Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் ஊடக சுதந்திர தினமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் ஊடக சுதந்திர தினமும்

  • கிருஷ்ணி கந்தசாமி இஃபாம்

கொரோனா வைரஸ் தாக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களில் உலகளவில் டசின் கணக்கில் ஊடகவியலாளர்கள் இறந்துள்ளனர் என்று உலக பத்திரிகை சுதந்திர அமைப்பு கூறியதுள்ளது. ஊடகத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தொற்றுநோயை மறைப்பதற்கு சரியான பாதுகாப்பு இல்லை என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.

மார்ச் 1 ஆம் திகதி முதல், 23 நாடுகளில் 55 ஊடக ஊழியர்கள் இவ் வைரஸால் இறந்ததை பதிவு செய்துள்ளதாக இவ் அமைப்பு கூறியது, இருப்பினும் அவர்கள் அனைவரும் பணியில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சுகாதார நெருக்கடியில் ஊடகவியலாளர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர், ஏனென்றால் அவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதன் மூலம், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் தலைவர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள், நோயாளிகளை என நேர்காணல் செய்வதன் மூலம் தொடர்ந்து தகவலகனை வெளிக்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில், சமூக இடைவெளி தனிமைப்படுத்தல்கள் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற இன்றியமையாத பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் உலக பத்திரிகை சுதந்திர அமைப்பு சுட்டிகாட்டியிருந்தது.

96.jpgதற்போதைய கொரோனா வைரஸ் குடும்பத்தின் கோவிட்-19 நெருக்கடியில் பொதுமக்களுக்கு முக்கிய தகவல்களை அறிவிப்பதில் சுதந்திர, சுயாதீனமான மற்றும் பன்மைத்துவ ஊடகங்கள் இன்றியமையாத பங்கைக் கொண்டுள்ளன.

கோவிட்-19 தொற்று பரவல் போன்று தவறான தகவல்களின் பதிவுகள் இரண்டாவது தொற்றுநோயை உருவாக்கியுள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் சுகாதார ஆலோசனையிலிருந்து சதி கோட்பாடுகள் வரை உருவெடுத்துள்ளது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முகநூல் தொடங்கி வாட்ஸப் வரையில், தவறான தகவல்கள் அதிகம் பகிரப்படுகின்றன. மோசமான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற கருத்துகளே அபாயகரமானவை என்று மேலும் சுட்டிக்காட்டிய ஐ.நா பொதுச்செயலாளர் பெருமளவில் தவறான தகவல்கள், செய்திகள் மற்றும் கதைகளை கொண்டு செல்லும் சமூக ஊடக இடுகைகளின் உண்மைகளை சரிபார்த்து அறிவியல், உண்மை சார்ந்த செய்தி மற்றும் பகுப்பாய்வுகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் தான் தலை வணங்குவதாக சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது ஊடக செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

உண்மை எது, கட்டுக்கதை எது என்று அறிவாற்றல் அல்லது கல்வியால் அறிந்து கொள்ள முடியும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். படித்த பலரும் இதுபோன்ற பொய்த் தகவல்களுக்கு இரையாகி இருப்பதைக் காட்டும் பல எளிதான உதாரணங்கள் உள்ளன.

கோவிட்-19 ஒரு சதிச் செயல் என்று கூறும் பிரபல எழுத்தாளர் கெல்லி புரோகனை எடுத்துக் கொள்ளுங்கள்; அவர் எம்.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்றவர். இருந்தாலும், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து கிடைத்த, அபாயகரமான வைரஸ் குறித்த தெளிவான ஆதாரங்களை அவர் ஏற்க மறுத்தார். கிருமி தத்துவத்தின் அடிப்படைகள் பற்றியும் கேள்விகள் எழுப்பும் நிலைக்கும் அவர் சென்றார். போலி அறிவியல் சிந்தனைகளை அவர் ஏற்றுக்கொண்டார். சில உலகத் தலைவர்களும் கூட – ஆதாரமற்ற புரளிகளை பகுத்தறியக் கூடியவர் என்று நீங்கள் நம்பக் கூடியவர்கள் இந்த நோய்த் தாக்குதல் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். தகவல்களின் இயல்புகளில் இருந்தே பிரச்சினையின் ஒரு பகுதி தொடங்குகிறது. நமக்கு ஒவ்வொரு நாளும், நாள் முழுக்க ஏராளமான தகவல்கள் வந்து குவிகின்றன. எனவே ஒரு விஷயம் உண்மையா என்பதை முடிவு செய்ய நமது உள்ளுணர்வை நாம் நம்புகிறோம்.

சர்வதேச ஊடக சுதந்திர தினம்

இன்றைய ஊடகங்கள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சுதந்திர நிலையை எட்டியுள்ளன. ஆனால் இலங்கையை பொருத்த வரை ஊடக சுதந்திரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆம் இன்றைக்கும் அரசின் ஊழல்களை, தவறுகளை, அக்கிரமங்களை எழுதுவதற்கு பெரும்பாலான ஊடகங்கள் அஞ்சும் நிலை இருக்கிறது. அரசுக்கு எதிரான ஊடகங்களை முடக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தவும் ஊடகங்கள் தயங்குகின்றன.

இந்நிலையில் சர்வதேச ஊடக சுதந்திர நாளாக ஆண்டுதோறும் மே 3 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஊடகங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நாளாகும், அவை பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான அல்லது ஒழிப்பதற்கான இலக்குகளாகும். ஒரு கதையைத் தேடி உயிரை இழந்த அந்த ஊடகவியளாலர்களுக்கு இது ஒரு நினைவு நாள்

ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. ஊடக சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும், கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் இந்த நாளை உலக பத்திரிக்கை சுதந்திர நாளாக அறிவித்தது.

