Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

Featured Replies

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும்.

தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள். அதுவும் முடியாதவர்கள் கீழ்கண்ட சில விதிகளை பின் பற்றினால் சன் டிவியின் சகிக்காத தொடர்களை ரசிப்பதோடு, வாழ்வில் அல்சர், இரத்த கொதிப்பு போன்ற வியாதி இனி வாராது அந்த சூரிய பகவான் அருள் புரிவார்.

முக்கிய விதி:

எல்லா தொடரிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும், கீ கொடுத்தால் ஓடும் கை கடிகாரத்திற்கு எவ்வளவு மூளை உண்டோ, அவ்வளவு மூளைதான் அவர்களுக்கும்.

இனி உப விதிகள்:

1. எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.

2. எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.

3. எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.

4. எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.

5. எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.

6. எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.

7. எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.

8. ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.

9. எல்லா மாயாஜால தொடர்களிலும், சமீபத்திய எல்லா ஆங்கிலப்பட ட்ரிக் கண்டிப்பாக இருக்கும்.

10. அம்மன், முருகன் தொடர்களை பார்ப்பதை தவிர்க்கவும், பார்த்தால், கொஞ்சம் இருக்கும் கடவுள் பக்தியும் போய், நாஸ்திகராவது சர்வ நிச்சயம்.

11. நியூஸ் - நடு நடுவே வரும் கேள்வி - பதில் மட்டும் OK, so, mute செய்து விடுவது உத்தமம்.

12. Pepsi - தொடரை ரசிக்க, பாடல்காட்சி வரும் வரை mute செய்து விடுவது ரொம்ப நல்லது, செய்தால், கேட்கப்படும் அபத்த கேள்விகளை கேட்டு எதையாவது எடுத்து டிவி மேல் வீசலாம் என்ற கோபம் வராது தவிர்க்கலாம், டிவி ரிப்பேர் செலவும் மிச்சம் பிடிக்கலாம்.

13. அரட்டை அரங்கம் - தவிர்ப்பது நல்லது, கொஞ்சம் இருக்கும், மூளையும் மழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது, இந்தியா பற்றி நமக்கு இருக்கும் பொது அறிவு பெரிய கேள்விக்குறியாகிவிடும். மேலும், பார்த்த பின் ஒரு வாரம் வரை - காதில் 'ஒய்ங்க்' என்று ஒரே இரைச்சலாக இருக்கும். எதற்காக எல்லோரும் கத்தி கத்தி பேசுகிறார்கள்?

14. உங்களோடு உங்கள் குழந்தைகளும் தொடர்களை பார்க்கின்றார்களா, தினமும் பார்க்கின்ற ஒவ்வொரு தொடருக்கும், $1.00 வீதம் உண்டியலில் போட்டு வந்தால், பிற்காலத்தில் அவர்கள் பிழைக்க ஒரு பொட்டிக்கடை வைக்க பணம் தயார்.

நன்றி கலைச்சோலை

ஹீ ஹீ :lol::lol::huh:

  • தொடங்கியவர்

ஹீ ஹீ :lol::lol::huh:

என்ன இழிப்பு இது :angry: :angry: :angry:

ஹீ ஹீ :lol::lol::huh:

தீவிர ரசிகரோ ? :lol:

  • தொடங்கியவர்

தீவிர ரசிகரோ ? :lol:

ஓ அதுவா பிரச்சினை?

