Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயூரன் நடைபயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

இளைய தலைமுறை எழுச்சி கொள்கிறது.

இனிவரும் காலங்கள் கனியும்.

  • தொடங்கியவர்

இளைய புயல்களே!

திசைகள் எட்டும் - உம்

திக்கினை நோக்கும்

அதிசயம் நிகழ்த்தும்

ஆதவச் சுடர்களே!

தொடருக.. தொடருக..

பயணத்தைத் தொடருக.

VIDEO: Tamil men walk to correct 'errorism'

Group plans to arrive in Ottawa June 11

May 25, 2007

By Stefanie Swinson

More from this author

DURHAM -- A group of eight Tamil men are taking their fight for social equality to the streets walking to Ottawa from Toronto to "stop errorism."

Errorism, as described by walk organizer Mayuran Rhaashivam, is when "a majority community uses stigmatized terms to bully a minority community for its own self interests."

The walk began on May 22 from Nathan Phillips Square and is due to be completed June 11 on Parliament Hill.

"We want to raise awareness about the Sri Lankan conflict with Tamil Eelam," says Mr. Rhassshivam. "As people of Tamil descent living in Canada... we feel that there is a need to get our identity out."

The group feels its members are often misportrayed in the media as being involved in gangs, like the Tamil Tigers. They want to fight these stereotypes in a positive way.

"We are peace-loving human beings like the rest of Canada," explains Mr. Rhaashivam. "At the end of the day we just want to be living our lives in a peaceful manner."

The group is hoping that awareness will create dialogue between the Canadian government and Tamil Eelam. They have set up a Facebook group on the Internet and it already has more than 600 members who are contributing comments and words of encouragement to the young men. Some of these members plan to meet up with the group in Ottawa on June 11.

June 11 marks "student uprising day" in Tamil Eelam. This is a day in which citizens of Tamil Eelan pay respect to pupils who sacrificed their lives for the cause of obtaining a free and just Tamil Eelam, a battle which is still ongoing. The group hopes to meet with Prime Minister Stephen Harper to get their issues across.

As of May 25, the men had made it to Newcastle, walking a total distance of 68 kilometres.

http://www.durhamregion.com/dr/regions/dur...p-4591940c.html

http://www.videodurhamregion.com/index.php?mvid=1538

http://www.yarl.com/forum3/index.php?showtopic=24603

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்க பூர்வமான முயற்சிகள் வாழ்த்துக்கள் மயூரனுக்கும் அவரது தோழர்களுக்கும். காலத்தின் தேவையறிந்து செய்யும் அவரது அயராத முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடி ஏந்திய சந்ததி வேரே!

செங்கொடி ஏந்திய சந்ததி வேரே!

சிங்களம் வெகுண்ட சினத்திற்குரியோனே!

எண்திசை நிமிரும் தமிழனின் மானம்

ஏந்தியே நடக்கும் இளைய தேவரீர்!

தமிழ்ச்சங்கடம் தீர்க்கும் சஞ்சீவி சுமக்க

சாலையில் இறங்கிய சரித்திர பொறிகளே!

எங்கே மைந்தரே!

தாயகத்திற்காகத் தூரங்கள் கடக்கும்

உங்கள் கால்கள்….. வலித்தால் சொல்லுங்கள்.

உங்கள் திருவடி நீவித் தைலமிடவும்,

வெந்நீர் ஒத்தடம் விரைந்து தரவும்

அன்னையர் உள்ளோம்.

அகிலத்தின் திசைகளில் அனைவரும் உள்ளோம்.

சட்டத்தை மதித்துச் சாதனை செய்யலாம் எனும்

புதுக்கட்டக் கதவின் திறவுகோல்களே!

வழிகோலி வைக்கின்றீர்கள்,

வாழ்த்தெடுத்து விழிகசிந்து நிற்கின்றோம்.

வேர் மடிதேடும் விழுதுகள் - இனிமேல்

தெளிவித்த வழியில் பயணங்கள் தொடரும்.

புதிய பாதையின் ஆரம்பப் புள்ளிகளே!

புலம்பெயர் தமிழரது தாயகப்பயணிப்பின் புதிய முனைகளே!

வேர்மடிக்கு வெளிச்சம் பாய்ச்சும் விழுதுவேர்களே!

பனியின் உறைவும், வெம்மையின் உலர்வும்

சிதைக்க முடியாத் தாயகமலர்களே!

நுனி நா மொழியும், நுகரும் வாழ்வும்

நசுக்க முடியா நாயகர் நீங்கள்.

விரையும் உங்கள் பின்னடிபற்றி

அசையும் இனிமேல் இளையநதிகள்.

இது ஆரம்பம்…

பொங்கிப் பிரவகித்து, - வெள்ளம்

கரைபுரளும் காலம் கண்களிலே தெரிகிறது.

தொடருங்கள்…

கரம்பற்றி பயணிக்கும் - உங்களுக்குச்

சாலையோர நிழல்களாக சாமரம் வீசுகின்றோம்.

வீதியுலா வரும் பாதையெல்லாம் வாழ்த்தொலி முழங்கி

வீரியம் ஊட்ட வேகமெடுக்கின்றோம்.

தாயக மண்ணின் வேதனை சுமக்கும்

இளைய புயல்களே! – உங்களுக்குள்

வெல்லும் தமிழ் வேதமாகட்டும்.

அகிலத் திசையெங்கும் ஆதரவுத் தோள்கள்

எழுந்து நிமிர்ந்து உயரட்டும்.

மண்மீட்பின் பக்கமொன்றில்

மயூரபயணம் புலம்பெயர்தேசமொன்றின்

சட்டக்கண்களைத் திறக்கமுனைந்ததாய்

தாயகசரிதம் எழுதட்டும்.

