Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு! |  Athavan News

செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஏரிகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருகிறது ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ்.

அந்த ஆய்வுக்கலத்தின் ரேடரின் தரவுகளைக் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தின் நிலப்பரப்புக்கு 1.5 கிலோமீட்டர் கீழே சுமார் 20 கிலோமீட்டர்  அகலமுள்ள ஏரி இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தவகையில், தற்போது மீண்டும் 3 ஏரிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/செவ்வாய்-கிரகத்தில்-மூன்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்தக் காசைப் போட்டு பூமியில உள்ள ஏரிகளை பாதுகாக்கலாமே. பூமி பாலவனமாகுது... இவங்களால.. இவங்க என்னடான்னா.. செவ்வாயில ஏரியைக் கண்டுபிடிக்கிறாய்ங்களாம். 

பல கோடி கோள்கள் விண்வெளியில் உண்டு. அதில பலவற்றில் பல ஏரிகள் இருக்கும். அதனால் பூமிக்கு என்ன பயன்... முதலில்.. வாழும் வீட்டை ஒழுங்கா வைச்சிருங்கடா... முட்டாள்களா.

சும்மா சுய விளம்பரத்துக்கு தற்பெருமை விஞ்ஞான வியாபாரத்துக்கு.. வீணான கண்டுபிடிப்பு. பூமியில் இதனால் ஒரு பயனும் இல்லை. 

அதுபோக மொத்தல்ல.. கொரானாவுக்கு மருந்து கண்டு பிடிங்கடா... ஐரோப்பிய அப்பிரசிண்டுகளா... 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.