எனது பிரமச்சாரிய வாழ்க்கையில் டிவி ஒன்று தான் குறை. :angry:

அப்படியே டிவி பார்த்தாலும் எங்களுக்கான கார்ட்டுன் சேனல்தான் பார்ப்பேன். :P

எனது பிரமச்சாரிய வாழ்க்கையில் டிவி ஒன்று தான் குறை. :angry:

அப்படியே டிவி பார்த்தாலும் எங்களுக்கான கார்ட்டுன் சேனல்தான் பார்ப்பேன். :P

அது யாரின்ட பிள்ளை தாத்தா என்னா கார்டூன் தான் பார்பீங்களா என்ன எங்களோடா சேருற பிளானோ

நாங்களே பேபியா இருந்து கொண்டு கார்டூன் பார்கிறதில்லை தலி இவரை பாருங்கோ

:(

சன் டிவி ஆட்களை இழுக்கும் திமுக;

ராஜ் டிவி பங்குகள் கிடு கிடு உயர்வு

மே 22, 2007

சென்னை: திமுக ஆதரவுடன் ராஜ் டிவி தொடங்கவுள்ள கலைஞர் டிவிக்கு தேவையான ஆட்களை சன் டிவியிலிருந்து இழுக்க திமுக முடிவு செய்துள்ளது. இதற்கான வேலையில் 2 முக்கிய தலைவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

திமுகவின் ஆதரவு கிடைத்திருப்பதால் ராஜ் டிவியின் பங்கு மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது. முதலில் தயாநிதி மாறன் பதவியைப் பறித்த திமுக இப்போது தனக்கென தனி டெலிவிஷன் சானலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ராஜ் டிவியை அணுகியுள்ளது. ராஜ் டிவியும் திமுகவுக்கு கை கொடுக்க முன்வந்துள்ளது. ராஜ் டிவியின் உதவியுடன் திமுக தொடங்கவுள்ள டிவிக்கு கலைஞர் டிவி அல்லது கலை டிவி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த டிவியைத் தொடங்குவற்கான அனைத்து உதவிகளையும் திமுகவே செய்யவுள்ளது. மேலும் டிவி தொடங்குவதற்கான அனுமதி வழங்குவது உள்ளிட்ட பிற விஷயங்களை பார்த்து செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ராஜாவிடம் விடப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சன் டிவிக்குப் போட்டியாக இருந்த அனைத்து சானல்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

தயாநிதி மாறனின் நெருக்கடி காரணமாக விண் டிவியை யாருமே பார்க்க இயலாத நிலை ஏற்பட்டது. அதேபோல தமிழன் டிவிக்கும் நெருக்கடி கொடுத்து 'வீக்' ஆக்கப்பட்டது.

பின்னர் ஜெயா டிவிக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த டிவி அதிமுக ஆதரவு டிவி என்பதால், பெரிய அளவில் தொல்லை கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து சன் டிவிக்கு அடுத்த டாப் டிவியான ராஜ் டிவியைக் குறி வைத்தார் தயாநிதி மாறன். ராஜ் டிவி நிறுவனத்தினர் தெலுங்கில் விஸ்ஸா என்ற பெயரில் புதிய டிவியைத் தொடங்கினர்.

அந்த டிவியைத் தொடங்க முறையான லைசன்ஸ் பெறவில்லை என்று கூறி ராஜ் டிவி மீது கடும் நடவடிக்கை பிரயோகிக்கப்பட்டது. ராஜ் டிவிக்கு வழங்கப்பட்டிருந்த டெலிபோர்ட் லைசன்ஸ் (நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமை) ரத்து செய்யப்பட்டது.

ராஜ் டிவி மீது தயாநிதி மாறன் கடுமையாக நடந்து கொண்டதால் ஒரு நாள் முழுவதும் அதன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ராஜ் டிவி நிறுவனத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு சாதனங்கள், வேன் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன

இவ்வாறு தொடர்ந்து அதிரடியாக ராஜ் டிவியைக் குறி வைத்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அந்த டிவி நிலை குலைந்தது. இதைத் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை தாய்லாந்திலிருந்து ஒளிபரப்பு செய்யும் நிலைக்கு ராஜ் டிவி தள்ளப்பட்டது.

இதேபோல விஜய் டிவியையும் நசுக்க சன் டிவி முயன்றது. விஜய் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை சன் டிவி பக்கம் இழுக்க முயன்றனர். இதில் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை இயக்கி வந்த ராஜ்குமார் தனது குழுவினரோடு சன் டிவியில் ஐக்கியமாகி அங்கு அசத்தப் போவது யாரு என்ற பெயரில் அதே நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.

