Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் கட்டாய வெளியேற்றம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லொட்ஜ்களிலுள்ள தமிழர் செய்த பாவம் என்ன? '

எம்.ஏ.எம். நிலாம்

கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் என்ன பாவம் செய்ததற்காக கைது செய்து வெளியேற்றப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சொந்த நாட்டில் ஓரிடத்தில் சுதந்திரமாகத் தங்கியிருப்பதற்குக் கூட தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுவதாகவும் கண்டித்துள்ளார். தலைநகரில் சோதனை என்ற பெயரில் (லொட்ஜ்) விடுதிகளில் தங்கியிருக்கும் இளைஞர், யுவதிகள் உட்பட தமிழ் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்வதற்கான காரணம் கூட தெரிவிக்கப்படுவதில்லை. கைது செய்த இந்த தமிழ் மக்கள் கட்டாயத்தின் பேரில் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

அப்பாவித் தமிழ் மக்கள் காரணமின்றி கைது செய்யப்படுகின்றனர். விசாரிக்கப்பட்ட பின்னர் எக்காரணமும் கூறப்படாமல் உடனடியாகவே கொழும்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். சொந்த நாட்டில் ஓரிடத்தில் சுதந்திரமாக நடமாடக் கூட தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டில் அடிப்படை மனித உரிமை பாதுகாக்கப்படுவதாகக் கூறுவது வியப்பை அளிக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் என்ன பாவம் செய்ததற்காக இவ்வாறு தண்டிக்கப்படுகின்றனர் எனக் கேட்க விரும்புகின்றேன்.

கைது செய்யப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய பசில் ராஜபக்ஷ, பி.பி. ஜயசுந்தர, லலித் வீரதுங்க போன்றோர் சுதந்திரமாகவும் உயர் பாதுகாப்புடனும் நடமாடுகின்றனர். ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்கள் இன்னல்களுக்குள்ளாக்கப்படுக

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை, இலங்கை பொலிஸார் பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர்.

வெள்ளவத்தை, முகத்துவாரம், கொழும்பின் மத்திய பகுதி உட்பட பல இடங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தங்கக்கூடிய விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று அதிகாலை அங்கு வந்த ஆயுதம் தாங்கிய பொலிசாரால் பலவந்தமாக பேருந்துகளில் ஏற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களை காட்டி அவர்களை பல பேருந்துகளில் ஏற்றிய பொலிஸார் வடக்கு கிழக்கில் உள்ள இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

சரியான காரணமில்லாமல் கொழும்பில் தங்கியிருப்பவர்களை தாம் பேருந்துகளில் ஏற்றி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமது தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அவ்வாறு வெளியேற்றப்பட்ட சிலர் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகலாம் என்ற அச்சத்துக்கு மத்தியில் இந்த நடவடிக்கை தேவையானது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையம் "தகுந்த காரணம் இல்லாமல்" கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்தோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை ஒரு மனித உரிமை மீறல் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கண்டித்துள்ளனர்.

இந்த விவகாரம் இன்று இலங்கை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.

--------------------------------------------------------------------------------

வெளியேற்றப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் வவுனியா வந்தடைந்தனர்

கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த வட பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் இன்று சுமார் ஐந்து பஸ் வண்டிகளில் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஆண்கள், பெண்கள், இளைஞர், யுவதிகள், பிள்ளைகள், வயோதிபர் என பலதரப்பட்டவர்களும் அடங்கிய இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை வவுனியாவில் உள்ள ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரிகளும் பார்வையிட்டுச் சென்றார்கள்.

வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கொழும்புக்குச் சென்றவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் உட்பட, கொழும்பில் தொழில் புரிந்து வந்த சிலரும் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளவர்களில் இருக்கின்றார்கள்.

கொழும்பில் உரிய காரணமின்றி தங்கியிருந்தார்கள் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே விடுதிகளில் தங்கியிருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் நாளை காலை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படுவார்கள் என்றும் அதன் பின்னர் இவர்களை என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளில் இருந்து வெளியேற்றி வவுனியாவுக்குக் கொண்டு வந்தமையானது, நாடு கடத்துவது போன்ற உணர்வையே தமக்கு ஏற்படுத்தியிருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். அடுத்தது என்ன என்பது தெரியாதிருப்பதாகவும், இவர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

-பிபிசி - தமிழோசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தமிழர்கள் பலவந்த வெளியேற்றம் - மகேஸ்வரன் மேற்சட்டையை கழற்றி எறிந்தார்

கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றிய விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, கோபமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தனது மேற்சட்டையை கழற்றி எறிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அகவை முதிர்ந்தவர்கள், நோயாளர்கள், குழந்தைகள், மற்றும் சிறுவர்களும் சிறீலங்கா அரசின் பலவந்த வெளியேற்றத்தில் உள்ளடங்கியுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் மேற்சட்டையை கழற்றி எறிந்த இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது இதுவே முதற்தடவை என்பது நாடாளுமன்ற பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது 83 ஐவிட மோசமான செயல் - முஸ்லீம் கொங்கிரஸ்

கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தைவிட மோசமான நடவடிக்கை என, சிறீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் பேசிய சிறீலங்கா முஸ்லீம் கொங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்தக் கண்டனத்தை வெளியிட்டார்.

தமிழ் மக்கள் முறையான காரணமின்றி அரசினால் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், இதேபோன்று கொழும்பில் தங்கியுள்ள முஸ்லீம்களையும், சிங்கள மக்களையும் அரசு வெளியேற்ற முடியுமா? எனவும் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தங்கியிருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முறையான ஒழுங்குகள் இருப்பதாகவும், அந்த சட்ட ஒழுங்கினை எவரும் மீற முடியாது என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

கஸ்ரப்பட்ட மக்களும், மருத்துவ தேவைகள், உறவினர்களை வெளிநாடு அனுப்புவதற்கு தங்ககங்களில் தங்கியிருந்தவர்களுமே அரசின் நேற்றைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹக்கீம் கண்டனம் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசில் இணைந்துள்ள முஸ்லீம் கொங்கிரஸ் கட்சி பல அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாங்கள் வடக்கு-கிழக்கிற்கு செல்லுகின்றோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கொழும்பில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக அரசு வெளியேற்றியதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தாமும் வடக்கு கிழக்கிற்கு செல்லவிருப்பதாகக் கூறினர்.

நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறி வடக்கு-கிழக்கிற்கு செல்வதாகவும், அதேபோன்று வடக்கு-கிழக்கிலுள்ள படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

அரசின் இந்த நடவடிக்கை பாரிய மனித உரிமை மீறல் எனவும், ஆடு-மாடுகள் போன்று தமிழர்கள் பேரூந்துகளில் பலவந்தமாக அனுப்பி வைக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் செயல் என, இரா சம்மந்தன் கடுமையான கண்டனத்தை வெளியிட்டார்.

சிறீலங்கா அரசின் அடக்குமுறை மாற்றான்தாய் செயற்பாடு காரணமாக கொதிப்படைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் சிறீலங்காவின் அரசியல் யாப்பை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி என்பன ஆதரவு தெரிவித்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு நடவடிக்கையால் 10.35 அளவில் சபாநாயகர் லொக்கு பண்டார நாடாளுமன்ற அமர்வுகளைக் கலைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஜே.வி.பியும் அரசைக் கண்டித்துள்ளது

கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக, ஜே.வி.பியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த செயற்பாட்டை ஒரு முட்டாள்தனமான செயல் என, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க கண்டனம் தெரிவித்தார்.

அதிகாரப் பசியுடைய தலைவர்கள் முன்னைய காலத்தில் செய்த தவறினால் 83 கலவரம் ஏற்பட்டது எனவும், அதேபோன்ற நிலைக்கு தற்போதைய அரசும் நாட்டை இட்டுச்செல்வதாகவும் திஸாநாயக்க கூறினார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் அந்த நடவடிக்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார தெரிவித்திருக்கின்றார்.

அரசு மூவின மக்களிற்கும் பொதுவானது எனவும், சிறீலங்கா ஒரே நாடு என்றால் இந்த மக்களை எந்த நாட்டை நோக்கி திருப்பி அனுப்புகின்றீர்கள் எனவும், மற்றொரு நாட்டிற்கா அனுப்புகின்றீர்கள் எனவும் திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறீலங்கா அதிபரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் இருந்தும் பலர் கொழும்பிற்கு வந்து பணி நிமித்தம் தங்கியுள்ளனர் எனவும், அவர்களையும் நீங்கள் திருப்பி அனுப்பப் போகின்றீர்களா எனவும் திஸாநாயக்க அரசிடம் கேட்டிருக்கின்றார்.

