Jump to content

கடன் தரப்படுத்தல் அறிக்கை என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடன் தரப்படுத்தல் அறிக்கை என்றால் என்ன?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 செப்டெம்பர் 21

அண்மையில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட செய்தியொன்று, பலருக்கு ஆச்சரியமானதாக இருந்திருக்கலாம். இப்படி எல்லாம் எங்கள் நாட்டில் இருக்கிறதா எனும் கேள்வியை எழுப்பி இருக்கலாம். இன்னும் சிலருக்கு, இலங்கையின் சேவைப்படுத்தல் மிக இலகுபடுத்தப்பட்டிருக்கிறதே என்று  மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம்.  எனவே, கடந்த வாரங்களில் பேசப்பட்ட கடன்தரப்படுத்தல் அறிக்கைகளை, நேரடியாக பொதுமக்களே பெற்றுக்கொள்ள முடியும். கடனுக்கு உத்தரவாதம் வழங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் நிலையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய செயன்முறையை பார்க்கலாம். 

இலங்கையின் தனிநபர் கடன் சுமையானது, நகரம், கிராமம் முழுவதுமே வெவ்வேறு வடிவங்களில் பரந்து கிடக்கின்றன. கிராமங்களிலுள்ளவர்கள் நுண்கடன் சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்க, நகரங்களில் வாழ்பவர்கள் கடனட்டை சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், கடனை அடைத்துக்கொள்ள இன்னுமொரு கடனைப் பெற்றுக்கொள்வைதயும் ஒரு கடனட்டை உச்சவரம்பை எட்டிக்கொள்கின்றபோதும், மற்றுமொரு கடனட்டையைப் பெற்று பயன்படுத்துவதையும் ஒரு தீர்வாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மற்றுமொரு வங்கியோ அல்லது கடனட்டை வழங்கும் நிறுவனமோ எப்போது கடனை அல்லது கடனட்டை வழங்குவைத  நிறுத்திக் கொள்ளுகின்றதோ அப்போதுதான் உண்மையான கடன்சுமையை உணரத் தொடங்குவதுடன், அதை மீளச் செலுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். 

கடனையும் கடனட்டையும் ஒரு வங்கியில் பெற்றுக்கொள்ளுபவர்கள், மற்றுமொரு வங்கியில் கடனைப் பெற்றுக்கொள்ளச்செல்லும்போதும் முன்னைய வங்கியில், பெற்றுக்கொண்ட வங்கிக்கடன் தொடர்பில் அவர்களுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடனையே, கடனைப் பெற்றுக்கொள்ளச் செல்கிறார்கள். ஆனால், இலங்கையில் கடனொன்றை அல்லது கடனட்டை ஒன்றை பெற்றுக்கொள்ளும் எந்தவொரு நபரினதும் தகவல்,  இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகத்தில் (CRIB ) பதிவாகின்றது என்பதையும், அதை எந்தவொரு நிதி நிறுவனமும் குறித்த தனிநபரும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள். இதனால், மற்றுமொரு வங்கியோ, கடனட்டை நிறுவனமோ, கடன் அல்லது கடனட்டை விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது, செய்வதறியாது நிற்கும் நிலை ஏற்படுகின்றது. 

இந்தக் கடன்கொடுகடன் பணியகம்,  தமது கடனுக்கான அறிக்கை, சரியான விழிப்புணர்வு போன்றவை தொடர்பாக, நம்மவர்களின் நிதியியல்சார் கல்வியறிவு இல்லாததன் காரணத்தாலேயே, கடன் மீள்செலுத்தும் திறன் பற்றியும் இதனால் ஏற்படும் சிக்கல்தன்மை குறித்தும் பலர் அறிந்திருப்பதில்லை.  

கடன்தரப்படுத்தல் என்றால் என்ன?  

கடன்தரப்படுத்தல் எனப்படும் இலங்கையின் கடன்கொடுகடன் பணியகமானது, நாட்டின் கடன் தரப்படுத்தலை மேம்படுத்தும் நோக்கிலும், கடன் வழங்கல், பெறுதலில் ஒரு சீராக்கத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் தெற்காசியாவிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட நிறுவகமாகும். 1980ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவகத்தில், இலங்கை மத்திய வங்கி பங்குதாரராக இருப்பதுடன், இதற்கு மேலதிகமாக மேலும் 93 பங்குதாரர்களை அங்கமாகக்கொண்டு, இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. மொத்தம் 94 பங்குதாரர்கள் பட்டியலில் 25 வணிக வங்கிகளும் 7 விஷேட வங்கிகளும், 45 பதிவு செய்யப்பட்ட நிதிநிறுவனங்களும்   6 குத்தகை நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். 

கடன்தரப்படுத்தல் நிறுவனத்தின் மிகப்பெரும் நோக்கமே, வாடிக்கையாளர்களுக்கு மிக இலகுவாகவும் விரைவாகவும் கடன்தகவல்களை வழங்கு வதுடன், நாட்டின் கடன்நிலையை ஸ்திரமானநிலையில் கொண்டுநடாத்த உதவுவதாகும்.  

