Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதவன் பக்கம் (53) – கொரோனாவினூடாக தொடரும் எங்கள் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரச தலைவர்கள் சந்திப்புக்களை நிறுத்தி விட்டார்கள். 
 
விமானக் குண்டு வீச்சு, ஆட்லறி வீச்சு, போர்கள் இடம்பெறவில்லை, இராணுவங்கள் முடங்கியுள்ளன.
 
போர்க் கப்பல்கள் ஓய்வு எடுக்கின்றன. பயணிகள் கப்பல்கள் ஒதுங்கிக் கொள்கின்றன. 
 
ஒவ்வொரு நாடும் ஒன்றன்பின் ஒன்றாக ‘லொக் டவுனை’ ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றது.
 
ஐ.நா கூட தனது சேவைகளை மட்டுப்படுத்திவிட்டது.
 
‘லொக்டவுன்’ செய்தால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவு என்று கருதிக் கொண்டிருந்த சிங்கபூர் கூட இன்றிலிருந்து மக்களை முடங்கச் சொல்லிவிட்டது.  
 
மது, மாது கூடாரங்கள், உல்லாச விடுதிகள், உணவுச்சாலைகள் வெறிச்சோடிவிட்டன.
 
விழாக்கள், போட்டிகள், ஒன்றுகூடல்கள், வைபவங்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.  
 
மருத்துவமனைகள் கூட ‘அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும்தான்’ இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தடைபட்டால் குற்றம் எனக் கருதப்படும் வருடாந்த சகல சமய திருவிழாக்களும் இடம்பெறவில்லை. 
 
பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. 
 
சனங்கள் "டேற்றாவே" கதியென்று வீட்டுக்குள் முடங்கியுள்ளார்கள். 
 
விமான நிலையங்கள் பார்க் செய்யப்பட்டுள்ள விமானங்களால் நிரம்பி வழிகின்றன. இப்படி காட்சியை இனிமேல் ஒருபோதும் காண முடியாது என்கிறார்கள். 
 
அயலவர்கள் வீடுகளுக்கு செல்வதைக் கூட   தவிர்க்க அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏறக்குறைய மொத்தத்தில் உலகில் அரச தலைவர்களிருந்து கடைக் குடிமகன் வரை தத்தம் வீட்டில் இருந்து  தற்பொழுது ஓய்வெடுத்து வருகின்றார்கள்.
 
‘உலகமே ஸ்தம்பித்து விட்டது’ என்கின்றார்கள் – இது உண்மை அல்ல.
 
பக்கத்து வீட்டுக்கே போவதற்கு தடை அல்லது பயம் என்று இருக்க....... கிராமங்கள் தாண்டி.... நகர்கள் தாண்டி....... நாடுகளினூடு....... அதுவும் கொரோனா பீடித்துள்ள நாடுகளினூடு........... தொடர்ந்தும் பயணித்து வருகின்றார்கள் மாலுமிகள் - அதுவும் இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் நாடுகளுக்கும் மக்களுக்கும் தேவையான பொருட்களை கொண்டுசென்று வருகின்றார்கள்.
 
கணக்கில் அடங்கா உலகின் அனைத்து துறைகளும், சேவைகளும் பகுதியாகவோ அல்லது முற்றாகவோ முடங்கி நின்று விழி பிழிய, சற்றும் பிசகாமல் தொடர்ந்தும் பயணித்துவருகின்றன வர்த்தகக் கப்பல்கள். 
 
நாம் ஜனவரி மாத நடுப்பகுதியில் சீனத் துறைமுகங்களிருந்து புறப்பட்டு, சுயஸ் கால்வாய் வந்தபொழுது, கப்பலுக்கு வந்த பைலற் ‘கப்டன், கப்பலில் உமது மாலுமிகள் எல்லாம் எப்படி உள்ளார்கள்’ என்று கேட்ட பொழுதுதான் -  முதலாவதாக கொரொனாவின் வீரியம் புரியவந்தது. 
 
