Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன நிறுவனங்களுக்கு செக் வைத்த அமெரிக்கா..  வெளிப்படைத்தன்மை இல்லை என SEC விமர்சனம்..!

donald-trump-china-north-korea-835274-15

சீனாவுக்கு இது போறாத காலமே. ஏனெனில் சுற்றி சுற்றி பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சீனா கொரோனாவிலிருந்து வெளி வந்தாலும் அதனை விட பல மடங்கு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.ஒன்று கொரோனா என்னும் அரக்கனை சீனா பரப்பி விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாவது கொரோனாவினால் ஸ்தம்பித்து போயுள்ள பொருளாதாரத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்களை வளைத்து போடுவதாக இப்படியாக பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது.

வெளிப்படைதன்மை இல்லை

இந்த நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை பூதாகரமாக மீண்டும் கிளம்பியுள்ளது. அது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தான், நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள (NYSE) சீன நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மை இல்லை என விமர்ச்சித்துள்ளது. இது முதல் முறை அல்ல எனவும் கூறப்படுகிறது.

நடைமுறைகளை பின்பற்றுவதில்லை

மேலும் சீனா நிறுவனங்கள் அமெரிக்கா நிறுவனங்கள் பின்பற்றுவதை போல் கடுமையான நடைமுறைகளை கடைபிடிப்பதில்லை. கடந்த செவ்வாய்கிழமையன்று தான் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வளர்ந்து வரும் சந்தையில் முதலீடு செய்வது குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டது. இது குறிப்பாக சீனாவினை குறி வைத்து வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

வர்த்தகத்திற்கு தடை

மேலும் இந்த பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் ஸ்டார்பக்ஸ், எஸ்பியுஎக்ஸ், லக்கின் காஃபி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த நான் கு வாரத்தில் 80% சரிந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல சில சீனா நிறுவனங்கள் வர்த்தகத்திற்கு தடையும் விதிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்டகால போராட்டம்

இது குறித்து கடந்த புதன்கிழமையன்று பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவர் ஜே கிளேட்டன், பொது நிறுவன மேற்பார்வை வாரியம் தணிக்கை பணி ஆவணங்களை அணுகுவதில் நீண்டகாலமாக போராடி வருகிறோம். இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளிக்கிறது. ஏனெனில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து, அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை என்றும் கிளேட்டன் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் .

மேலும் பல சீனா நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அவை சர்பேன்ஸ் ஆக்ஸ்லி சட்ட கணக்கியல் விதிகளை பின்பற்றுவதில்லை(Sarbanes-Oxley Act accounting rules). ஆக சீனாவினை பொறுத்தவரையில் இந்த தணிக்கை ஆய்வு பிரச்சனைகளில் முதலீட்டாளார்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கிளேட்டன் கூறியுள்ளார்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் சீன நிறுவனங்களில் முதலீடு

கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சீன நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்கிடையில் முதலீட்டு நிறுவனமான மட்டி வாட்டர்ஸ் (Muddy Waters), லக்கின் காஃபி நிறுவனத்தின் அறிக்கையினை பரிசோதித்த பின்னர், தன்னிடம் உள்ள பங்கினை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மர்மம் எதுவும் இல்லை

இதே சீனாவோ ஹாங்காய் மற்றும் சென்சென் பங்கு சந்தைகளில் ஆயிரக்கணாகான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. லக்கின் காஃபி ஒழுங்கின்மையை கடைபிடிக்கிறதா? இங்கு யாரும் அப்படி நினைக்கவில்லையே? என்றும் கேள்வி எழுப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சீனா நிறுவனமும் மர்மாக நிறுவனமும் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

மேலும் வளர்ந்து வரும் சந்தைகளில் பல அபாயங்கள் உள்ளன. ஆக அமெரிக்கா சந்தையில் இருந்து யாரும் வெளியேறாதீர்கள். மேலும் சீன நிதி மோசடிக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பததே இவர்களின் முக்கிய செய்தியாக உள்ளது. இது தான் கிளேட்டன் கூறும் முக்கிய செய்தி என்றும் ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் சீனா நிறுவனங்கள் சத்தமேயில்லாமல் அமெரிக்காவிடம் பலத்த அடி வாங்கி வருகின்றன.

https://tamil.goodreturns.in/world/sec-chairman-criticized-the-lack-of-transparency-of-chinese/articlecontent-pf93713-018715.html

  • Replies 118
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தொற்றும் அமசோனின் அபாரித வளர்ச்சியும் 

சில வருடங்களுக்கு முன்னர் 55 வயதான ஜெப் பெஸோஸ் தனது ஊழியர்களிடம் கூறனார் : "இந்த நிறுவனம் நிறுவப்பட்ட நாளில் இருந்தே அதன் முடிவு ஆரம்பமாகி விட்டது  உங்கள் வேலை எல்லாம் அந்த நாளை பிற்போடுவதே " 

அவருக்கு தெரிந்திருக்கவில்லை கோவிட்19 அந்த நாளை வெகுவாக பின்தள்ளி விடும் என்று.

இன்றைய கோவிட்19 உலகத்தில் அபாரித வளர்ச்சியை கண்டுவருகின்றது அம்சோன். இந்த வரும் வியாழன் தனது முடிந்த காலாண்டின் இலாபத்தை / வியாபாரத்தை வெளியிடும்   

CH 20200424_growth_vs_revival_stocks.png

  • தொடங்கியவர்

உலகம் காண இருக்கும் தடுப்பூசியும் காணப்போகும் வருமானமும் 

இன்று இதுவரை உலகில் காணப்படாத ஒற்றுமையில் போட்டி நிறுவனங்கள் ஒரு தடுப்பூசிக்காக உலகில் உழைக்கின்றன. உலகில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையானது இந்த தடுப்பூசி. 

