Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகென்ற சொல்லுக்கு
முருகா

முருகா... முருகா... ஆ...

அழகென்ற சொல்லுக்கு
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

சுடராக வந்த வேல்
முருகா கொடும்
சூரரைப் போரிலே வென்ற
வேல் முருகா
சுடராக வந்த வேல்
முருகா கொடும்
சூரரைப் போரிலே வென்ற
வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த
முருகா
கனிக்காக மனம் நொந்த
முருகா
முக்கனியான தமிழ் தந்த
செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

ஆண்டியாய் நின்ற வேல்
முருகா
உன்னை அண்டினோர்
வாழ்விலே இன்பமே
முருகா
ஆண்டியாய் நின்ற வேல்
முருகா
உன்னை அண்டினோர்
வாழ்விலே இன்பமே
முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் உன்னை
அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

குன்றாறும் குடிகொண்ட
முருகா
பக்தர் குறை நீக்கும்
வள்ளல் நீ அல்லவோ
முருகா
குன்றாறும் குடிகொண்ட
முருகா
பக்தர் குறை நீக்கும்
வள்ளல் நீ அல்லவோ
முருகா
சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத
தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

ப்ரணவப்பொருள் கண்ட
திருமுருகா
பரம் பொருளுக்கு
குருவான தேசிகா முருகா
ப்ரணவப்பொருள் கண்ட
திருமுருகா
பரம் பொருளுக்கு
குருவான தேசிகா முருகா
அர ஹரா ஷண்முகா முருகா
அர ஹரா ஷண்முகா முருகா
என்று பாடுவோர்
எண்ணத்தில் ஆடுவாய்
முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

அன்பிற்கு எல்லையோ
முருகா
உந்தன் அருளுக்கு
எல்லை தான் இல்லையே
முருகா
அன்பிற்கு எல்லையோ
முருகா
உந்தன் அருளுக்கு
எல்லை தான் இல்லையே
முருகா
கண்கண்ட தெய்வமே
முருகா
கண்கண்ட தெய்வமே
முருகா
எந்தன் கலியுக வரதனே
அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

முருகா... முருகா...
முருகா...

 

  • Replies 2.9k
  • Views 227.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதீனத்து மண்ணில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இதயம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்
மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்

முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்
பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலும்

செங்கோடன் மயூரமுமே முருகா முருகா

தித்திக்கும் தமிழை எடுத்து பக்திச் சுவையே தொடுத்து
நின் திருவடியில் மலரென சொரிவேன் குருநாதா

சிந்தும் புகழ் ஆயிரம் பாடல் சந்தம் தனில் கானம் செய்வேன்
சிவ சரவணபவ சண்முகனே வடிவேலா

முருகாற்றுப்படையும் சொல்வேன் சிவபாலா
மயிலினில் வருவாய் குருநாதா

நீலமயிலும் கோலமாக நடனம் செய்திடுமோ
பாலனே உன் பேரையே பாட ஆடிடுமோ

தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா
தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா

அருளென்னும் மழையைத் தூவும்
முருகென்னும் இளமை மேகம் மையனே நீ மையனே

கிரிநாத புகழில் வாழும் குருநாதா
சரவணபவ சண்முகனே வடிவேலா

சேவற் கொடியும் வேலும் கையில் ஆடல் செய்திடுமே
நாவலா உன் நாமமோ இனிமை பெய்திடுமே

ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய்
ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய்

அருணாசலன் ஆடல் கண்டார்
முருகா உன் ஆடல் காண கூடுவார் இசை பாடுவார்

வயலூரில் வடிவம் காட்டிய குருநாதா
வண்ணம் அருளிய சிவபாலா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்தியால் யான் உனைப் பலகாலும்
பற்றியே மா திருப்புகழ் பாடி

முத்தனாமாறெனைப் பெரு வாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே

உத்தமதான சற்குணர் நேயா
ஒப்பிலா மாமணிக்கிரி வாசா

வித்தகா ஞான சத்தினி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குதம்பாய்
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் 
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் 
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை 
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.

தாவார மில்லை தனக்கொரு வீடில்லை 
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.

என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி 
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.-
குதம்பை சித்தர்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ணா! முகு! 
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்த்தன கம்சனி தூஷன
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா 
குவலய தள நீலா கோபாலா 
குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையில்லா இறைவனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யனே அய்யனே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்பதை கொடுப்பவனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை வனம் நிற்கும் தாயே....
கர்ப்பரட்சாம்பிகை எம்மை காத்தருள்வாயே....
தீர்த்தக்கரை அழகு வாவி
திகழும் சிவகாமதேவனின் மேனி அமர் தேவி...
கேட்கின்ற வரம் யாவும் தருவாய்....தருவாய்...
வரம் யாவும் தருவாய்....
எங்கும் பூக்கின்ற கற்பத்தைக் காத்தருள வா நீ.....

