Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரகாவியம் ஆகிவிட்ட தமிழீழ் விடுதலைப்புலிகளின்

Featured Replies

தமிழர் தாயக விடுதலைக்காக தம்முயிரினை வேழ்வுத்தீயில் பொசுக்கிya முன்னால் வீரர்களுக்கும், இந்நாள் எம் இதய கமலங்களில் வீற்றிருக்கும் மாவீரர்களுக்கு காணிக்கையாக இந்த பக்கத்தினை துவக்குகிறேன். தூக்கி விடாதீர்கள். அப்பழுக்கில்லாத என்போன்ற தமிழர்களின் போராட்டப்பங்களிப்புக்கு இந்த தலைப்பு ஒரு காணிக்கை!!

திரும்பிப்பார்க்கின்றோம்!!.

சுதந்திரத்தின் சிகரத்தினை நோக்கிய உங்கள் நெடும்பயணம் எங்கள் கண்ணுக்குள் விரிகிறது. அந்த நெடுவழிப்பாதை, எழ, எழ விழுந்து, விழ விழ எழுந்து....அப்பப்பா எத்தனை இன்னல்கள், எத்தனை சவால்கள், எத்தனை அழுத்தங்கள், அத்தனை குழிபறிப்புக்கள், ...எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து எழ, எழ விழுந்து...விழ, விழ..எழுந்து .....

திரும்பிப்பார்க்கின்றோம்!!.

nanRi viduthalaippulikaL.

இரத்தத்தையும், சாம்பர்மேடுகளையும், சவ்ப்பெட்டிகளையும் தமிழனுக்கு தந்தவர்களின் தலைவாசல்களுக்கு- கண்ணீரையும், கதறலின் கொடுமையையும், துன்பப்படுவதென்றால் எப்படி இருக்கும் என்பதையும் தமிழன் திரும்பவும் சிங்கள் தேசத்துக்கு பரிசளித்து விட்ட காலங்களினை திரும்பிப்பார்க்கின்றோம்!!

Edited by Tamil VALLUVAN

தமிழ் வள்ளுவன் தமிழுணர்வுக்கும் தாகவேட்கையுடன் களமாடி ஈழமண்ணுக்கு வித்தான எம் சகோதரரகளுக்கும் எம் உள்ளம் என்றும் தலை சாயும்..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

தேடிப்போய் கையேந்தி நின்ற தமிழனினை கொட்டானால் அடித்து, படுகொலைகள், மானபங்கப்படுத்தி, அவமரியாதை வேறு செய்து அசிங்கமாக்கியவர்களினை....இன்ற

Edited by Tamil VALLUVAN

  • தொடங்கியவர்

திரும்பிப்பார்க்கின்றோம்!!

இந்த புதுயுகத்தின் புதுமைப்பிரசவத்திற்கு எங்கள் தேசம் செலுத்திய விலைமதிப்பற்ற வைடூரியகற்கள் நீங்கள்!!

ஒன்றா இரண்டா......அந்தனையும் அத்திவாரக்கற்கலாக, இன்றைய போராட்டத்தினையே தாங்கும் தூண்களாக, உச்சியின் முகடுகளாக, முகடுகளின் தங்கக்கிரீடமாக, கிரீடத்தில் பதித்த வைர கற்களாக, முத்துக்களாக,

தமிழீழ தேசியத்திற்காக நாங்கள் இழந்த எம் இதயகனிகள் ஆயிரம் ஆயிரம் ஆயிரம்....அனைத்தும் மகா ரிசிகள்,

ஆன்மீக உலகத்தில் இருக்கும் அந்த அற்புத ஞானிகளுக்கே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உங்கள் துறவுமுறை, தன்னலமற்ற தியாகம், தனிப்பெரும் தியானம்.....

