Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாகூர் நாயகம் கந்தூரி விழா 2016

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பக்கீர் பாவா பாடல்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலல்லா...

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏர்வாடி : ஏகனே யா அல்லாஹ்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏழு ஸ்வரங்களில் இசைத்திட எனக்கு இறைவா உன் வரம் வேண்டும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

உன்னை நானே தெரிந்து கொண்டேனே
மகனே ......மகளே .....
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் --- வழியும்

. தாய் மறந்தாலும் நான் மறவேனே மகனே ...... மகளே.....
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை --- வழியும்

துன்பநேரம் சோர்ந்து விடாதே மகனே .... மகளே .....
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு --- வழியும்

தீயின் நடுவே நீ நடந்தாலும் மகனே..... மகளே ....
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய் --- வழியும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்

கடலும் வானும் அவனே என்பதைக்
காட்டும் குருவாயூர்க் கோலம்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு
மாலைகள் இடுவார் குறை ஓடி

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்
மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் . 4

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் . 8

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் . 12
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . 16

தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே. 24
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் . 28

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே. 32

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே . 36
இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். 40

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே . 44

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச். 48
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி . 52

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து . 56

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். 60
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 64

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி. 68

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே . 72

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோயில் மணியோசை கோலமயிலாட்டம்
கோபுரக்குயில் பாட்டும் மயக்குதம்மா மயக்குதம்மா

சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா . . .

அந்த சிரகிரி வேலவனை அழைக்குதம்மா
சிரகிரி வேலவனை அழைக்குதம்மா

அழைக்குதம்மா. . அழைக்குதம்மா . .
அழைக்குதம்மா. . நம்மை அழைக்குதம்மா . .

பால்காவடி பன்னீர்காவடி புஷ்பகாவடி
சந்தனகாவடி சர்ப்பகாவடி சேவற்காவடி

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .

கருணைப்பொழியும் கந்தன்
கந்தசஷ்டி கவச நாதன்

கடம்ப மலரினிலே அலங்காரம்
குளிர்தென்றலில் சந்தன மனம் வீசும்

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .
மயக்குதம்மா..  நம்மை மயக்குதம்மா. .

செவ்வந்திமலர்மாலை ஆதிபழநி வேலனுக்கு

சரவணபொய்கையிலே அபிஷேகம்
மனசஞ்சலம் நீங்கியே சந்தோஷம்

சென்னிமலையின் நாண்டி
அவன் கண் மலர்ந்து காப்பாண்டி

தேவியர் இருவருடன் வருவாண்டி
அந்த தேவர்குலம் காத்த வேலனடி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஶ்ரீ துவாரகாமாயி யோகீஸ்வரா
உன்வாசல் வந்தோமே ஷீரடீஸ்வரா
உன்ஞாபக அக்னி யோகேஸ்வரா
உன்கோலம் காண்கின்றோம் சாயீஸ்வரா
சாயீஸ்வரா ஷீரடி சாயீஸ்வரா
ஜன்ம வினை தீர்க்கின்ற ஷீரடீஸ்வரா

 ஷீரடி என்றால் முன் வினை தீரும்
சாயி நாதனை நம்மனம் சேர்க்கும்
சாயியின் நாமம் நன்மைகள் வார்க்கும்
சாயியின் பாதம் நற்கதி கூட்டும்

 குருவின் ஸ்தானம் குருவடி காட்டும்
தருவாம் மேற்படி குருவருள் கூட்டும்
அருளின் உருவம் சாயி மகேசன்
அதுவே அன்பரின் பக்தி நிவாசம் .

சாயீஸ்வரா ஷீரடி சாயீஸ்வரா
ஜன்ம வினை தீர்க்கின்ற ஷீரடீஸ்வரா

யோகீஸ்வரா ஷீரடி சாயீஸ்வரா
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாகூர் தர்காஹ் கொடி ஏற்றம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் வாழ்வின் வழி என் வழியின்  ஒளி
நீரே இயேசையா! - 2
என் வாழ்வின் வழி.. என் வழியின்  ஒளி...
என் வாழ்வெல்லாம் நீர் இயேசையா...
உயிரே இறைவா!... உன் அருளின்றி நானேது!! 

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
அருகினில் நீயிருப்பாய் பயமேயில்லை...
அன்பே இறைவா  துணையாய் வருவாய்!
உயிரே உறவே என் இறைவா!!...

கலைமான்கள் தேடுகின்ற நீரோடையாய்
என்னோடு நீயிருக்க தவிப்பேயில்லை ...
அன்பே இறைவா அரணாய் வருவாய்!   
உயிரே உறவே என் இறைவா!!...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருகா என்று அழைக்கவா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதிசேஷா அனந்த சயனா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் ஸ்ரீ லட்சுமி கணபதி 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜிலானி அப்துல் காதிர் ஜிலானி

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம் 

2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினத்தவர் முடிக்கும் - திருத்தணிகை திருப்புகழ் 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

 

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.