Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

என்ன செய்ய நாங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான், சீனாக்காரன் கையை விட்டுவிட்டானே

இது ஒரு Trial and Error -  attempt தான். 

மெல்ல மெல்ல கொடுப்பான். நாங்கள் கொடுப்புக்குள் சிரிக்கலாம். கொஞ்சம் பொறுமையாயிருப்போம். 😀

  • Replies 131
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தாங்க முடியலையடா சாமியோவ். 

(ஆனாலும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் ☹️)

2 hours ago, உடையார் said:

என்ன செய்ய நாங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான், சீனாக்காரன் கையை விட்டுவிட்டானே

106653696_317701472733799_8724719387885289746_n.jpg?_nc_cat=107&_nc_sid=dbeb18&_nc_ohc=cYIdY3HJiZ4AX9GAonN&_nc_ht=scontent-frt3-1.xx&oh=dea1c469e8ee8d92c7c01d4a962cb31f&oe=5F29A85D

சீனாக்காரன்... இந்தியாவின் காய் நகர்த்தலை பார்த்து, பயந்து பின்வாங்குகிறான்.
நீங்கள் நம்பாவிட்டாலும், அதுதான்....  உண்மை. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாம் கதைக்கும்போது கூறுவோமே பேய்க்காய் என்று. அந்த பேய்க்காயைப்  சீனாக்காறன் கண்டு பயந்திருப்பான் போலும்  😀

இல்லாவிட்டால் முன்னாள் சதுரங்க உலக வெற்றியாளர் விஸ்வனாதன் ஆனந்தைக் கொண்டு இந்தியா காய் நகர்த்தியிருக்கும் எண்டு நினைக்கிறேன். அந்தக் காய் நகர்த்தலைக் கண்டு சீனன் பயந்து ஓடியிருப்பான் 😂

இல்லாவிட்டால் இந்தியன் நாய்களை கொண்டுபோய் முன்னரங்கில விட்டுப்போட்டு தேங் காய் களை உருட்டிவிட்டிருப்பான். அதைப் பார்த்து சீனனும் நாய்க்கு ஏன் போர்த்  தேங் காய் என்று பயந்து போர்த் தேங் காய்களை பார்க்க ஏலாத தூரத்திற்குப்  பின்வாங்கி ஓடி ஒழிந்திருந்து பார்த்திருப்பான் போலும் 😜

(வந்துவிட்டார் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க 😡)

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

Ricky Gervais Laughing GIF

அடடா... கபிதனுக்கு,  நான் இந்தியாவுக்கு ஆதரவாக, கதைத்தவுடன், 
இரத்தக் கொதிப்பு,  தலைக்கு ஏறி... தலை, சிவந்து  போட்டுது.  :grin:  🤣

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லடாக் எல்லையில் சில பகுதிகளில் சீனா பின்வாங்கவில்லை 40000 வீரர்கள் உள்ளனர் ; நீடிக்கும் சிக்கல்

லடாக் எல்லையில் சில பகுதிகளில் சீனா பின்வாங்கவில்லை 40000 வீரர்கள் உள்ளனர் ; நீடிக்கும் சிக்கல்

லடாக் எல்லைப்பகுதியில் ஊடுருவிய சீனா அனைத்து பகுதிகளிலிருந்தும் பின்வாங்கவில்லை 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளனர்.மீண்டும் சிக்கல் நீடிக்கிறது.
பதிவு: ஜூலை 23,  2020 06:34 AM
புதுடெல்லி

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்
பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சீனர்களுடனான தனது பேச்சு வார்த்தையின்  போது, பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

ஜூலை 14-15 தேதிகளில் கடைசி சுற்று இராணுவ பேச்சுவார்த்தையின் போது  இரு தரப்பினரும் படைகள் வாபஸ் பெறும்  செயல்முறையை பரஸ்பரம் கண்காணிக்க ஒப்புக் கொண்டனர். அதன் பின்னர் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை.

சீனர்கள் "கிழக்கு லடாக்கில் உள்ள மோதல் ஏற்படும் பகுதிகளில் படைகளை வாபஸ் பெறுவதற்கான  அவர்களின் உறுதிப்பாட்டை மதிக்கவில்லை. அரசாங்க மற்றும் இராணுவ மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி அவர்கள் படைகளை பின்வாங்கவில்லை.

இந்தியாவும் சீனாவும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு இடையக மண்டலத்தை உருவாக்குவதன் மூலம் பரஸ்பர செயலிழப்பைத் தொடங்கிய பாங்கோங் ஏரியிலுள்ள டெப்சாங் சமவெளிப் பகுதி, கோக்ரா மற்றும் விரல்கள் பகுதியில் சீனாவின் துருப்புக்கள் இன்னும் உள்ளன.

கல்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் பங்கோங் ஏரி விரல்கள் பிராந்தியத்தின் ஒரு பகுதி ஆகியவற்றில் படைகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளது இருப்பினும், கோக்ராவில் எதிர்பார்த்தபடி அல்லது டெப்சாங் சமவெளிகளில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள விரல் 5 இலிருந்து கிழக்கு நோக்கி செல்ல அவர்கள் விரும்பவில்லை என்றும் தெரிகிறத. - இது போட்டியிடும் பகுதியில் அவர்களின் பாரம்பரிய தளமாகும்.