சுயஸ் கால்வாய்யை(SUEZ CANAL, EGYPT) தொடர்ந்து, 2 நாட்கள் கழித்து கிரேக்கத்தின் பிரேயஸ்(PIRAEUS) துறைமுகத்தை ஒருநாள் அதிகாலை சென்ற பொழுது, பைலட் கப்பலுக்கு வரமறுத்து, கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்கள் கப்பல் துறைமுகம் பிடிப்பதற்கு தாமதம் ஆனது - அப்பொழுத்தான் கொறோனாவின் மகத்துவம் புரிய வந்தது. 
 
கடலியல் சார் ஊடகங்களில் எமது கப்பல் தொடர்பான இந்த விடயம் அன்று இரவே பிரதான செய்தியானது. 
 
athiroobasingam-athavan-page-seafarers-voyages-amid-corona-virus-globally-4.jpg
 
கொரோனா காரணமாக ஐரோப்பிய நாடு ஒன்றில்,  இவ்வாறு துறைமுகத்துக்கு அனுமதி தாமதப்படுத்தபட்ட கப்பல், எமது கப்பல் ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். 
 
ஒன்றை அவதானித்தேன். கிரேக்கர்கள் கொரோனா பற்றி மிகவும் அச்சத்துடனும், அதே நேரம் மிக மிக முன் எச்சரிக்கையுடனும் இருந்தார்கள்.
 
கிரேக்கத்தில் கப்பலுக்கு வந்த பைலற்மார், கப்பலில் நீர் கூட அருந்தவில்லை. கப்பலின் எந்த ஒரு பகுதியையும் தப்பித்தவறியும் தொடவில்லை. ஒரு பைலற் இன்னுமொருபடி மேலே போய், ‘கப்டன் உமக்கு கொரோனா வைரஸ் பற்றி தெரியுமா’ எனக்கேட்டு, கப்பலின் ஒரு பகுதியக்காட்டி ‘இதில் வைரஸ் ஒட்டிக் கொண்டால், இது இறக்க சில நாட்கள் ஆகும்’ என்றார். அந்த அளவு கடுமையாக கொரோனா பற்றிய பார்வையை அவர்கள் கொண்டிருந்தனர்.  
 
‘கிரேக்கம் சீனாவின் கைப்பிள்ளை. ஆகவே தான் அயல் நாடான இத்தாலியில் மக்கள் கொரோனாவால் மடிய கிரேக்கத்தில் கொரோனாவின் தாக்கமே இல்லை’ என்று தமிழர் ஒருவர் கண்டுபிடித்து ஊடகத்தில் தனது கருத்தை அண்மையில்  வலம்வர விட்டிருந்தார். 
 
நாட்டைவிட்டு வெளியே போகதவர்கள் (இவ்வாறு கூறுவதை தவறாக எடுக்க வேண்டாம்), இன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கொண்டு இவ்வாறு ஏராளமான கதைகள் வரைந்து கொண்டிருக்கின்றார்கள்.  
 
சில சிறந்த பேச்சாளர்கள் பேசும்பொழுது, முன்னால் இருந்து கேட்பவர்கள் சகலதும் அடங்கி ஒடுங்கி, சற்றும் அசையாமல் பேச்சாளரின் பேச்சில் லயித்துவிடுவார்கள். இவ்வாறான பேச்சுத்திறன் வாய்ந்த பேச்சுக்களை முற்றிலும் உண்மை என்றும் கூட நம்பிவிடுவார்கள். பேச்சில் உண்மைகள் இருக்கக்கூடும், பொய்களும் இருக்கக்கூடும். 
 
விமல் வீரவன்ச, சீமான் போன்ற சிறந்த பேச்சாளர்களை இதில் குறிப்பிடலாம். 
 
