Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி .

 

  • Replies 2.9k
  • Views 227.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவை காண்போம்  இயேசுவை காண்போம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கர்த்தர் என் மேய்பரா இருக்கிறார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழைக்க அழைக்க வருவான் வேலாயுதன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரம் தருவாய் அம்மா

 

நாதர்முடி மேல் அமர்ந்திருக்கும் நல்ல பாம்பே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
 மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
 ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
 அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

 யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
 அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
 யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
 அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
 யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
 பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
 பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
 பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
 சேரும் சபையறிந்து செல்லாதவன்
 சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
 தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
 யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
 அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

 கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
 காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
 காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
 சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமால் பெருமைக்கு நிகர் ஏது ? 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லா அல்ஹம்துலில்லா... எல்லா புகழும் அல்லா || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS | ALLAH

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடிப் பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா

1. என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னைக் கூவி அழைப்பேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாய்மடி சேரும் சேய் போல ஓடிவருவேன்
எனையன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்
எனையென்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான்
நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்

2. என் நிலை பாதை மாறும் வேளை
வாசல் தேடிவருவேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாகம் கொண்ட மான் போல ஓடிவருவேன்
என் வழித்துணையாய் ஆன தெய்வம் நீதான்
எனையென்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்
நான் பேசும் மொழியில் அகர னகரம் நீதான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனின் வானக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்
இறைவனின் வா…னக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்

எந்தன் நாவில் தினம் வந்திடுவா..ர்
எந்தன் நெஞ்சில் என்றும் தங்கிடுவா..ர்
உந்தன் அன்பில் தினம் வளர்ந்திடுவே..ன்
உன்னில் இன்பம் என்றும் நிலைத்திடுவே..ன்
திருவிருந்தே… தேனமுதே…
திருவடி பணிகின்றே…..ன்
திருவிருந்தே… தேனமுதே…
திருவடி பணிகின்றே….ன்
மலராக மலர்ந்து வந்தேன்
மனதினிலே.. பூஜை செய்வேன்
பூஜை செய்வேன் பூஜை செய்வேன்
இறைவனின் வானக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ….
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்


விண்ணின் அருள் என்னில் பொழிந்திடுவா..ர்
கண்ணின் மணி என்னை காத்திடுவா..ர்
அன்பின் பாடல் என்றும் இசைத்திடுவே…ன்
என்னில் தெய்வம் என்றும் மகிழ்ந்திடுவே.ன்
தினம் தினம் நா….ன் வருகின்றேன்
விருந்தினில் மகிழ்கின்றே…ன்
தினம் தினம் நா….ன் வருகின்றேன்
விருந்தினில் மகிழ்கின்றே…ன்
மலரோ டு மகிழ்ந்து வந்தேன்
மனதினிலே.. பூஜை செய்வேன்
பூஜை செய்வேன் பூஜை செய்வேன்
இறைவனின் வா..னக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்
இறைவனின் வா…னக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓசை ஒலியெலாமானாய்..
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை    : ஆறாம் திருமுறை
பண்              : திருத்தாண்டகம்
நாடு              : சோழநாடு காவிரி வடகரை
தலம்             : திரு ஐயாறு

ஓசை ஒலியெலா மானாய் நீயே
 உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
 மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
 பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
 திருவையா றகலாத செம்பொற் சோதீ.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ இருக்க எனக்கு பயமேது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகூர் தர்கா கந்தூரி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லைலதுல் கத்ர் தௌபாவும் துஆவும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்

2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா

பாசம் அகன்றதய்யா-பந்த....
உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகும் தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன் க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன் ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் 

பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன் ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன் பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன் ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன் த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன் த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன் ம‌ன‌ம்பித்தானாலும் முருக‌ன் 