இதை யார் யார் எல்லாம் கண்டுபிடிப்பார்கள் என்பது உறுதியாக கூற முடியாத ஒன்று. 
ஆனால், பல முன்னணி மருத்துவ நிறுவனங்களை கொண்ட சுட்டியில் பலரும் முதலீடு செய்து வருகிறார்கள்.  

Biotech Weekly: The XBI-IBB Performance Gap YTD And A Benchmarking ...

Biotech (top weights) Earnings Estimates/Revisions - Hedge Fund Tips

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ampanai said:

தொற்றும் அமசோனின் அபாரித வளர்ச்சியும் 

சில வருடங்களுக்கு முன்னர் 55 வயதான ஜெப் பெஸோஸ் தனது ஊழியர்களிடம் கூறனார் : "இந்த நிறுவனம் நிறுவப்பட்ட நாளில் இருந்தே அதன் முடிவு ஆரம்பமாகி விட்டது  உங்கள் வேலை எல்லாம் அந்த நாளை பிற்போடுவதே " 

அவருக்கு தெரிந்திருக்கவில்லை கோவிட்19 அந்த நாளை வெகுவாக பின்தள்ளி விடும் என்று.

இன்றைய கோவிட்19 உலகத்தில் அபாரித வளர்ச்சியை கண்டுவருகின்றது அம்சோன். இந்த வரும் வியாழன் தனது முடிந்த காலாண்டின் இலாபத்தை / வியாபாரத்தை வெளியிடும்   

CH 20200424_growth_vs_revival_stocks.png

எல்லோருமாக வீட்டில் இருந்துகொண்டு பொருட்கள் ஒன்லைன் இல் வாங்கியே Amazon Stock உயர்ந்து விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

சீன நிறுவனங்களுக்கே இப்படி ஒரு நிலையா.. அப்படின்னா இந்தியா போன்ற நாடுகள் என்ன செய்யும்.?

china323-1580727915.jpg

பெய்ஜிங்: கொரோனா வைரஸால் இன்று நாம் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் சந்தித்து வருகிறோமோ? அதே பிரச்சனைகளைத் தான் சில மாதங்களுக்கு முன்பு சீனாவும் அனுபவித்து வந்தது.இன்னும் சொல்லப்போனால் சீனாவில் தற்போது கொரோனா இல்லையென்றாலும், அதன் எதிரொலி இருக்கத்தான் செய்கிறது.

இன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனாவினால் பல லட்சம் பேர் வேலையிழந்து வருகையில், சீனாவிலும் அதே போலத் தான் நடந்திருக்கும்.

விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் சீனா

இது ஒரு காரணம் எனில், அன்று சீனா மட்டுமே பிரச்சனையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.

சீனா உள்நாட்டு உற்பத்தியினை அதிகரித்தாலும், அதனை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்ய முடியாது. மற்ற நாடுகளை நம்பியே சீனா உள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் கொரோனாவின் ருத்ரதாண்டவம் இருந்து வரும் நிலையில், பொருளாதார ரீதியாக பெரிதும் சரிந்து வருகின்றன.

பெரும் இழப்பு

இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்துள்ளனர். வருமானத்தினை இழந்துள்ளனர். பல கோடி பேர் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். இப்படி இருக்கையில் அத்தியாவசியம் தவிர மற்றவைக்கு செலவிட அவர்கள் தயாராக இல்லை.

செலவிட தயக்கம்

சீனாவின் உற்பத்தி ஜாம்பவான்கள் ஆன ஸ்டீல் மற்றும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது வழக்கம் போல் தங்களது ஆலைகளை இயக்க தொடங்கியுள்ளனவாம். எனினும் அவர்களிடம் பொருட்களை வாங்கும் நுகர்வோர் தான் இல்லையாம். மக்களிடம் போதிய வருவாய் இன்மையால் அவர்கள் செலவிட தயங்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளும் இதே போன்ற பிரச்சனைகளை விரைவில் எதிர்கொள்ளக் கூடும்.

பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நடவடிக்கை

வேலையில்லாத இளம் கல்லூரி பட்டாதாரிகள் ஸ்னீக்கர்கள் வாங்குவதை நிறுத்திவிட்டார்களாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம். சீனாவில் கொரோனா வைரஸ் பரவலால் முடங்கிப் போன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நிறுவனங்களும், அதிகாரிகளும் பொருளாதாரத்தினை மறுதொடக்கம் செய்வதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.

கடினமான பணி

எனினும் நுகர்வோர் வகையில் மேம்படுத்துவதில் மிகவும் கடினமான ஒரு பணியாக இருக்கலாம். ஏனெனில் பலர் இங்கு வேலையை இழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. பலர் லாக்டவுன் காரணமாக வேலையில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆக அவர்கள் அவர்களின் அத்தியாவசிய தேவைக்கே கூட சேமிப்பு பொறுத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

செலவுகள் குறைப்பு

இதனால் அவர்கள் செலவழிக்கும் தொகையும் வெகுவாக குறைந்துள்ளது. உதாரனத்திற்கு வெளியில் சென்றால் காஃபி, அழகு சாதன பொருட்கள், உணவகங்களில் உணவு அருந்துவது என பல வற்றிற்கும் செலவு செய்வோம். ஆனால் இதுபோன்ற நேரங்களில் இதற்காக செலவு செய்வோமா என்பது கஷ்டம்தானே.

செலவு செய்வது கடினம்

இதே கொரோனாவினால் வேலை இழந்தோர், இனி புதியதாக வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கிய பிறகே செலவு செய்யலாம். அப்போதும் கூட, முன்பு போல செலவு செய்வார்களா? என்பது தெரியவில்லை. ஏனெனில் முன்பு போல இல்லாமல் மக்கள் அத்தியாவசிய தேவையினை பற்றி தற்போது அறிந்துள்ளார்கள். ஆக முன்பு போல செலவு செய்வது கடினம் தான் என்கிறது ஒர் அறிக்கை.

