Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திடீரென உயர்ச்சி பெற்ற இலங்கை ரூபா பெறுமதி – (இன்றைய நாணயமாற்று விகிதம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 195.78 ஆக திடீர் உயர்ச்சி பெற்றுள்ளது.

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய பரிமாற்று விகிதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 188.51 ரூபாவாக பதிவாகியுள்ளன.

கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி வரலாறு காணாத வகையில் 200.47 ரூபாயாக வீழ்ந்திருந்தது.

இந்நிலையில் எல்.ஓ.எல்.சி (LOLC) கூட்டு நிறுவனம், கம்போடியாவிலுள்ள பிரபல நிதி நிறுவனமான ப்ராஸக் மைக்ரோபினாஸ் (PRASAC Microfinance) நிறுவனத்திற்கு தனது 70 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக கிடைக்கப் பெற்ற 422 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்குள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற இந்த தொகையினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15) நாணயமாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 119.7473 126.6032
கனடா டொலர் 134.8135 141.5132
சீன யுவான் 26.4630 28.0419
யூரோ 205.8920 215.9330
ஜப்பான் யென் 1.7534 1.8376
சிங்கப்பூர் டொலர் 132.8423 139.0832
ஸ்ரேலிங் பவுண் 237.0437 247.6252
சுவிஸ் பிராங்க் 195.1355 204.9550
அமெரிக்க டொலர் 188.5124 195.7834

வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்) 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 511.7003
குவைத் தினார் 619.3791
ஓமான் ரியால்  501.1015
 கட்டார் ரியால்  52.9900
சவூதி அரேபியா ரியால் 51.3197
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 52.5262
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5369
 
1 hour ago, உடையார் said:

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 195.78 ஆக திடீர் உயர்ச்சி பெற்றுள்ளது.

திடீர் உயர்ச்சி பெற்றுள்ளது?  மீண்டும் வீழ்ச்சி பெறும்...   

நிரந்தர வீழ்ச்சி பெற வேண்டும் என்றால், 
அரச செலவுகளை குறைக்கவேண்டும்.... குறிப்பாக இராணுவ செலவை.
உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை கூட்ட வேண்டும். 
ஊழலை ...   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.