இந் நிலையில்தான் தினகரன் கருத்துக் கணிப்பால் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பெரிதாக வெடித்தது.

தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர் இப்போது சன் டிவியையும் முற்றிலும் திமுக புறக்கணிக்க ஆரம்பித்து விட்டது. தங்களுக்கென தனி டிவி வேண்டும் என்று திமுக நினைத்தபோது கை கொடுக்க முன்வந்தார் ராஜ் டிவி நிறுவன அதிபர் ராஜேந்திரன்.

இதையடுத்து அவருடன் திமுக தலைமை ஆலோசனை நடத்தி கலைஞர் டிவியை உருவாக்க முடிவு செய்தது.

ஆனால் புதிய கலைஞர் டிவிக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராஜேந்திரன் கூறுகிறார். அவர் கூறுகையில், விரைவில் கலைஞர் டிவியைத் தொடங்குவோம். ஆனால் முதல்வர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று கலைஞர் டிவி தொடங்கப்பட மாட்டாது.

திமுகவுக்கும் இந்த டிவிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் சில திமுக தலைவர்கள் என்னிடம் பேசியுள்ளனர். அதை நான் மறுக்கவில்லை.

கலைஞர் டிவியில் செய்திக்கு முக்கியத்துவம் தரப்படும். இதுதவிர திரைப்படங்கள், தொடர்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெறும். செய்திகளை ஒளிபரப்பும் நேரம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

நடு நிலையுடன் கூடியதாக இந்த தொலைக்காட்சி விளங்கும். திமுக இந்த டிவிக்கு நிதியுதவி செய்யவில்லை. முதல்வரையும் நான் பார்க்கவில்லை.

புதிய தொலைக்காட்சிக்குத் தேவையான அனுமதி, நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி ஆகியவை பெறப்பட்டுள்ளது. தொலைக்காட்சியைத் தொடங்க வேண்டியது மட்டுமே பாக்கி என்றார் ராஜேந்திரன்.

ராஜ் டிவி தற்போது ராஜ் டிஜிட்டல் பிளஸ், விஸ்ஸா டிவி ஆகியவற்றை நடத்தி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சொந்த ஊராகக் கொண்ட ராஜேந்திரனுக்கு உறுதுணையாக அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் ஆகியோரும் ராஜ் டிவி குழுமத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, புதிய கலைஞர் டிவியை சிறப்பாக செயல்படுத்த திட்டமிட்டுள்ள திமுக இதற்காக சன் டிவியிலிருந்து சிலரை இழுக்க தீவிரமாக முயன்று வருகிறது.

முக்கியமான 3 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு சன் டிவி குறி வைத்துள்ளது. இவர்களில் இருவர் செய்திப் பிரிவில் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு சலுகைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அவர்களிடமிருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லையாம்.

இதுதவிர சன் டிவிக்காக தொடர்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து தரும் தனியார் தயாரிப்பாளர்களையும் இழுக்க திமுக தரப்பு முயலுகிறது. மேலும், சன் டிவிக்கு விளம்பரம் தரும் சில விளம்பரதாரர்களையும் கலைஞர் டிவி பக்கம் திருப்பி விடவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த புதிய டிவியை இயக்கவுள்ள ராஜ் நிறுவனத்திடம் டெலிபோர்ட் வசதி இருப்பதால் அவர்களால் எந்த நேரத்திலும் டிவியை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் டிவி நிகழ்ச்சிகள் தற்போது தாய்காம் செயற்கோள் மூலம் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதில் 2 டிரான்ஸ்பான்டர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

அதில் ஒன்றை இந்த புதிய டிவிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் ராஜ் டிவிக்கு திடீரென ஏற்பட்டுள்ள யோகம் காரணமாக அதன் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

