Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுநல்வாடை 

வையகம் பனிப்ப, 
வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் 
புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய 
கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை 
வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு 
கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி 
நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி 
நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் 
கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை 

கன்றுகோ ளழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன 
கூதிர்ப் பானாள்
புன்கொடி முசுண்டைப் 
பொறிப்புற வான்பூப்
பொன்போற் பீரமொடு 
புதற்புதல் மலரப்
பைங்காற் கொக்கின் 
மென்பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரைய டெவ்வாயுங் 
கவரக் கயலறல் 
எதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் 
வெண்மழை அகலிரு 
விசும்பில் துவலை கற்ப 

அங்கண் அகல்வயல் 
ஆர்பெயற் கலித்த
வண்தோட்டு நெல்லின் 
வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் 
மணியுறழ் எருத்திற்
கொழுமடல் அவிழ்ந்த 
குரூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள 
வீங்கிப் புடைதிரண்டு
தெண்ணீர்ப் பசுங்காய் 
சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய 
விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய 
குரூஉத்துளி தூங்க

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாட மோங்கிய மல்லன் மூதூர்
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் 
படலைக் கண்ணிப் 
பரேரெறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட்ட டறுவையர் 
வேண்டுவயின் திரிதர
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்
மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து 

அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை யயர
மனையுறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையடு 
மன்றுதேர்ந் துண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக 

வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு 
வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின் 

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை 
வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் 
பண்ணுமுறை நிறுப்பக் 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாடியவர் :: 
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை :: வாகை
துறை :: கூதிர்ப்பாசறை
பாவகை :: ஆசிரியப்பா
மொத்த அடிகள் :: 188

இந்த காணொளியில் 
72 முதல் 114 வரிகளுக்கான 
விளக்கம் காணலாம் 

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் 

துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு
நாளடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாளடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியோடு 
வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து 

நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்
பணைநிலை முனைஇய பல்லுளைப் 
புரவி புல்லுணாத் தெவிட்டும் 
புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் 
நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்
கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல
ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் 

யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய 
குரூஉத்தலை நிமிரெரி
அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப்
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ 

மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லில்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாடியவர் :: 
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
திணை :: வாகை
துறை :: கூதிர்ப்பாசறை
பாவகை :: ஆசிரியப்பா
மொத்த அடிகள் :: 188

இந்தப் காணொளியில் 
169 முதல் 188 வரிகளுக்கான 
விளக்கம் காணலாம் 

இன்னா அரும்படர் தீர விறறந்து
இன்னே முடிகதில் அம்ம மின்னவிர்
ஓடையடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் 

களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எ·கமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் 

புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே

--------------------------------

நெடுநல்வாடை விளக்கவுரைகள் 
பலவற்றை வாசித்து 
திரு . என் சொக்கன் அவர்கள் எழுதிய "சில்லென்று ஒரு காதல்" என்ற 'நெடுநல்வாடை' புத்தகத்தின் 
விளக்கத்தை தழுவி உருவாக்கப்பட்டதே இந்த காணொளி

நன்றி திரு என் சொக்கன் அவர்கள் 

--------------------------------

நெடுநல்வாடை புத்தகம் வாசிக்க
https://t.me/tamilbooksworld/20437

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.