கடன்தரப்படுத்தல் பயன்பாடுகள் என்ன?  

கடன்தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையிலுள்ள வங்கிகள்,  நிதிநிறுவனங்கள் அனைத்துமே தமது கடன்தொடர்பான விபரங்களையும் தம்மிடம் கடன் பெற வருபவர்கள் தொடர்பானத் தகவல்களை ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் ஆவணக் கோரிக்கைகளின் வாயிலாகவே பெற்றுக்கொண்டிருந்தார்கள். இதன்காரணமாக, வங்கிகள் , நிதி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, மாதக்கணக்கில் காத்திருக்கும்நிலை ஏற்பட்டது. ஆனால், இலங்கை கொடுக்கடன் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு, அனைத்து தகவல்களும் ஒன்றுதிரட்டப்பட்டு ஓரிடத்தில் ஆவணப்படுத்தப்பட்டு, முறையானவகையில் உடனுக்குடன் தேவைப்படும் தரப்பினருக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை கொடுக்கடன் பணியகத்தின் தகவல் களஞ்சியமானது, ஒவ்வொரு மாத இறுதியிலும், தன்னியக்க முறையில் அங்கத்துவம் கொண்ட நிறுவனங்களின் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலமாக, எந்தவொரு நிறுவனமும் பொது மகனும் தனது கடன்நிலை தொடர்பில் மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இந்தத் தகவல் களஞ்சியத்திலுள்ள தகவல்கள் தனி நபர்களின் தேசிய அடையாள அட்டை எண் அடிப்படையிலும் நிறுவனங்களின் தகவல்கள், வியாபார பதிவெண்ணின் பிரகாரகமும் மிக இலகுவாகக்
கண்டறியப்படுகிறது. 

கடன்தரப்படுத்தலில் உங்கள் பெயர் உள்ளதா?  

நம்மில் பலருக்குமே கடன்தரப்படுத்தல் தொடர்பான மிக தவறான அனுமானங்களே மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானவொன்று, இலங்கை கடன்கொடு பணியகத்தின் அறிக்கையில் இடம்பெறுகின்ற பெயர்கள், நிறுவனங்கள் அனைத்துமே, தமது கடனை மீளச்செலுத்தாதவர்களாகவே இருப்பர்கள் என்பதாகும். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.   

உதாரணத்துக்கு, தனிநபராகிய நீங்கள், வங்கியில் கடன் ஒன்றையோ அல்லது கடனட்டை ஒன்றையோ பெற்றுக்கொள்ளும்போது அல்லது மற்றுமொருவரின் கடனுக்காக உத்தரவாத கையொப்பத்தை வைக்கும் போது, உங்களது அனைத்து விவரமும் கடன்கொடு தகவல் பணியகத்தில் சேமிக்கப்பட்டுவிடும். இதற்கு அர்த்தம், கடன்கொடுகடன் பணியகத்தில் உங்கள் தகவல் வருவதால், நீங்கள் கடனை மீளச்செலுத்தாதவர் என்றாகிவிடாது. கடன்பெற்ற நீங்கள் மீளவும் மற்றுமொரு வங்கியில் கடனைப் பெற செல்லும்போது, இதுதொடர்பில் அறிவிக்கவும், இந்த நபருக்கான இயலுமைத்தன்மை தொடர்பில் குறித்த வங்கியோ, நிதிநிறுவனமோ அறிந்துகொள்ளவும், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில், கடன்தரப்படுத்தல் அறிக்கையின் வகைப்படுத்தலின் பிரகாரமே, ஒருவரது கடன் மீள்செலுத்தும் நிலையும், மற்றுமொரு கடன் பெறக்கூடிய நிலையும் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, கடன் அறிக்கையில் பெயர் இடம்பெற்ற ஒரே காரணத்தால், கடன் வழங்க மறுக்கப்படுவதுமில்லை, கடன்பெற்றவர் தவறாக வகைப்படுத்தப்படுவதுமில்லை. 

மேற்கூறிய உதாரணம்போலவே, குறித்த நிறுவனமொன்றின் உரிமையாளராக நீங்கள் உள்ள சந்தர்ப்பத்தில், குறித்த நிறுவனம் ஏதேனும் வங்கி கடனையோ அல்லது ஏதேனும் நிதி வசதிகளை பெற்றிருந்தாலோ நிறுவனத்தின் பெயரும் உங்களது பெயரும் கடன் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். 

எப்படியானது; எப்படிப் பெறுவது?