ஆமாம் சாதாரண சகவாழ்வின் பற்றுதல்களினை துறவறமான, நெறிய வாழ்க்கைகளினூடு, இலட்ச்சியமான ஒரு குறிகோளுக்காக துறந்த வீரத்துறவிகள். மாகா முனிவர்கள். இந்திய ஆன்மீகதுறவிகளே வரிசையாக நின்று மலர் தூவி வரவேற்கும் உண்மையான ரிசிகள்.....

தம் இனிய வாழ்வின் கனவுகளினை மறந்தார்கள், தங்கள் தனிப்பெரும் அறிவு, ஆற்றல்களினை, திறமைகளனைத்தையும் தமது தாயக தமிழ் மக்களுக்காக சுயநலமில்லாமல் தந்தார்கள், இப்போது வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து, சந்திக்கு இறங்கினால் பொலீஸ் பிடித்துவிடும் என்று வீட்டிற்குள் இருந்து,

ரிவியில் பாவம் பொடியள் என்று சொல்லும் அப்போதய தமிழர்களின் பாதுகாப்பிற்காக, விடுதலைக்காக, விமோசனத்திற்காக மரணம் என்ற ஒரு வட்டத்திற்குள் பொறிபறக்க பாய்ந்தவர்கள்....

உங்களினை நாம் மீண்டும் மீண்டும்...திரும்பிப்பார்க்க

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர் அவர்களே!

நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்த நவீன குறளின் விளக்கம் மேலுள்ளவை தான்.

எனது எதிர்பார்ப்பும் முயற்சியும் வீண் போகவில்லை பாராட்டுக்கள் உங்களுக்கு, நன்றி இறைவனுக்கு.

தொடருங்கள் உங்கள் பணியை...

தள உறுப்பினர்கள் எல்லோரும் உங்கள் பக்கம் தான்.

  • தொடங்கியவர்

எனி மேல் நான் சொல்லப்போவது மாவீரர்களின் பக்கத்தில் அவர்களுடன் நடந்து சென்ற, அவர்களினை உரசிச்சென்ற சில் என்ற காற்று,

அவர்களின் வாழ்க்கையினை மிக அழகிய தமிழ் மொழியில், தமிழ் வீரம், விடுதலை உணர்வு கொப்பளிக்க, வாழ்க்கைநெறிகள் பாடமெடுக்க களமாடிய அந்த அற்புதமான வாழ்க்கை முறைகளினை

அனுபவித்துவித்து, உணர்ந்துவிட்ட உரிமையுடன் சொல்லப்போகிறது. காற்றுக்கு தெரியாது அவர்களின் பெயர் என்ன என்று ஆனால் உங்களில் பலருக்கு கடைசியில் தெரியவரும். அப்போது அந்த ஆன்மாக்கள் மீண்டும் இங்கே பிறப்பெடுக்கும்.

இது காற்றின் சொந்த ஒரு கற்பனை முயற்ச்சி ஆகவே பொருமையினை கடைப்பிடித்து, தொடரை உடைக்காது தமிழ் சமூகம் வழி விடும் என்ற ஒரு நம்பிக்கையில் புயலாக வீரவிருட்சங்களின் வாழ்க்கையினை யாழ் களத்திற்கு முதல் முறையாக எடுத்து வருகிறது!!.

உங்களின் தமிழ் உணர்வுக்கு நன்றிகள். ஆனாலும் ஒன்று இந்த உலகில் வாழ வசதியிருந்தும், தம் உறவுகளினை மறந்து, தம் வாழ்க்கையினை தமிழீழ மண்ணுக்கு காணிக்கை ஆக்கிவிட்ட வீரர்களினை நினைவுபடுத்த எழுதப்பட்ட இந்த பக்கத்தில் பலர் வராது, உங்கள் பக்கம் மாத்திரம் இப்படி நிரம்பி வழியுதே அதற்கு எனக்கு என்ன காரணம் என்று விழங்கவில்லை.

நான் பல நாடுகளுக்கு வேலை நிமித்தம் கப்பலில் பயனிப்பதால் கூறுகிறேன். இப்படிப்பட்டவர்களினை நினைவுகூற நீங்கள் ஒருவரே முயற்ச்சித்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர என் சிரம் தாழ்த்தி, உங்கள் மாவீரர்களினை வணங்குகிறேன்.

