Jump to content

பகைவரிடத்தில் பாசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பகைவரிடத்தில் பாசம்

யேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம்.

பகைவரிடத்தில் பாசம்
இயேசு
 
ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவர் நன்றாக படிப்பதிலும் பைபிள் வாசிப்பதிலும் கவனமாக இருந்து வந்தாள். ஆனால் சிறுமியின் வீட்டின் அருகே இருப்பவர்கள் சிறுமியின் குடும்பத்தை பற்றி எப்போதும் ஒரு குற்றத்தை கண்டுபிடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர். இப்படி காலங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்தவருக்கு பிறந்த நாள் வந்தது.

அந்த நாள் அந்த சிறுமியோ கையில் ரோஜா மலர்களை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று ஐயா உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறினார். உடனே அவர் அந்த சிறுமியை இமை கொட்டாமல் பார்த்து நின்றார். பின்னர் அந்த சிறுமியை பார்த்து நீ, எனக்காக பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறாய், நான் உன் கண் முன்னே உன் பெற்றோரை வாயில் வந்தபடி பேசி திட்டி உள்ளேன். உங்களிடம் எப்போதும் சண்டையிட்டு கொண்டு உன் வீட்டில் உள்ள அனைவரும் எங்களிடம் பேசவே மாட்டார்கள். ஆனால் நீயோ எனக்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளாயே? என்று திகைத்து போனார்.
 
 
உடனே அந்த சிறுமி ஐயா, இயேசு உங்களை நேசிக்கிறார். ஆகவே நானும் உங்களை நேசிக்கிறேன் என்று சொன்னாள். பின்னர், இன்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்விப்பட்டவுடன், நான் தினமும் வாசிக்கும் பைபிளிள் மத்தேயு 5-ம் அதிகாரம் 44-ம் வசனத்தில், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது எனக்கு ஞாபகம் வந்தது. உடனே தான் உங்களை சந்திக்க வந்தேன். இனி நாம் பகைவர்களாக இருக்க வேண்டாம். நாம் அனைவரும் தேவ பிள்ளைகளாக வாழ்வோம் என்று கூறி சென்று விட்டாள் அந்த சிறுமி. அவரும் மனம் திரும்பி அவர்களை நேசிக்க ஆரம்பித்து நன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதே போல தான் நாமும் இந்த உலகத்தில் எத்தனையோ காரியங்கள் இயேசுவுக்கு பிடிக்காத காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

ஜெபசிங், அன்பின் ஊழியம், வீரபாண்டி.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையான கைமாறு

உண்மையான கைமாறு

யூத அதிகார வர்க்கத்தில் முதன்மை பெற்றிருந்த பரிசேயர்களின் தலைவர் ஒருவனுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிடச் சென்றிருந்தார் இயேசு. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அடித்துப்பிடித்து முதன்மையான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை இயேசு கவனித்தார். அப்போது அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:

“யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட மதிப்புமிக்க நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்பார். அப்போது, நீங்கள் வெட்கத்தோடு கூனிக் குறுகி கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். எனவே நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; அப்போது உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முதன்மையான இடத்தில் போய் உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள் முன் உங்களுக்குக் கவுரவமாக இருக்கும். தன்னைத் தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” (லூக்கா 14:8-11) என்றார்.

 
பிறகு, தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயர் தலைவனைக் கனிவுடன் அருகில் அழைத்த அவர், “நீங்கள் விருந்தை அளிக்கும்போது, உங்கள் நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அக்கம் பக்கத்திலுள்ள பணக்காரர்களையோ அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம்.

அது உங்களுக்குச் செய்யப்படுகிற கைமாறாகிவிடும். அதனால் விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலின்போது உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” (லூக்கா 15:12-14 ) என்றார்.

“உளப்பூர்வமான அழைப்பை நிராகரித்த எவரும் நான் அளிக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று நான் உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்” என்றார் இயேசு

 

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/08/25140824/1822555/Jesus-Christ.vpf

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவனை ஏமாற்ற முடியாது

தேவனை ஏமாற்ற முடியாது

 

ஒரு பெண் மற்றொரு பெண்ணின் கோழியை திருடி விட்டாள். இந்த திருட்டு சம்பவம் குறித்த வழக்கு நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அந்த பெண் நான் கோழியை திருடவில்லை. அந்த பெண் என் மீது வீண் பழி சுமத்துகிறாள் என்று கூறினார். உடனே நீதிபதி இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து இன்னொரு நாள் விசாரணை நடத்துகிறேன் என்று கூறினார்.

உடனே அவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வர சில அடிகள் எடுத்து வைத்தனர். அப்போது அங்கிருந்த நீதிபதி பக்கத்தில் இருந்த ஒருவரை பார்த்து, பார்த்தீர்களா? கோழியை திருடி தின்று விட்டு அதன் இறகை தலையிலே வைத்துக் கொண்டு, கோழியை நான் திருடவில்லை என்று சாதித்து விட்டாளே என்று அந்த பெண்ணின் காதில் கேட்கும்படியாக கூறினார்.

 


இதை கேட்டதும் அந்த பெண் தன் கூந்தலை மெதுவாக தடவி பார்த்தாள். அவ்வளவுதான், நீதிபதி உடனே அவளை அழைத்துவரச்செய்து அவளுடைய வாயில் இருந்தே அந்த திருட்டை ஒப்புக்கொள்ள வைத்தார். இதே போல தான் இயேசுவின் சீடர் யூதாஸ் என்பவரை பார்த்து நீ, என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று கூறினார். ஏன் இப்படி கூறினார் என்றால் யூதாஸ் என்பவர் இயேசுவை சிலுவையில் அறையும் படி தேடிக்கொண்டிருந்தவர்களிடம் இவர்தான் இயேசு என்று காட்டிக்கொடுத்தார்.

ஆனால் நான் இயேசுவை காட்டிக்கொடுக்கவில்லை என்று மூன்று முறை மறுப்பு தெரிவித்தார். இதைத்தான் இயேசுவானவர் யூதாஸ் என்றும் சீடர் தன்னை காட்டிக்கொடுப்பதற்கு முன்பதாகவே அவரிடம் நீ என்னை முன்று முறை மறுதலிப்பாய் என்று கூறினார். ஆம், தேவ பிள்ளைகளே நாமும் இந்த உலகத்தில் பல்வேறு குற்றங்களை செய்து விட்டு அதை நாம் மறைத்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் நாம் குற்றம் செய்யவில்லை என்று மனிதர்களை ஏமாற்றலாம், தேவனை ஏமாற்ற முடியாது. தன்னை காட்டிக்கொடுத்த சீடரை முன்கூட்டியே அறிந்தது போல, நாம் செய்யும் குற்றங்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்று நாம் மறந்து போகக்கூடாது. அதனால் தான் நம்முடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையிலே ரத்தம் சந்தி தன் உயிரையை பலியாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பைபிளில் 1 யோவான் முதலாம் அதிகாரம் 17&ம் வசனத்தில், இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சலக பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நாம் இதுவரை செய்த குற்றங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு குற்றங்களை மன்னியும் என்று இந்த தவக்காலத்தில் தேவனிடத்தில் மன்னிப்பை பெற்று, குற்ற உணர்வு இல்லாத மகிழ்வான வாழ கற்றுக்கொள்வோம்.

ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.

 

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/09/16130348/1887750/Jesus-Christ.vpf

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்றே நாட்களில் ஆலயத்தை எழுப்பிய அற்புதர்

மூன்றே நாட்களில் ஆலயத்தை எழுப்பிய அற்புதர்

 

முப்பதாவது வயதில் யோவான் தீர்க்கதரிசியிடம், யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்குப் பெற்றார் இயேசு. அப்போது சீமோன், அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல் ஆகிய நான்கு பேர், இயேசுவை ‘மெசியா’ எனக் கண்டுகொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரிடம் சீடர்களானார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவர் போதிக்க ஆரம்பித்தார். போதனையைத் தொடங்கும்முன், தனது முதல் அற்புதத்தைத் தனது தாய் மரியாளின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்த்திக் காட்டினார்.

கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமண விருந்து நடைபெற்றது. இயேசுவின் தாய் அங்கு வந்திருந்தார். இயேசுவும் அவரது சீடர்களும்கூட அந்தத் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். யூதத் திருமண விருந்தில், முதல் தரமான திராட்சை ரசம் பரிமாறப்படுவது விருந்தோம்பலின் முக்கிய அம்சமாக இருக்கும். விருந்தினர் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகரித்துவிட்டதால், திராட்சை ரசம் தீர்ந்துபோனது. இயேசுவின் தாய் அவரைப் பார்த்து, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை” என்றார்.

 


அதற்கு இயேசு, “தாயே, நீங்கள் எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் என் வேளை இன்னும் வரவில்லையே” என்று பதிலளித்தார். பரலோகத் தந்தையின் ஏற்பாட்டின்படி இயேசு தன்னை வெளிப்படுத்தும் காலம் அப்போது கனிந்திருக்கவில்லை. அதைத்தான் இயேசு அப்படிக் குறிப்பிட்டார். ஆனால் ஒரு மகனாகத் தன் தாயின் சொல்லை எப்படித் தட்டுவது?

தூய்மைச் சடங்கு செய்யத் தேவைப்படும் ஆறு தண்ணீர் ஜாடிகள், அந்தத் திருமண வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த தண்ணீரும்கூடத் தீர்ந்து போயிருந்தது. அந்த வீட்டின் பணியாளர்களை அழைத்த இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். அவர்களும் ஜாடிகளின் விளிம்புவரை நிரப்பினார்கள். தண்ணீர் திராட்சை ரசமாக மாறியிருந்தது. இதைக் கண்ட அவருடைய சீடர்கள், அவர் மீது மேலும் நம்பிக்கை வைத்தார்கள்.

இயேசு செய்த முதல் அற்புதம் (கானா ஊர் திருமணம்) பற்றி, கலிலேயா முழுவதும் செய்தி பரவ ஆரம்பித்தது.

யூதர்களின் முக்கியப் பண்டிகையான ‘பாஸ்கா’ சீக்கிரத்தில் வரவிருந்ததால், இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கு ஏக இறைவனுக்காக 46 ஆண்டுகள் செலவழித்து யூதர்கள் கட்டியிருந்த பிரமாண்டமான பேராலயம் இருந்தது. அந்த ஆலய வளாகத்துக்குள் நுழைந்தபோது, அங்கே கண்ட காட்சியைப் பார்த்துக் கொதித்துப் போனார் இயேசு.

யூத வியாபாரிகள் அந்த ஆலயத்தை, ஒரு பேரங்காடி போல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கணமும் தாமதிக்காமல் கயிறுகளைக் கொண்டு உடனடியாக ஒரு சாட்டையைத் தன் கைப்படப் பின்னினார். ஆலயத்தில் ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், மேசைகளைப் போட்டு நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் ஆலயத்தில் இருந்து சாட்டையால் அடித்து விரட்டினார். “இவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள். என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” (யோவான் 2: 16) என்றார்.

இயேசுவின் கோபத்தைக் கண்ட யூதர்கள் அவரை நெருங்கி, “இப்படியெல்லாம் செய்ய உமக்குக் கடவுள் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்றால், அதை எங்களுக்கு நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் திரும்பவும் எழுப்புவேன்” (யோவான் 2:19) என்றார்.

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ‘நம்மிடம் வசமாகச் சிக்கினார்’ என்று நினைத்த யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க நாற்பத்தாறு ஆண்டுகள் பிடித்தன. நீரோ.. இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே?” என்றார்கள். ஆனால் இயேசு தனது உடலாகிய ஆலயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். மனித உடலும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்பதை உணர்த்தினார். தனது உடலைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, ‘உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’ என்று அவர் சொன்னதை சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.

 

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/09/15090509/1887437/Jesus-Christ.vpf

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யேசுநாதரை என்ன காரணத்திற்காக யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என யாராவது கூறமுடியுமா 🤔

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை.

கடவுள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை

 

நதித் தீரத்தின் தெற்குப்பகுதியில் இருந்த சோதோம் நகரில் குடியேறி வாழ்ந்து வந்தார், ஆபிரகாமின் அண்ணன் மகனாகிய லோத்து. சோதோம் நகரின் அருகிலேயே கொமோரா நகரமும் இருந்தது. இந்த இரு நகரங்களிலும் சிலைகளை வணங்கி வந்த மக்கள், பாலியல் குற்றங்கள் உட்பட பெரும் பாவங்களைச் செய்து மிக இழிவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதனால் பரலோகத் தந்தையாகிய யகோவா, லோத்துவையும் அவனது குடும்பத்தாரையும் சோதோம் நகரிலிருந்து வெளியேறச் செய்துவிட்டு, அந்த நகரங்களை முற்றாக அழித்தார்.