இலங்கை கடன்கொடு பணியகத்தால் வழங்கப்படும் கடன் அறிக்கையில், கடன் அல்லது கடனட்டை வழங்கிய நிறுவனத்தின் பெயர், பெற்றுக்கொண்டவரின் தனிநபர் விபரம், பெற்றுக்கொண்ட கடனின் அளவு, கடன் வழங்கப்பட்ட திகதி, மீள்செலுத்துகை முறை, கடனுக்காக வழங்கப்பட்ட உத்தரவாத முறை, மாதாந்தம் மீளச்செலுத்தும் தொகை, திகதி விவரம், மாதாந்த மீளசெலுத்தலில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பிலான குறிப்பு, அண்மையில் மீளச்செலுத்தி முடிக்கப்பட்ட கடனின் விவரம், பெற்றுக்கொண்ட கடனில் மீளசெலுத்தாமல் நிலுவையாக உள்ளவற்றின் விபரம், காசோலை வழங்குதலில் தொடர்பிருப்பின் அதுதொடர்பான விவரம், ஏதேனும் காசோலைகள் பணமாக்கப்படாது மறுக்கப்பட்டிருப்பின் அதுதொடர்பிலான விவரம், கடன் தொடர்பில் முக்கியமான ஏனைய விவரங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இவ்வறிக்கை, இலங்கை கடன்கொடு பணியகத்தால், தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். 

மேற்கூறிய கடன்தரப்படுத்தல் அறிக்கையை நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களது கடன் மதிப்பீடு தொடர்பில் அறிந்துகொள்ளக் கூடியவகையில் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு தற்போது வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றது. பொதுமக்காளாகிய நீங்கள், உங்களது கடன் மதிப்பீட்டை அறிந்துகொள்ளவோ அல்லது உங்களது பெயரில் யாரேனும் கடன் பெற்று ஏதேனும் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளவோ இந்தக் கடன் அறிக்கையைப் பெறுவது அவசியமாகவுள்ளது. இதற்கு, உங்களுக்கு அருகாமையிலுள்ள அல்லது நீங்கள் வங்கி கணக்கை கொண்டுள்ள ஏதேனுமொரு வங்கிக்கிளையில் குறித்த CRIB அறிக்கையை பெறுவதற்கான விண்ணப்பப்படிவத்ைத  இலவசமாகப் பெற்று பூரணப்படுத்தி கையளித்தாலே போதுமானது ஆகும். விண்ணப்பபடிவம் மட்டுமே இலவசமாக வழங்கப்படுவதுடன், குறித்த CRIB அறிக்கை நம்கைகளுக்கு கிடைக்க தனிநபர் ஒருவர் 150/- ரூபாயாயும், நிறுவனம் 500/- ரூபாயும் இலங்கை கொடுகடன் பணியகத்துக்கு கட்டணமாக செலுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் விண்ணப்பத்தைக் கையளித்த தினத்திலிருந்து அதிகூடியதாக இரண்டு வாரத்தில், CRIB அறிக்கையானது தபாலில் உங்களை வந்துசேரும். இைத விடவும் மிகவேகமாக உங்களுக்கு CRIB அறிக்கை தேவைப்படின், இணையத்தில் (http://www.crib.lk/) தரவிறக்கிய விண்ணப்பப் படிவத்தை அல்லது வங்கியில் பெற்ற படிவத்தை பூரணப்படுத்தி, ஏதேனும் வங்கியின் அத்தாட்சிப்படுத்தலுடன், கொழும்பிலுள்ள இலங்கை கொடுகடன் பணியகத்தில் கையளிக்கும் அதேநாளில் குறித்த CRIB அறிக்கையை பெற்றுக்கொள்ள கூடியதாகவிருக்கும். குறித்த ஒருநாள் சேவைக்கு மேலதிகமாக 100 ரூபாய்  மட்டும் இலங்கை கடன் கொடுகடன் பணியகத்தால் அறவிடப்படுகின்றது. 

எனவே, தனிநபர் ஒவ்வொருவரும் தமது கடன்நிலை தொடர்பிலும் கடன் தரப்படுத்தல் தொடர்பிலும் அறிந்துகொள்ள, குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்ளுவது அவசியமாகிறது. குறித்த  அறிக்கையின் மூலமாக, நிதி நிறுவனங்களுக்குச் செல்ல முன்பே, உங்களது நிதி இயலுமைத் தன்மை, நிதி நிறுவனத்தில் மேலதிக நிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மை ஆகியவற்ைற நீங்களாவே சுயமதிப்பீடு செய்து கொள்ள முடிவதுடன், அதற்கேற்ப உங்கள் வாழ்க்கை முறையையும் வாழ்க்கை செலவீனங்களையும் கூட நெறிப்படுத்திக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். 

இந்த வாரம், இலங்கை கடன் கொடுக்கடன் பணியகத்தின் சேவை, CRIB அறிக்கைைய  எப்படி பெற்றுக்கொள்ளுவது, அைத பெறுவதன் நன்மை ஆகியவற்றை அறிந்துகொண்டதுபோல, எதிர்வரும் வாரங்களில் CRIB அறிக்கையை எவ்வாறு புரிந்துகொள்ளுவது, கடன் தரப்படுத்தலில் மோசமாக தரப்படுத்தப்பட்டிருப்பின் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது போன்ற விடயங்களைப் பார்க்கலாம். 
 

 

http://www.tamilmirror.lk/வணிகம்/கடன்-தரப்படுத்தல்-அறிக்கை-என்றால்-என்ன/47-255671

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
    • கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார்.  அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு  இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
    • ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்    ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார். மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார்.  இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.   1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.  அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது.  https://www.virakesari.lk/article/198112
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.