Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990…

 

எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….!


பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான்.

எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு.

விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது.

இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது மக்களினதும் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டது.

‘கடல் கண்காணிப்பு வலையம்’ என்ற பெயரில் தமிழீழக் கடல் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு வலையத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தமிழக் கடலில் நிரந்தரமாகச் சில கப்பல்கள் நங்கூரமிட்டன. இவை தாய்க்கபல்கள் அல்லது கட்டளைக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. சாதாரண சரக்குக் கப்பல்களைக் கடற் கண்காணிப்புக்கு ஏற்றபடி சிறு மாற்றங்களை செய்து, சில சாதனங்களையும் பொருத்தி அவற்றைக் கட்டளைக்கப்பல்களாக சிங்கள அரசு மாற்றியுள்ளது. றேடார் சாதனங்களும், சிறுரக பீரங்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் பணி, கடலில் தமிழர்களின் படகுகள் எவையாவது தென்படுகின்றனவா என்பதை வேவு பார்ப்பதும் அப்படித் தென்பட்டால் அந்தச் செய்தியை கடற்படையின் அதிவேக விசைப்படகுகளுக்கு அறிவித்து குறித்த படகுகளை முழ்கடிப்பதுமாகும்.

19959207_490630217942917_364126886576714இவ்விதம் இக்கட்டளைக் கப்பல்கள் தமிழீழக்கடலில் நங்கூரமிட்டபின், கடலில் பயணம் போன நூறுக்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிவீரர்கள் கடலிலே வீரச்சாவடைந்தனர். 14.04.1985 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கடலிலே தனது முதலாவது இழப்பைச் சந்தித்தது. அதில் 14 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான மீனவர்களும், பிரயாணம் செய்த மக்களும் கடலிலே பலியானார்கள். இந்த இழப்புக்களுக்கெல்லாம் யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கட்டளைக் கப்பல்களே மூலகாரணியாகும். “அபித்தா”, “எடித்தாரா” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று காங்கேசன்துறைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள கடலில் நிறுத்தப்பட்டிருக்கும்.

மற்றையது வெற்றிலைக்கேணிக்கு நேரே நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு கப்பல்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் விடுதலைப்புலிவீரர்களை இழக்க நேரிடும் என்பதுடன், போராட்டப் பணிகளும் பெருத்த சிரமங்களையும் தடைகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும்.

ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருக்கும் சிறிய படகுகளின் உதவியுடன் இக்கட்டளைக் கப்பல்களை அடித்து விரட்ட முடியாது. எனவேதான் கரும்புலித் தாக்குதல்கள் மூலம் அந்த, “கடல் திமிங்கிலங்களை” அகற்ற விடுதலைப்புலிகள் தீர்மானித்தனர்.

969331_607254469308057_2039821029_n.jpg10.07.1990 அன்று, வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த “எடித்தாரா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது, ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதில்  மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய  கரும்புலிகள்  பங்கேற்று கட்டளைகப்பலுக்கு சேதத்தை ஏற்ப்படுத்தி  வீரச்சாவடைந்தனர்

வெளியீடு – உயிராயுதம் பாகம் 01

https://www.thaarakam.com/news/141192

 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது - கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்

spacer.png

கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்

பர்ணாந்து சில்வெஸ்டர்

நறுவிலிக்குளம, மன்னார்.

 வீரப்பிறப்பு:05.12.1969

 வீரச்சாவு:10.07.1990

 

நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு

அவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலியாய் இருப்பது, இதற்க்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால், இவன் எங்கே…?

இவர்களுக்கே தெரியும், இவன் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும், காற்றிலும் இன்று கந்து வாழ்கிறான் என்பது. எனவேதான் இவனது தாய் தன துயரைத் துடைக்க பேரக் குழந்தைக்கு (மூத்த மகளின் மகனுக்கு) “கொலின்ஸ்” என்று பெயரிட்டு அழைக்கிறாள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும், துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக்கிடைத்த போது உணர முடிந்தது. 

அந்தச் சூழலில் அவனது வயோதிபத் தந்தை கூறினார்….

இவன் தம்பி, வலு கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். அவன் படித்துக் கொண்டிருந்த வேளை எங்கள் ஊரிலையும் சிங்கள ஆமிக்காரங்கள் சுத்தி வளைத்து கனபேரை பிடித்துக் கொண்டு போனாங்கள்.