மூன்றில் ஒரு பங்கு விற்பனை

மேலும் பர்னிச்சர்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நகைகள் விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய தொழில்சாலை பணிகள் கூட நீண்ட காலத்திற்கு நம்ப தகுந்ததாக இருக்காது.

உற்பத்தி செய்தும் பிரச்சனை தான்

ஏனெனில் தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில்லை. உதாரணத்துக்கு அமெரிக்காவின் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் ஆர்டர்களை ஒத்தி வைத்துள்ளன. இதனால் உற்பத்தி செய்தும் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலையே நிலவி வருகிறது.

இன்னும் சீனா விடுபடவில்லை ..

ஆக சீனா கொரோனாவில் இருந்து விடுபட்டாலும், இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை எனலாம். அதிலும் தற்போது உலக நாடுகளில் பல நாடுகள் சீனாவிற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளன. ஆக அது எந்தளவுக்கு சீனாவுக்கு நல்ல விஷயம் என, மற்ற நாடுகளும் கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது தான் தெரியவரும்.

 

https://tamil.goodreturns.in/world/china-s-factories-are-faces-some-issues-its-consumers-aren/articlecontent-pf94060-018783.html

  • தொடங்கியவர்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்னும் சீனா விடுபடவில்லை ..

ஆக சீனா கொரோனாவில் இருந்து விடுபட்டாலும், இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை எனலாம். அதிலும் தற்போது உலக நாடுகளில் பல நாடுகள் சீனாவிற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளன. ஆக அது எந்தளவுக்கு சீனாவுக்கு நல்ல விஷயம் என, மற்ற நாடுகளும் கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது தான் தெரியவரும்.

சீன நாடு, ஒரு பலமான நடுத்தர மக்களை கொண்டுள்ளது, அவர்களின் வாங்குதிறன்  ஓரளவுக்கு சீனாவின் பொருளாதாரத்தை தக்கவைக்கும். 

சீனா தனது பட்டு வீதி ஊடாக பல ஆசிய நாடுகளையும் உள்ளடக்கி ஐரோப்பாவை இலக்கு வைத்து செய்யும் பொருளாதாரம், மேலும் வளரலாம். 

சீனா அமெரிக்காவின் எதிரிகளை அரவணைக்கும் : ஈரான், வெளிசுவெல 

சீனா ஆபிரிக்காவில் உள்ள கனிமவளத்தை அபகரிக்க,  அங்குள்ள இலட்சுமியை நேசிக்கும் தலைவர்களை குறிவைத்து தொடரும். 
 

  • தொடங்கியவர்

'கொரோனா வைரஸ் பரவல் முடிந்தபின் சீனாவுக்கான முதலீடுகளை இந்தியா ஈர்க்கும்; புவி அரசியல் மாறும்'

 

உலகம் முழுவதும் கோவிட்- 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பெருமளவில் சரிந்துள்ள நிலையில், தங்களின் உற்பத்திச் சாலைகளை சீனாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அந்த நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன.

சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் சர்வதேச நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் பெருமளவில் முதலீட்டைப் பெற நாம் தயாராக இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று மாநில முதல் அமைச்சர்களுடன் நடந்த காணொலிக் காட்சி வாயிலான கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார் என்று இந்திய ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து துறைக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கும் அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி கோவிட்- 19 நோய்த்தொற்று காரணமாக சீனாவுக்கு உண்டாகியுள்ள இந்த சிக்கல் தொழில் உற்பத்தி மையமாக இந்தியா உருவாவதற்கான வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது பின்பு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் சீனாவில் இருக்கும் தங்கள் உற்பத்திக் கூடங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புவதாகவும், அப்படி மாற்ற விரும்பினால் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கும் என்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி ஏப்ரல் 21ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-52476038

செல்போன் தயாரிப்பு, மின்னணு உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி மையங்களை நிறுவ மும்முரமாக திட்டமிட்டு வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.

 

''புவி அரசியலிலும் மாற்றம்''

தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவ சுமார் 1000 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், "சர்வதேச நிறுவனங்களால் அதிகம் விரும்பப்பட்ட தொழில் மையம்" எனும் அந்தஸ்தை சீனா இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஏப்ரல் 22ஆம் தேதி என்று பிசினஸ் டுடே எனும் வர்த்தக நாளிதழின் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிறுவனங்கள் இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை திறக்க விரும்புகின்றனரா அல்லது சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாற்ற விரும்புகின்றனரா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

அமெரிக்க - இந்திய ஸ்ரேடஜிக் அண்ட் பார்ட்னர்ஷிப் ஃபோரம் எனும் லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றின் தலைவர் முகேஷ் ஆகி என்பவர், வெளிநாட்டு உற்பத்தியை ஈர்த்து சீனாவுக்கு மாற்றான சர்வதேச உற்பத்தி மையமாக மாறுவதற்கு இந்தியாவுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளதாக ஏப்ரல் 23ஆம் தேதியன்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சீனா மற்றும் உலக நாடுகள் இடையே இருக்கும் மோதல் வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும், இந்தியா சரியாக காய்களை நகர்த்தினால் பெருமளவிலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்புண்டு என்றும் முகேஷ் ஆகி கூறியுள்ளார்.

கோவிட்- 19 தோற்று பரவல் முடிவடைந்த பின்னர் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை கட்டமைப்பை கொண்ட நாடு எனும் அந்தஸ்தை சீனா இழக்க நேரிடலாம் என்று இந்தியா டுடே இதழின் இணையதளத்தில் சாய் கிரண் கண்ணன் எனும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் நில அமைப்பு மற்றும் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை சீனாவுக்கு உகந்த மாற்றாக இருக்க உதவி செய்யும் என்று அவர் அந்தக் கட்டுரையில் கூறியுள்ளார்.

தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் ஆசிய பிராந்தியம் மற்றும் பிற பகுதிகளில் புவி அரசியலிலும் இது மாற்றத்தை உண்டாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனம்.!

IMG_3841.jpg

உலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் 31 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இவ் வைரஸால் 2 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெரும் நஷ்டத்தை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், UKயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமான நிறுவனமும் கொரோனா வைரஸால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது சேவையை மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பெரும் இழப்பை சந்தித்து வரும் அந்நிறுவனம் நஷ்டத்தை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஏயார்வேசின் தலைமை நிறுவனமான சர்வதேச விமான போக்குவரத்து குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதால் பிரிட்டிஷ் ஏயார்வேசில் வேலை செய்து வந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

http://www.vanakkamlondon.com/கொரோனாவால்-12-ஆயிரம்-பேரை-ப/

  • தொடங்கியவர்

வங்குரோத்தாகும் நிறுவனங்கள் 

கோவிட் 19 உலக பொருளாதாரத்திற்கு ஒரு இரு தலை வலி :
#1: மக்களை வீடுகளில் இருத்தி பரவலை கட்டுப்படுத்தல் 
#2: பொருளாதாரத்தை இறப்பில் இருந்து காப்பாற்றுதல் 

பல நாடுகளின் மத்திய வங்கிகளும் நிதி அமைச்சுக்களும் தனியார் வங்கிகளும் முடிந்தளவிற்கு நிறுவனங்களை, குறிப்பாக சிறிய நிறுவனங்களை பாதுக்காக்க முயலுகின்றன. 

குறிப்பாக சிறிய கடைகள்;  சிறு உணவகங்கள் முதலில் வங்குரோத்தாகும் என கணிக்கப்படுகின்றது. பொதுவாக இவை தனிப்பட்ட நபர்களால் நடாத்தப்படுவது. 

அத்துடன், பல ஆயிரம் மசகு எண்ணெய் உடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வங்குரோத்தாகும் நிலையும் உள்ளது. காரணம், 30% தேவை குறைந்துள்ளதும் உற்பத்தி நாடுகள் மிகுதி 70% பாவனையாளர்களுக்கு விநியோகிக்க போட்டி போடுவதும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

பல ஆயிரம் மசகு எண்ணெய் உடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வங்குரோத்தாகும் நிலையும் உள்ளது. காரணம், 30% தேவை குறைந்துள்ளதும் உற்பத்தி நாடுகள் மிகுதி 70% பாவனையாளர்களுக்கு விநியோகிக்க போட்டி போடுவதும்.

ஒம் தோழர்.! உந்த மலையாளி நேரடியா மோடியிடம் கதைத்திருந்தால் கடனை கட்டாயம்  தள்ளுபடி செய்திருப்பார்.. ஐயோ பாவம்கள்..😢

  • தொடங்கியவர்

வேகமாக மூடப்பட்ட பொருளாதரமும் நீண்ட நாட்கள், வருடங்கள் எடுக்கும் மீள் கட்டியெழுதலும் 
 

வேகமாக விரைவாக சில நாட்களில் / வாரங்களில் உலக பொருளாதரம் முடக்கப்பட்டது. ஆனால், அதுதான் இலகுவான ஆனால், பொது மருத்துவ தேவைக்கான தேவை. 

ஆனால், மீண்டும் திறப்பது, திறந்த பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவது என்பது மிகவும் கடினமான தூரமான துயரமான பயணமாக அமையும். 

இந்த பயணத்தில் சில நிறுவனங்கள் மட்டுமல்ல, நகரசபைகள், மாகாண அரசுகள் கூட பல பொருளாதார சிக்கலைகளை காணவேண்டி வரும். நாடுகள் கூட தடுமாறும். 

புதிதாக பிடித்து முடித்து வேலை தேடுபவர்கள், வேலைகளை இழந்து வேலைகளை தேடுபவர்கள் ஒரு கடினமான தொழிற்ச்சந்தையை காண்பார்கள். 

பல பல்கலைக்கழகங்கள் கல்வி நிறுவனங்கள் கூட வருமானத்தை இழக்கும், சில மூடவும் படலாம். மாணவர்கள் வருகை குறையும். 

உலக உல்லாச பயணம் மீண்டும் பழைய நிலைக்கு வருமா? என்பது கேள்வியே. அப்படி வந்தாலும் பல புதிய விதிமுறைகளை கண்டு செல்லும். 

  • தொடங்கியவர்

எனவே, மாறும் புது வரைமுறைகளை உள்வாங்கி தம்மை மாற்றும் நிறுவனங்களும் அவ்வாறான தேவைகளை வழங்க முன்வரும் புதிய நிறுவனங்களும் வெற்றிகரமாக முன்னேறும். 

அமேசான் அவ்வாறான ஒன்று. வரும் காலாண்டில் தனது வருமானம் எவ்வளவு இருக்கும் என கூறிய ஒரு சில நிறுவனங்களில் அமேசான் ஒன்று. 

தனது வருமானம் கிட்தத்தட்ட நாலு பில்லியன்கள் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அதில் பெரும்பாலான பணத்தை கோவிட்19 சம்பந்தமாக முதலீடு செய்யும் எனவும் கூறி உள்ளது. இதன் மூலம், 2021க்கும் அப்பால் ஒரு பெரும் நிறுவனமாக மாறவும் கூடும். 

ServiceNow என்ற நிறுவனம் இந்த கோவிட் 19 பற்றிய பொருளாதாரம் பற்றி கூறுகையில் 7 த்ரிலியன்கள் முதலீடு செய்யபப்டும் என கூறி உள்ளார். 