அதுபோல் சிலர் தமது எழுத்து திறமையால் கட்டுரைகள் வரையும்பொழுது, பொய்யான மற்றும் கற்பனையான விடயங்களை உண்மை போல் சித்தரித்துவிடுவார்கள். அவற்றை வாசிக்கும் பொழுது உண்மைபோல் பலருக்கு விளங்கிவிடும். 
 
பிரேயசை(PIRAEUS) தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட இத்தாலிக்கு(LA SPEZIA) சென்றோம்.  அந்த நேரம் இத்தாலியில் கொரோனா இருப்பது போன்ற உணர்வே அன்று இருக்கவில்லை - எமக்கும் சரி, கப்பலுக்கு வந்த இத்தாலியர்களுக்கும் சரி. 
 
அங்கு பிறிதொன்றைக் கவனித்தேன். கப்பலுக்கு வந்த எல்லோரும் தலையில் (முகத்தில் அல்ல) மாஸ்க் கட்டியிருந்தார்கள். ‘அரசாங்கம் முகத்துக்கு மாஸ்க் அணியச்சொல்லி இருக்கின்றது, ஆனால் எங்களுக்கு அணிய விருப்பம் இல்லை. அதுதான் பெயருக்கு முகத்தில் மாட்டியுள்ளோம்’ என்றார்கள். இதே மன நிலையில்தான் பலரும் இருந்திருப்பார்கள். விளைவு....... சந்தித்து விட்டார்கள். 
 
ஆக இத்தாலி அரசாங்கம் தனது கடமையை ஆரம்பத்தில் சரியாக செய்துள்ளது.  
 
கடந்த இரண்டு மாதங்கள் முன்பே மனைவி பிள்ளைகளை மாஸ்க் அணியக் கூறியிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் Arpico சென்று வந்த என் மனைவி, ‘Arpico வில் தான் ஒருவர் மட்டும் தான் மாஸ்க் அணிந்திருந்ததாக’ கூறினார். ‘கூச்சப்படவேண்டாம், இன்னும் சில வாரங்களில் அனைவரும் நாட்டில் மாஸ்க் அணிவார்கள்’ என்று கூறினேன். 
 
தொடர்ந்து பிரான்ஸ்(FOS-SUR-MER, BOUCHES DU RHONE) சென்றோம். அங்கும் பெரிதாக கொரொனா பற்றி அந்த நேரத்தில் அலட்டிக் கொண்டதுபோல் தெரியவில்லை. இன்று அதிகளவு இறப்பை பிரான்ஸ் சந்தித்து கொண்டிருக்கின்றது. 
 
athiroobasingam-athavan-page-seafarers-voyages-amid-corona-virus-globally-1.jpg
அண்மை நாட்களாக ஸமார்ட் போனின் பாவனை அதிகரிப்பு என அரச ஊடகத்தில் நேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஏராளமான தரவேற்றங்கள், ஏராளமான அலசல்கள். பெரும்பாலானவை கொரோனா பற்றி. அவற்றில் அதிகம் புலம்பல்கள் தான் என்றாலும் ஒன்று இரண்டு சிந்திக்கவைக்கக் கூடியவை என்பதை மறுப்பதற்கில்லை. 
 
மீண்டும் 2 வாரங்கள் முன்பு சீனா சென்ற பொழுது, ஒருவரிடம் ‘கொரோனா எப்படி உருவானது’ என்று கேட்டுமுடிக்கும் முன்னரே ‘அமெரிக்கர்களால் தான்’ என்று கூசாமல் கூறினார். சீன உயர் அதிகாரி ஒருவரும் இக்கருத்தை ட்விட்டர் இல் தெரிவித்திருந்தார் 
 
