Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவுக்குள் அரசியல் ஊடுருவல்; விரைவில் தேர்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • நஜீப் பின் கபூர்

முழு உலகமுமே கொரோனாவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றது. அந்தத் தலைப்பைத் தவிர்த்து எந்த வொரு ஊடகங்களும் இன்று செய்திகளை மக்களுக்கு சொல்ல முடியாது. ஊடகங்கள் பேசினாலும் பேசா விட்டாலும் ஒவ்வொரு வீடும் தனி மனிதனும் கொரோனா பற்றிய சிந்தனையிலிலேயே இருக்கின்றான். என்னதான் இருந்தாலும் இன்று மனிதனால் அந்தத் தலைப்பிலிருந்து வெளியே வர முடியாது இருக்கின்றது. இந்தக் கொரோனா ஏற்பட்டிருக்காவிட்டால் நமது நாட்டில் இந்த நேரம் தேர்தல் ஜூரம் உச்சிக்கு ஏறி நிற்கும். நாமும் என்னதான் மக்களுக்கு அரசியல் செய்திகளைச் சொன்னாலும் கொரோனாவை பேசாமல் நாமும் செய்திகளை மக்களுக்குச் சொல்ல முடியாதுள்ளது.

982-9.jpgபாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றது மக்கள் நலன்கள் பற்றி பேசுவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் என்று சஜித் தரப்பு அரசாங்கத்தை கேட்டிருந்தது. ஆனால் இதற்கு ஆளும் தரப்பும் ஜனாதிபதியும் சாதகமான பதிலைக் கொடுக்கவில்லை. நாடளுமன்றம் கூட்டப்பட மாட்டாது. தேவையான வேலைகளை துறைசார்பானவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஜனாதிபதி ஜீ.ஆர். அவர்களுக்குக் கூறிவட்டார். எனவே பாராளுமன்றம் கொரோனாவுக்காக கூட்டப்படாது என்பது திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது. ஆனால் பொதுத் தேர்தல் மிகவிரைவாக நடாத்தப்படும் என்று அவர் குறிப்பிடுக்கின்றார். இது விடயத்தில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதற்கு இன்னும் காலம் தேவைப்படும். தேர்தலை மாவட்ட அடிப்படையில் கட்டம் கட்டமாக நடாத்துவது பற்றியும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக பேசுவதாக இருந்தால் பொதுவாக நோக்கின்ற போது அரசாங்கத்தின் செயல்பாடுகள் முன்னேற்றகரமாகத்தான் தெரிகின்றது. எனவே நாடாளு மன்றத்தை கூட்டி இதற்காக எதிரும் புதிருமாக சண்டையிட்டுக் கொள்ளவோ இதற்காக காலத்தையும் பணத்தையும் செலவு செய்யவே தேவையில்லை. நடை முறைத் திட்டங்கள் அவற்றின் செயல்பாடுகள் திருப்தி என்று சொல்ல முடியும். இதனை சார்வதேச சுகாதார நிறுவனங்களே பாராட்டியும் இருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் சிறிய வசதிவாய்ப்புக்களை வைத்துக் கொண்டு இலங்ககை இதனை சமாளித்து வரும் ஒழுங்குக்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையுத் மேற்கத்திய தூதுவர்கள் பாராட்டி இருக்கின்றார்கள். அடுத்து இதே நேரம் மைத்திரி ரணில் நல்லாட்சி நாட்டில் இருந்தால் இந்தக் கொரோனாவுக்கு அவர்கள் எப்படி முகம் கொடுத்திருப்பார்கள் என்பதையும் நாம் மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.

 

ஜனாதிபதி ஜீ.ஆர். இன்று வரை கெரோனா விவகாரத்தில் முன்னெடுத்து வருகின்ற திட்டங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் இந்தக் கொரோனா எதிர்பார்ப்பது போல் கட்டு மீறிச் செல்லுமாக இருந்தால் நமது நாட்டைப் பொருத்தவரை ஜனாதிபதியும் அரசும் கடும் விமர்சனத்துக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாக இடமிருக்கின்றது. அதே நேரம் கொரோனா அரசு எதிர்பார்ப்பது போல் கட்டுக்குள் வருமாக இருந்தால் ஜனாதிபதியும் அரசும் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்குப் பெறும். இது வருகின்ற தேர்தலில் அவர்களுக்கு நல்ல வாய்ப்க் கொடுக்கும். என்று எதிர்பார்க்க முடியும். என்றாலும் அரசு எதிர்பார்ப்பது போல் இந்தப் பிரச்சினை இலகுவாக முடியும் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. கொரோனா தனது வீரியத்தை இன்னும் உலகிற்குக் காட்ட வில்லை என்பதுதான் எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