அத்துடன் ஊடக சுதந்திரம் மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் பற்றிய பிரச்சினைகள் குறித்து ஊடக வல்லுநர்களிடையே பிரதிபலிக்கும் நாளாகும இந்த நாள் கருதப்படுகின்றது. முக்கியமாக, ஊடக சுதந்திரத்திற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மதிக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கங்களுக்கு நினைவூட்டலாகவும் செயல்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவதொரு நாட்டில் யுனெஸ்கோ சார்பில் மே 1 முதல் 3 ஆம் தேதிவரை ஊடக சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு தலைப்பும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஐ.நா. கொடுத்திருக்கும் தலைப்பு… “பயமோ ஆதரவோ இல்லாத ஊடகதுறை”. ஊடக சுதந்திரத்துக்காக பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ ஃகிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இந்த விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்றவற்றை விளக்கும் விதமாகவே இந்த ஊடக சுதந்திர தினத்தை மே 3ஆம் திகதி கொண்டாடலாமென்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட, “உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திர மற்றும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை” என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

media-2.jpg

இலங்கையின் நிலைமை

பத்திரிகை என்பது 200 ஆண்டுகள் பழமையானது. பத்திரிகை சுதந்திரத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பின்தங்கியுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தை பொறுத்தவரை 183 நாடுகளில் இலங்கை நடப்பாண்டில் 127 ஆவது இடத்தை எட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் 141 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கும் 2019 ஆம் ஆண்டில் 126 ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளதாக பத்திரிகை சுதந்திர நிறுவனம் அறிவித்துள்ளது. உலக பத்திரிகை சுதந்திர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 10 இடங்கள் முன்னேறியுள்ளது.

இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும். ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாக உள்ள நாடு எரித்திரியா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கும் அதேவேளை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இலங்கையையும் விட மேலிடத்தில் உள்ளன.

இந்த சுட்டியில் 94 ஆவது இடத்தில் உள்ள பூட்டான் தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தை அதிகம் பேணும் நாடாக அமைந்துள்ளது.

1990-ம் ஆண்டு முதல் இதுவரை உலக அளவில் 1,332 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலக் கட்டத்தில் இலங்கையில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து கூறும் உரிமை பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இருக்க வேண்டும். இதழியலில் புலனாய்வு அவசியம். இது கஷ்டமான பணிதான். இருந்தாலும் தற்போதைய சூழலில் புலனாய்வு அவசியம். குறிப்பாக இலங்கையில் சுதந்திரமான புலனாய்வு வேண்டும். பத்திரிகை துறையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

உலகம் முழுவதும் ஊடக சுதந்திரம் மிகப்பயங்கரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் நாடுகளில் சீனா, வடகொரியா, அரபு நாடுகள், எகிப்து உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை குறிப்பிடுகிறார்கள். இந்தியா, ரஷ்யா, ஆப்பிரிக்காவின் மத்திய நாடுகள், வெனிசூலா, மத்திய அமெரிக்க நாடுகள் கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும் நாடுகள் பட்டியலில் உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் திருப்திகரமான நிலையிலும், ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகள் மிக நல்ல நிலையிலும் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளன.

மக்களிடம் இருந்து உண்மையை அரசு மறைத்தால், அந்த உண்மையை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டியது ; பத்திரிகையாளனின் கடமை என்று சமீபத்தில் ஹிந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் கூறியிருந்ததையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

பத்திரிகை ஒரு “அத்தியாவசிய சேவை”

உலகெங்கிலும் உள்ள நாடுகளில், பத்திரிகை ஒரு “அத்தியாவசிய சேவை” என்றும், பத்திரிகையாளர்கள் “அத்தியாவசிய தொழிலாளர்கள்” என்றும் கருதப்படுகிறது, தொடர்ந்து அறிக்கையிடவும் இயக்க கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெறவும். சில இடங்களில், பத்திரிகை ஒரு “அவசரகால சேவை” என்று அழைக்கப்படுகிறது. பத்திரிகையின் அத்தியாவசிய பொது சேவை மதிப்பின் இந்த அங்கீகாரம் முக்கிய செய்தித்தாள் மற்றும் ஒளிபரப்பு அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. முன்னோக்கிச் செல்லும்போது, பொது சேவை ஊடகங்கள் முன்னெப்போதையும் விட முக்கியமாக இருக்கும்.

 

http://thinakkural.lk/article/40119

 

 

 
 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு 127ம் இடம்

 

IMG_20200503_155634.jpg?189db0&189db0

 

உலக ஊடக சுதந்திர தினம் இன்று (3) அனுஷ்டிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை 127ம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் இருந்து ஒரு இடம் கீழ் இறங்கியே இலங்கை 127ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஊடக சுதந்திர சுட்டியை பிரான்சின் எல்லைகலற்ற நிருபர்கள் தயாரித்துள்ளனர்.

 

https://newuthayan.com/ஊடக-சுதந்திரத்தில்-இலங்க/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடக சுதந்திர தினம் இன்று – விசேட அறிக்கை!

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் இதழியல் இயக்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சுதந்திர தின அறிக்கை வருமாறு,

  • IMG_20200503_134915.png?189db0&189db0
  • IMG_20200503_134933.png?189db0&189db0
  • IMG_20200503_134949.png?189db0&189db0
  • IMG_20200503_135006.png?189db0&189db0
  • IMG_20200503_135029.png?189db0&189db0

https://newuthayan.com/ஊடக-சுதந்திர-தினம்-இன்ற/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.