கானான் நாட்டில் வசித்துவந்த ஆபிரகாம் தனது சகோதரனாகிய லோத்து, சாவிலிருந்து தப்பித்துக்கொண்டதை அறிந்து நிம்மதியடைந்தார். ஆனால் ‘கானான் நகரமும் கடவுளின் சாபத்துக்கு ஆளாகுமோ?’ என்று அஞ்சினார். இதனால் தனது மகன் ஈசாக்கு, ‘எக்காரணம் கொண்டும் கானான் பெண்ணொருத்தியை மணந்துகொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஆபிரகாம். எனவே தனது மந்தைகளையும் சொத்துக்களையும் நிர்வகித்துவந்த தனது மூத்த வேலைக்காரரை அழைத்தார். அவரிடம் “எனது தந்தையின் தேசமும் தற்போது எமது உறவினர்கள் வசித்துவரும் நகரமுமாகிய ஆரானுக்குச் சென்று, என் மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேடி அழைத்து வாருங்கள்” என்று அனுப்பினார்.

 


வேலைக்காரரும் அவரது விருப்பத்தை ஏற்று அதிகாலையில் புறப்பட்டார். நீண்ட பயணத்துக்குப் பின்பு ஆரான் நகரின் எல்லையை அடைந்தார். அது மாலை நேரம். அந்த இடத்தில் ஒரு சமுதாயக் கிணறு இருந்தது. தங்கள் வீட்டுத்தேவையான குடிநீரை சேகரித்துச் செல்ல மாலை நேரத்தில் இளம்பெண்கள் கிணற்றடிக்கு வருவது சமூக மரபாக இருந்தது. எனவே இந்தக் கிணற்றுக்கு நீர் எடுத்துச் செல்லவரும் ஆரான் நகரின் பெண்களில் ஒருத்தியை ஈசாக்கிற்கும் மணமகளாகத் தேர்ந்தெடுக்க தனக்கு வழிகாட்டும்படி கடவுளாகிய யகோவாவிடம் அந்த வேலைக்காரர் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனையை கடவுள் கேட்டார்.

வேலைக்காரர் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு இளம்பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். முழுமையான முக்காடிட்டு, அடக்கமே வடிவாக, அழகின் மொத்த உருவமாக கையில் தண்ணீர் குடுவை ஏந்தி அங்கே வந்த அந்தப் பெண்ணின் பெயர் ரெபெக்கா. வேலைக்காரர் அந்நிய தேசத்தின் ஆண்மகனாக இருந்தும் தன் எதிரில் நின்றுகொண்டிருந்த காரணத்தால் அவருக்கு வணக்கம் சொன்னாள். அவளது பணிவில் குளிர்ந்த வேலைக்காரர் “பெண்னே.. எனக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயா?” என்றார். உடனடியாக கிணற்றிலிருந்து அவருக்குத் தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள்.

ஆனால் வேலைக்காரர் கேட்காமலேயே நீண்டதூரம் பயணித்துக் களைப்படைந்திருந்த அவரது ஒட்டகத்தை கண்டு, அது குடிக்கக் குடிக்க தண்ணீரை இறைத்து சளைக்காமல் ஊற்றிக் கொண்டே இருந்தாள். விலங்குகளுக்கும் இரங்கிய அவளிடம் “பெண்ணே.. உனது தந்தையின் பெயரென்ன?” என்று கேட்டார் வேலைக்காரர். மேலும் “இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கிச் செல்ல எனக்கும் எனது ஒட்டகங்களுக்கும் இடமிருக்கிறதா?” என்று கேட்டார்.

அவள் மறுப்பேதும் கூறாமல் “என் தந்தையின் பெயர் பெத்துவேல். எனக்கொரு சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் லாபான். எங்கள் வீட்டில் போதுமான இடமிருக்கிறது. தாராளமாக எங்கள் வீட்டில் நீங்கள் தங்கிச் செல்லலாம்” என்றாள். ஆபிரகாமின் அண்ணன் நாகோரின் மகன்தான் பெத்துவேல். இது தலைமை வேலைக்காரருக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு ஆபிரகாமின் உறவினர் வீட்டுக்கே தன்னை வழிநடத்திச்சென்ற கடவுளாகிய யகோவாவுக்கு அவன் மண்டியிட்டு நன்றி சொன்னார்.

அன்றிரவு பெத்துவேலின் இல்லத்தில் தங்கி அவர்களது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார் ஆபிரகாமின் தலைமை வேலைக்காரர். தாம் ஈசாக்கிற்கு மணமகள் தேடி வந்த காரணத்தையும், கடவுள் எவ்வாறு ரெபெக்காளை அடையாளம் காட்டினார் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

இது கடவுளின் ஏற்பாடு என்பதை அறிந்த பெத்துவேலும், அவரது மகனும் ஈசாக்கிற்கு ரெபெக்காளை திருமணம் செய்துவைக்க சம்மதித்தார்கள். ரெபெக்காவும் சம்மதம் தெரிவித்தாள். மறுநாளே ரெபெக்காளை ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் புறப்பட்டார் ஆபிரகாமின் வேலைக்காரர்.

அவர்கள் கானான் தேசத்தின் எல்லைக்குள் இருந்த வயல்வெளியில் பிரவேசித்தபோது, ஈசாக்கை நேருக்கு நேராய்ச் சந்தித்தாள் ரொபெக்கா. இதனால் இருவரது மனதுக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கியது.

தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. ஈசாக்கும் ரெபெக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு ‘ஏசா’ என்றும், ‘யாக்கோபு’ என்றும் பெயரிட்டனர்.

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/09/29121800/1930872/Jesus-Christ.vpf

On 17/9/2020 at 09:48, Kapithan said:

யேசுநாதரை என்ன காரணத்திற்காக யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என யாராவது கூறமுடியுமா 🤔

எனக்கு அந்தளவு அறிவு இல்லை. வேறு யாராவது கூறுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது- ஆன்மிக கதை

அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது- ஆன்மிக கதை

புத்தர் தன்னுடைய சீடர்கள் சிலருடன், ஒரு ஊருக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயணம் அது. உச்சிப் பொழுது, வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருந்தது.

அதனால் அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியில் ஓய்வெடுத்துவிட்டு வெயில் குறைந்ததும் ஆற்றைக் கடந்து அந்தக் கரையில் உள்ள ஊருக்குச் செல்லலாம் என்று புத்தர் முடிவு செய்தார். அதன்படி புத்தரும், அவரது சீடர்களுக்கு ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

நீண்ட பயணத்தினாலும், வெப்பத்தினாலும் புத்தருக்கு நீர் தாகம் எடுத்தது. உடனே ஒரு சீடரிடம், ஆற்றில் இருந்து குடுவையில் தண்ணீர் எடுத்துவரும்படி கூறினார். உடனே அவசர அவசரமாக ஓடிச் சென்ற ஒரு சீடர், தண்ணீரை குடுவையில் எடுக்கும்போதுதான் கவனித்தார். அந்த நீர் மிகவும் கலங்கிப்போய் இருந்தது. எனவே தண்ணீர் எடுக்காமல் அங்கிருந்து திரும்பி வந்தவர் புத்தரிடம், “குருவே.. அந்த ஆற்றின் நீர் குடிப்பதற்கு ஏதுவானதாக இல்லை” என்று தெரிவித்தார்.