mahinda-mask-1.jpgஎனவே கொரோனா விரிந்து போகுமாக அடங்கிப் போகுமா என்று பேசுவதை விட தற்போது நமது அரசியல்வாதிகள் கொரோனா விவகாரத்தில் சொல்கின்ற செய்கின்ற செயல்கபாடுகள் பற்றி சற்றுப் பார்ப்போம். நமது சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சி சில தினங்களுக்கு முன்னர் சிலாபம் இரனவில் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வைஸ் ஓப் அமெரிக்கா நிலையத்தை ஒரு கொரோனா வைத்தியசாலையாக திறந்து வைத்துப் பேசுகின்ற போது வருகின்ற இருவாரங்கள் தீர்க்கமானவை. மக்கள் அரசு சொல்கின்ற படி வீட்டுக்குள் அடங்கி நின்ற நமக்கு ஒத்துழைத்ததால் நாம் இந்த கொரோனாவை தீர்த்துப் போடும் என்று சொல்லி இருக்கின்றார். அவரது இந்தப் பேச்சு அறிவுபூர்வமானதல்ல என்பது எமது கருத்து மக்கள் என்னதான் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும் கொரோனா தானாகவே பின்வாங்கினால் மட்டுமே மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். விஞ்ஞானத்தின் உச்சியில் நின்றவர்களே கொரோனாவுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது சரிக்கி விழுந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்களும் முடிந்தளவு அரசுக்கு ஒத்துழைக்கின்றார்கள் என்றுதான் கூற வேண்டும். அதே நேரம் சில இடங்களில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்ற ஒரு கூட்டமும், எதனை எடுத்தாலும் விமர்சனம் செய்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றது. அமைச்சர் இப்படி பேசுகின்ற போது அரச வைத்திய சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இரு வாரங்களில் நாட்டில் கொரோன பரவல் அதிகரிப்பது தவிக்க முடியாத ஒன்று என்று பகிரங்கமாகக் கூறி இருக்கின்றார். எனவே வழக்கம் போல் நமது நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மையை மூடிமறைக்கின்ற விளையாட்டைத்தான் சுகாதர அமைச்சர் பவித்தராவும் செய்து வருகின்றார் என்பது புரிகின்றது.

ranil-mask-0.jpgஅத்துடன் சில அரசியல்வாதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்தல் பரப்புரைகளுக்கு கொரோனாவைப் பாவித்து வருகின்றார்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. களுத்துறையில் பாலித தேவரப்பெரும தனக்கே உரிய பாணியில் மக்களுக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் உதவி வருகின்றார். இது முழு நாட்டுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. பொதுமக்கள் மத்தியில் இவரது நடவடிக்கைகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இவர் ஒரு ரொபின்ஹ_ட்டாகத் திரிக்கின்றார்.

 
 

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவும் இதே பாணியில் தற்போது செயல்பட முனைவதை அவதானிக்க முடிகின்றது. தன் மக்களுக்காக செய்கின்ற இந்த பணிக்கு உயர் மட்டத்தில் இருந்து தெந்தரவுகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அவர் குற்றம் சாட்டுகின்றார். அதே நேரம் தேர்தல் ஆணையகம் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றது என்று விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார். இவர் எதிரணிக்காக கடைக்குப்போகின்றார் என்ற தோரனையில் அவரது விமர்சனங்கள் இருந்து வருகின்றது.

அதற்குப் பதில் கொடுக்கின்ற தேர்தல் ஆணைக்குழு முக்கியஸ்தர் மஹிந்த தேசப்பிரிய அவர்கள் பாணியிலேயே இதற்குத் தன்னால் பதில் கொடுக்க முடியும் ஆனால் நான் ஒரு அதிகாரி எனவே என்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருப்பதுடன் கொரோனா பாதிப்புற்றவர்களக்கு உதவி என்ற போர்வையில் எவரும் வாக்கு வேட்டைகளில் ஈடுபடக் கூடாது என்று அவர் குறிப்பிடுக்கின்றார். அதே நேரம் மக்களுக்கு உதவி செய்பவர்கள் தாங்கள் எங்களது புகைப்படங்களையே தேர்தல் விளம்பரங்களையே இதில் செய்யவில்லை இதனைச் செய்து விட்டு நாம் அவர்களிடம் வாக்கை எதிர்பார்க்கவும் இல்லை என்று குறிப்பிடுக்கின்றார். அதே நேரம் இது பற்றி நாம் தேடிப்பார்த்ததில் ஆளும் தரப்பினரும் எதிரணியினரும் தங்கள் வட்டாரங்களை மாவட்டங்களை மையமாக வைத்துத்தான் கொரோனாவுக்கு உதவி செய்து வருகின்றார்கள். எனவே இங்கு என்ன நடக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