தொடரும் உங்கள் பயணம்

தாயகம் நோக்கிப் புரையோடிக்கிடக்கும்

மேலைத்தேசத்தின் சட்ட மாசுக்களைச் சுத்திகரிக்கட்டும்.

தளராத நெடும்பயணம்

தரணியை உலுக்கும், அசைக்கும்

இது உறுதி.

உறுதியின் பாதையில் உலகை ஈர்க்கும்

உன்னதப் புதல்வர்களே!

தொடர்க.. தொடர்க.. தொடர்ந்து உயர்க!

இப்படியா காட்டி கொள்வது வல்வை சாகரா ஆதியும் கனடாவில போல குடியிருகிறார்:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அவரை களத்தில் காண்பதுகூடக் குறைவாக இருக்கிறது. இங்கு இளையவர்களுக்குள் புதுவேகம் பிறந்திருக்கும் இத்தருணத்தில் ஆதியைக்காணவில்லை. யாரேனும் அறிந்தால் அவர் கனடாவில் எங்கு தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று அறிந்து சொல்லுங்கள். மயூரனோடு சேர்த்து அவரையும் நடக்கவிடலாம். இந்த மயூரனையும் நண்பர்களையும் பார்த்துக் கொஞ்சம் தன்னும் கோமாளித்தனம் குறைந்து பொறுப்புள்ளவராக மாறுவார்.

  • தொடங்கியவர்

கவலைப்படவேண்டாம்

ஆதி ஒட்டாவா வீதிகளில் நடக்கின்ற அழகை காண விரும்பும் தோழர்கள் ஒட்டாவாவில் மயூரனும் தோழர்களும் நடைபவனியை நிறைவுசெய்யும் இடத்தில் காணலாம்

  • கருத்துக்கள உறவுகள்

"நடைப்பயண அணி" தன் பயணத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தது.

Written by Ellalan - Jun 15, 2007 at 05:36 PM

ஜூன் மாதம் 11ம் நாள் 2007ம் ஆண்டு கனேடிய பாராளுமன்றம் முன்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றுடன் எமது அன்றைய நாள் ஆரம்பமானது. கூட்டத்தின் இறுதியில் நடைப் பயண அணி ஒட்டாவா பல்கலைக் கழகம் நோக்கி நகர்ந்தது.

அங்கு ஒட்டாவா பல்கலைக்கழக மற்றும் கால்ற்ரன் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் எம்மோடு இணைந்துகொண்டனர். அங்கிருந்து நாம் மீண்டும் நம் நடைப் பயணத்தைத் தொடர முன்னர், 'STOP ERRORISM" நடைப்பயண உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒட்டாவா பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றத்தினால் சான்றிதழ் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர்.

அங்கிருந்து தொடரப்பட்ட நம் நடைப் பயணத்தின் முதல் தரிப்பிடமாக அமைந்தது RCMPதலைமைக் காரியாலயம். ரொரன்ரோவிலிருந்து பேருந்தொன்றில் வந்திறங்கிய இளைஞர் அணி RCMP காரியாலயத்தில் எம்முடன் இணைந்துகொண்டது. RCMPஅதிகாரி ஒருவருடனான நீண்ட, ஆனால் கருத்துக்கள் நிறைந்த கலந்துரையாடல் ஒன்றும் அங்கு இடம்பெற்றது.

தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தியவாறு நடைப்பயணத்தை மேற்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியபின் நம் இரு தேசியக்கொடிகளையும் பெருமையுடன் ஏந்தியவாறே அங்கிருந்து மீண்டும் நாம் பயணத்தை ஆரம்பித்தோம்.

பொது ஆளுநர் இல்லம் முன்பாகவும் பிரதமர் ஹாப்பரின் வீட்டின் முன்பாகவும் சிறிது நேரம் தங்கிய நம் அணி "STOP ERRORISM!", "FREE TAMIL EELAM", "I AM CANADIAN" போன்ற சுலோகங்களை உரத்து உச்சரித்தவாறே கனேடியப் பிரஜைகளின் கவனத்தை தன்னிடத்தே ஈர்த்தது. இறுதியில், ஆரம்பித்த இடமான பாராளுமன்றத்திற்கே நடைப்பயண இளைஞர்கள் அணி வந்து சேர்ந்தது.

இங்கு மீண்டும் ஓர் பேருந்தில் ரொரன்ரோவிலிருந்து வந்திறங்கி நம் வருகைக்காக பொறுமையுடன் பாராளுமன்றம் முன்பாகக் காத்திருந்த இன்னுமோர் இளைஞர் குழு எம்முடன் இணைந்துகொண்டது. மீண்டும் சுலோகங்களை பலமுறை கோஷமிட்ட பின்னர் 'STOP ERRORISM" நடைப்பயண அணி தன் பயணத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தது.

ஸ்ரீலங்காவில் தமிழ் மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிகழும் பல வன்முறைகளைக் குறித்த, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கவலையை பிரதமர் ஹாப்பர் புரிந்துகொள்ளுவார் என நாம் திடமாக நம்புகிறோம். அவ்வாறில்லையெனில்.... எங்கள் கோஷங்களும் உணர்வுகளும் பிரதமரின் செவிப்பறைகளில் ஒரு சின்ன அதிர்வையாவது ஏற்படுத்தவில்லையெனில்... அவருக்கும் மற்றும் சர்வதேச சமூகத்துக்கும் சொல்லவென எங்களிடம் ஓர் வாசகம் இருக்கிறது... "We're youth, we're empowered, we'll never give up!"

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.