சிறீலங்கா ஒரு நாடு எனவும், இந்த நாட்டில் எங்கும் பயணிப்பதற்கும், தங்குவதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது எனவும், யாரும் விரும்பிய இடத்தில் பணி புரிய முடியும் என்றும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தமிழர்களை வெளியேற்றியதானது ஹிட்லரின் நடவடிக்கையை ஒத்தது: ரணில்

"இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் அரசு மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் தென்னாபிரிக்க அரசு கறுப்பின மக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றது மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகள்."

கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து தமிழர்களை பலவந்தமாக அரசு வெளியேற்றியது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யூதர்களும், ஆபிரிக்கா கறுப்பின மக்களும் ஜேர்மனிய மற்றும் வெள்ளை இன அரசுகளினால் இதே போன்றதொரு துன்பத்தை அனுபவித்திருந்தனர். அரசின் இந்த நடவடிக்கை அரசியல் யாப்பை மீறும் செயல்.

எல்லா மக்களும் சுதந்திரமாக வாழும் உரிமை இங்கு உண்டு. அவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களையும் தெரிவு செய்யும் உரிமை உள்ளது. நாம் நாட்டின் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். ஆனால் அரசுக்கு யார் மீது சந்தேகம் இருப்பினும் அவரை நீநிமன்றத்தில் நிறுத்தி தடுப்புக்காவலில் வைக்க வேண்டுமா அல்லது விடுதலை செய்ய வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும்.

மக்களை எழுந்தமானமாக விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது அவர்களிடம் கோபங்களை உண்டு பண்ணி மேலும் குண்டு வெடிப்புக்களுக்கு வழிவகுக்கும். அரசின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தில் எமக்கு அபகீர்த்தியை விளைவிக்கும். அரசு, ஏன் நாட்டுக்கு இப்படியான ஒரு சிக்கலை தோற்றுவித்துள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

-புதினம்

மகிந்தவின் கொழும்பு நடவடிக்கையில் கேள்விக்குறியாகிப் போன இளம் பெண்ணின் எதிர்காலம்.

சிறிலங்காவின் கொழும்பு நகரில் மகிந்த மேற்கொண்ட தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையினால் திருமணத்துக்கு காத்திருந்த இளம்பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

யாழ். கரவெட்டியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் மற்றும் அவரது 23 வயது மகள் தர்சனி செல்வம் ஆகியோர் வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்தனர்.

தனது கணவர் மறைந்ததையடுத்து கரவெட்டியில் உள்ள தங்கள் வீட்டை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டு கொழும்பில் தங்கியிருந்து, மகள் தர்சனியின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை சரஸ்வதி அம்மாள் செய்து வந்தார். லண்டனில் உள்ள ஒருவரைத் தேர்வு செய்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. எதிர்வரும் புதன்கிழமை திருமணத்தை நடத்துவதற்காக திருமண மண்டபத்தையும் முன்பதிவு செய்துவிட்டு வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்தனர்.

மகிந்தவின் நடவடிக்கையினால் தாயும், மகளும் தற்போது அந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். தனது மகளின் திருமணத்துக்காக தாங்கள் தங்கியிருக்கிறோம் என்றும் அரங்கத்தை முன்பதிவு செய்துள்ளமைக்கான பற்றுச்சீட்டுக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துக் காண்பித்தும் சிறிலங்கா காவல்துறையினர் அதனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் வெளியேற்றிவிட்டனர். தாய் மற்றும் மகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சரஸ்வதி அம்மாளின் யாழ். கரவெட்டியில் உள்ள வீடு தற்போது அடமானம் வைக்கப்பட்டுவிட்டது.

எதிர்வரும் புதன்கிழமையோ திருமணம் நடைபெற வேண்டும்.

மகிந்தவினால் சிங்களவர் பிரதேசத்தில் தங்க முடியாத நிலை.

ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் சிங்களவர் அரசாட்சியில் இத்தகைய அவலத்தைத்தான் காலம் காலமாக எதிர்கொண்டுதான் ஆகவேண்டுமா?

-Puthinam-

தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் மற்றொரு கொடூர வடிவம் இது

!

ஈழத் தமிழர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் வறுத்தெடுத்து வதைக்கும் அரச ஒடுக்குமுறை, இப்போது தலை நகரிலும் அவர்களை கருவறுக்கும் தனது வேலையைக் கனகச் சிதமாக முழு அளவில் ஆரம்பித்து விட்டது.

கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நித் திரைப் படுக்கையில் இருந்து உடுத்த உடையோடு கால் நடைகள் போல அள்ளிச் செல்லப்படும் கொடூரம் முழுத் தமிழினத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அவமான மாகும்.

மாற்று இனத்துப் பிச்சைக்காரர்கள் கூட தலைநகர் வீதியோரங்களில் கேட்பாரின்றி விசாரிப்பாரின்றி ஆனந் தமாக, சாவகாசமாகப் படுத்துத் தூங்கி மகிழும்போது தமிழர்கள் மட்டும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த குற் றத்துக்காக தலைநகர் விடுதிகளில், தங்களது சொந்தப் பணத்தில் தங்கியிருக்கக் கூட உரிமை இல்லாதவர்களாக, கூண்டு பஸ்களில் கூண்டோடு அள்ளிச் செல்லப்படுகின் றார்கள்.

தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பெரும் இராணுவக் கெடுபிடி யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தினசரி மோதல்கள், தாக்குதல்கள், கடத்தல்கள், வீடுகளுக் குள் சீருடையினர் புகுந்து நள்ளிரவில் நடத்தும் கொடூரங் கள், கொள்ளைகள், கொலைகள், இம்சைகள், தொல்லை கள் என்று பெரும் வன்முறைப் புயலே அங்கு வீசுகின்றது.

போதாக்குறைக்குத் தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் மீதும் வான் வழி விமானக்குண்டு வீச்சுகள், ஷெல், பீரங் கித் தாக்குதல்கள், கிளைமோர் வெடிகள், கடல்வழி நடவடிக் கைகள் என்று பெரும் உயிராபத்து ஏற்படுத்தும் கொடூர யுத்த நிகழ்வு கள் இடம்பெறுகின்றன.

இவை எல்லாவற்றிலிருந்தும் உயிர் பிழைத்துத் தப்பு வதே முக்கியமானது என்று கருதி, உயிரைப்பிடித்துக் கொண்டு, உடைமைகளைத் துறந்து, அகப்பட்ட சொத்தை அறா விலைக்குத் தன்னும் விற்றுச் சுத்தி, கிடைத்த பணத்துடன் தலைநகர் வந்துசேரும் அப்பாவித் தமிழர் குடும்பங்கள், ஏதேனும் நாடொன்றுக்குத் தப்பிச் சென்று, தஞ்சம் புகுந்து, பிச்சை எடுத்தேனும் பிழைத்து, உயிர் தப்புவோம் என ஏங் கித் தவிக்க

"மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல' தலை நகரில் அரச ஒடுக்குமுறை அந்த மக்கள் மீதும் தனது பேரின வாத மேலாண்மைத் திமிரை, கொடூரக் கைவரிசையாகக் காட்டி நிற்கின்றது.

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட் டம் ஆயுதம் தாங்கிய எதிர்க்கிளர்ச்சி வடிவத்தை எடுப்பதற் குப் பின்புலக் காரணமாக விளங்கிய புரட்சிகர உட்கிடை களை இன்னும் சரிவரப்புரிந்து கொள்ளாத சிங்களம், அப்பா வித் தமிழர்களையும் மீண்டும், மீண்டும் தூண்டி, நெட்டித் தள்ளி, அந்த ஆயுதம் தாங்கிய எதிர்ப்புரட்சிப் பாதைக்குள் ளேயே தள்ளிவிடுகின்றது. அதனால் அதன் எதிர்விளைவு களை எதிர்கொண்டு அல்லாடுகின்றது சிங்களம்.

அத்தகைய தவறை இழைத்தும் இன்னும் கூடப் பட்ட றிந்து தெளியவில்லை தென்னிலங்கைச் சிங்களம். இப் போதும் அதே பாணி நடவடிக்கைகளை எடுத்து, அதே வழிக் குத் தமிழர்களை முட்டித் தள்ளி, உந்தித்தள்ளத் தொடங்கி யிருக்கிறது.

யுத்தப் பிரதேசங்களில் இருந்து ஓடித்தப்பி எங்காவது சென்று பிழைத்துக் கொள்வோம் என்று நிலை தெரியாது குழம்பி வரும் அப்பாவித் தமிழர்களை, சிறைப்பிடித்து மீண்டும் யுத்த அரங்குக்குள் பலவந்தமாகக் கொண்டு போய்த் தள்ளுவது யுத்தத்தை எதிர்கொண்டு மீட்சி காண் பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியே மாற்று மார்க் கமே இல்லை என்பதை அந்த அப்பாவித் தமிழர்களுக்கு நெத்தியடியாக உறைப்பாக உரைப்பதாகும்.