போற்றுதலை ஏற்கின்ற தாயே..
தெய்வ பொருள் யாவும் காக்கின்ற ஸ்ரீ சக்ரமாயே....
ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே..
எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே....

அகிலம் வளர்க்கின்ற தாயே எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயைவு தரும் மாயே....
முகிலிலிருக்கும் ஒரு குளிராய் கருணை முழுவதும் பொழிகின்ற கருகாவூர் தாயே...

சந்தன காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்....
வந்தனம் தரிசனம் யோகம்     ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசய தோற்றம்....

பலம் யாவும் தருகின்ற உருவாய் புண்ணிய வாச பேயம் போன்ற வேள்வியில் எழுவாய்.....
விழுகின்ற கருவிற்கு காப்பாய்.
அன்று வேதிகைக்கு அருள்செய்து வேண்டுதலை ஏற்றாய்....

மழலைகள் தொடுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்ப்பத்தைக் காக்கின்ற சீலம்..
அழகுமுகம் ஆனந்தமாகும் வானின் அமரர்க்கு உன் தாளே சரண மலர் பாதம்....

உற்சவ தேரினில் ஏறி                வீதி ஊர்வலம் செல்கின்ற உலகிதன் தேவி....                 பற்பல வாத்தியம் முழங்க.... அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற தேவி....

அன்னை உன் ஸ்தோத்திரம் பாடும்....                                   உள்ளம் அகிலத்தில் பாக்கியம் யாவும் கொண்டாடும் 
சன்னதியில் வந்துன்னை தேடும் அந்த சங்கதி வளர்ந்தோங்கும் சந்தோசம் கூடும்......

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகரத்தமிழ் ஒலி முறை போற்றி 
முருகா முருகா ஓம் முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகிலங்கள் அனைத்தினையும்... படைத்தாளும் யா அல்லாஹ் | தேரிழந்தூர் தாஜுதீன்

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ் || நெல்லை அபுபக்கர் | இஸ்லாமிய பாடல்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ வானம்!பூமி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விநாயகரின் பெருமை சொல்லும் பாடல்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வற்றட பேய்கி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் உயிரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெய கோவிந்தா ஜெய் கோபலா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவே குருவின் குருவே சரணம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடறினும் தளறினும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 

ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம்

முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்!

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம் 
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் 

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம் 

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம் 

சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம் 

ராக பந்தனம் சுவாமி ராச லீலகம் 

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் ஹரி ஓம் 
 
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
கருடவாகன கிருஷ்ணாகோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

சுஜனபாந்தவா கிருஷ்ணா சுந்தராக்ருதே
மதனா கோமளா கிருஷ்ணா மாதவாஹரி
வசுமதிபதே கிருஷ்ணா வாசவனுஜா
வரகுணாகரா கிருஷ்ணா வைஷ்ணவா க்ருதே

சுருசிராணன கிருஷ்ணா ஷௌர்யவாரிதி
முரஹராவிபோ கிருஷ்ணா முக்திதாயக
விமலபாலக கிருஷ்ணா வல்லபிபதே
கமலலோசன கிருஷ்ணா காம்யதாயக


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா


விமலகத்ரனே கிருஷ்ணா பக்தவத்சலா
சரணபல்லவம் கிருஷ்ணா கருணகோமளம்
குவலஈஷன கிருஷ்ணா கோமளாக்ருதே
தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷரனமாஸ்ரையே


புவனநாயககிருஷ்ணாபாவனக்ருதே
குனகநோஜ்வலகிருஷ்ணாநளினலோச்சனா
ப்ரனயவாரிதேகிருஷ்ணாகுணகனாகர
தாமசொதரகிருஷ்ணாதீனவத்சலா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

காமசுந்தரா கிருஷ்ணா பாஹிசர்வத
நரகநாசன கிருஷ்ணா நரசஹாயக
தேவகிசுதா கிருஷ்ணா காருண்யம்புதே
கம்ஸநாசன கிருஷ்ணா துவாரகஇஸ்தித


பாவணத்மகா கிருஷ்ணா தேஹிமங்களம்
தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷ்யாம கோமளம்
பக்தவத்சலா கிருஷ்ணா காம்யதாயாக
பாலி சென்னணு கிருஷ்ணா ஸ்ரீஹரிநமோ


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

பக்ததாசன கிருஷ்ணா ஹரசுணீ சதா
காடுநிந்தென கிருஷ்ணா சலஹியாவிபோ
கருடவாகனா கிருஷ்ணா கோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
கருடவாகன கிருஷ்ணா கோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா 

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி 

    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கரக்கது ராமாரே
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    
    
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி


    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.