மே 21ம் தேதி நிலவரப்படி ராஜ் குழுமத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 262.10 ஆக உள்ளது. மதுரையில் தினகரன் நாளிதழ் தாக்கப்பட்டபோது அதன் விலை ரூ. 188.65 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ் டிவியின் வரலாறு

ராஜ் டிவி ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் ஆரம்பத்தில் ராஜ் வீடியோ விஷன் என்ற பெயரில் வீடியோ கேசட் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தின் வசம் ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களின் வீடியோ உரிமைகள் உள்ளன. குறிப்பாக எம்.ஜிஆர். நடித்த பெரும்பாலான திரைப்படங்களின உரிமை ராஜ் வீடியோ விஷனிடம்தான் உள்ளது.

இப்போதும் கூட சென்னை அண்ணா சாலையில், மாலைமுரசு நாளிதழ் அலுவலகத்திற்கு அருகே ராஜ் வீடியோ விஷன் இயங்கி வருகிறது.

சன் டிவி ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளில் ராஜ் டிவி பிறந்தது. தங்களிடம் உள்ள திரைப்படங்களின் பலத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ராஜ் டிவி குறுகிய காலத்தில் சன் டிவிக்கு அடுத்த இடத்தை அடைந்தது.

பின்னர் விஜய், ஜெயா என பல டிவிக்கள் வந்த பின்னரும் கூட சன்னுக்கு அடுத்த இடத்தில் தொடர்ந்து ராஜ் டிவியே இருந்து வருகிறது.

தனியார் தமிழ் தொலைக்காட்சிகளில் செய்திகளை நடுநிலையுடன் கொடுத்து வந்த ஒரே டிவி ராஜ் டிவி மட்டுமே.

ஆனால் நேரடி ஒளிபரப்பு வசதியை தயாநிதி மாறன் பறிமுதல் செய்த பிறகு ராஜ் டிவியில் செய்திகள் ஒளிபரப்புவது ரத்தாகி விட்டது. தற்போது செய்திகள் ஒளிபரப்பாகி வந்த அதே நேரத்தில், நியூஸ் டைம் என்ற பெயரில் வேறு வகையில் செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது.

'கலைஞர் டிவி' திமுக டிவி-கருணாநிதி அறிவிப்பு

மே 22, 2007

சென்னை: ராஜ் டிவியின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும் கலைஞர் டிவி திமுக சார்பில் ஆரம்பிக்கப்படுகிறது. அதன் சின்னமாக உதயசூரியன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மதுரை தினகரன் சம்பவத்தைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியைப் பறித்த திமுக இப்போது தனக்கென தனி சானலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ராஜ் டிவியின் உதவியுடன் கலைஞர் டிவி என்ற புதிய டிவியை ஆரம்பிக்கிறது. இதுகுறித்து தெரிவித்த ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் இது திமுக டிவி அல்ல என்று கூறியிருந்தார்.

ஆனால் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கலைஞர் டிவி திமுக டிவிதான் என்று விவரித்தார். அவர் கூறுகையில், சுதந்திர தினத்தன்று கலைஞர் டிவி ஒளிபரப்பைத் தொடங்கும். திமுக சார்பில் இந்த டிவி தொடங்கப்படுகிறது.

திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன், கலைஞர் டிவியின் லோகோவாக இருக்கும். கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான பாலமாக, மக்களுக்கு நண்பனாக, மக்களுக்கு சரியான தகவலைத் தரும் தொலைக்காட்சியாக கலைஞர் டிவி செயல்படும்.

மக்களின் தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்யும் சேனலாக கலைஞர் டிவி இருக்கும். ஜூன் 3ம் தேதி கலைஞர் டிவி தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

நிகழ்ச்சி வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இத்துறையில் அனுபவம் வாய்ந்த பலர் இப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

டிவி நிர்வாகத்தில் திமுகவின் குறுக்கீடு இருக்காது. திமுகவுக்காக ராஜ் டிவி இந்த சானலை நடத்தும். கலைஞர் டிவிக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட சம்பிரதாயங்களுக்காக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையிடம் முறைப்படி மனு செய்துள்ளோம்.