விரிவாக்கம் கண்டுவரும் விடுதலைப் புலிகளின் போராட் டம் வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் விரிந்து, பல புதிய முனைகளைத் திறந்து நிற்கின்றது என்பதும், அந்த முனை களில் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டும் கட் டாயமும் கொழும்பு அரசுக்கு இருக்கின்றது என்பதும் புரிந்து கொள்ளத் தக்கவைதான். அதுவும் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு பிரதானமானது என்பதால் அதற்காக ஏதேனும் செய்தாக வேண்டிய பலவந்தம் கொழும்பு அரசுக்கு உள்ளது என்பதும் ஏற்கத்தக்கதே.

ஆனால் அதற்காக நிழலோடு போர் புரிய அரசு முயலக் கூடாது. விரும்பின் நிஜத்தோடு மோதமுனையவேண்டும்.

யுத்தத்துக்கு அஞ்சி வெளிநாடு எதற்கும் ஓடித் தப்பு வோம் என்று கருதி தலைநகரில் தஞ்சம் புகுவோராலும் அல்லது அது போன்ற காரணங்களுக்காகத் தலைநகரில் தங்கியிருப்போராலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கருத்து வெறும் அபத்தப் போக்கும் பொய்மையான முட்டாள்வாதமுமாகும். அத்தகைய அப்பாவிகளைக் கூண்டோடு அள்ளி யுத்த பூமிக்குத் திருப்பி அனுப்புவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது "மலையைக் கெல்லி எலியைப்பிடிக்கும்' வேலையாகும்.

குற்றம் அல்லது தவறு ஏதும் இழைக்காமல், தமது சொந் தப் பணத்தில் சொந்தச் செலவில் தலைநகரில் தங்கி யிருக்கக்கூடத் தமிழனுக்கு உரிமை இல்லை என்பதை அடித்துக்கூறும் சிங்கள அரசு அதற்காகத் தமிழர்களை அவர்களது தாயகத்துக்கு சிறைக் கைதிகளாகக் கடத்தும் சிங்கள அரசு அந்த மக்கள் தம்பாட்டில், தம் தலைவிதி யைத் தாங்களே தீர்மானித்து, தங்கள் தாயகத்தில் சுதந் திரமாக வாழ்வதை அங்கீகரித்து, ஒதுங்கி விட்டால், இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து விடுமே....!

கொழும்பிலிருந்து தமிழர்களை சுருட்டி அள்ளி அவர் களின் தாயகத்துக்கு வல்வந்தமாக அனுப்பி வைக்கும் கொழும்பு அரசின் நடவடிக்கை, தமிழர்களுக்கு அவர்களது தாயகத்தில் தான் நிம்மதியான பாதுகாப்பான கௌரவ மான நியாயமான வாழ்க்கை முறையை அவர்கள் அமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தி உணர்த்துகின்றது. அதைத் தமிழர்கள் ஆழமாகக் கருத்தில் கொள்வதோடு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும் வேண்டும்.

உதயன்

கொழும்பிலிருந்து அப்பாவித் தமிழர்கள் 400 பேரை அரசு பலவந்தமாக பஸ்களில் அடைத்து விரட்டியது! விடுதிகளில் நித்திரைப் பாயில் வைத்து அள்ளப்பட்டு ராணுவக் காவலுடன் திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்புக்கு கொண்டு விரைவு!!

தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள் ளவத்தை, கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை மற்றும் வத்த ளைப் பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் தங்கியிருந்த தமிழர் கள் சுமார் 400பேர் நேற்று விடிகாலை நித்திரைப்பாயில் வைத்து பொலிஸாராலும், இராணுவத்தினராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பஸ்களில் அடைத்து ஏற்றி கொழும்பு நகருக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

இது நடக்குமென ஒரு வாரத்திற்கு முன்னரே தெரிந்து இருந்தும் ஒரு தமிழ் சட்டமேதவிகளும் இலங்கை நீதிமன்றங்களை அணுகி எந்தவொரு முன் தடையையும் பெறமுயற்சிக்கவில்லை. இனி சட்டையை கழற்றி எறிந்து விளம்பரம் தேடுவதை தவிர வேறொன்றும் செய்யமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

302 தமிழர்கள்தான் வெளியேற்றப்பட்டனர்: சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரட்ண

கொழும்பில் உள்ள 20 ஆயிரம் தமிழரில் 302 பேர்தான் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தி பிரிவைச் சேர்ந்தவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான ரஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய நடவடிக்கையானது தவறானது. ஆனால் யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் தவிர்க்க முடியாதவை.

