Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!!

10448822_10154287932675637_5184144913874661093_n-1.jpg?189db0&189db0

 

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இன்று 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்

2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் ‘நெனபல சஹித்த லமா பரபுரக்’ என்ற (பாண்டித்தியமிக்க தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ் குறிப்பிபடப்பட்ட வகையில் நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு அமைய கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக் கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தம் ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் சம்பள முறைப்படுத்துதல்) சட்டம்
  • 1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டம்
  • (135 அதிகாரம் – ) ஆகக் கூடிய சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act
  • 1942ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்
  • 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உள்ள கட்டளை

https://newuthayan.com/16-வயதிற்குட்பட்டவர்களை-வ/

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது. பாடசாலை நேரங்களில் வேலை செய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடை விதிக்கலாம். இவ்வாறே வேலை செய்யும் நேரத்தையும் மட்டுப்படுத்தலாம் இத்தனை மணித்தியாலங்கள் ஒரு நாளைக்கு/கிழமைக்கு என்று. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதற்கு அனுமதி உள்ளது. 

பிறந்தது தொட்டு  அம்மா, அப்பாவின் வளர்ப்பில் பிள்ளைகள் தங்கி இருந்து பரந்த அறிவு இல்லாமல் கடைசியில் பல்கலைக்கழக பட்டத்தையும் வைத்துக்கொண்டு வேலை இல்லாமல் திண்டாடுவதை காட்டிலும், நான்கு சதம் உழைப்பது எப்படி என்று 14வயதிலேயே கற்றுக்கொண்டால் பணத்தை பக்குவமாய் பயன்படுத்தும் நாட்டமும், வேலைத்தளங்கள், பல்வேறு துறைகள் பற்றிய நடைமுறை அனுபவமும் பிள்ளைகளுக்கு ஏற்படும்.

உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கலாம், சட்ட வரைபுகளில் அறிவுபூர்வமான அணுகுமுறை தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

Young Sri Lankan Buddhist monks look on during a procession ...

Sri Lanka Volunteering 5 Things To Do - Go 4 Travel Blog

சிறுவர்களை... புத்த பிக்குகளாக சேர்ப்பதிலும், வயது வரம்பு... கடைப் பிடிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சட்டம் அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது. பாடசாலை நேரங்களில் வேலை செய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடை விதிக்கலாம். இவ்வாறே வேலை செய்யும் நேரத்தையும் மட்டுப்படுத்தலாம் இத்தனை மணித்தியாலங்கள் ஒரு நாளைக்கு/கிழமைக்கு என்று. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதற்கு அனுமதி உள்ளது. 

பிறந்தது தொட்டு  அம்மா, அப்பாவின் வளர்ப்பில் பிள்ளைகள் தங்கி இருந்து பரந்த அறிவு இல்லாமல் கடைசியில் பல்கலைக்கழக பட்டத்தையும் வைத்துக்கொண்டு வேலை இல்லாமல் திண்டாடுவதை காட்டிலும், நான்கு சதம் உழைப்பது எப்படி என்று 14வயதிலேயே கற்றுக்கொண்டால் பணத்தை பக்குவமாய் பயன்படுத்தும் நாட்டமும், வேலைத்தளங்கள், பல்வேறு துறைகள் பற்றிய நடைமுறை அனுபவமும் பிள்ளைகளுக்கு ஏற்படும்.

உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கலாம், சட்ட வரைபுகளில் அறிவுபூர்வமான அணுகுமுறை தேவை.

நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும், நடைமுறைப்படுத்த சில காலங்கள் செல்லலாம், ஏனெனில் எங்களுடைய (பெரும்பான்மையான)பெற்றோர்களின் மனநிலை மாறவேண்டும்.. தங்களது முழு சக்தியையும் பிள்ளைகளை படிப்பித்துவிட்டால் போதும் என்று இருப்பவர்களே அதிகம். அல்லது வறுமைகாரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு வேலைசெய்பவர்களும் உண்டு.

இரண்டாவது, மேற்குலநாடுகளில்/வளர்ச்சியடைந்த நாடுகளில் 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அந்த நாடுகளுடன் ஓப்பிடும்போது, இலங்கையில் அவ்வாறான வசதிகள் இருக்கிறதா?  அப்படி இருக்கும் பட்சத்தில் அல்லது அவற்றிற்கான வாயப்புகள் உருவாகும் சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறியது நிறைவேறலாம்..

 

On 12/6/2020 at 08:11, உடையார் said:

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

வறுமை - அநேகமான பெற்றோர்கள் வறுமை காரணமாக பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள் 

கல்வி - அரசால் போதிய கல்வி வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சட்டம் இருக்கலாம். ஆனால், யதார்த்தம் அதுவாக இல்லை 

சுரண்டல் - இவ்வாறான சிறுவர்களை வேலைக்கு வைத்து பணம் உள்ளவர்கள் மேலும் பணக்கார்கள் ஆகின்றனர். அவர்களை அரசு தண்டிப்பது ... குறைவு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.