Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 03-06-2007 06:51 மணி தமிழீழம் [மகான்]

சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு

சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. வழமையாக சீனாவின் நொறின்கோ (Chinals North Industries Corporation ) நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு தற்பொழுது அதனை நிறுத்தி சீனாவின் பொலி ரெக்னோலொஜி (Poly Technologies) நிறுவனத்தினம் இவ் ஆயுதக் கொள்வனவுக்கான உடன்படிக்கையைச் செய்துள்ளது.

ஏற்கனவே நொறின்கோ நிறுவனத்திற்கு 2200 கோடி ரூபாக்கள் கொடுக்க வேண்டிய நிலையில் பிறிதொரு நிறுவனமான பொலி ரெக்னோலொஜியிடம் 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

முதலில் 25 வீதமான தொகையை வழங்குவதோடு பின்னர் பத்து காலாண்டு தவணை அடிப்படையில் முழு பணத்தினையும் செலுத்த வேண்டும்.

கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள்

1. 120 அஅ ஆட்டிலறிக்குரிய 70 ஆயிரம் எறிகணைகள்

2. 152 அஅ ஆட்டிலறிக்குரிய 68 ஆயிரம் எறிகணைகள் (220 கோடி ரூபாக்கள்)

3. 81அஅ மோட்டாருக்குரிய 50 ஆயிரம் எறிகணைகள் (37 கோடி ரூபாக்கள்)

4. 14.5 அஅ துப்பாக்கிக்குரிய 1 இலட்சம் கனோன் ரவைகள்

5. ஆர்.பி.ஜி உந்துகணைகள் 2 ஆயிரம்

6. து.லு.11 ரக 3னு ராடார்கள் (55 கோடி ரூபாக்கள்)

7. 14.5 அஅ 82 ரக துப்பாகிகள் 50

8. 12.7 அஅ 85 ரக துப்பாக்கிகள் 200

9. 7.62 அஅ பல்குழல் துப்பாக்கிகள் 200

10. 7.62 அஅ 56 ரக துப்பாக்கிகள் 1000

நன்றி

பதிவு

Edited by Valvai Mainthan

இந்தியா ஒண்டுசொல்லுது சிறிலங்கா ஒண்டு சொல்லுது

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

ஆனா நாரயாணனிடம் மட்டும் சொல்லிடாதீங்க.

பாவம் மனிதன் திரும்பியும் புலம்ப ஆரம்பிச்சிடுவாரு. :D

"எனக்கு இரு கண் போனாலும், எதிரிக்கு ஒரு கண்ணாவது போகட்டும்": இது பாதரமாதாவின் இன்றைய கொள்கை! யார் எதிரி சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல! நாங்கள்தான்!!!!! அவர்களுடன் உந்தப் பருப்பெல்லாம் அவியாது!!!! வாழ்க பாரதமாதா?????

சீனா- பாகிஸ்தானிலிருந்து ஆயுதக்கொள்வனவு: இந்திய அரசின் அழுத்தம் பலனளிக்கவில்லை

ஜஞாயிற்றுக்கிழமைஇ 3 யூன் 2007இ 09:15 ஈழம்ஸ ஜபா.பார்த்தீபன்ஸ

சிறிலங்கா தனக்குத் தேவையான போர்த் தளபாடங்கள் உட்பட அனைத்து வகையான ஆயுத உதவிகளையும் பிராந்திய வல்லரசான தன்னிடமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் கடும் அழுத்தத்தையும் மீறிஇ பாகிஸ்தானிடமிருந்தும்இ சீனாவிடமிருந்தும் பல மில்லியன் டொலர் பெறுமதியான போர் தளபாடங்களை கொழும்பு கொள்வனவு செய்யவுளளது.

பிரித்தானியாவின் பிரசித்தி பெற்ற பாதுகாப்புத்துறை சஞ்சிகையான 'ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி' யை ஆதாரம் காட்டி இந்திய இணையத்தளம் ஒன்று இதனைத் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக அந்த இணையத் தளத்தில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிறிலங்கா முப்படையினரது ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சிறிலங்கா அரசு சீனாவுடன் பல்வேறு போர்த் தளபாடக் கொள்வனவு தொடர்பாகவும் உடன்பாடுகளைச் செய்திருக்கின்றது.

சீனாவின் பல தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து சுமார் 38 மில்லியன் டொலர் பெறுமதியான பல்வேறு போர்த் தளபாடங்களையும் கொள்வனவு செய்வது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்கா அரசு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

கடந்த 30 ஆம் நாள் புதுடில்லிக்குச் சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சஇ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தாங்கள் சீனாவிடமிருந்தும்இ பாகிஸ்தானிடமிருந்தும் போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

எனினும் சிறிலங்காவுக்குத் தேவையான போர்த் தளபாடங்களைத் தாங்கள் தருவதாகவும்இ இவற்றை சீனாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ கொள்வனவு செய்யக்கூடாது எனவும் இந்தியா தெரிவித்திருந்தது.

எனினும் இதற்கு முன்னதாகவே சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து பெருமளவு போர்த் தளபாடங்களுக்கான கொள்வனவு ஒப்பந்தங்களை சிறிலங்கா அரசு செய்திருந்தது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மறுப்பு-சீனாவிடம் தாவிய இலங்கை: 37 மில்லியன் டாலருக்கு ஆயுத ஒப்பந்தம்

டெல்லி - ஜூன் 03, 2007 : விடுதலைப் புலிகளை சமாளிக்கத் தேவையான ஆயுதங்களை வாங்க சீனாவுடன் இலங்கை அரசு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை சீனா வழங்கவுள்ளது.

விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. புலிகளின் விமான பலத்தைத் தகர்த்து தாக்குதல் நடத்த தேவையான ஏவுகணைகள், ரேடார் கருவிகளை வழங்குமாறு இந்தியாவை இலங்கை கோரியது.

ஒருவேளை இந்தியா இந்த உதவிகளை செய்ய மறுத்தால் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடம் உதவி கோரப் போவதாகவும் அது மிரட்டல் தொணியில் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக சமீபத்தில் அதிபர் ராஜபக்ஷேவின் தம்பியும், பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்ஷே டெல்லி வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரை ரகசியமாக சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புகளில் இலங்கைக்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய இலங்கை அரசு, இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பான தகவல்களை ஜேன்ஸ் வீக்லி பத்திரிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 37.6 மில்லியன் டாலர் அளவுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவைச் சேர்ந்த பாலி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துடன் இலங்கை அரசு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இலங்கை ராணுவம் மற்றும் கடற்படைக்குத் தேவையான உதவிகளை இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும். இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை பாதுகாப்புப் படைக்குத் தேவையான வெடிபொருட்கள், தாக்குதல் ஆயுதங்களை பாலி நிறுவனம் வழங்கவுள்ளதாக ஜேன்ஸ் வீக்லியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் ஆயுதம்வாங்கிறதை மேலைநாடுகள் முடக்கப்பாக்கினம். அப்படியெண்டால் அவயளுக்கும் ஆயுதத்தேவை இருக்குத்தானேபாருங்கோ. அதுதான் எங்களுக்கும் சேர்த்து அரசாங்கம் வாங்குதுபோல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.