Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

Featured Replies

இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு மென்செஸ்டரில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில், ஒரு புள்ளியையேனும் பெற்றிராத மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளை பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் பட்டியலில் முதலாம் இடத்திலும், 296 புள்ளிகளைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 2 ஆம் இடத்திலும் உள்ளன.

புள்ளிகளுடன், நியூஸிலாந்து அணி 3ஆம் இடத்திலும், 146 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4ஆம் இடத்திலும், 140 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5ஆம் இடத்திலும் உள்ளன. இலங்கை அணி, 80 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும், தென்னாபிரிக்க அணி 24 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி புள்ளிகள் எதனையும் பெறாமல் 9ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://thamilkural.net/world/51670/

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd Test, West Indies tour of England at Manchester, Jul 16-20 2020
1.pngENG
(38.1 ov)
94/3 
4.pngWI
 

 

  • தொடங்கியவர்

காதலியை பார்க்காம இருக்க முடியலை.. சைலன்ட்டாக ஆர்ச்சர் செய்த காரியம்.. அதிரடி நீக்கம்.. கசிந்த தகவல்

 

 

மான்செஸ்டர் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே கடும் விதிகளை பின்பற்றி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணி வீரர்களும் இம்மி அளவும் விதிகளில் இருந்து விலகாமல், வெளி உலகுடன் தொடர்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனிடையே ஜோப்ரா ஆர்ச்சர் தன் காதலியை பார்க்க ரகசியமாக சென்று இருக்கிறார். அந்த தகவல் வெளியான நிலையில் அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளது இங்கிலாந்து. 

டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வரும் சூழலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. சௌதாம்ப்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது.

இரண்டாம் டெஸ்ட்

தொடரின் இரண்டாம் டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் நடைபெற இருந்தது. அதற்காக வீரர்கள் கடந்த திங்கள்கிழமை வந்து சேர்ந்தனர். அப்போது தான் இடையே ஜோப்ரா ஆர்ச்சர் தன் வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. விதிமுறைப் படி இரு அணி வீரர்களும் வெளி உலகத்துடன் தொடர்பின்றி இருக்க வேண்டும்.

தனியாக சென்ற வீரர்கள்

ஆனால், எப்படி ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் தன் வீட்டுக்கு செல்ல முடியும்? இங்கிலாந்து அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தங்கள் கார்களில் சௌதாம்ப்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லுமாறு கூறி இருந்தது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.

ரூட்டை மாற்றிய ஆர்ச்சர்

ஜோப்ரா ஆர்ச்சர் மான்செஸ்டர் வரும் வழியில் பாதையை மாற்றி சுமார் 120 மைல் தள்ளி உள்ள தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தன் காதலியை சந்திக்கவே அங்கே சென்றார் என ஒரு தகவல் வலம் வருகிறது. பின்னர் அங்கே இருந்து மான்செஸ்டர் வந்து சேர்ந்துள்ளார்.

வெளியான உண்மை

திங்கள் முதல் புதன் வரை அவர் வீட்டுக்கு சென்ற விஷயம் இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு தெரியவில்லை. வியாழன் அன்று இரண்டாவது டெஸ்ட் துவங்க இருந்த நிலையில், அதற்கு முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு சென்றது தெரிய வந்துள்ளது.

நீக்கம்

இதை அடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சாம் கர்ரன் அணியில் இடம் பெற்றார். ஆர்ச்சர் ஐந்து நாள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

வெ.இண்டீஸ் ஒப்புதல்

ஜோப்ரா ஆர்ச்சர் விதி மீறலை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் கூறி, வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து போட்டியில் பங்கேற்க ஒப்புதல் வாங்கி உள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகம். அதனால், இந்த பிரச்சனை பெரிதாகாமல் முடிந்தது.

விமர்சனம்

எனினும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் இங்கிலாந்து அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இரு அணி வீரர்களையும் அவர் ஆபத்தில் சிக்க வைத்து விட்டார் என குற்றம் சாட்டி வருகின்றனர். ஆர்ச்சர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் டெஸ்ட் துவக்கம்

ஆர்ச்சர் விவகாரம் முடிந்து இரண்டாவது டெஸ்ட் சிறிய மழைக்கு பின் துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் வென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.mykhel.com/cricket/eng-vs-wi-what-jofra-archer-did-to-breach-biosecurity-protocol/articlecontent-pf68559-020426.html

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
Stumps
2nd Test, West Indies tour of England at Manchester, Jul 16-20 2020
  • England
    ENG
    469/9d & 37/2 * (8 ov)
  • West Indies
    WI
    287
Day 4: England lead by 219 runs. CRR: 4.62
  • கருத்துக்கள உறவுகள்
LIVE
2nd Test, West Indies tour of England at Manchester, Jul 16-20 2020
1.pngENG
469/9d & 129/3d
4.pngWI
(15.2 ov, target 312)
287 & 41/4 
Day 5 - Session 2: West Indies need 271 runs. CRR: 2.67
  • தொடங்கியவர்

மேற்கிந்திய தீவுகள் இன்றைய மிகுதி 60 இற்கு மேற்பட்ட ஓவர்களை தாக்குப்பிடிப்பது கடினம். பார்க்கலாம். Blackwood and Holder கைகளில் தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மான்செஸ்டர் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

மான்செஸ்டர் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

 

மான்செஸ்டர்:

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார்.


 
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 
3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரிஷ் ஒக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில்
அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

219 ரன்கள் முன்னிலையுடன் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்து வீச்சை விளாசி எடுத்தார்.

3 விக்கெட்டுகள் இழப்புக்கு அணியின் ஸ்கோர் 129 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதால் ஆட்டம் டிராவில் முடியும் என அனைவரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி, தோல்வி என முடிவு தெரியும் போட்டியாக அது மாறியது.

2-வது இன்னிங்சில் பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜான் 4 ரன்களிலும், பிராத்வேட் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சாள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். தோல்வியை தவிர்க்க போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் புரோக்ஸ் 62 ரன்களுடனும்,பிளாக்வுட் 55 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் சற்று தாக்கு பிடித்த ஹோல்டர் 35 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து சமன் செய்துள்ளது.

இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில் டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி இதே மான்செஸ்ட்ர் மைதானத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் 3-வது டெஸ்ட் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

 

https://www.maalaimalar.com/news/sports/2020/07/21041943/1725163/England-Beats-West-Indies-by-113-Runs.vpf

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் ஒரு நாள் த‌டை ப‌ட்டும் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌ வேண்டிய‌ விளையாட்டு , வெஸ்சீன்டீஸ் விக்கேட் கீப்ப‌ர் சுத‌ப்ப‌ வெற்றி இங்லாந்துக்கு , இர‌ண்டு இனிங்சிலும் 0ரில் வெளியேரின‌வ‌ர் வெஸ்சின்டீஸ் விக்கேட் கீப்ப‌ர் , 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.