‘இப்பொழுது வைரசின் தாக்கம் எப்படி’ என்று கப்பலுக்கு வந்த அதிகரிகளிடம் கேட்டபொழுது, மணிக்கூட்டு கடிகாரத்திலிருந்து எப்படி வசனமும் சத்தமும் ஒவ்வொருநாளும் ஒரே மாதிரி வருகின்றாதோ – கிளிப்பிள்ளை கூறுவதைப் போல் சகலரிடமும் இருந்து ஒரே பதில்தான். ‘தற்பொழுது கட்டுப்பாட்டில், உள்ளூரில் புதிய Case ஒன்றும் இல்லை, தற்பொழுது ஏற்படுபவை எல்லாம் இறக்குமதி செய்யப்படுபவை மட்டுமாதானாம், அதாவது வெளியிலில் இருந்து வருபவர்களிடமிருந்து மட்டும் தான். 
 
பலர் கூறுவதுபோல், சீனாவின் மத்தியில் ஆரம்பித்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த வைரஸ், சீனாவின் தலைநகர் பீஜிங் மற்றும் வர்த்தகத் தலைநகர் ஷங்காய் போன்றவற்றில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாதது ஆச்சரியம் என்றாலும், நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்.
 
மிகவும் அதிகாரமுள்ள அரசால், மக்கள் சீனாவில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அரசு கூறியதை மக்கள் கடைப்பிடித்தார்கள். (கடைப்பிடித்தேயாக வேண்டும்). 
 
இவற்றுக்கு மேலாக பரம்பலை தடுக்கக்கூடிய, ஒரு தனி நபருக்கு தேவையான Face mask, latex Gloves, Pocket Sanitizers, Protective Gown, Goggles, Direct splash shields, Special Foot wears போன்ற பல சாதனங்களும், சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகளும் தாராளம் – கொரோனாவை சீனாவில் கட்டுப்படுத்த போதுமானதாகவுள்ளது.
 
சீனாவில் கப்பலுக்கு வந்தவர்கள் எல்லாம் சந்திரனில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங்க் போன்ற பாதுகாப்பு அங்கிகளுடன் தான் வந்தார்கள். 
 
athiroobasingam-athavan-page-seafarers-voyages-amid-corona-virus-globally-3.jpg
அவ்வாறு ஒருவர் முழுமையாக அணிந்த பாதுகாப்பு கவசங்கள் கிட்டத்தட்ட 50 அமெரிக்க டொலர்களுக்கு மேல். 10000 ரூபாய்களுக்கு மேல்.  அணிந்திருந்தவர்களிடம் கேட்டேன் ‘இவற்றை எத்தனை தடவை பாவிக்கின்றீர்கள்’ என்று. கப்பலில் விட்டு இறங்கியவுடன் இவற்றை உடனடியாக அகற்றி  விடுவோம்’ என்றார்கள். 
 
ஊரடங்கு போட்ட சில நாட்களிலேயே உண்ண உணவில்லை என்று கரம் நீட்டும் எம்மவர் எங்கே, 10,000/- ரூபா கவணை ஒரு முறை போட்டு எறியும்  சீனர்கள் எங்கே?
 
3 ஆம் உலக நாடுகளில் இவற்றை நினைத்துப் பார்க்க முடியுமா. அதுதான் 21 நாள் ஊரடங்குச் சட்டம்  இந்தியாவில்.
 
என்றாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையில் கொரோனா சிறந்த முறையிலேயே கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதில் சந்தேகமில்லை. சரியான நேரத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டமும், இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டமையும் இதற்கு பிரதான காரணமாக இருக்கக்கூடும்.
 
கொரோனாவை விரட்ட ஊரடங்குச் சட்டத்தை போட அது வேறு விளைவுகளுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றதாம். 
 
எமது Batch இல் (71, 72) வல்வையில் உறுப்பினர் எண்ணிக்கை மிக அதிகம். காரணம் என்னவென்றால் ‘1971 இல் JVP யை அடக்குவதற்காக போடப்பட்ட ஊரடங்கு சட்டம்’ என்றார்கள். அது நடந்த இலங்கையில் மட்டும்தான். 
 
athiroobasingam-athavan-page-seafarers-voyages-amid-corona-virus-globally-2.jpg
ஆனால் இப்பொழுது ஊரடங்கு சட்டம் முழு உலகில். அடுத்த 2021 இல் உலகம் முழுக்க பிறப்பு எண்ணிக்கை கூடும் என்கின்றார்கள். தமிழர் எண்ணிக்கை கூடினால் சந்தோஷம். 
 