ஆதாரங்களின்படி, விரல்கள் 5 பகுதியிலிருந்து வெளியேற சீனர்கள் தயங்குகிறார்கள், விரல் பகுதியில் ஒரு கண்காணிப்பு பகுதியை உருவாக்க விரும்புவதால் தயங்குகிறார்கள்.

"வான் பாதுகாப்பு அமைப்புகள், கவசப் பணியாளர்கள் கேரியர்கள் மற்றும் ஆழமான பகுதிகளுக்கு செல்லும் நீண்ட தூர பீரங்கிகள் போன்ற பல ஆயுதங்கள் அங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளன.கிட்டத்தட்ட 40,000 படைவீரர்கள் அங்கு குவிக்கபட்டு உள்ளதால்  அங்கிருந்து பின்வாங்கும் எந்தவிதமான அறிகுறிகளையும் சீனர்கள்  காட்டவில்லை" என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. மேற்கோளிட்ட ஆதாரங்கள் கூறுகின்றன.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/23063456/China-Backtracks-40000-Troops-Still-Present-Some-Problem.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லடாக்கில் இருந்து சீனா முழுமையாக படைகளை விலக்கும் என்று எதிர்பார்க்கிறோம் இந்தியா கருத்து

லடாக்கில் இருந்து சீனா முழுமையாக படைகளை விலக்கும் என்று எதிர்பார்க்கிறோம் இந்தியா கருத்து

லடாக்கில் சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் தொலைபேசி மூலம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, மறுநாள் 6-ந் தேதி, இரு நாட்டு படைகளும் பின்வாங்கத் தொடங்கின.

இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளாக செயல்பட்ட அவர்களது பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டி, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது, படைகளை முழுமையாக பின்வாங்கச் செய்வது என்றும், அமைதியை நிலைநிறுத்துவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எல்லையில் அமைதியை கடைப்பிடிப்பதுதான், சீனாவுடனான இருதரப்பு உறவுக்கு அடிப்படை ஆகும். எனவே, லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக பின்வாங்கச் செய்வதில் சீனா உண்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பதற்றத்தை தணிப்பதுடன், எல்லையில் அமைதியை முழுமையாக நிலைநிறுத்தும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

எல்லைக்கோட்டை மதிக்க இந்தியா முழுமையாக உறுதி பூண்டிருப்பதாக ஏற்கனவே இந்தியா தெளிவாக தெரிவித்துள்ளது. எல்லை கோட்டில் ஏற்கனவே இருந்த நிலையை தன்னிச்சையாக மாற்றும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24025536/IndiaChina-standoff-updates-Modi-govt-imposes-restriction.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லையில் பின்வாங்காமல் ஏமாற்றும் சீனா; சீனாவுக்கு எதிராக மத்தியஅரசின் சில புதிய வர்த்தக விதிகள்

எல்லையில் பின்வாங்காமல் ஏமாற்றும் சீனா; சீனாவுக்கு எதிராக மத்தியஅரசின் சில புதிய வர்த்தக விதிகள்

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கோங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 14-15 தேதிகளில் கடைசி சுற்று இராணுவ பேச்சுவார்த்தையின் போது  இரு தரப்பினரும் படைகள் வாபஸ் பெறும்  செயல்முறையை பரஸ்பரம் கண்காணிக்க ஒப்புக் கொண்டனர். 

இப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர இடங்களுக்குச் செல்வார்கள் என்ற உடன்படிக்கை இருந்தபோதிலும், சீன படைகள் லடாக்கின் சில பகுதிகளிலிருந்து இன்னும் வெளியேறவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன.

இதை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அடிப்படையில் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் வர்த்தகர்களுக்கு இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை சீன நிறுவனங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

எந்தவொரு கொள்முதல் - பொருட்கள் அல்லது சேவைகள் (ஆலோசனை சேவைகள் மற்றும் ஆலோசனை அல்லாத சேவைகள் உட்பட) அல்லது தயாரிப்புகளுக்கு(ஆயத்த தயாரிப்பு ஆடைகள் உட்பட) இந்த உத்தரவு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31 வரை கொரோனா பாதிப்பு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மருத்துவப் பொருட்களை வாங்குவது உட்பட. வரையறுக்கப்பட்ட சிலவற்றில் விதிவிலக்குகள் செய்யப்பட்டுள்ளன - 

கடன் வரிகளை விரிவுபடுத்தும் அல்லது அபிவிருத்தி உதவிகளை வழங்கும் நாடுகளுக்கு முன் பதிவு செய்வதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், சீன தயாரிப்பு பயன்பாடு பொருட்களை அரசாங்கம் தடுத்தது, அதில் மிகவும் பிரபலமான டிக்டாக் செயலிகள் உள்பட 59 செயலிகள் ஆகியவை அடங்கும்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24063009/Amid-Problem-Areas-In-Chinas-Ladakh-Pullback-Centres.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.