அருளால் முத்தாவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன் 

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் த‌னி உயிரானாலும் முருக‌ன் அருளால் ப‌யிராவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன் ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் முருகா முருகா முருகா முருகா முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களைப் பாடியவர்கள் திருமதி மும்பை ஜெயஸ்ரீ மற்றும் திருமதி.வித்யாவும். இருவருமே வயலின் மேதை திரு லால்குடி ஜெயராமனின் சீடர்கள்.
ராகம் :தன்யாசி தாளம் : ரூபகம்
பல்லவி
பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கு இடரில்லை
வரகுண பாலகிருஷ்ணன் பாதமலர்.....
அனுபல்லவி
நீலமுகில்போலழகன் நிறைமதி வதனமதனில்
இளநகை நிலவருள் ஒளி தவழும்....... (பாலகிருஷ்ணன்)
சரணம்
கோகுலம் பிருந்தாவனம் யமுனாவிஹாரி கோபாலன்
கோபிஜன மன மோஹன முரளி கான விலோலன்
வியாகுலம் தவிர்த்து அன்பர் மனதில் வாழ் கருணாளால பாலன்
மழை தடுக்க கோவர்தனமலை எடுத்த திண்தோளன்
பிழைபொறுத்தருள் தயாளன் பிரமன் பணி மலர்த்தாளன்...(பாலகிருஷ்னன்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாஅல்லாஹ் யாரசூல்லாஹ்(ஸல்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி மைந்தா பாலகுமாரா சிங்காரவேலா செந்தில்நாதா
பைந்தமிழ் தந்த எங்களின் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா
கூர்மதியோனே குன்றுறை தீரா சிங்காரவேலா செந்தில்நாதா
குரவள்ளியோடு நின்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
மாமயிலேறி வந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
மங்களம் என்றும் சேர்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
சேவற்கொடியைத் தாங்கிய தேவா சிங்காரவேலா செந்தில்நாதா
சிந்தையில் வந்து நின்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
ஓமென்றுரைத்த ஓங்கார நாதா சிங்காரவேலா செந்தில்நாதா
அள்ளித்தருவாய் ஆனந்தம் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
நீயிருந்தாலே நெஞ்சினில் வீரம் சிங்காரவேலா செந்தில்நாதா
ஊரிடுமய்யா உமையின் பாலா சிங்காரவேலா செந்தில்நாதா
ஞாயிறும் நீயே திங்களும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
நாளும் உன்னை பணிந்திடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா
வேலவன் நீயே வேண்டுதல் கேட்டு சிங்காரவேலா செந்தில்நாதா
பேரருள் தன்னை தந்திடுவாய் சிங்காரவேலா செந்தில்நாதா
மாலவன் மருகா மயில்வாகனனே சிங்காரவேலா செந்தில்நாதா
சங்கடம் தீர்க்கும் சண்முகவேலா சிங்காரவேலா செந்தில்நாதா
கண்டவர்ப் போற்றும் கதிர்வேலவனே சிங்காரவேலா செந்தில்நாதா
உன்பதம்நாடி வந்தோமய்யா சிங்காரவேலா செந்தில்நாதா
அறுமுகன் நீயே அழகனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
அன்பரின் உள்ளம் அறிந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
திருமுகம் காட்டி அருள்செய்வாயே சிங்காரவேலா செந்தில்நாதா
தீந்தமிழ் பாடல் நீ தருவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
கரும்பாய் வாழ்வை மாற்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
கருணை என்மேல் காட்டிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
பிரம்மனும் போற்றும் பிள்ளையும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பேரறிவாளன் செல்வனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
ஒளவையின் முன்னே வந்தான் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
அருந்தமிழ் அள்ளித் தந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
கங்கையின் மைந்தா கார்த்திகை பாலா சிங்காரவேலா செந்தில்நாதா
காத்தருள்வாயே செந்தமிழ் வேலா சிங்காரவேலா செந்தில்நாதா
சங்கரன் ஈன்ற சரவணபவனே சிங்காரவேலா செந்தில்நாதா
சகலரும் போற்றும் சண்முகநாதா சிங்காரவேலா செந்தில்நாதா
பங்கயப் பூவில் கண்மலர்தோனே சிங்காரவேலா செந்தில்நாதா
பக்தருக்கென்றும் அருள்செய்வோனே சிங்காரவேலா செந்தில்நாதா
சுப்ரமணியன் சூரனை வென்றோன் சிங்காரவேலா செந்தில்நாதா
சோதனையாவும் தீர்ப்பவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
செப்பிடவந்தோம் உந்தன் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா
செப்பிடும்போதே செந்தேன் ஊரும் சிங்காரவேலா செந்தில்நாதா
வேழவன் தம்பி வேலவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
வேண்டியதெல்லாம் தந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
அறுபடையில் வீற்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
அன்பரின் நெஞ்சில் வாழ்ந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
காரிருள் தன்னை நீக்கிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
காவல் தந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
வீறுடன் நின்ற வீரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
வெற்றியளிக்கும் சூரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பாடிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா
பாடிட வைத்த தெய்வமும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பன்னிருக்கண்கள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பாவம் தீர்க்கும் பாலனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பன்னிருக்கைகள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பணிந்தோமய்யா காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
எண்ணியதெல்லாம் ஈடேறவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
இதயம் தானே குளிர்ந்திடவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
மண்ணிடை வாழ்க்கை சிறந்திட வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
மால்மருகா உன் கருணை வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
உன்வடிவழகைப் பார்த்திருப்போமே சிங்காரவேலா செந்தில்நாதா
உன்னடியென்றும் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா
சேனாபதியே செவ்வேல் கோவே சிங்காரவேலா செந்தில்நாதா
சீருடன் வாழ செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
வீணாய் போகும் வாழ்நாள் தன்னில் சிங்காரவேலா செந்தில்நாதா
வெற்றிகள் காண செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
தேனாய் எங்கள் நாவில் ஊறும் சிங்காரவேலா செந்தில்நாதா
திருமுருகா உன் இனிக்கும் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா
தானாய் வந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
தயவுடன் எம்மைப் பார்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
ஏனோ இன்னும் மௌனம் அய்யா சிங்காரவேலா செந்தில்நாதா
என்றும் உன்னைப் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா
பிள்ளைத்தமிழில் வாழும் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா
பிணிகள்த் தீர்க்கும் வல்லமையோனே சிங்காரவேலா செந்தில்நாதா
கன்னித்தமிழில் கலந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
கதிராய் வந்து ஒளி தருவோனே சிங்காரவேலா செந்தில்நாதா
தீவினையாவும் தீர்த்திடுவோனே சிங்காரவேலா செந்தில்நாதா
தெள்ளுத் தமிழின் உள்ளிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
சோர்வினை நீக்கும் சுந்தர பாலா சிங்காரவேலா செந்தில்நாதா
சொல்லிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா
ஆறுமுகத்தோன் நீயிருந்தாதாலே சிங்காரவேலா செந்தில்நாதா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் தீபம் காதில் கேளும்
கருணை நபியே கல்பில் வாரும்
[தேடித் தேடி பாடும் குரலோ] (2)
பாலை மணலை தாண்டி வருதோ
மதினா வரமாய் சுமக்கும் மேனியே!