புத்தரோ, “என்ன சொல்கிறாய்.. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை.. நீ சற்று ஓய்வெடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து போய் நீர் எடுத்துவா” என்றார்.

அப்போது அந்த சீடனுக்குள் ஒரு சந்தேகம். ‘குரு இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார் என்றால், நாம்தான் சரியாக கவனிக்காமல் வந்துவிட்டோம் போல் இருக்கிறது. எனவே உடனடியாக மீண்டும் சென்று தண்ணீரை எடுத்து வந்துவிடுவோம்’ என்று நினைத்தபடியே உடனடியாக சென்று ஆற்று நீரை எடுக்கக் குனிந்தார்.

இப்போதும் அந்த நீர் கலங்கிப்போய் தான் இருந்தது. சீடனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் புத்தரிடம் வந்தவர், “குருவே.. நீங்கள் சொல்லியதால் மீண்டும் சென்றேன். ஆனால் இந்த ஆற்றின் நீர் அருந்துவதற்கு தகுந்ததாக இல்லை” என்றார்.

“நான்தான் உன்னை சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, பின்னர் சென்று தண்ணீர் எடுத்துவா என்றேனே.. நீ எதற்காக உடனடியாகச் சென்றாய். சரி ஒன்றும் பிரச்சினையில்லை. நீ சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, தாமதமாகச் சென்று தண்ணீர் எடுத்துவா” என்றார்.

குழப்பத்திலேயே மரத்தடியில் படுத்து சற்று ஓய்வெடுத்த அந்த சீடன், புத்தர் சொன்னதுபோலவே சிறிது நேரம் கழித்துச் சென்று தண்ணீர் எடுக்கப்போனான். இப்போது ஆற்றின் நீர் மிகவும் தெளிவாக இருந்தது. அதில் இருந்து குடுவையில் தண்ணீர் எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தார். அதை வாங்கி தாகம் தீர அருந்தினார், புத்தர்.

அப்போது அந்த சீடர், தனக்கான சந்தேகத்தைக் கேட்டார். “நான் முதலில் இரண்டுமுறை சென்றபோது கலங்கிப்போய் இருந்த ஆற்றின் நீர், இப்போது எப்படி தெளிந்தது?” என்று புத்தரிடமே கேட்டார்.

அதற்கு புத்தர், “நாம் வந்த அந்த நேரத்தில்தான் ஒரு மாட்டு வண்டி இந்த ஆற்றினைக் கடந்து சென்றிருந்தது. அதனால்தான் ஆற்றின் நீர் கலங்கிப்போய் இருந்தது. அதனால்தான் உன்னை சற்று நேரம் கழித்து போய் தண்ணீர் எடுத்துவா என்று கூறினேன். நான் தண்ணீர் வேண்டும் என்று கேட்டதும் அவசரத்திலும், பதற்றத்திலும் நீர் எடுக்கச் சென்றதால், உன்னால் இந்த உண்மையை உணரமுடியவில்லை. கலங்கியிருக்கும் நீரைப்போலவே, குழப்பத்தில் இருக்கும் மனதால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. அதனால்தான் எதனால் நீர் கலங்கியிருக்கிறது என்ற உண்மையை உன்னால் உணர முடியவில்லை” என்று விளக்கினார்.

பின்னர் தன்னுடைய அனைத்து சீடர்களுக்குமாக ஒரு உபதேசத்தை வழங்கினார். நீங்கள் அனைவரும் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆற்றின் நீரைப்போலத்தான் உங்கள் மனமும். அந்த மனமானது குழப்பத்தில் இருக்கும்போது, அதனை அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். சிறிது நேரம் சென்றதும், அது தானாகவே தெளிவடைந்துவிடும். மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது, சிறிது நேரம் பொறுமையாக இருக்க வேண்டும் அவ்வளவே. அந்த கால அவகாசத்திலேயே மனது அமைதியடைந்துவிடும். பின்னர் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும். பொறுமையே மனதைப் பக்குவப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால், பிரார்த்தனைகளை விடவும், மிக உயர்ந்தது பொறுமைதான்” என்றார்.

https://www.maalaimalar.com/devotional/worship/2020/10/01114753/1931354/Spiritual-Stories.vpf

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுள் என்பவர் யார்? என்பதை உணர்த்திய ஆன்மிக கதை

கடவுள் என்பவர் யார்? என்பதை உணர்த்திய ஆன்மிக கதை

 

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார்.

அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது.

 
""சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?'' என்று கேட்டான்.

துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது.

""சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?'' என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.

""கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே!'' என்றார். இளைஞனுக்கு கோபம்.

""வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே! துறவி பொய் சொல்லலாமா?'' என்று சற்று கோபமாகவே கேட்டான்.

""மகனே! மவுனமே எனது பதில்'' என்றார் துறவி.

இளைஞனோ,""இப்படி புதிர் போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்,'' என்றான்.

""ஆன்மிகத்தின் ஒட்டுமொத்த பிழிவே மவுனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்,'' என்ற துறவி மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தார்.

 

https://www.maalaimalar.com/devotional/worship/2020/11/09112345/2050351/Spiritual-Stories.vpf

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோசேயுடன் பேசிய கடவுள்

மோசேயுடன் பேசிய கடவுள்

‘இஸ்ரவேலர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களை எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் செல்லும் கலகக்காரனாக மோசே மாறக்கூடும்’ என்று பயந்தான், பார்வோன் மன்னன். அதனால் மோசேயைக் கண்டுபிடித்து, கொல்லும்படி ஆணையிட்டான். உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஓடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.

அங்கே ஆண்கள், பெண்கள் எனப் பலரும், ஆட்டு மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்ததை மோசே கண்டார். மோசே மந்தைகளை மேய்த்தவர் இல்லை என்றாலும், அவரது பெற்றோர் மற்றும் முன்னோர்களின் குலத்தொழிலாக மேய்ப்புத் தொழிலே இருந்ததால், அங்கே மேய்ப்பர்களையும் கனிவான முகங்களைக் கொண்ட பெண்களையும் கண்ட அவரது மனதில் நிம்மதியும் அமைதியும் உண்டானது. அவர் இளைப்பாறுவதற்காக அங்கே இருந்த கிணற்றருகே சென்றார். அப்பகுதியில் இருந்த ஒரே கிணறு அது.