எனவே, புதிய கதவுகள் பாதைகள் திறக்கப்படும். தன்னை மாற்றுபவன் வாழுவான். 

Edited by ampanai

  • தொடங்கியவர்

உலகம் முழுவதும் தொற்றால் மக்கள் முடங்கி உள்ளார்கள். அதனால், பொருளாதராமும் முடக்கபப்ட்டு உள்ளது. இருந்தாலும், அமெரிக்க பங்கு சந்தை சித்திரை மாதம் வரலாறு காணாத வளர்ச்சியை, பங்குனி வீழ்ச்சியில் இருந்து கண்டது. இந்த புதிருக்கு விடைகாண சிலராலேயே முடியும். 

ஆனால், பங்கு சந்தைகளை பற்றி அறிவது, எல்லோரினதும் கடமை. வீட்டில் இருக்கும் பொழுது இது சம்பந்தமான அறிவை வளர்க்கலாம். காரணம், உங்கள் வாழ்வும் ஓய்வூதியமும் அதில் தங்கி உள்ளது. நீங்கள் விரும்பாவிட்டாலும், பங்கு சந்தை உலகை உங்களை சுற்றி உள்ளது. 

இது முதலீடு செய்வது பற்றிய அறிவுரை அல்ல,  

 

  • தொடங்கியவர்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒம் தோழர்.! உந்த மலையாளி நேரடியா மோடியிடம் கதைத்திருந்தால் கடனை கட்டாயம்  தள்ளுபடி செய்திருப்பார்.. ஐயோ பாவம்கள்..😢

மேற்குலக நாடுகளில் பலவேறு உதவிகளையும் பெறலாம். மேலும், சிலர் வங்குரோத்தையும் ஒரு வியாபார நுணுக்கமாக கொண்டுள்ளார்கள். அதனால், இவ்வாறான தற்கொலைகள் குறைவு. 

கீழைத்தேய நாடுகளில், வியாபார தோல்விகளை அவமானமாக கருதுகிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்புக்கு செக் வைக்கும் வேலை இழப்பு.!  வீழ்ச்சி வேதனையில் அமெரிக்கா.! 

trump556-1587796722-1588405381.jpg உலகின் சக்தி வாய்ந்த நாடு எது என்றால் 5-ம் வகுப்பு மாணவன் கூட அமெரிக்கா என்பான். ஆயுத பலம், பண பலம், அரசியல் செல்வாக்கு, அறிவியல்... என எதை எடுத்தாலும் அமெரிக்காவை ஒதுக்கிவிட்டு உலகம் இயங்காது.

அந்த அளவுக்கு அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள், உலகோடு இணைந்து இருக்கிறது.ஆனால் கண்ணுக்கே தெரியாத கொரோனா, அமெரிக்காவை கண்ட மேனிக்கு அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா கொரோனாவை எதிர் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது. அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் வேலை இழப்பு.

550.1551362487.jpg

 வேலை வாய்ப்புகள்

ஒரு நாட்டில் வேலை வாய்ப்புகளும் தொழில் வளமும் சீராக இயங்கினால் தான் பொருளாதாரம் சீராக இயங்கும்.

1. வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்களால் வரும் வருமானத்தை மக்கள் செலவழிப்பார்கள்.

2. அது வியபாரிகளுக்கு வருமானமாகும்.

3. வியாபாரிகளும் தங்கள் தொழிலை விரிவாக்கி இன்னும் பலருக்கு வேலை கொடுப்பார்கள். இந்த சுழற்சி தொடரும்.

வேலை போச்சு ..

ஆனால் மக்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளை இழந்து வந்தால்..? மக்கள் கையில் பணம் இருக்காது. எனவே நுகர்வு வீழ்ச்சி காணும். நுகர்வு இல்லாததால், உற்பத்தி சரியும். இதனால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் அப்படியே தேங்கி நிற்கும். இப்போது அது தான் அமெரிக்காவிலும் நடந்து கொண்டு இருக்கிறது.

பயங்கரமான வேலை இழப்பு

layoff.jpg 

கொரோனா வைரஸால் பல்வேறு வியாபாரிகள், தங்கள் வியாபாரத்தைச் செய்ய முடியாமல், தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால், கடந்த 6 வாரங்களில் சுமாராக 3 கோடி பேர் அமெரிக்காவில் (30 மில்லியன்) வேலையை இழந்து Unemployment Benefit-க்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இந்த வேகம் கடந்த மார்ச் மாதத்தில் ஒரே வாரத்தில் சுமாராக 69 லட்சம் பேர் வேலையை இழந்து Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தார்கள். இது தான் ஒரே வாரத்தில் Unemployment Benefit-க்கு அதிகபட்சமாக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை.

இப்போது, இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தில் சுமாராக 38 லட்சம் பேராக குறைந்து இருக்கிறது என்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதலான செய்தி. வேலை இல்லா திண்டாட்டம் 1929 - 30 காலகட்டத்தில் Great Depression வந்தது. அப்போது தான் அமெரிக்க பொருளாதாரம் வரலாறு காணாத வேலை இல்லா திண்டாட்டங்களைக் கண்டது.

அதன் பிறகு இந்த மே 2020-ல், அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம் 16.4 %-மாக உயர வாய்ப்பு இருப்பதாக USA Today பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

பெரிய அடி

இந்த 16.4 % வேலை இல்லா திண்டாட்டம் என்பது, 1929 - 30 great depression க்குப் பிறகு, அமெரிக்க வரலாறு காணாத மிகப் பெரிய வேலை இல்லா திண்டாட்டம் என்கிறது மார்கன் ஸ்டான்லி கம்பெனி. கடந்த பல ஆண்டுகளாக உருவான வேலை வாய்ப்புகள் எல்லாம், கடந்த சில நாட்களில் காலியாகிக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அமெரிக்காவுக்கு இது மரண அடி தான்.