அழகும் தோற்க்கும் அற்புதம் வியக்கும்
உங்கள் முகம் கண்டால்
உலகம் சுழலும் உன்னத நபியின் அற்புதப் பேரொளியால்

கண்ணில் வைத்துக் காத்திருப்பேன் கண்மணியின் காட்சியதை
கல்பில் சுமக்க காத்திருப்பேன் என் மரணம் எய்தும் வரை
சுந்தர நபியின் சந்திர முகத்தை ரசித்திட உயிர்த்திருப்பேன்
உத்தம நபியின் வழிமுறை அதனை உயிராய் பற்றிடுவேன்

எந்தன் உயிரே !  விண் மறைச்சுடரே !
என் கருவிழியே !  என் கல்பாளரே !

(அழகும் தோற்க்கும்)

தோன்றிய உலகின் உயிர்கள் யாவும் நபி புகழ் பாடிடுமே
நபியின் புகழை மறக்கா வரையில் உலகம் இயங்கிடுமே
வாடிய மனமும் வாஞ்சை நபி முகம் கண்டால் மலர்ந்திடுமே
உன்னத நபியின் சொற்கள் அனைத்தும் அற்புத சாஸ்த்திரமே

(அழகும் தோற்க்கும்)
 
உயிரின அலைகள் அனு தினமாக என் மனக் காதல் உயிலை தொடுத்திடுதே!
உணர்வும் துடித்திட தடமாறிப்போகிடும்
குழந்தை தாய்கரம் ஏற்றிடும் ...
தாயென்றும் நீரே தவித்திடும் போதே!
தெளிந்திட கரம் கொடுப்பீர் நபியே!
இறையிடம் நானும் இறைஞ்சிடும் நேரம் ...
பிழைத்திட பரிந்துரைப்பீர் நபியே!
பிழையாக நான் செய்யும் பாவங்கள் என்னை சூழும்...
உயிராக உம்மீதில் நான் கொள்ளும் அந்த நேசம்
[உயிரே அந்த நேசம் உரையாய் வந்து பேசும்] (2)
[என்னை காத்திட கரம் பிடிக்கும்] (2)

ஜொலிக்கும் ஜோதியைக் கண்டிடுவோம் கண்மணியின் புகழ்படித்தே
ஹவ்துல் கவ்ஸரில் பருகிடுவோம் நம் நாயகம் கரம் பிடித்தே
ஜன்னத்தில் இடத்தை உன்னத நபியின் அருகினில் பெற்றிடுவோம்
சுவனத்தில் யாவரும் சுகமாய் வாழ்ந்திட பொன்நபி உடன் வேண்டும் 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
எளியவர் வாழ்வில் துணைநின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

 மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
விண்ணில் பொருளை தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில்
அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில்

தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும்
நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும்

முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா

மூன்று தமிழ்மலராலே தேன் சிந்தும் கவிமாலை
நான் சூட்ட அவன் தந்தான் இசை பாடலே

கனிவேண்டி மலை நின்றான் கனித்தந்து தமிழ் உண்டான்
அவன் செய்யும் செயல்யாவும் விளையாடலே

இலகாத  கல்நெஞ்சும் இலகும்படி செய்து
இளநீரில் அபிஷேகம் ஏற்கின்றவன்

மலைதோறும் தேன்கொண்டு அபிஷேகம்தான் செய்ய
நிறைவான அருளாசி புரிகின்றவன்

வண்ணசேவல் கொடியாட காற்சலங்கை சுழன்றாட
சிவசண்முக வேலனின் பொன்முகம் கண்டதும்

வேலேந்தும் பெருமானை ஆராதனை செய்ய
தீராத வினையெல்லாம் தீர்க்கின்றவன்

திருநீறுதனை பூசி முருகா என்றழைப்போர்க்கு
சீரான செல்வங்கள் சேர்கின்றவன்

பழியொன்றும் வாராமல் மலர்ப்பாதம் பணிவோர்க்கு
வழியெல்லாம் துணையாக வருகிறவன்

படியேறி சிரம்தாழ்ந்து புகழ்பாடும் அடியார்க்கு
மறவாமல்த் திருக்காட்சி தருகின்றவன்

குளிர்பொய்கையில் நீராடி நறுசந்தனமே சூடி
அந்த படைவேல் செம்மலை பணிவுடன் வணங்கி

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.