அதனால் நாங்கள் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தம். இது இவனுக்கு சரியான கவலை. அவன் தம்பி, “ஆமியின்ர கையில பிடிபட்டு சாவதைவிட ஒரு ஆமிக்காரனைத் தானும் சுட்டுட்டு சாகலாம்” என்று சொல்லுவான்.

இவன் வெளிநாடு செல்ல விரும்ப இல்லை, சொன்னபடி இயக்கத்தில்தான் சேர்ந்தான். இது அங்கிருந்த தாயாரின் வார்த்தை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்தத் தந்தையாய் கூறத்தொடங்கினார்.

தம்பி இவன் விடுமுறை முடிந்து செல்வதற்கு முதல் நாள் தாயப் பார்த்து, அம்மா …. நான் இயக்க வேலையாக ஒரு இடத்திற்கு போக இருக்கிறன். இது முக்கியமான வேளை, இந்த வேலையின் உழைப்பு வீட்டிற்கு வராது, அது நாட்டிற்கு மட்டும்தான். என்று சொன்னான். நாங்கள் அப்போது அதனை பெருதாக கருதவில்லை.

ஆனால் கொலின்ஸ் அம்முறை ஊருக்கு வந்தபோது அவனுக்கு தனது சாவு…. அதன் திகதி கூடத் தெரிந்திருந்தது. வந்தவன் தான் படித்த பாடசாலை, பழகிய இடங்கள் எங்கும் சென்றான். கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தான்.

அவனோடு படித்த கூடித்திரிந்த நண்பன் இவனைப்பற்றிச் சொல்லும்போது ….

அண்ணை நாங்கள் ஒரு நாள் பொழுதுபடுகிற நேரம் சந்தி மதவடியில் கதைத்துக் கொண்டு நன்றனாங்கள். அப்ப கொலின்ஸ் எங்களைக் கண்டிட்டு வந்து மதவடியில இருந்து எங்களோட கதைத்துக் கொண்டிருந்தான். “நாட்டுக்காகச் சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது” என்ற கொலின்சின் வார்த்தை இப்பதான் எனக்கு விளங்குது….. என்றான்.

இந்த 21 வயது இளைஞன் கரும்புலி கொலின்ஸ். தன் சாவினால் இனத்திற்குச் சாதித்தது என்ன என்பதை சரியாக உணர வேண்டின் அவன் தன்னைத் தானே தற்கொடையாக்கிய 10.07.1990க்கு சற்று முன்னைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அங்கு வடமராட்சியைச் சார்ந்த பகுதியில் தன்கூரிய பார்வையைச் செலுத்தியபடி எதிரியின் பாரிய கப்பல் ஒன்று நிலைகொண்டு நிற்கிறது. அதன் ஆதிக்கக் கண்ணோட்டம் எங்கும் செல்லும். அது கடற்படைப் படகுகளுக்கு வேவு பார்க்கும் தகவல் கொடுக்கும். எமது படகுகளை, படகோட்டிகளை, ஊர்மனைகளை அழிக்கவும் அடக்கவும் அது உதவிகள் செய்யும். இதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் வடபகுதிக் கடற்கரைக்கு வருவோம்.

அங்கு….

“பொடியல் கரும்புலியாகிக் கப்பலை அடிக்கப் போறாங்களாம்” என கதை பரவுகிறது.

கரையில் வரிப்புலிச் சீருடைகளுக்கு நடுவில் கரியநிற சீருடை தரித்த மூவர். அச்சீருடையுடன் நின்றவர்களில் கொலின்ஸ் ஒருவன். கடலலை இந்த மூன்று கரும்புலிகளின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றது.

அக்கரிய இருளில் கையசைத்து கூடியிருந்தவர்களிடமிருந்து விடைபெறுவது தெரிகிறது.

படகு புறப்பட்டு……. பின் மறைகிறது.

கண்கள் கடலை ஊடுருவுகின்றன.

சிறிது நேரத்தில் கடலில் பெரிய ஒளிப்பிளம்பு அதோடு வெடியோசை

 அந்த உப்புக்காற்று அவர்களை அனைத்துக் கொண்டது.

 -வெளியீடு : உயிராயுதம் பாகம் 01

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/news/35c2b018-dffe-480d-9640-817b43adf576

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.