sajith-mask-00.jpgதற்போது டொலர் ஒன்றுக்கான விலை 201 ரூபா என்ற எல்லையைத் தாண்டி விட்டது. எனவே நாடு பொருளாதராத்துறையில் எந்தளவு நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது என்பது புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் பிரதமர் எம்.ஆர். நாட்டுக்கு வருமானம் தருகின்ற அனைத் வழிகளும் மூடப்பட்டு விட்டது. உள்நாட்டு உற்பத்திகளிலும் மக்களால் ஈடுபட முடியாதிருக்கின்றது. என்று அரசின் நெருக்கடி நிலையை மக்களுக்குத் தெளிவு படுத்தி இருக்கின்றார். எனவே கொரோனா பின்வாங்கினாலும் பொருளாதார வைரஸ் நாட்டுக்கு அடுத்த நெருக்கடியைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றது. சீனா இந்தக் கொரோனா விவகாரத்தில் அடைந்து வருகின்ற வெற்றி இலங்கைக்கு ஒரு சின்ன நம்பிக்கையைக் கொடுக்கும். இலங்கையின் மிக நட்பு நாடு என்ற நியதியில் இதனை நாம் பார்க்கலாம். அடுத்து இந்தியாவில் கொரோன நோயாளிகள் அதிகரிப்பது இலங்கைக்கு ஒரு ஆபத்தான செய்தியாகும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக நெருக்கமான நிலை இருப்பதும். அதிகமான பொருட்கள் இந்தியாவில் இருந்து இலங்கை கொள்வனவு செய்வதும் இதற்குக் காரணம்.

கொரோனா விவகாரத்தில் இலங்கை அரசுக்கும் முஸ்லிம் சமூகத்திற்குமிடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கின்ற விவகாரத்தை மறைத்துப் பேச நாம் விரும்பவில்லை எனவே அது பற்றி சற்றுப்பார்ப்போம். மரணிக்கின்ற முஸ்லிம் கொரோனா நோயாளிகள் மரணச்சடங்கு தற்போது நடக்கின்ற ஒழுங்கு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் மன வேதானையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதே நேரம் உலகலவிய ரீதியில் நடக்கின்ற கெNhரோன முஸ்லிம் மரணங்கள் அவர்களது சமயச் சடங்குகளின் படி அடக்கம் செய்யப்பட்டு வருவதும் அப்படிச் செய்து கொள்ள முடியும் என்று உலக சுகாதார நிறுவனங்கள் சொல்லி இருக்கின்ற போது இங்கு அவற்றை எரிப்பது என்ற நிலை இருக்கின்றது.

இதற்காக சொல்லப்படுகின்ற காரணம் புதைக்கும் போது வைரஸ் வெளிவரும். அத்துடன் நாட்டு மக்கள் பெரும்பான்மையினர் ஊற்று நீர்களில் இருந்து தண்ணீரைப் பாவிப்பதும் காரணமாக இங்கு அப்படிச் செய்ய முடியாது என்று வாதிடப்படுகின்றது. ஆனால் உலக சுகாதார நிறுவனமும் சில உள்நாட்டு வைத்தியர்களும் இதனை முற்றாக நிராகரிக்கின்றனர். அப்படியானால் இலங்கையில் மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது என்று பார்த்தால் முஸ்லிம் சமூகத்தலுள்ள சில அரசியல்வாதிகள் இது விவகாரத்தில் நடந்து கொண்டு முறைதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது. முஸ்லிம் மரணங்களை வைத்துக் கொண்டு அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபடுகின்றார்கள் என்று ஒரு வாதமும், இல்லை, இனவாத நோக்கில்தான் இது நடந்த வருகின்றது என்ற வாதமும் இருக்கின்றது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புத் தலையிட்டும் இது விடயத்தில் காரியம் நடக்க வில்லை.

இதற்கிடையில சில தினங்களுக்கு முன்னர் இன நலன்களை இப்போது பார்க்க முடியாது பொது நலன்களைப் பற்றியே இப்போது தேட வேண்டி இருக்கின்றது என்று பிரதமர் எம்.ஆர். பேசி இருந்ததும் இந்த விவகாரம் பற்றித்தான் என்பது ஊகித்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் புதிய தகவல்கள் காற்றும் கொரோனாவைக் காவிக் கொண்டு பறந்து திரிகின்றது என்று வந்திருக்கின்றது. இப்போது என்ன பண்ணுவது?

 

http://thinakkural.lk/article/38609

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.