Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்

கடலும் வானும் அவனே என்பதைக்
காட்டும் குருவாயூர்க் கோலம்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு
மாலைகள் இடுவார் குறை ஓடி

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்
மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதீனத்து மண்ணில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன மோகனா…
ஆஆ மன மோகனா… ஆ
ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ

விடை பெற்று
வாராய் காசி மதுர விடை
சொல்ல வாராய் வாழ்க்கை
புதிரா

நீயின்றி சுயம்
வரமா கார்முகில் வண்ணா
வாராயோ கண்ணா கோதையின்
குரலை கேளாயோ

                      துவாரகனே
இருளும் ஒளியும் இரு
விழி அருகே துரத்திடுதே
இருதயத்தில் துணையாக
நீ இருக்க மாட்டாயா

                  இரு வழிகள்
சந்திக்கும் இடத்தில்
கால்கள் ரெண்டும்
குழம்பிடுதே என்
பாதை சொல்வாயா

தேவகியின்
நாதலாலா திசை ஏது
சொல்வாயா

 பிருந்தாவன
நந்தகுமாரா சகியின்
வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா
நகம் போல பிரிவாயா

 நவனீதா முரளி
மனோகரா நங்கையின்
மனதை புரிவாயா
புறக்கணித்தே செல்வாயா

என்சோகங்கள்
தீர்ப்பாயா நீ ராகங்கள்
தீர்ப்பாயா

 மன மோகனா ஆஆ
மன மோகனா ஆஆ ஆ மன
மோகனா ஆஆ மன மோகனா
ஆஆ ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ

புருஷோத்தமனே
உன் உதட்டில் புல்லாங்குழலாய்
தவழ்வேனா உன் சுவாச காற்றாகி
உயிர் பெற்று வாழ்வேனா

 பார்த்திபனே உன்
பார்வையிலே பார் கடல்
அமுதம் பெறுவேனா பசி
தாகம் மறப்பேனா கோகுல
தோட்டத்திலே கோபியர்
ஆவேனா

 வாழ்க்கை என்னும்
கடலில் தினமும் வலையின்
மேலே அலை அடிக்க இதயம்
என்னும் படகு அதில் தடுமாறி
மோதிடுதே

 தூயவனே துடுப்புகள்
போட்டு கரையினில் ஏற்றி
விடுவாயா நடு கடலில்
விடுவாயா வசீகரா
மன்னவனே என் வேதனை
தீராயோ

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
 மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
 பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
 வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம் மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில் தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதனின் ஆலோசனை வீணானது
தேவனின் ஆலோசனை மேலானது

1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான்
தேவன் நிறுத்தி வைப்பார்
நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்
தேவன் நடத்தி வைப்பார்

2. அறிவினால் உன் பெலத்தினால்
நடத்திட முடியாது
ஜெபத்தினால் அவர் கிருபையால்
நடக்கும் தவறாது

3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்
மனதிலே எண்ணம் உனக்கு
நடந்ததும் இனி நடப்பதும்
இறைவன் மனக்கணக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே

பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என்

உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்

உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய்

வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்

மணியே, குரு மணியே, மாணிக்க மணியே

நடன சிகாமணியே என் நவமணியே, ஞான

நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே
வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட

மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த 

எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ 

இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ 

மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு 

மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ

கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் 

கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா முருகா முருகா

பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்
ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்
சிரகிரிவேலவன் சன்னிதியே
நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா முருகா முருகா

அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி
தேடினார் முருகனை கவசம் பாடி
ஆடினார் காவடி உன் பாதம் நாடி
நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி
முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா முருகா முருகா

சென்னிமலை மகிமை அற்புதங்கள்
அவை சொல்லி மாளாத அதிசயங்கள்
கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்
கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா
முருகா முருகா முருகா முருகா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஞ்சனையின் மைந்தா நமோ நமோ

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருளை நீக்கி மனம் தெளிய 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ?
இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே!

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன்
நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன்
நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்;
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ?
இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே!

3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்:
நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்:
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்:
சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந்
திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ?
இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே!

4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன்
சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்:
யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்:
ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே
அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ?
ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்!

5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்:
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே
தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்:
உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ?
இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆலிலைக் கண்ணா ஓடி வாராய்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
.
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ... 

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
.
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ... 

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
.
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ

மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ

அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேல்காவில் வாழும் தேவிபாடல்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீராடும் கண்கலோடு நெஞ்சம் இறை பாசத்தோடு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!![

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இல்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராகம்: நாட்ட குறுஞ்சி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்                

பால்வடியும் முகம் நினைந்து
நினைந்து உள்ளம் பரவசம் மிக வாகுதே 

நீலக்கடல் போலுன் நிறத்தழகா கண்ணா 
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு 
அன்று முதல் என்றும் சிந்தனை செய்யதொழிய (பால்வடியும்)

வானமுகத்தில் சட்று  மனம் வந்து நோகினும்
மோன முகம் வந்து தோணுதே 
தெளிவான தண்ணீர் தடத்தில் சிரித்த முகம் வந்து காணுதே 
கான குயில் குரலில் கருத்தமைந்திடினும் 
கான குழலோசை மயக்குதே 