 
அங்கே பிரதான மேய்ப்பனாகவும், பல நூறு குடும்பங்களுக்குத் தலைமை மதகுருவாகவும் இருந்தார் எத்திரோ. அவருக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் ஆண் பிள்ளைகளைப்போல் தங்களது கிடைகளை மேய்த்துப் பேணிக் காத்துவந்தனர். மோசே கிணற்றருகே சென்றபோது அப்பெண்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பி தங்களது ஆடுகளுக்குக் காட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கே வந்து சேர்ந்த சில ஆண் மேய்ப்பர்கள், அப்பெண்களை மிரட்டிக் கிணற்றை விட்டு அகன்று செல்லுமாறு பயங்காட்டினார்கள்.

இதனால் அச்சமடைந்த அவர்கள் கலக்கமுற்று நகர, அவர்களைத் தடுத்து நிறுத்தினார், உயிருக்குப் பயந்து ஓடிவந்த மோசே. “வீணாகப் பயம் காட்டுகிறவர்களை நினைத்து அஞ்சத் தேவையில்லை” என்று நம்பிக்கை தந்த அவர், அவர்களது ஆடுகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். “வாட்டசாட்டமான இந்த ஆண்மகன் யார்? எளிதில் மிரண்டுபோகும் இப்பெண்களுக்கு அரணாக இருக்கட்டும் என்று எகிப்திலிருந்து எத்திரோவால் தருவிக்கப்பட்டிருப்பானோ?” என்று முணுமுணுத்தவாறு அந்த ஆண் மேய்ப்பர்கள் பின்வாங்கினர்.

பிறகு ஆடுகளுடன் கூடாரத்துக்குத் திரும்பிய பெண்கள், தந்தையிடம் ஓடிச் சென்று தங்களுக்கு உதவிய எகிப்திய மனிதனைப் பற்றிக் கூறினார்கள். எத்திரோ தன் மகளிரிடம் “அம்மனிதர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? அவரைப் போய் அழையுங்கள், நம்மோடு அவர் உணவருந்தட்டும்” என்றார். அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே மோசே அவர்களது கூடாரத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவரை வரவேற்ற எத்திரோ “அடைக்கலம் தேடும் உம் கண்களில் அமைதி உண்டாகட்டும். எங்களோடு நீர் இங்கே தங்கிவிடும்” என்று கூறி ஆதரவு தந்தார்.

அப்பகுதியின் தலைமை குரு தனக்குக் காட்டிய தயவைக் கண்டு, மோசே அவர்களோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தார். நாட்கள் எரிநட்சத்திரங்களைப்போல் வீழ்ந்தன. எத்திரோ தன் மூத்த மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்துவைத்தார். மோசே, சிப்போராள் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டனர்.

மாமனாரின் குடும்பத்துக்கு நன்றியுள்ள மருமகனாக, அவர்களது மந்தைகளை திறம்படக் காத்து பெருக்கி வந்தார், மோசே. பொதுவாகவே வெயிலால் வாடிவந்த மீதியான் நாட்டை, கோடைக்காலம் மேலும் வாட்டியது. காய்ந்த புற்களும் கூட இல்லாமல் ஆடுகள் பசியால் வாடுவதை மோசேவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே ஆடுகளுக்குத் தேவையான புல்லைத் தேடி, கண்களுக்குப் பசுஞ்சோலையாகக் காட்சியளித்த ஓரேப் மலைக்கு தன் ஆடுகளோடு வந்து சேர்ந்தார். ஆடுகள் வயிறாரப் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்டு மோசேயின் மனம் நிறைந்தது. அந்த சமயத்தில் அங்கே அவருக்கு ஓர் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது. பசுமையான செடிகள் சூழ்ந்த புதர் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. பெரும் தீயாக அது இருந்தாலும், அப்புதரில் இருந்த செடிகளும், இலைகளும், பூக்களும் நெருப்பால் கருகிப்போகாமல் அப்படியே இருந்தன.

‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று அதிசயித்தவாறே, எரியும் புதர் அருகே சென்று கவனித்தார் மோசே.

அவர் புதரின் அருகில் சென்றபோது அதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “மோசே.. அங்கேயே நில். நெருப்பின் அருகில் வராதே. உன் பாதணிகளைக் கழற்றி வை. ஏனென்றால் நீ நிற்கிற இந்த இடம் புனிதமானது.” ஒரு வானதூதன் மூலமாகக் கடவுள், மோசேயுடன் பேசினார். அப்போது மோசே தன் முகத்தை மூடிக் கொண்டார்.

கடவுள் தொடர்ந்து பேசினார் “எகிப்தில் என் மக்கள் படுகிற துன்பத்தைக் கண்டேன். அவர்களை நான் விடுவிக்கப்போகிறேன். என் மக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வர நான் உன்னைத்தான் அனுப்பப் போகிறேன்” என்றார். மோசே மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். கடவுளிட்ட பணியை செய்ய ஆயத்தமானது அவரது கண்களில் தெரிந்தது.

https://www.maalaimalar.com/devotional/christianity/2020/11/10132744/2060636/jesus-christ.vpf

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோதனைகள் சாதனைக்கே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புன்னகைப்போம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வோம்

புன்னகைப்போம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்வோம்

மனம் ஒரு கண்ணாடி. கவலை என்பது அதில் படியும் அழுக்கு போன்றது. அந்த அழுக்கினைப் போக்கும் இராஜதிரவமே புன்னகை என்பது. புன்னகை என்பது முகத்திற்கு மட்டுமல்ல. மனதிற்கும் அழகுசேர்க்கிறது.

புன்னகைக்கு மட்டுமே புத்துணர்ச்சி ஊட்டுகிற வல்லமை உண்டென்பது பல்வேறு மனிதர்களின் வரலாறு காட்டும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் ஒரு முறை தனது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதிக்கிடந்தது. நல்ல வேலை இவருக்கு ஏதும் ஆகவில்லை. இவர் வாகனத்திலிருந்து இறங்கி பக்கத்தில் மரத்து நிழலில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டுநரை விட்டு மெக்கானிக்கை அழைத்து வரக் கூறினார். அந்த பக்கம் வந்த ஒருவர் என்ன ஆனது எனக் கேட்க ஒன்றுமில்லை. நீண்ட நேரம் பயணம் செய்ததால் மரத்தில் எனது காரை நிறுத்திவிட்டு, ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளேன் என்றாராம். தனது கார் விபத்துக்குள்ளான இந்த நிலையில் யாராலாவது இப்படி நகைச் சுவையை அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமா?. அதுதான் கலைவாணர். இந்த மனநிலைதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்பதை, அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

 
சகுந்தலா என்ற இவரின் திரைப்படத்தைப் பார்த்த திருவிதாங்கூர் சமஸ்தானத்து மகாராஜா சென்னை வந்து அப்போது ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். கிருஸ்ணன் மற்றும் எ.ஏ. மதுரம் ஆகியோரைச் சந்தித்துப் பாராட்டினாராம். பின்பு அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டு சென்றாராம்.