பொருளாதாரம் அடி

 இப்படி மக்கள் சகட்டு மேனிக்கு Unemployment Benefit-க்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்க, மறு பக்கம் பொருளாதாரம் நேரடியாக அடி வாங்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த மார்ச் 2020-ல் அமெரிக்காவில் மக்களின் நுகர்வு சுமாராக 7.5 % சரிந்து இருக்கிறதாம். இது கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்கா பார்க்காத நுகர்வுச் சரிவு என்கிறது US Today . அப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்கள் என்ன ஆகும்..? இதை விட நுகர்வுச் சரிவு இன்னும் அதிகரிக்கத் தானே செய்யும்? 

எத்தனை பேருக்கு பணம்

தங்கள் வேலையை இழந்த  மக்கள், அமெரிக்காவின் மாநில அரசின் Unemployment Benefit-க்காக லட்சக் கணக்கானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு முறையாக பணம் கிடைக்கிறது என ஒரு முக்கியமான கேள்வியை முன் வைத்து இருக்கிறார் The Century Foundation அமைப்பின் ஆண்ட்ரூ ஸ்டெட்னர் (Andrew Stettner).

29 % பேருக்கு மட்டுமே கிடைக்கும்

சமீபத்தில் Vox பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. அமெரிக்காவில் Pew Research Center என்கிற அமைப்பு எடுத்த பகுப்பாய்வில், வேலை இழந்து Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் 29 சதவிகித அமெரிக்கர்களுக்கு மட்டுமே கடந்த மார்ச் 2020-ல் வேலை இல்லாதவர்களுக்கான சலுகைப் பணத்தை பெற்று இருப்பதாகச் சொல்லி நமக்கு ஷாக் கொடுக்கிறது. அப்படி என்றால் மீதி 71 % பேரின் நிலை?

கிடைக்கவில்லை

Unemployment Benefit-க்கு விண்ணப்பித்த, மீதமுள்ள 71 சதவிகிதம் பேர், கடந்த மார்ச் 2020-ல், தங்களுக்கான சலுகை பணத்தைப் பெறவில்லையாம். அதே போல ஒவ்வொரு மாகாணத்திலும், Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு பணத்தை பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதமும் மாறுபட்டுக் இருக்கிறதாம்.

அதாவது எல்லா அமெரிக்க மாகாணங்கலிலும் ஒரே போல எண்ணிக்கையில் சலுகைப் பணத்தைக் கொடுக்கவில்லை. மாகாணம் உதாரணமாக மாசாசூட்ஸ் (Massachusetts) மாகாணத்தில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் 66 சதவிகிதம் பேருக்கு, வேலை இழந்தவர்களுக்கான பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

ஆனால், ஃப்ளோரிடா (Florida)-வில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் வெறும் 7.6 சதவிகிதம் பேருக்கு தான் சலுகைப் பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

சமம் இல்லை

அமெரிக்க மத்திய அரசு CARES Act வழியாக, 2.2 ட்ரில்லியன் டாலரை கொரோனா உதவித் தொகையாக ஒதுக்கி இருக்கிறது. ஆனால் அதை கொடுக்கும் வேலையை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட்டது. மாநில அரசுகளோ சொதப்பித் தள்ளிக் கொண்டு இருக்கிறது. அதற்கு இன்னொரு உதாரணம். கொடுக்கும் சலுகைப் பண அளவில் வேறுபாடு.

வேறுபாடு

மிசசிப்பி (Mississippi) மாகாணத்தில் வசிப்பவருக்கு Unemployment Benefit-ஆக வாரத்துக்கு 235 டாலர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் மாசாசூட்ஸ் (Massachusetts) மாகாணத்தில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு வாரத்துக்கு 823 டாலர் கொடுக்கிறார்களாம். இன்னும் சில மாகாணங்களில், சார்ந்து இருப்பவர்களையும் (Dependent) கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதலாக பணம் கொடுக்கிறார்களாம். சில மாகாணங்கள் கொடுப்பதில்லையாம்.

அதிபர் தேர்தல்

இந்த நவம்பர் 2020-ல் அதிபர் தேர்தலை சந்திக்க இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த நேரத்தில், ஒரு பக்கம் அமெரிக்க மக்களின் உயிரை எடுக்கும் கொரோனாவை நேரடியாக எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. மறு பக்கம் கொரோனா கிளப்பி விட்ட வேலை இழப்பு பூதத்தை மேய்க்க வேண்டி இருக்கிறது.

கடுமையான சவால்

Employment.png 

ஒரு பக்கம் ன்வேலை நீக்கம் செய்யப்பட்டு Unemployment Benefit-க்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இன்னொரு பக்கம் மக்கள் வேலை இழந்ததால், அமெரிக்க பொருளாதாரத்தில் வீழ்ச்சி காணும் நுகர்வை சமாளிக்க போராடிக் கொண்டு இருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். உண்மையாகவே ட்ரம்ப் கடுமையான சவால்களைத் தான் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்.

https://tamil.goodreturns.in/world/covid-19-lay-off-is-creating-problems-to-trump-like-consumer-spending-fall-in-us-economy-018818.html

  • தொடங்கியவர்

மரணிக்க உள்ள விமான சேவை நிறுவனங்கள் 

நேற்று நடந்த வருடாந்த பங்குதாரர்களுடனா சந்திப்பில், முதலீடுகளில் அரசனாக விளங்கும் வரன் பவட் சொன்ன பல செய்திகளில் ஒன்றை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது : ' நாங்கள் எமது விமான நிறுவனங்கள் மீதான முதலீட்டை முற்றாக விற்று வெளியே வந்துவிட்டோம் ' என்பதே. 