கருத குழலோடு நிறுத்த மயிலிரகிருக்கி  அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோன குயில்பாடும் நீல நதி ஓடும் வனத்திலே
குழல் முதல் எழில் இசை குழைய வரும்
இசையின் குழலோடு மிளிரில கரத்திலே 
கதிருமதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே 
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே 
ஏன் மனதை இறுதி கனவி நனவினோடு பிறவி
பிறவி தோறும் கனித்துருக வரம் தருக (பால்வடியும்)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த வேலு வந்தாலும் காந்தவேலு முன்னாடி சரணம் சரணம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினாற் கண்ணிற் பணிவில் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
ஆஆஆஆஆஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹர ஹர சிவமாய் ஈஸ்வர லிங்கம்

அன்பே வடிவாய் அமர்ந்திட்ட லிங்கம்

ப்ரம்மா முராரியர் போற்றிடும் லிங்கம்

நிர்மல நல்ளொளி தேற்றிடும் லிங்கம்

கர்ம துக்க வினை நீக்கிடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

பவித்திர லிங்கம் பரமேஸ லிங்கம்

பசுபதி லிங்கம் பரமாத்ம லிங்கம்

பக்தியை தந்திடும் பரம லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

தேவர்கள் முனிவர்கள் போற்றிடும்
லிங்கம்

காமதகனக் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்பம ருத்திடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

பருவ லிங்கம் சுவரூப லிங்கம்

குபேர லிங்கம் குருபர லிங்கம்

முக்தியை தந்திடும் ஸ்ரீமூர்த்தி
லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

நினைப்பதை எல்லாம் கொடுத்திடும்
லிங்கம்

நினைப்பவர் உள்ளத்தில் ஜொலித்திடும்
லிங்கம்

நிரந்தர சுகம் தரும் நித்திய லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

பரப்ப்ரம்ம லிங்கம் சதாசிவ லிங்கம்

திகம்பர லிங்கம் ப்ராபகர லிங்கம்

நலம் பல செய்திடும் நாகேஸ லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

கனக மகாமணி பூஜைக்குள் லிங்கம்

மங்கல தாமரை மாலைக்குள் லிங்கம்

வஞ்சனை பாவம் அகற்றிடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வேதாந்த லிங்கம் நாதாந்த லிங்கம்

பரம லிங்கம் பிரணவ லிங்கம்

அச்சம் தவிர்த்திடும் அச்சுத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

தேவகனங்களும் போற்றிடும் லிங்கம்

தேயுறு பக்தியும் ஈவது லிங்கம்

சாம்பலின் தத்துவம் விண்ணூற்ற லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

காசி லிங்கம் கைலாச லிங்கம்

கற்பக லிங்கம் காயத்ரி லிங்கம் 

காற்றுருவாகிய வாயு லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வரங்களை கொடுத்திடும் ஸ்ரீ ஹர லிங்கம்

வந்தெம்மை காத்திடும் வடமகை லிங்கம்

சித்தி அளித்திடும் பவித்திர லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

கரியம லிங்கம் ஸ்ரீ வர்ம லிங்கம்

நாகலிங்கம் பூஜிதலிங்கம்

பித்துகள் போக்கிடும் பித்தளை லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அரூப லிங்கம் அருள்தரும் லிங்கம்

சுவரூப லிங்கம் சுவர்ண லிங்கம்

அன்பர்கள் மனதினில் அமர்ந்திட்ட
லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்

வில்வமதை மலர் மாலைக்குள் லிங்கம்

அன்புடன் அருளைக் கொடுத்திடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஜம்பு லிங்கம் தத்துவ லிங்கம்

சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்

சங்கடம் தவிர்த்திடும் சுந்தர லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

குங்கும சந்தன ஹேபித லிங்கம்

குறைகளைக் தீர்த்திடும் ஷோபித லிங்கம்

சஞ்சலம் தீர்க்கும் சதாசிவ லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஆத்ம லிங்கம் அருள் தரும் லிங்கம்

அபூர்வ லிங்கம் மாணிக்க லிங்கம்

இன்பத்தைக் கொடுத்திடும் ஈஸ்வர லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

எட்டொடு பத்தெனும் தத்துவ லிங்கம்

எனைத்துமாம் தோற்றமும் காரண லிங்கம்

எட்டெனும் வறுமைகள் நீக்கிடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஓங்கார லிங்கம் ஒளி தரும் லிங்கம்

சந்திர லிங்கம் சதாசிவ லிங்கம்

சுடரொளியான வினாசக லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வேதத்தின் சாரத்தை உணர்த்திடும்
லிங்கம்

வேண்டும் வரங்களை கொடுத்திடும் லிங்கம்

வலம்பெற வாழ்க்கையைத் தந்திடும்
லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்

இமய லிங்கம் ஈஸ்வர லிங்கம்

சிதையாத நெஞ்சினில் சிலையான லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

மொத்த சுகத்தையும் தந்திடும் லிங்கம்

புத்தி மிகுந்தருள் காரண லிங்கம்

சோதனை போக்கிடும் சோமநாத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஜலேஸ்வர லிங்கம் ஜகம் புகழ் லிங்கம்

பழ மழை லிங்கம் பார்புகழ் லிங்கம்

மகிமை புரிந்திடும் மண்ணு லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

மங்களம் அருளும் மாசற்ற லிங்கம்

ஐஸ்வர்யம் அளிக்கும் ஐஸ்வர்ய லிங்கம்

ஓங்கார வடிவாய் ஒலி தரும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

கலியுக லிங்கம் காரண லிங்கம்

சத்திய லிங்கம் நித்திய லிங்கம்

அமரரை காத்திட்ட அச்சுத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணைக் கடலாம் காதர் வலியின்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்

1. வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.