எனவே நகைச்சுவை உணர்வு நம்மை உயர்த்துவதோடு, சோகம் நம்மைத் தாக்காமலும் பாதுகாக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்த விலங்கு. சிரிப்பு ஒரு மனிதனுக்கு நல்ல அறிமுகத்தைத் தருகிறது என்பதை உணர்ந்தோர் அறிகின்றனர். நகைச்சுவை உணர்வு என்பது துன்பத்தின் சுமையை எளிதாக்குகிறது. பரபரப்பான வாழ்க்கையை பரவசப்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் சோகங்களிலிருந்து மீட்டெடுக்கிறது. ஆகவே இடுக்கண் வரும்போதும் நகுவோம். இல்லறம் சிறக்க சிரித்து மகிழ்வோம்.

எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன் என்று நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளது எண்ணிப்பார்க்கத் தக்கது. நாம் சிரித்து வாழவேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் பிறரைத்தாக்கி, கிண்டலடித்து மகிழக் கூடாது. அது தமிழர் வழியுமல்ல. நாகரிகமும் அல்ல. ”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி” என வள்ளுவம் கூறுவதை மனதில் ஆழப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கூடி அமர்ந்து பேசிச் சிரித்து மகிழ்வது நல்ல குடும்பத்திற்கான நாகரிக அடையாளம். அது மட்டுமின்றி குடும்பத்திற்குள் உள்ளோரோடு ஒரு நெருக்கத்தையும் அதிகரிக்கும். இதனை இன்றைய நமது கலாச்சாரத் தேவை என்றே கூறலாம்.

நாம் மகிழ்ச்சியாய் இருக்கும் போது, நமது உடலில் 86 தசைகள் இயங்குகின்றன. குறிப்பாக மூளைக்குத் தகவல் அனுப்பும் நரம்புகள் நன்கு இயங்குவதோடு, பெப்டைன் என்ற ஒரு வித கார்மோன் சுரந்து இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகிறது. இதனால் உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது. உற்சாகம் ஊற்றெடுக்கிறது. இதனால் மனம் அமைதி அடைகிறது.

வாய்விட்டுச் சிரிக்கும் போது, உடலின் உள் உறுப்புகள் நன்கு இயங்குகின்றன. சிரிப்பினை உள் உறுப்புகளுக்கான உடற்பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது. எனவேதான் நம் முன்னோர்கள் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றார்கள். சென்னை போன்ற பெரும் நகரங்களில் சிரிப்புக் கழகங்கள் உருவாக்கப்பட்டு, சிரிப்பூட்டும் தெரபி முறையைப் பின்பற்றுகின்றனர். சிரிப்பு ஒரு மருத்துவ முறை என்பதை நவீன அறிவியல் உலகம் பல முறைகளில் நிரூபித்துள்ளது.

வாழ்க்கை இருட்டிலேயே கிடக்கிறது.

சிரிக்கும்போது மட்டுமே

வெளிச்சமடைகிறது’

என்ற புதுக்கவிதையின் உட்பொருள் ஆழமானது.

நாம் கோபப்படும்போது, உடலில் 32 தசைகள் மட்டுமே இயங்கும். அதுவும் இத் தசைகளின் இயக்கத்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதனால் இருக்கமான நிலையில் உடல் தசைகள் இயங்கும். ஆகையால் இதயத்திற்குச் செல்லும் ரத்தமும் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தமும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஆகவேதான் அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் சில வரையறைகள் உள்ளன. நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்க வேண்டும். பிறரைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு, ஒருவன் மகிழ்ச்சி அடைவானேயானால், அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக் கொடுமையானது. பிறரை மகிழவைத்து மகிழ்வதே, மகிழ்ச்சியில் உயர்வானது. விக்ரம் சாராபாய் பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் ஒரு விளையாட்டு விளையாடுவாராம். பொதுவாக குழந்தைகள் வகுப்பில் நண்பர்களின் பொருட்களை எடுத்து வேறு இடத்தில் ஒளிய வைத்துவிட்டு, தேட வைப்பார்கள். தேடிக் கிடைக்கவில்லை என்றால், கடைசியில் எடுத்துக் கொடுத்து மகிழ்வார்கள். இது ஒரு வகுப்பறை விளையாட்டு. ஆனால் விக்ரம் சாராபாய் திடீரென்று சாக்லேட்டுகளை வாங்கி வந்து யாரும் அறியா வண்ணம், அனைத்து மாணவர்களின் பைகளிலும் வைத்துவிடுவாராம். நண்பர்கள் பையினை திறக்கும் போது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவார்கள். அந்த இன்ப அதிர்ச்சியைக் கண்டு மகிழ்வாராம் விக்ரம் சாராபாய்.

நம்முடைய மகிழ்ச்சி பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமோ, அதைப்போல நமக்கும் உண்மையான மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். சிலர் எதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பதே தெரியாமல் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியல்ல. மகிழ்ச்சிக்கு அர்த்தம் இருக்க வேண்டும்.

முல்லா ஒரு குடிகாரர். தினமும் குடிப்பார். ஆனால் ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் இனி குடிக்கக் கூடாது எனக் கருதுவார். குடிக்கக் கூடாது என நினைப்பார். கள்ளுகடை வாசல்வரை மட்டுமே அந்த மனஉறுதி நிற்கும். கள்ளுக்கடையைப் பார்த்ததும் தன்னையே அறியாமல் உள்ளே நுழைந்து விடுவார். ஒருமுறை மனக் கட்டுப்பாட்டோடு கள்ளுக்கடையைக் கடந்து சென்று விட்டார். அவரின் மனஉறுதியை அவராலேயே நம்ப முடியவில்லை. மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டாமா? கள்ளுக்கடைக்குள் நுழைந்தார். மகிழ்ச்சியை முறையாகக் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சி, வாழ்க்கையை எந்த வகையிலும் மேம்படுத்தாது. எனவே மகிழ்ச்சியும் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

 

https://www.maalaimalar.com/health/womensafety/2020/11/16091930/2071825/happy-smiling-family.vpf

