Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

52 ஆயிரம் பேரில் முதற்கட்டமாக 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

Featured Replies

In இலங்கை     May 2, 2020 10:35 am GMT     0 Comments     1491     by : Benitlas

01-11.jpg

மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், நீண்டகால நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்காக 52 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 370 பேர் இன்று களனியில் வைத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ளவர்களை விரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

FB_IMG_1588411564823.jpg

FB_IMG_1588411570664.jpg

FB_IMG_1588411575539.jpg

FB_IMG_1588411578747.jpg

FB_IMG_1588411584273.jpg

FB_IMG_1588411587249.jpg

http://athavannews.com/52-ஆயிரம்-பேரில்-முதல்-கட்ட/

  • தொடங்கியவர்

மேல் மாகாணத்தில் சிக்குண்டிருந்த 600 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு (படங்கள் இணைப்பு)

மேல் மாகாணத்தில் சிக்குண்டிருந்த சுமார் 600 பேர் இன்று தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்…

IMG_0067.jpgIMG_0074.jpgIMG_0086.jpgIMG_0108.jpgIMG_0121.jpgIMG_0135.jpgIMG_0137.jpgIMG_0256.jpgIMG_0302.jpg

  • தொடங்கியவர்

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு

In இலங்கை     May 8, 2020 4:02 am GMT     0 Comments     1152     by : Litharsan

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

அந்தவகையில், தமது இருப்பிடங்களுக்குச் செல்லமுடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (வியாழக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஏற்கனவே, நுகேகொடை பொலிஸ் வலயத்தில் 600 பேர் வரை கடந்த 5 ஆம் திகதி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதே பொலிஸ் வலயத்திலிருந்து நேற்று 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

ஏற்கனவே முதற்கட்டமாக மேல் மாகாணத்தின் களனி பொலிஸ் பிரிவில் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டனர்.

மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடத்தலில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மேல்-மாகாணத்தில்-சிக்கி-2/

வெளிநாடுகளிலில் சிக்கியிருந்த சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் பிள்ளைகளை வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் அழைத்துவர முடிந்த அரச போர்க்குற்றவாளிகளுக்கு இன்னமும் கொழும்பில் நிர்கதியாக உள்ள மலையாக மக்களை 100, 200 km  தூரத்திலுள்ள அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப முடியாதுள்ளது அப்பட்டமான இனரீதியான புறக்கணிப்பை தவிர வேறொன்றுமில்லை.  

கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

news-corona.jpg

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில்  இவ்வாறு மேல் மாகாணத்தில் தற்காலிக தங்குமிடங்கள், வாடகை அறைகளில் தங்கியிருந்தவர்களே, 4 ஆவது கட்டமாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் இரத்மலானை புகையிரத மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு அங்கிருந்து உரிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த 5 ஆம் திகதி நுகேகொடை பொலிஸ் வலயத்தில் 600 பேர், கடந்த 7 ஆம் திகதியும்  1200 பேர் மற்றும் களனி பொலிஸ் பிரிவில் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை  2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேல் மாகாண ஆளுநர், மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழி நடாத்தலில், இந்நடவடிக்கைகள்ன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

http://athavannews.com/கொழும்பில்-இருந்து-மேலும/

  • 2 weeks later...

நிர்க்கதிக்குள்ளான 1500 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

மேல் மாகாணத்தில் ஊரடங்கால் நிர்க்கதிக்குள்ளான 1500 பேர் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சுகததாச விளையாட்டரங்கிற்கு அழைக்கப்பட்டு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டதன் பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 42 பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து நிர்க்கதிக்குள்ளான 16,000 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143859

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.