Jump to content

இந்த 11 ஓப்ஸ்களை நீக்கம் செய்குக - கூகுள் எச்சரிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்த 11 ஓப்ஸ்களை நீக்கம் செய்குக  - கூகுள் எச்சரிக்கை.!

googlejokermalware-1594444347.jpg

வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல், உஷார், எச்சரிக்கை என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செய்திகள் குவிந்துள்ளது. அப்படி இந்த பட்டியலில் தற்பொழுது புதிய மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் யோக்கர் என்ற மால்வேர் தற்பொழுது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உடனே இந்த ஓப்ஸ்களை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுங்கள்.
யோக்கர் மால்வேர் தாக்குதல்

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட்டின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஓப்ஸ் வழியாக ஸ்மார்ற் போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றொரு மால்வேர் தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யோக்கர் மால்வேர் என்ற மோசமான மால்வேர் மூலம் கூகிள் பிளேஸ்டோரில் உள்ள 11 ஓப்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

11 ஓப்ஸ்கள் கூகிளில் இருந்து நீக்கம்

பாதிக்கப்பட்ட 11 ஓப்ஸ்களையும் இந்நிறுவனம் அடையாளம் கண்டு கூகிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது. கூகிள் நிறுவனம் கொக்கெற் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்பொழுது பாதிக்கப்பட்ட 11 மொபைல் ஓப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்றோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் யோக்கர் மால்வேரால் கடந்த 2017 ஆண்டு தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யோக்கர் மால்வேர் தாக்குதலை தீவிரமாக கண்காணிக்கும் கூகிள்

அப்போதிலிருந்தே, கூகிள் நிறுவனம் யோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் யோக்கர் மால்வேர் தன் வேலையை ஒண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது. பிளே ஸ்றோரில் தற்பொழுது இந்த மால்வேர் 11 ஓப்களுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனே ரெலீட் செய்யுங்கள்

யோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 11 ஓப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஒப் உங்கள் ஸ்மாற் போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், இந்த ஓப்ஸ்களை செக் செய்துவிட்டு, உங்கள் போனில் இந்த ஓப்கள் இருந்தால் உடனே நீக்கம் செய்யுங்கள்.

யோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட ஓப்ஸ்கள்

    com.imagecompress.android - காம்.இமேஜ்கம்ப்ரெஸ். ஒண்ட்ராய்டு
    com.contact.withme.texts - காம்.காண்டாக்ட்.வித்மீ.டெக்ஸ்ட்ஸ்
    com.hmvoice.friendsms - காம்.எச்எம்வாய்ஸ்.பிரண்ட்ஸ்எம்எஸ்
    com.relax.relaxation.androidsms - காம்.ரிலாக்ஸ்.ரிலாக்சேஷன்.ஆன்ட்ராய்டுஸ்எம்எஸ்
    com.cheery.message.sendsms -காம்.சீரி.மெசேஜ்.சென்ட்எஸ்எம்எஸ் (இரண்டு வெவ்வேறு இன்ஸ்டன்சஸ்)

ரெலீட் செய்வது தான் ஒரே பாதுகாப்பு

    com.peason.lovinglovemessage - காம்.பேஷன்.லாவ்விங்லவ்மெசேஜ்
    com.file.recovefiles - காம்.பைல்.ரீகோவ்ஃபைல்ஸ்
    com.LPlocker.lockapps - காம்.எல்பிலாக்கர்.லாக்ஆப்ஸ்
    com.remindme.alram - காம்.ரிமைண்டமி.அலாரம்
    com.training.memorygame - காம்.ட்ரைனிங்.மெமரிகேம்

https://tamil.gizbot.com/apps/google-play-store-removes-11-apps-infected-with-joker-malware-uninstall-them-immediately-026080.html

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.