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜென் துளிகள்: பயிற்சிக்குத் துயரம் அவசியம்

zen-quotes  

சமூக நீதிக்காகவும் வன்முறையற்ற அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் பணியாற்றிவரும் வியட்நாமிய பௌத்த குருவான திக் நியட் ஹான், தனது 94-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். சமூக நீதி, அக அமைதி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டவை இவரது போதனைகள். 1960-களில் வியட்நாமில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தால் சேதமுற்ற பள்ளிகளைக் கட்டியதோடு அமெரிக்காவுக்குச் சென்று அகிம்சை இயக்கத்தையும் மேற்கொண்டவர். 1967-ம் ஆண்டில் மார்டின் லூதர் கிங் ஜூனியர், இவருக்கு நோபல் பரிசைப் பரிந்துரைத்தார். பிரான்ஸ் நாட்டில் 1982-ம் ஆண்டு ப்ளம் வில்லேஜ் என்ற மடாலயத்தை உருவாக்கினார். 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் வியட்நாமுக்குத் திரும்பினார். மலைகள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்துவரும் திக் நியட் ஹான் தனது பிறந்தநாளை முன்னிட்டு கொடுத்த நேர்காணலிலிருந்து சில துளிகள்…

* * *

 
 
 

சமூக மாற்றத்துக்கான பணியும் ஆன்மிக வளர்ச்சிக்கான காரியமும் வேறு வேறல்ல. ஒருவன் சாதகத்தில் ஈடுபடும்போது உள்ளே உள்ள துயர், சுற்றியுள்ள துயர் இரண்டையுமேதான் எதிர்கொண்டாக வேண்டும். மலைக்குச் சென்று தனியாகப் பயிற்சி மேற்கொள்ளும்போது உள்ளே உள்ள கோபம், பொறாமை, விரக்தி ஆகியவற்றை அறியவே முடியாது. அப்படியான மனநிலை நம்மிடம் உருவெடுப்பதைப் பார்ப்பதற்கு நாம் மக்களுடன் பழகவேண்டியது அவசியம். அதனால்தான் ஆன்மிகப் பயிற்சிக்கு துயரம் என்பது மிக அவசியமாக உள்ளது.

* * *

கோபத்தை அரவணைப்பதற்கு புத்தரால் பல பயிற்சிகள் பரிந்து ரைக்கப்பட்டுள்ளன. கோபத்தை வெளியிடுவது அறிவார்த்தமானது அல்ல. ஏனெனில், கோபத்தின் அடிப்படையும் கோபத்தின் விதையும் நம்முள் உள்ளவை என்கிற உண்மையை அது புறக்கணிக்கிறது. அந்தக் கோபத்தின் விதை பெற்றோர் களாலோ மூதாதையோர்களோ நம்மிடம் கடத்தப்பட்டிருக்கலாம். அதை சமூகமும் தொடர்ந்து வளர்த்துவந்திருக்கிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போது நமது அமைப்பிலிருந்து வெளிக்கொண்டு வருவதாக நினைக்கி றோம். வார்த்தைகளாலோ உடல் அசைவுகள் வழி யாகவோ கோபத்தை வெளிப்படுத்தும் போது, கோபம் வலுப்படவே செய்கிறது. அதனால் அது அபாய கரமான வழிமுறையாகும்.

கோபத்தின் விதையை அங்கீகரிப் பதும், புரிதல் - பரிவின் ஆற்றலால் அதை மட்டுப்படுத்துவதுமே கோபத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி. கோபத்தின் விதை நம்மிடம்தான் உள்ளது. அது உருவமெடுக்காத நிலையில் நாம் சிரிப்பதற்கும் நிறைவாக இருப்பதற்குமான திறனைக் கொண்டவர்கள்தான். அதனாலேயே கோபத்தின் விதை நம்மிடம் இல்லை என்பது அர்த்தமில்லை. யாராவது எதையாவது சொல்லும்போதோ செய்யும்போதோ அந்த விதைக்குத் தண்ணீர்விடுகிறார். அப்போது அது சிலிர்த்தெழுந்துவிடுகிறது. கோபத்தின் விதை எப்போது உருவமெடுக்கிறது என்பதைக் கவனித்து, அதைக் கவனிக்கக் கற்றுக்கொள்வது அவசியமானது.

* * *

உணவில்லாமல் எதுவும் உயிர்த்தி ருக்காது என்று புத்தர் கூறினார். மெய்யறிவு, நிறைவு, கவலை, அல்லல் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மெய்யறிவு என்றால் வேறொன்றும் அல்ல. நீங்கள் ஒரு தேநீரைப் பருகும்போது, தேநீரைப் பருகுகிறோம் என்கிற விழிப்புணர்வு மட்டுமே. அந்த மனம்நிறை கவனம், அந்த விழிப்புணர்வுதான் மெய்யறிவு. நீங்கள் ஏற்கெனவே பல முறை தேநீர் அருந்தியிருக்கிறீர்கள். ஆனால், அதைப் பருகுவதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவே யில்லை. எதிர்காலம், இறந்த காலம் தொடர்பிலான கவலைகளில் நீங்கள் ஆழ்ந்து இருந்திருக்கிறீர்கள். தேநீர் குடிக்கும் செயலில் உங்கள் மனத்தைக் குவித்தால் கொஞ்சம் தேநீரைப் பருகும்போதும் ஆனந்தம் தானாகவே வரும்.

* * *

புத்தர் ஏற்கெனவே இங்கிருக் கிறார். நீங்கள் மனம்நிறை கவனத்துடன் இருந்தால் எதிலும் புத்தரைக் காணமுடியும், குறிப்பாக சமூகத்திலும். இருபதாம் நூற்றாண்டு என்பது தனிமனித வாதத்துக்கானது. ஆனால், இனியும் அது அவசியமில்லை. மனிதர்கள் - உயிர்கள் சேர்ந்த சமூகமாகவே வாழ முயல வேண்டும். ஒரு துளி நீராக அல்ல, நதியாகப் பொழிய விரும்புவோம். அப்படியாகத்தான் இங்கே, இப்போதே புத்தரின் இருப்பை நம்மால் உணர்வது சாத்தியமாகிறது. ஒவ்வொரு எட்டிலும், ஒவ்வொரு மூச்சிலும், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், செய்யும் ஒவ்வொரு செயலிலும் புத்தர் உருவமெடுக்கிறார். புத்தரை வேறெங்கும் தேடவேண்டாம். தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மனம்நிறை கவனத்துடன் வாழும் கலை அது.

 

https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/605391-zen-quotes-2.html

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயேசுவின் உருவகக் கதைகள் 21: கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால்...

jesus-story  

தான் சொல்வதை எளிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டு மென்றுதான் உவமைகள் எனப்படும் உருவகக் கதைகளை இயேசு சொன்னார். அவர் சொன்ன எடுத்துக் காட்டுகளை மனத்தில் வைத்துச் சிந்தித்தால் போதும்; அவ்வப்போது நம்மில் தோன்றும் கேள்விகளுக்கான பதிலைப் பெறலாம்.

