Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

முன்னோர்கள் செய்த
பாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

என் அன்னையே
சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

என் இல்லமே
சௌபாக்யம்தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்திய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

கனக வ்ரிக்-ஷமாய் தன மழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெறுக

தினகரன் கோட்டி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக

சங்கணினி முதல் நவநிதி தாராய்
கங்ஙனம் கையால் மங்களம் செய்தல்

குங்கும பூவாய் மங்கைய பாவை
வெங்கட்டரமணனின் பூங்கொடி வாராய்
 
அக்திகள் சொரியும், மண்ணையில் ஐஸ்வர்யம்
நித்த மஹாச்சவம், நித்ய மங்களம்

சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிரவார பூஜையில் இருந்து

அக்கறை யோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விதலனை அழைத்து

பாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...
என் இல்லமே, சௌபாக்கியம் தான் லட்சுமி வாரமும் அம்மா...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழலாக பிறப்பேனோ கண்ணா
உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன்
 மயிலாக பிறப்பேனோ கண்ணா 
உந்தன் மயிர்க்காலில் மயிலிறகாய் நடமாடுவேன்..
குயிலாக பிறப்பேனோ கண்ணா
 உந்தன் குழல் ஓசைக்கிசைவாக தினம் கூவுவேன் 
குழல் ஏதும் எனக்கில்லை கண்ணா 
எந்த பிறவியிலும் உன்னை எண்ணி உயிர் வாழ்வேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா 
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

சிவபெருமான் உந்தன் தந்தையல்லவோ 
பார்வதி அம்மா உன் தாயல்லவோ 
ஸ்ரீ கணேசன் உந்தன் அண்ணல்லவோ 
என்று பாடும் இந்த உயிர் உந்தன் பிள்ளை அல்லவோ  

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

கண்கள் உன்னை தேடும் வடிவேலவா 
எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா 

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா 
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா 

வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா 
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா 

ஓம் முருகா ஓம் முருகா 
சரவண பவ குக வடிவேலா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எட்டுக்குடி வேலோனுக்கு ஆடும் காவடி சேவல் காவடி.. பாடல் (அரோகரா)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அல்லா ஒருவனை இதயம் மகிழ்ந்தே போற்றிடுவோம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது

வெற்றி தரும் அதன் கையில் வேலிருந்தது
வில்லும் அதன் விழி எந்தன் மேலிருந்தது
நெற்றி திருநீறு பாலை போலிருந்தது
நீலமயில் மீதிலதன் காலிருந்தது | |

வண்ணமணி மார்பில் முத்து மாலை கிடந்தது 
வந்த கிண்கிணி ஓசை காதில் தொடர்ந்தது 
பொன்னான அதன் முகமோ பூவை வென்றது
போற்றும் எந்தம் பெயர் எதுவோ முருகன் என்றது | |

கண்களை நான் திறந்தேன் காட்சி மறைந்தது
கண்ட அந்த காட்சி அதன் ஆட்சி விரைந்தது
மண்ணுறங்கும் எனினும் எந்தன்  மனமுறங்கவில்லை
மயக்கும் அந்த முகத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்
சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது | |
கனவில் வந்தது முருகன்...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோகுல கண்ணன் தாலாட்டு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிள்ளையார் சுழி போட்டு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மஹாலக்ஷ்மி வருவாயே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருமுடிக்கட்டு சபரிமலைக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீன் வளர்க்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன்(2)

     என் பிரியமே நீ ஜெயங்கொள்ள
     சிலுவையில் வெற்றி சிறந்தேன்(2)

ஆதி அன்பை விட்டு
போனதும் ஏனோ?
என் மேல் கொண்ட பாசம்
குறைந்ததும் ஏனோ? (2)
விழுந்த நிலையை நினைத்து
ஆதி நிலைக்கு ஓடி வா!
ஜீவ கனியை புசித்து
நித்தம் என்னோடு வாழ வா! - என் பிரியமே


  அனலாய் நின்ற நீ
  குளிர்ந்தது ஏனோ?
  பாடுகள் வந்ததும்
  உடைந்தது ஏனோ? (2)
  சோதனையை  நீ சகித்து
  உண்மையாய் வாழ நீயும் வா
  ஓட்டத்தை ஓடி முடித்து
  ஜீவ கிரீடம்  சுட வா ! - என் பிரியமே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

தின்ன முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர்-இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்

துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்

மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.
                                                                                              (கண்ணன் பிறந்தான்)

சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்

பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

    இசை        சரணம் - 1

    தனித்திருக்கும் தாகம் கொண்டேன்
    தயவும் உனக்கு இல்லையோ
    பனித்த விழி நீரும் எந்தன்
    நிலையைக் கூறவில்லையோ
    இனியும் காலம் தாழ்த்தாமல்
    கனிவாம் பார்வை தர வேண்டும்
    பெரிதாம் பிறவி நோய் தீர்த்து
    இனி பிறவா வரமும் பெற வேண்டும்
    அந்தம் கடந்த ஆதியே
    உனைச் சொந்தம் என்று பாடினேன்
    அச்சம் தோற்றும் பூமியில்
    வினை மிச்சம் தொலைய நாடினேன்
    கோடி கோடி அடியவரில்
    நான் தான் கடைக் கோடி அய்யா

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

    இசை        சரணம் - 2

    உன் பெயரை ஓதும் யாரும்
    உயர்ந்த ஓர் பிறவியே
    தம் துயரைத் தீர்க்க எமக்கு
    கிடைத்த ஓர் கருவியே
    உன்னை தொழுதல் பெரும் பேறு
    செய்வேன் என்ன கைமாறு
    அய்யன் அருளைப் பெறுமாறு
    செய்தாய் அது என் அருட்பேறு
    உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும்
    நான் காணா நிலையும் ஆகுமோ
    என் உடலை தீபத் திரி ஆக்கி
    அதை எரித்தால் கூடப் போதுமோ
    என் பிதற்றல் பிள்ளை மொழி அல்ல
    ரமணன் விளக்கின் ஒளியன்றோ

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    மனது ஒன்று இருக்கிறதே
    எனது என்று தவிக்கிறதே
    எனது மனம் அழிந்திடவே
    அருள் புரிவாய் அருள் புரிவாய்

    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா
    அருண மலை குரு ரமணா
    கருணை அருள் விழி வதனா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்ன பயல் ஒருவன் செய்த செயல் என்னை கலக்கிடுதே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருளில் நிலவாக பிறந்தார்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

1.  உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி

2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி

3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ...
என் இயேசுவே...
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ...
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவபுராணம் - திருவாசகம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பண் -  நட்டபாடை                
திருச்சிற்றம்பலம்        
        
    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
    காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்        
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயே கருமாரி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தும்பிக்கை ஆண்டவனே 

 

Edited by உடையார்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.