கோவிட் 19ன் பின்னராக உலக விமான பயணம் முற்றாக மாறி வருகின்றது. விமானங்கள் நிறுத்தப்பட்டாலும் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருந்தாலும், அவர்கள் விமானங்களை வேண்டிய பணம், மற்றும் அவற்றை சில இயங்கு  நிலையில் வைத்திருக்கும் செலவுகளை எதிர்கொண்டுள்ள. 

உலக விமான நிறுவனங்கள் பல அரசுகளின் நிதி உதவியை எதிர்கொண்டு உள்ளன. 

இங்கே, சிங்களத்தின் சிறிலங்கன்  எயார்லைன்ஸ் என்கனவே நட்டத்தில் ஓடிய ஒன்று. ஆனால், சிங்கள அரசு மேலும் மக்கள் மீது கடன்களை சுமத்தி தக்க வைக்கும் என நம்பலாம்.   

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ampanai said:

மரணிக்க உள்ள விமான சேவை நிறுவனங்கள் 

நேற்று நடந்த வருடாந்த பங்குதாரர்களுடனா சந்திப்பில், முதலீடுகளில் அரசனாக விளங்கும் வரன் பவட் சொன்ன பல செய்திகளில் ஒன்றை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது : ' நாங்கள் எமது விமான நிறுவனங்கள் மீதான முதலீட்டை முற்றாக விற்று வெளியே வந்துவிட்டோம் ' என்பதே. 

கோவிட் 19ன் பின்னராக உலக விமான பயணம் முற்றாக மாறி வருகின்றது. விமானங்கள் நிறுத்தப்பட்டாலும் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருந்தாலும், அவர்கள் விமானங்களை வேண்டிய பணம், மற்றும் அவற்றை சில இயங்கு  நிலையில் வைத்திருக்கும் செலவுகளை எதிர்கொண்டுள்ள. 

உலக விமான நிறுவனங்கள் பல அரசுகளின் நிதி உதவியை எதிர்கொண்டு உள்ளன. 

இங்கே, சிங்களத்தின் சிறிலங்கன்  எயார்லைன்ஸ் என்கனவே நட்டத்தில் ஓடிய ஒன்று. ஆனால், சிங்கள அரசு மேலும் மக்கள் மீது கடன்களை சுமத்தி தக்க வைக்கும் என நம்பலாம்.   

 

 

உண்மை தோழர்..👍..👌

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றிலேயே அதிக அளவு கடன் வாங்கும் அமெரிக்கா

american-flag-wind.jpg 

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் உண்டாகியுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அந்நாடு 3 ட்ரில்லயன் (3 லட்சம் கோடி) டாலர் கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஒரே காலாண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகம்.

அந்தத் தொகை 2008 பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் வாங்கப்பட்டது.

2019 ஆண்டு முழுமைக்கும் சேர்த்து அமெரிக்க அரசு வாங்கிய கடன் 1.28 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஆகும்.

இதுவரை 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவு மதிப்புள்ள நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் சுமார் 25 லட்சம் கோடி டாலராக உள்ளது.

http://puthusudar.lk/2020/05/05/வரலாற்றிலேயே-அதிக-அளவு-க/

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் உலகளாவிய டிஸ்னி சிக்கலான நிலையில் 

நேற்று வெளியிட்ட முதலாவது காலாண்டு வருமான அறிக்கையில், பெரும் நிறுவனமான டிஸ்னி, ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் என கணிக்கப்படுகின்றது. 

பலரும் இந்த நிறுவனத்தின் பங்கை அதன் பிரிக்கப்படும் இலாபத்திற்காகவே (dividend) வாங்குவார்கள். டிஸ்னி இந்த அரையாண்டிற்கு அந்த பணம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

மூடப்பட்டுள்ள டிஸ்னியின் பிரபல  பூங்காக்கள் எப்பொழுது திறக்கப்படும் ?  என்ன செய்து திறக்க வேண்டும்.? அதற்கான செலவுகள்? என சிக்கலில் உள்ளது. ஆனால், அதன் வேறு சில பகுதிகள் தொடர்ந்தும் இலாபம் ஈட்டி தருகின்றன. 

106521386-158871051978120200505_disney_segment_revenues.png?v=1588710527&w=678&h=381

  • தொடங்கியவர்

கோவிட் 19 - 66  நாடுகளை பட்டியால் இட்டத்தில்  சிறிலங்கா 61 ஆவது 

Sri Lanka’s economy is among the worst affected by the current COVID 19 crisis, according to a ranking published by the Economist this week.

In the ranking of 66 economies across four potential sources of peril, Sri Lanka is at 61, with Angola, Lebanon, Bahrain, Zambia and Venezuela ranked below us.

The ranking looked at public debt, foreign debt (both public and private) and borrowing costs (proxied where possible by the yield on a government’s dollar bonds).

https://economynext.com/economist-magazine-ranks-sri-lanka-among-countries-in-economic-distress-69481/

In South Asia, Bangladesh, one of the better-managed countries in the region did well, coming in at 9, above China and next to Saudi Arabia.

India ranked 18 and Pakistan 43, mostly because the latter has recently accepted an IMF package and has low foreign debt. India’s debt is mostly domestic and therefore did not pose an external peril, the magazine said.

Sri Lanka is bringing up the rear saddled with heavy foreign and domestic debt.

  • தொடங்கியவர்

மேற்குலகத்தின் இரண்டு பொருளாதாரங்கள் 

கோவிட்19 க்கு ஏற்ப சில நிறுவனங்கள் தம்மை மாற்றி இலாபத்தை ஈட்டி வருகின்றன. 

ஆனால், அதனால் தாக்கப்பட்டு மாற்றஙகளை செய்ய முடியாமல் இரண்டாவது பட்டியல் நிறுவனங்கள் தவிக்கின்றன. 