புலிகளின் தாகம் தமீழ தாயகம்.

உங்கள் முயற்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்க

Edited by tampi

மாவீரரே! உன் கறைபடியாத ஈழவேட்க்கைக்கு முன்பாக என் கறைபடியாத தமிழ்ச்சொற்கள்

மாவீரரே! உம் மலரடி பணிகின்றோம்- நீர்,

சாவினுக்கே அஞ்சாது எனது தாயகம் காத்து நின்றீர்,

தற்பெரூமை வேறு அடிக்காது எம்மையெல்லாம் வேறு காத்து நின்றீர்

இன்று மாவீரர் ஆகிவிட்டீர்,வீரகாவியம் அடைந்து விட்டீர்,

புரட்ச்சி வேங்கைகையாய் மீண்டும் ஆகிவிட்டீர்,

புதிய புலிகளாய் வேறு பிறந்துவிட்டீர்.!1

இங்க மேலே நான் என் கற்பனையை தட்டி விட்டு எழுதியிருக்கிறேன், இதே கருத்துப்பட ஒரு நூறு கவிதையினை இதிலே மாவீரர்களின் வாழ்க்கையினை மெருகூட்டிட, எம் தமிழ் மொழிக்கு தோள்தர விரும்பும் யாழ் கள உறவுகளினை நோக்கி நேசக்கரம் நீட்டுகின்றேன், இங்கு உங்கள் திறமையினை எடுத்து விடுங்கள், உங்கள் கவி எழுதும் திறனை இவர்களுக்கு காணிக்கையாக்குவோம்.!!

தாயகம் அதுதமீழமே என்றகனவிலும் நனவிலும்

வீரவேட்கை அதுகொண்டு வெந்து நின்றீரே

எமைஆட்கொண்டு நின்ற அரசுதனை எதிர்த்து

வீறுகொண்டு எழுந்தீரே எம்மறக்குல மைந்தர்களே!!

நீறுபூத்த நெருப்பான தமிழன்னை பட்டகாயம்

அது ஆறுமா? அணையுமா? அன்றி அகலுமா?

ஊறுகளின் துன்பமதை ஒழித்திட எழுந்தீரே நீங்கள்

ஆறுதலைத் தமிழினத்திற்கு அளிந்த வீரத்தனயர்களே!!

ஈறுவரை உம்நினைவு எம் நெஞ்சில் என்றுமகலாது

ஏறும் தமிழீழக் கொடியதனை மாண்புடனே

" ஏறுதுபார் தமிழீழக்கொடி ஏறுது பார்"

என்று ஏற்றிவிட்டு போனீரே எம் இனிய தமிழ்வீரர்களே!!

போராளி ஆகிநின்று தமிழ்தலைவரின் புகழ் வேறுவளர்த்தீரே

சீராக துப்பாக்கிகொண்டு பிடித்துசெயல் முடித்துமே களம்நின்றீர்

தமிழ் விடுதலை பெற்றுவிட சகலதையும் துறந்துவிட்ட மாவீரர் நீர்

சோராத மனத்திடம், மதிநுற்பமான போராட்டம் கொண்டவிட்ட எம்

மாவீர மைந்தர்களே! உம் கல்லறையில் நாம் இன்று கவிமாலை புணைகின்றேom!!

Edited by SERCILAR SWAMIKAL

மாவீரர் ஆகிவிட்ட எம் தமிழீழ வீர விடுதலை புலிகள்...தமிழர் பலம் என்பதற்கு ஒரு வரைவிளக்கணம் கொடுத்துவிட்டு, அதை உலகத்திற்கு செயலளவில் காட்டிவிட்டு வீர காவியம் ஆகிவிட்ட பொன்மன செம்மல்கள்...அவர்கள் அப்படி என்னத்தான் சொன்னார்கள்.....

இதோ அவர்களே உங்களுடன் பேசுகிறார்கள்.....

