி அப்படியே அச்சு பிசகாமல் எழுதியிருப்பார். மதுரை வீதியில் இருக்கும் ஜவுளிக்கடைகள் சுவர்கள், அங்கிருக்கும் போலீஸ்காரர்கள், பேருந்துகள் என எல்லாவற்றையும் பற்றி கூர்மையாக, தெளிவாக எழுதியிருப்பார். சுஜாதா குறித்து வண்ணதாசன் இவ்வாறு கூறியிருப்பார்,

' பெரிய தோட்டக்கத்தியை எடுத்து மீசையை செதுக்கிக் கொண்டிருந்தபொழுது சின்னக் கத்தியை எடுத்து செல்லமாய் மீசையை செதுக்கியவர்'

வளவள என்று அதிகம் எழுதாமல் கச்சிதமாக சிறுகதைகளை எழுதுவதில் சுஜாதா வல்லவர். எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் சிறுகதைகள் என இவற்றை சொல்வேன், நகரம் , பார்வை, ஒரேயொரு மாலை, மகாபலி, எல்டோராடா.

வண்ணதாசன், கலாப்ரியா, நா. முத்துக்குமார் இப்படி பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இவரின் இழப்பு மிகப்பெரியதாக கருதப்படுகின்றது ஏனென்றால் இவர் ஒரு பரந்துபட்ட வாசிப்பாளர். இந்த சிறு கதை நன்றாக இருக்கிறது, இந்த தொகுப்பு நன்றாக இருக்கிறது என்று இவர் பரிந்துரைக்கும் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர். தமிழ் உரைநடைக்கு மிகப்பெரிய இழப்பு சுஜாதாவின் மரணம்."

 

https://www.vikatan.com/literature/news/sujatha-memorial-day-special-article

  • கருத்துக்கள உறவுகள்

முமன் முதலில் குமுதத்தில் பத்து வாரங்கள் வந்த இவரது “அனிதா இளம் மனைவி” முதல் எல்லா கதைகளையும் இலங்கையில் இருந்தவரை வாசித்து இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களே எங்களை நம்பாதீர்கள்; அன்றே சொன்ன சுஜாதா: கானா பிரபா

sujatha.jpg

18 ஆண்டுகளுக்கு முன் அப்போது வானொலி உலகத்தில் என் வயசு மூன்று. நான்கு தசாப்தங்கள் எழுத்துத் துறையில் இருக்கும் ஆதர்ஷ நாயகன் எனதருமை சுஜாதாவோடு பேட்டி எடுக்க ஆசைப்பட்டு அழைக்கிறேன். சின்னப் பையனிடம் என்ன பேட்டி என்று உதாசீனப்படுத்தி விடுவாரோ என்ற தயக்கம் வேறு. ஆனால் நடந்ததோ வேறு.

2002 ஆம் ஆண்டு “கன்னத்தில் முத்தமிட்டால்” படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது “பிரிவோம் சந்திப்போம்” பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, “ஆ” என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்”, எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.

ஈழத் தமிழ் இலக்கியங்களில் தான் பெரிதும் நேசிக்கும் படைப்பாளிகளாக செங்கை ஆழியான், தேவகாந்தன் Devakanthan Bala, கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் Cheran Rudhramoorthy, மைத்திரேயி குறித்து இந்தப் பேட்டியில் சிலாகிக்கிறார்.

கவிஞர் சேரன் தொகுத்த “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத் தொகுதி குறித்தும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நாவலாசிரியர் தேவகாந்தனின் உதவி குறித்தும், கவிஞர் மைத்திரேயின் கவிதைகள் எவ்வாறு பயன்பட்டன என்று விபரிக்கிறார்.

ஈழத்தமிழ் எழுத்தாளர்களது படைப்புகளைப் படித்த அனுபவத்தில் அவர்களது எழுத்தில் ஒரு உண்மையும், யோக்கியமும் இருப்பதாக எனக்குப் படுகிறது என்றார் சுஜாதா.

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது

“எங்களை நம்பாதீர்கள்”

” நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்”

என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இன்று எழுத்தாளர் சுஜாதாவின் 12 வது நினைவு தினமாகும்.

கானா பிரபா
27.02.2020

http://www.vanakkamlondon.com/sujatha-27-02-2020/

  • தொடங்கியவர்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத் தமிழ் இலக்கியங்களில் தான் பெரிதும் நேசிக்கும் படைப்பாளிகளாக செங்கை ஆழியான், தேவகாந்தன் Devakanthan Bala, கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் Cheran Rudhramoorthy, மைத்திரேயி குறித்து இந்தப் பேட்டியில் சிலாகிக்கிறார்.

வ.ஐ.ச.ஜெயபாலன் ஐயா;  தெரிந்த பெயராக உறவாக இருக்கே, நமக்கும் பெருமைதானே. 

3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது

“எங்களை நம்பாதீர்கள்”

” நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்”

என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

“எங்களை நம்பாதீர்கள்” - என்று மாறும் இந்த அவல நிலைப்பாடு? யார் மாற்றுவார்கள் ??  எம்மால் என்ன செய்ய முடியும் இதை மாற்ற    ???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

வ.ஐ.ச.ஜெயபாலன் ஐயா;  தெரிந்த பெயராக உறவாக இருக்கே, நமக்கும் பெருமைதானே. 

👍

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.