போன் செய்யும் பொழுது மிகவும் அரிதாகவே உடனடியாக பதில் அளிக்கும் ஓரிரு நண்பர்கள், இப்பொழுது அழைத்தால் இரண்டாவது ரிங் இலேயே விடை அளிக்கின்றார்கள். போனே சரணம்.
 
4ஜி கூட களைத்துவிட்டது, சுத்து சுத்து என்று சுத்துகின்றது. 4ஜி கூட சுத்தும் அளவுக்கு டேட்டா பாவனை.
 
‘கோயில்கள் மூடப்பட்டிருக்கின்றன ஏனெனில் தெய்வங்கள் இங்கு இருப்பதால்’ என ஒருவர் வைத்தியர்களை புகழ, ஆள் ஆளுக்கு அதை அள்ளி விட்டார்கள். இதில் பொறாமைப்பட ஒன்றும் இல்லை என்றாலும், ‘நான்கு நாட்கள் போதும், நாம் எறியும் குப்பை அகற்றப்படாவிட்டால் என்னவாகும் நிலமை’. அதுவும் ‘ஒருவர் பாவித்த பொருளை இன்னொருவர் தொடக்கூடாது’ என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில். 
 
குப்பை அகற்றுபவர்கள் போல்  பாராட்டப்பட வேண்டியவர்கள் பட்டியலில் பலர் உள்ளார்கள். சமூகத்தில் தொடர்ந்தும் அந்தஸ்த்தில் உயர்ந்தவர்கள் மட்டுமே பாராட்டப்படுவது சாபக்கேடான வொன்று. 
 
பாடசாலை விசேட விடுமுறை பற்றிய அறிவிப்பு இடம்பெற்றவுடன் எனது மனைவி பிள்ளைகளை ஊருக்கு அனுப்பியது சரியான நேரத்தில் எடுத்த தகுந்த முடிவு. பலரும் என்னைப் போல் செய்துள்ளார்கள்.
 
தலைநகரில் எதற்கும் வெளியில் தான் செல்லவேண்டும். ஊரில் ஒரு சிலவற்றையாவது வீட்டிலிருந்தும், இன்னும் சிலவற்றை பக்கத்தில் வீட்டிலிருந்தும் வாங்கி சமாளித்துக் கொள்ளலாம். தண்ணிக்கு பஞ்சமில்லை. மின்சாரம் இல்லாவிட்டாலும் சமாளிக்கலாம். 
 
இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக பிள்ளைகள் பிளாட்டில் அடைபடாமல், ஊரில் வீட்டுக்குள்ளேயே  ஓடி ஆடி விளையாடுவற்கு சிறந்த சந்தர்ப்பத்தை கொரோனா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 
 
கிராமம்தான் வாழ்வதற்கு சிறந்த தெரிவு என்பதை கொரோனாவும் தெளிவுபடுத்தியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகின்றது.
 
தைப்பொங்கல், சித்திரைப்பொங்கல் போன்றவற்றுக்கு முன்பாக  பூஞ்சு தட்டுவது, கிழமைக்கு மாதத்துக்கு ஒருமுறை பொருட்களை எடுத்து வெயிலில் போடுவது, மஞ்சள் தெளிக்கிறது, இறுதிக் கிரியைகள் முடிந்து வந்து நேரடியாக கிணத்துக்கு போவது, கிணத்துக்கு சாம்பிராணி காட்டுவது............ என்ற நீண்ட பட்டியல் வீட்டிலுமாய்,
 
கோயிலுக்கு செல்லும் பொழுது குளித்து விட்டுச் செல்லுதல், வாசலில் கற்பூரம் எரித்தால், நைவேத்திய முறைகள், பூசை முறைகள்.......... என இந்து ஆலயங்களில் கடைப்பிடிக்கப்படும் பொது வழிமுறைகள் எவ்வளவு அர்த்தமானவை என்பதை இன்றைய காலகட்டம் புதிய தலைமுறையினருக்கு அர்த்தப்படுதியுள்ளது.
 