துன்பங்களைக் கடவுள் அனுப்புவதாக நினைப்போர் இருக்கிறார்கள். ‘ஏன் கடவுள் இப்படிச் செய்கிறார்? ஏன் மாற்றி மாற்றி என் வாழ்க்கையில் சோதனைகளையும் வேதனைகளையும் அனுப்புகிறார்?’ என்று கேட்போர் இருக்கிறார்கள்.

தங்கள் மன்றாடல்கள் கேட்கப்படவில்லை. தாங்கள் கேட்டதைக் கடவுள் தரவில்லை. அப்படியானால், என் மீது அவருக்கு அக்கறை இருக்கிறதா? என்னை அவர் அன்பு செய்கிறாரா என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.

இந்த இரு வகையான கேள்விகளுக்கும் இயேசு சொன்ன ஒரு எடுத்துக்காட்டில் பதில் இருக்கலாம். என்ன சொன்னார் இயேசு? “உங்கள் பிள்ளை உங்களிடம் வந்து அப்பம் வேண்டும் எனக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பீர்களா? உங்களில் யாராவது அப்படிச் செய்வீர்களா? மீன் சாப்பிட ஆசைப்பட்டு, உங்கள் மகன் மீன் வேண்டும் எனக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இங்குள்ளோரில் எந்தத் தந்தையாவது இப்படிச் செய்வாரா?” என்று கேட்டுவிட்டு, தான் சொல்ல விரும்பிய உண்மையைச் சொன்னார்.

“உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வற்றை, நற்கொடைகளை மட்டுமே தர வேண்டும் என்று தீயோராகிய உங்களுக்கே புரிந்திருக்கிறதே! அப்படியானால் உங்கள் இறைத்தந்தை நல்லது அல்லாத எதையும் உங்களுக்குத் தருவாரா?” என்று கேட்டார் இயேசு.

இறைவன் தீயதைச் செய்வாரா?

இயேசு கேட்ட இந்தக் கேள்விக்குப் பின்னே உள்ள கேள்விகள் என்ன? நம்மைத் தம் பிள்ளைகளாகக் கருதி அன்பு செய்யும் இறைவன் நமக்குத் துன்பங்களை அனுப்புவாரா? எனவே, நம்முடைய துன்பங்களுக்குக் கடவுளைக் குறைசொல்வது தவறாகாதா?

கடவுள் துன்பங்களை அனுப்புவதில்லை. காரணம், அவர் நம் அன்புத் தந்தை. அப்படியென்றால், துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

சில துன்பங்கள் நாமே தேடிக்கொள்பவை என்பது எளிதில் புரியும். ஆபத்தானவற்றை உறுதியாய் உடனே விலக்காமல், அவற்றை உள்ளே அனுமதித்தால், அவை நம்மை விரைவாகவோ மெதுவாகவோ அழிக்கும் என்பது விளங்கும். ஆசைகள், தேவைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுப்பாடு இல்லாவிட்டால், அவை நம்மை இழுத்துப் போய் காட்டாற்றில் தள்ளக்கூடும் என்பது புரியும்.

வேறு சில துன்பங்கள் பிற மனிதரிடமிருந்து வருபவை என்பதையும் நாம் புரிந்து கொள்வோம். தங்களின் தன்னல லாபங்களுக்காக நம்மை ஏமாற்றி, நம்மைப் பயன்படுத்துவோர், எந்த உயர்ந்த விழுமியமோ, கொள்கையோ, மனிதநேயமோ இல்லாமல் தங்களின் பேராசைகளுக்கு நம்மைத் தீனியாக்க முனைவோர் என்று இந்தப் பட்டியல் நீளும்.

சில துன்பங்கள் எங்கிருந்து வருகின்றன என்று நம்மால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என்பது உண்மை. விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், ஒரு சிலரின் தவறுகளால் எண்ணற்ற மக்களைப் பாதிக்கும் பெரும் துன்பங்கள் போன்றவை எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. இப்படி நம் சிந்தனை விரிந்தால், துன்பங்களை அனுப்புவது கடவுள் என்று தவறாக எண்ணி, அவரைக் குறை சொல்ல மாட்டோம்.

இயேசு சொன்ன தந்தை-மகன் எடுத்துக்காட்டு இன்னொரு புதிருக்கும் விடை சொல்லலாம்.

கேட்பதை கடவுள் ஏன் கொடுப்பதில்லை?

ஏன் நான் கேட்டதைக் கடவுள் தரவில்லை? கேட்டும் தராதவருக்கு எப்படி என் மீது அக்கறையும் அன்பும் இருக்க முடியும் என்று கேட்போர் இருக்கிறார்கள். இயேசு சொன்ன இந்த எடுத்துக்காட்டை முன்வைத்து, உற்றுநோக்கினால் இதற்கும் அங்கே பதில் இருப்பதைப் பார்க்கலாம். பசியில் மகன் அப்பம் கேட்டால், அன்பான தந்தை அதை நிச்சயம் அவனுக்குத் தருவார். பத்து அப்பம் சாப்பிட்ட பிறகும், மகன் தொடர்ந்து அப்பம் கொடு என்று கேட்டால், நல்ல தந்தை என்ன சொல்லுவார்?

“நெருப்பை விழுங்கினால் எப்படி இருக்கும் என்று நான் பார்க்க வேண்டும். கொஞ்சம் நெருப்புத் தா” என்று ஒரு முட்டாள் மகன் கேட்டால், அன்பும் ஞானமும் உள்ள தந்தை என்ன செய்வார்?

தொடர்ந்து மன்றாடிய பிறகும் நாம் கேட்டதைத் தரவில்லை என்றால், எதற்காக அதைக் கடவுள் தர மறுத்திருப்பார்? அது நம் தேவை என்று நினைத்தது தவறாக இருக்கலாமோ?

ஆபத்தான ஆசையைத் தேவை என்று நாம் ஒருகட்டத்தில் நினைத்திருக்கலாம். நமது சிந்தனை ஆழப்பட்டு அந்தக் கோரிக்கையைக் கடந்த பிறகு, நாம் கேட்டதைத் தராமல் இருந்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்லத் தானே செய்வோம்.

“அறியாமல், ஆழமாகச் சிந்திக்காமல் அவசரத்தில் கேட்டுவிட்டேன். நான் கேட்டதைத் தராமல் இருந்ததற்கு நன்றி, இறைவா!”

https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/612574-jesus-story-4.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.