டிவியின் பெயர் கலைஞர் டிவி என்று இருந்தாலும் முழுக்க முழுக்க கட்சி சார்ந்த சானலாக இது இருக்காது. இந்தத் தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடம் புகார்களைக் கேட்டு உடனடியாக அதைத் தீர்த்தும் வைக்கும் வகையிலான நிகழ்ச்சியை நடத்தலாம் என பலர் யோசனை கூறினார்.

டிவி மூலமாக ஆட்சியை நடத்த முடியாது என்பது எனது எண்ணம். எனவே அந்த யோசனையை நான் ஏற்கவில்லை. மேலும் அது சினிமாவில் மட்டுமே சாத்தியமானதாகும். அரசின் திட்டங்களை மக்களிடம் சரியா முறையில் கொண்டு சேர்க்க இந்த சேனலை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்.

சன் டிவி நிறுவனத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியேறுமாறு நான் உத்தரவிடவில்லை. அவர்கள் விரும்பும் வரை அறிவாலயத்தில் இருந்து செயல்படலாம். அதற்குரிய வாடகையை அவர்கள் தருகிறார்கள், பராமரிப்புத் தொகையைத் தருகிறார்கள். எனவே அவர்கள் வெளியேற வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை என்றார்.

மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும்.

ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி போட்டியிடுவாரா, இல்லையா என்பதை கட்சியின் உயர் மட்டக் குழு முடிவு செய்யும்.

ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4 வேட்பாளர்கள் மட்டும் நிறுத்தப்படுவர். மீதம் உள்ள 2 இடங்கள் அதிமுகவுக்கு ஒதுக்கப்படும். இதில் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும் என்றார் கருணாநிதி

இதற்கிடையே, சன் டிவியில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த சரத்குமார், கலைஞர் டிவியின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். கலைஞர் டிவியில் தினசரி 9 செய்தி அறிக்கைகளை ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர டிவி தொடர்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

  • தொடங்கியவர்

எனது பிரமச்சாரிய வாழ்க்கையில் டிவி ஒன்று தான் குறை. :angry:

அப்படியே டிவி பார்த்தாலும் எங்களுக்கான கார்ட்டுன் சேனல்தான் பார்ப்பேன். :P

பாவம் தாத்தா பாட்டிகிட்டே நொந்து நூடில்ஸ் ஆகிப்போட்டாரு :P

உங்களுக்கானது இல்ல எங்களுக்கானது ( ஜம்மு வானவில்) காட்டுன் :angry:

அது யாரின்ட பிள்ளை தாத்தா என்னா கார்டூன் தான் பார்பீங்களா என்ன எங்களோடா சேருற பிளானோ

நாங்களே பேபியா இருந்து கொண்டு கார்டூன் பார்கிறதில்லை தலி இவரை பாருங்கோ

:(

அது அவரது பேரப்பிள்ளை ஜம்மு

அது அவரது பேரப்பிள்ளை ஜம்மு

பேரபிள்ளை வேற இருக்கோ

:(

பாவம் தாத்தா பாட்டிகிட்டே நொந்து நூடில்ஸ் ஆகிப்போட்டாரு :P

நானும் பாட்டியதான் தேடிகிட்டு இருக்கேன். (அமையமாட்டிங்கிறது) :(

உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்கோ. :)

உங்களுக்கானது இல்ல எங்களுக்கானது ( ஜம்மு வானவில்) காட்டுன் :angry:

அப்ப நான் SS Music பார்க்கபோறேன். அங்க தான் நல்ல நல்ல அழகான ஆண்டியா வருவாங்க :lol:

பேரபிள்ளை வேற இருக்கோ

:huh:

:o

அடக் கண்ராவியே

இப்படி புரளிய கிளப்பி என் திருமணத்துக்கு வேட்டு வைக்காதீங்க. :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.