கொரொனா பரம்பலால் இதுவரை குறிப்பிடக்கூடியளவுக்கு பொருட்கள் காவிச்செல்லுதல் குறைந்த மாதிரி தெரியவில்லை. (கொள்கலன் வர்த்தகத்தை குறிப்பிடுகின்றேன்) 
 
முகத்துக்கு அணியும் மாஸ்க் இலிருந்து துடைக்கும் டொய்லெட்பேப்பர் வரை, சீனா உட்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளில் தான் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. குறித்த இந்த நாடுகள் தமது உற்பத்தியையும் ஏற்றுமதியையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தக்கூடிய நிலையில்தான் தற்பொழுதும் உள்ளன. 
 
தற்பொழுது நான் பணி புரியும் கப்பல், 100 வீத சரக்குகளுடன் தான் சென்று கொண்டிருக்கின்றது. 
 
நான் இதுவரை சென்ற சிங்கபூர் உட்பட்ட கிழக்கு ஆசிய நாட்டு துறைமுகங்கள் வழமைபோலேயே இன்றும் இயங்கி வருகின்றன. 
 
அதாவது சர்வதேச ரீதியில் விநியோகச் சங்கிலி (Supply Chain) இதுவரை குறிப்பிட்டு  கூறக்கூடிய வகையில் பாதிக்கப்படவில்லை. 
 
ஆனாலும் இறக்குமதிப் பொருட்களை, எந்தளவு வேகத்தில் இறக்கி சீராக்கக்கூடிய வகையில் ஏனைய நாடுகள் உள்ளன என்பது கேள்விக் கூறியே. கொழும்பு துறைமுகத்தில் 20,000 மேற்பட்ட கொள்கலங்கள் தேங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
சர்வதேச ரீதியில் ‘Supply Chain’ பெரிதாக பாதிக்கப்படாவிட்டாலும், தனிப்பட்ட நாடுகளில் ‘லொக் டவுன்’ காரணமாக ‘Supply Chain’ பாதிக்கப்பட்டு வருகின்றது. உள்ளூரில் விற்கப்படும் பொருட்களின் விலைகளில் இருந்தே இதனை காணக் கூடியதாகவுள்ளது. (பதுக்கல், தவிச்ச முயலை அடித்தல் வேறு விடயம்).
 
தற்பொழுதுள்ள நிலையைக் கருத்திற் பல நாடுகள் ‘அத்தியாவசியமற்ற பொருட்களை’ (Non-essential Goods) தடைசெய்து, அத்தியாவசிய பொருட்களின் (Essential Goods) இறக்குமதியை மட்டும் நாடினாலும் - ‘Supply Chain’ ஆனது சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் வெறும் ‘Essential goods’ களை மாத்திரம் ஏற்றி இறக்கி, கப்பல் நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது. (கச்சன் விற்பவர்கள் சோளன் மற்றும் கடலையையும் சேர்த்து விற்றால் தான் லாபம்). 
 
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியை மட்டும் தொடர்ந்தால், கொரொனா வைரஸ் ஒழிந்தவுடன், ‘அத்தியாவசியமற்ற பொருட்கள் விலைகள்’ சடுதியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
‘Supply’, ‘Supply Chain’ என்பன இவ்வாறான நெருக்கடியான காலகட்டங்களில் மிகவும் இன்றியமையாதவை. 2009 இல் வன்னியில் இறுதிக்கட்டப் போரின்போது அங்கிருந்த மக்கள் ‘வணங்கா மண்’ கப்பலுக்காக பாடல் கூட இயற்றியதும், புலிகளின் அழிவிற்கு அவர்களின் ‘Supply Chain’ வெற்றிகரமாக முழுதாக துண்டிக்கப்படாதுமே காரணம் என்பன இவற்றுக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.
 