முதலாவது பட்டியலில் அதிகம் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டியதை வைத்து இலாபம் பெரும் நிறுவனங்கள் : அமேசான், மைக்ரோசோப்ட்; கணணி உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனங்கள் : என்வீடிய ; பெரிய மருத்துவ நிறுவனங்கள், வீட்டில் இருந்து வைத்தியரை அணுக வைக்கும் நிறுவனங்கள்; சூம் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வீட்டில் இருந்து படங்களை பார்க்கும் நெட்ப்லீக்ஸ்; வீட்டில் இருந்து உடற்பயிற்சி செய்ய உதவும் பெல்டடன், பிசா மற்றும் பெரிய உணவு நிறுவனங்கள்,இலகுவாக மின்வலையில் கடைகளை திறக்க உதவுவை, பெரிய மளிகை கடைகள் என அடுக்கி செல்லலாம். 

இரண்டாவது பட்டியலில் முதலிடம் பெறுபவை வங்கிகள் ( அறவிட முடியா கடன்கள் ), சிறிய உணவகங்கள், பாரிய கட்டிடங்களை பராமரிக்கும் நிறுவனங்கள்; மசகு எண்ணெய் நிறுவனங்கள், மகிழூந்துகளை வாடகைக்கு விடும் நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்கள் என அடுக்கி செல்லலாம்.

இந்த மாற்றங்களுக்கு மாறி தம்மை மாற்றும் நிறுவனங்கள் வாழும்.

புதிய சிந்தனைகள் உள்ளவர்களுக்கும் பல வாய்ப்புக்களை தந்துள்ளார் கோவிட் 19 . 

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து நழுவி விடுவார் .👍

 

  • தொடங்கியவர்

கனடா வேலைவாய்ப்பின்மை 13 சதவீதம் ஆனது அமெரிக்கா 14.7 சதவீதத்தைத் தொட்டது

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்காரணமாக நாடுகள் முடங்கிப்போக வேலைவாய்பின்மை வரலாறாக உலகம் தழுவி அதிகரித்துள்ளது. கனடாவில் ஏப்ரல் மாதத்தில் மேலும் 2 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டு 7.8 சதவீதமாக மார்ர்சில் இருந்த வேலைவாய்பின்மை வீதம் ஏப்ரலில் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெப்ரிவரியில் வேலைவாய்ப்பின்மை வீதம் 5.6 அக இருந்தது.

கனடாவின் மாநிலங்களில் அதிகரித்த வேலை வாய்பின்மை வீதத்தை கியூபெக் வெளிப்படுத்தி உள்ளது. அங்கு வேலைவாய்ப்பின்மை வீதம் 17 சதவீதமாகியுள்ளது. தமிழர்கள் அதிகம் வதியும் ஒன்ராரியோவில் வேலைவாய்பின்மை வீதம் 11.3 சதவீதமாகியுளள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவில் 11.5 சதவீதமாகும்.

தமிழர்கள் கனடாவில் அதிகம் வசிக்கும் கனடாவின் பெருநகரங்களிலான வேலைவாய்பின்மை வீதம் வருமாறு: சிறிய தரவைக் கொண்டு கணிக்கப்பட்டதால் இது மாறுபடும் வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கையும் இதில் அடங்கும். ரொரன்ரோ 7.9 மொன்றியல் 10.5 ஒட்டாவா 6.3 வோட்டலூ 7.8 ஒசாவா 8.5

இதேவேளை அமெரிக்காவில் ஏப்ரலில் மட்டும் 20.5 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டு அமெரிக்க வேலைவாய்பின்மை வீதம் ஏப்ரல் முடிவில் 14.7 சதவீதமாகியுள்ளது. பெப்பிரவரியில் 3.5 சதவீதமாகவும் மர்ர்சி;ல் 4.4 ஆகவும் இருந்த அமெரிக்க வேலைவாய்பின்மை ஏப்பிரலில் மட்டும் 10.3 சதவீத அதிகரிப்பைக் கண்டது வரலாற்றில் ஏற்ப்பட்ட பெரும் அதிகரிப்பாகும்.

2009 இல் ஏற்ப்பட்ட பொருளாதார முடக்கத்தின் பின் கடந்த 10 ஆண்டுகளில் சிறுகச் சிறுக சேர்க்கப்பட்ட 22.5 மில்லியன் வேலை வாய்ப்புக்களை அமெரிக்கா ஒரு மாதத்தில் இழந்துள்ளது. தற்போது முழுமையான முடக்கங்களில் இருந்து நாடுகள் சிறிது சிறிதாக வழமைக்குத் திரும்ப முற்படும் நிலையில் இதில் கணிசமான வேலைகள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்புக்கள் இருந்தாலும் இழக்கப்பட்ட முழுமையான வேலைகளும் மீண்டும் அமைய சில வருடங்களை எடுத்துக் கொள்ளலாம்.

அயர்லாந்தில் வேலைவாய்ப்பின்மை வீதம் 28.2 சதவீதமாகியுள்ளது. அங்கு இளைய வயதினரே பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். 15 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டோரில் 52.3 சதவீதமானோர் வேலையின்றி இருக்கின்றனர்.

ஜேர்மனியில் 10.1 மில்லியன் பேரும் பிரான்ஸி;ல் 11.3 மில்லியன் பேரும் இத்தாலியில் 7.7 மில்லியன் பேரும் ஸ்பெயின்ல் 3.4 மில்லியன் பெரும் வேலை இழந்தமைக்கான அரச கொடுப்பனவுகளில் உள்ளனர்.

முகநூல் பதிவு ஒன்றில் இருந்து 

  • தொடங்கியவர்

பொருள் + தாரம் = பொருளாதாரம் என்பதை புரிந்து கொள்ளல் 

 

  • தொடங்கியவர்

அதிகரிக்கும் உலக கடன்களும், மாதாந்த ஊதியத்தை வீட்டில் இருக்கும் மக்களுக்கு வழங்க வைக்கும் அணுகுமுறையும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.