எமது விடுதலை போராட்டத்தின் முதல் நாள் பாட வகுப்பில் இருந்து நான் களத்தினில் வீழ்ந்து மரணைக்கும் வரை எமது தலைவனால் எமக்கு போதிக்கப்படு எம்மால் நினைவில் வைத்திருந்த ஒரே ஒரு சொல் அது தான் நிலைகுலையாத மனத்திடம் கொண்டு, தமிழீழ இலட்ச்சிய தாகத்துடன் எதிரியின் நெஞ்சில் எமது துப்பாக்கி சன்னங்களினை துளைக்க சளைக்காது, கடைசிவரை எம்மிடம் வீற்றிருந்த அந்த தமிழ் வீரம்.

ஆகவே எம் தமிழீழ யாழ் வாசகர்களே ....நாம் தமிழர்...போராடும் வீரத்தமிழர்...வாழ்க்கையில் பயம் இருக்கக்கூடாது, தமிழ் வீரம் கொண்டு எதற்கும் அஞ்சாத மனோநிலையில், தமிழீழம் அமைக்கவேண்டும் என்ற என்ற ஒரு தார்மீக உணர்வு கொண்டு உறுதிபூணவேண்டும்.....

எமது உலக அரங்கினில் எம் தமிழினத்தினை, எம் தமிழீழ போராட்டத்தினை மழுங்கடிக்க நடத்தப்பட்டுக்கொன்றிருக்கு

அன்னையின் அரவணைப்பில் அன்புடன் வளர்ந்த நீர்

தமிழ்,

பிஞ்சு மழலைகளாய் இருந்தீரே அன்று எம்தேசத்திலே

தமிழன்னை பட்ட துயர்கண்டு வெகுண்டெழுந்து துடித்திட்டீரீர்

குடும்பபாசம் தனைத் துறந்து விட்டு நீர் களமாட. வந்தீரே

தேன் போன்ற தமிழின் தன்மானம் என்ற நிலை பேண

மகிழ்வுடனே போராடி மரணைத்த களவேங்கைகளே!!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 19,204 போராளிகள் வீரச்சாவு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1983ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2007ம் ஆண்டு மே 15ம் நாள் வரையில் 19,204 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது.

மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை

மாவட்டம் தொகை

யாழ்ப்பாணம் 6929

மட்டக்களப்பு - அம்பாறை 4894

வன்னி 2809

திருமலை 1742

மன்னார் 1099

வெளி 327

மொத்தம் 19204

கரும்புலிகள்

தரைக்கரும்புலிகள் 80

கடற்கரும்புலிகள் 236

மொத்தம் 316

எல்லைப் படை மாவீரர்கள் 279

நாட்டுப்பற்றாளர்கள் 457

உங்களுக்காக நான் ஒருவன் இருக்கிறேன் என் உண்மையான விடுதலை வீரர்களே...மர்றவை எல்லாம் உங்களை மறந்து அங்கால விடுப்பு, விண்ணாணம் கதைக்க போய்வீட்டீனம். அதைப்பற்றி யோசியாது....பேசாம அமைதியா தூங்குங்கள்....என்னண்டு சொல்வது..தி.மு. சோ. கழுதைகளுக்கு...எப்படி நீங்க செய்யுங்க...அதுகள் மனம் காணததை கண்டு விட்ட மயக்கத்தில....தமிழீழத்தினையே மறந்து விட்டு மரக்கட்டைகள் மாதிரி இருக்குதுகள்...களத்தில வேற வந்து போகுதுகள்....குழுமம் வேறு இதுகளுக்கு....இதற்காக தான் அந்த காலத்தில வைக்கவேண்டிய இடத்தில இதுகள வைத்தம் ....நீங்க வேற அவையள.....மாற்றிவிட்டு விட்டீயள்...இப்ப யோசிச்சு என்ன செய்யிறது....ஈழத்தில இருக்கிற சனம் பட்ட அடியோட திருந்தியிருக்கும்...பக்குவம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.