இவ்வாறு கப்பல்கள் தமது பணியை இந்த அசாதாரான சூழலில் தொடர்ந்து கொண்டிருந்தாலும், கொரொனாவை கட்டுப்படுத்தல் என்ற நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, மாலுமிகள் கப்பலில் ஏறி – இறங்க (Sign on / Sign off) பல நாடுகள் வெளிப்படையாக தடைசெய்துவிட்டன.
 
சில நாடுகள் தமது சொந்த நாட்டினரையே தத்தம் நாடுகளில் இறங்குவதற்கு தடைசெய்துவிட்டன. இதில் இலங்கையும் ஒன்று.
 
உலகில் 90 வீதமான சரக்குகளை சர்வதேச ரீதியில் கப்பல்களே ஏற்றிஇறக்கி வருகின்றன. மாதம் தோறும் சுமார் 1 லட்சம் மாலுமிகள் சராசரியாக ஏறி இறங்க வேண்டும். 
 
இதனை கருத்திற்கொண்டு International Trade Federation (ITF), International Chamber of Shipping (ICS) போன்றவை, மனிதநேய ரீதியில் மாலுமிகள் கப்பலில் ஏறி இறங்கி ஆவண செய்யவேண்டும் என ஐ.நா வை  கேட்டுக் கொண்டுள்ளன. UN இதற்கு செவிசாய்த்தாலும் UN ற்கு யார் செவிசாய்க்கப்போகிறார்கள் மிகப் பெரிய கேள்வியே. 
 
(யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, யுத்த பிரதேசத்தில் இருந்த மக்கள் சார்பான கருத்தை வெளியிட்டதாகக் கூறி கதிர்காமரே ‘ஐ.நா நுளம்பு அடிக்கின்ற வேலையை மட்டும் பார்க்க வேண்டும்’ என்று அன்று ஒரு நாள் கூறியிருந்தார்). 
 
அண்மையில் கப்டன் ஒருவர் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, துறைமுகம் ஒன்றில் மருத்துவ வசதிக்காக அனுமதிக்கும்படி கேட்டுள்ளார்.  சாத்தியப்படாமல் நெஞ்சு வலியுடனேயே  தொடர்ந்து கப்பலில் பயணித்ததாக கேள்விப்பட்டேன்.
 
கடந்த வாரம் பொஸ்போரசில் கப்டன் ஒருவர் கொரோனாவால் இறந்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைப்பட்டி உடல் உடனடியாக தகனம் செய்யப்பட வேண்டும். எந்த நாடு, எந்த விமான நிறுவனம் உடலைப் பொறுப்பேற்கும் - விடை தெரியாத கேள்வி.
 
சில கப்பல்களில் மாலுமிகளுக்கு கொரோனா  ஏற்பட்டுள்ளதாக தகவல்கள், (அவ்வாறான ஒரு கப்பலை சீனாவின் நிங்போ துறைமுகத்தில் நாம் நேரடியாக பார்த்தோம்). ஆனாலும், விமானங்களால் போல் அன்றி, வர்த்தகக் கப்பல்களால் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக இதுவரை எதுவித தகவல்களும் இல்லை. 
 
நல்லது கெட்டது, பிரசவம், திவசம், ஏன் தனக்கு எதுவும் பிரச்சனை என்றால் கூட நாடு, ஊர் செல்ல முடியாத ஒரு உயிரினமாக வேற்றுக் கிரகத்தில் வசிப்பவர்கள் போல் இன்று கப்பலில் மாலுமிகள் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். 
 
எது எப்படியோ, பாக்கியமோ அல்லது துர்ப்பாக்கியமோ, கொரோனா வியாபித்திருக்கும் இந்த இக்கட்டான சூழலில், உலகையும் வலம்வந்து, கொரோனா பீடித்துள்ள நாடுகளை சென்று கொண்டிருக்கின்ற பெருமை - அரச தலைவர்களையோ, ஐ நா பிரதிநிதிகளையன்றி - மாலுமிகளை மட்டுமே சாரும். 
 
‘Be proud to be a Seafarer’ – அடிக்கடி கேட்டும் பார்த்த இந்த வாசகத்தை எனது 28 வருட கடல் வாழ்க்கையில் இன்று தான் எழுதியுள்ளேன். 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:
 
 
ஆனாலும் இறக்குமதிப் பொருட்களை, எந்தளவு வேகத்தில் இறக்கி சீராக்கக்கூடிய வகையில் ஏனைய நாடுகள் உள்ளன என்பது கேள்விக் கூறியே. கொழும்பு துறைமுகத்தில் 20,000 மேற்பட்ட கொள்கலங்கள் தேங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
சர்வதேச ரீதியில் ‘Supply Chain’ பெரிதாக பாதிக்கப்படாவிட்டாலும், தனிப்பட்ட நாடுகளில் ‘லொக் டவுன்’ காரணமாக ‘Supply Chain’ பாதிக்கப்பட்டு வருகின்றது. உள்ளூரில் விற்கப்படும் பொருட்களின் விலைகளில் இருந்தே இதனை காணக் கூடியதாகவுள்ளது. (பதுக்கல், தவிச்ச முயலை அடித்தல் வேறு விடயம்).
 
தற்பொழுதுள்ள நிலையைக் கருத்திற் பல நாடுகள் ‘அத்தியாவசியமற்ற பொருட்களை’ (Non-essential Goods) தடைசெய்து, அத்தியாவசிய பொருட்களின் (Essential Goods) இறக்குமதியை மட்டும் நாடினாலும் - ‘Supply Chain’ ஆனது சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் வெறும் ‘Essential goods’ களை மாத்திரம் ஏற்றி இறக்கி, கப்பல் நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது. (கச்சன் விற்பவர்கள் சோளன் மற்றும் கடலையையும் சேர்த்து விற்றால் தான் லாபம்). 
 
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியை மட்டும் தொடர்ந்தால், கொரொனா வைரஸ் ஒழிந்தவுடன், ‘அத்தியாவசியமற்ற பொருட்கள் விலைகள்’ சடுதியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
‘Supply’, ‘Supply Chain’ என்பன இவ்வாறான நெருக்கடியான காலகட்டங்களில் மிகவும் இன்றியமையாதவை. 2009 இல் வன்னியில் இறுதிக்கட்டப் போரின்போது அங்கிருந்த மக்கள் ‘வணங்கா மண்’ கப்பலுக்காக பாடல் கூட இயற்றியதும், புலிகளின் அழிவிற்கு அவர்களின் ‘Supply Chain’ வெற்றிகரமாக முழுதாக துண்டிக்கப்படாதுமே காரணம் என்பன இவற்றுக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.
 
இவ்வாறு கப்பல்கள் தமது பணியை இந்த அசாதாரான சூழலில் தொடர்ந்து கொண்டிருந்தாலும், கொரொனாவை கட்டுப்படுத்தல் என்ற நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, மாலுமிகள் கப்பலில் ஏறி – இறங்க (Sign on / Sign off) பல நாடுகள் வெளிப்படையாக தடைசெய்துவிட்டன.
 
 
 

 

 

நல்ல பதிவு பெருமாள், கொரொணா தாக்கம் குறைந்தபின் பல பொருட்களின் விலையேறும், இப்பவே இங்கு விலை ஏற்றிவிட்டார்கள்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.