விடுதலைப் புலிகளின் பிரதான இலக்காக கொழும்பு நகரம் உள்ளது. ஆகையால் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை சரி என கூறவில்லை. உண்மையில் அது தவறு. இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டுமெனில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்களில் 302 பேர்தான் வவுனியா, மட்டக்களப்புக்கு 9 பேரூந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். 7 பேரூந்துகள் வாடகைக்கும் இரண்டு சாதாரண பயணிகள் பேரூந்தும் அவர்களை திருப்பி அனுப்ப பயன்படுத்தப்பட்டன.

சாதாரண மக்களைப் போல் கொரில்லாக்கள் பாடசாலைகளுக்கும், கடை வீதிகளுக்கும் செல்கின்றனர். தேயிலைத் தோட்டம் ஒன்றின் கண்காணிப்பாளர் பணியில் இருப்பது போல் நடித்த போதுதான் ஜே.வி.பி.யின் மறைந்த ரோகன விஜவீர கைது செய்யப்பட்டார்.

ஈராக்கின் சதாம் உசேனின் இரு மகன்களைக் கொல்வதற்காக 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வெளியேறியுள்ளனர். அந்த வகையில் அவர்களின் மனித உரிமையும் மீறப்பட்டுள்ளதுதான் என்றார் அவர்.

நாடாளுமன்றில் மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசியதாவது:

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையைவிட மிகக் கொடுமையானது இந்நடவடிக்கை. அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் இந்த நடவடிக்கையை ஆதரிக்கவில்லை. எந்தவித காரணமுமின்றி தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றியுள்ளனர். அதேபோல் முஸ்லிம் மற்றும் சிங்களவர்களையும் வெளியேற்றுவீர்களா? ஏன் தமிழர்களை மட்டும் வெளியேற்றினீர்கள்?

சந்தேக நபர்கள் எனக் கருதினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுங்கள். விடுதிகளில் தங்கியிருக்கும் ஏழைகளை ஏன் இலக்கு வைத்து இந்நடவடிக்கை மேற்கொள்கிறீர்கள்? இதே போல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்வீர்களா?

மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் வெளிநாட்டுக்குச் செல்லும் உறவினர்களை அனுப்புவதற்காகவும் வந்தவர்கள்தான் நேற்றை நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றார் ஹக்கீம்.

--------------------------------------------------------------------------------------------------------------------

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழத்துக்கான பாதையைத் திறந்த மகிந்தவுக்கு நன்றி: சுரேஸ் பிரேமச்சந்திரன்

[வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 11:37 ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழம் உருவாவகுவதற்கான பாதையைத் திறந்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியதாவது:

கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இந்த வெளியேற்றல் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் அங்கே நீங்கள் போய் குடியேற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு விடுதிகளிலிருந்து இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன

கொழும்பில் 20,.000 தமிழர்களா இருக்கிறார்கள்..........? வெள்ளவத்தை பம்பலபிட்டியில் மட்டும் 1இலட்சத்துக்கு மேற்பட்ட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள்

What is the guarantee of Tamils' security?

Asking “if the international community is refusing to make the slightest effort to restrain the Sri Lanka state today, when vicious violence against Tamils is no longer even disguised, then on what basis are we to expect it to do so in future?” the Tamil Guardian newspaper this week argued: “the Rajapakse administration and the international community are together providing the strongest reason as to why Tamils cannot live safely in a Sinhala-dominated Sri Lanka.” The text of the Tamil Guardian’s editorial, titled ‘On Our Own’ follows:

Despite the intense internationalization of Sri Lanka's conflict in the past few years, the ongoing deterioration of the human rights situation in the island seems inexorable. For decades international human rights organizations have lamented the culture of impunity that has allowed disappearances, extra-judicial killings, torture and sometimes rape to become a matter of routine in the island state. But the massive international intervention that accompanied the Norwegian peace initiative since 2001 promised implicitly, and sometimes explicitly, that such abuse was in Sri Lanka's sordid past. However the past 18 months have amply demonstrated that human rights is a meaningless concept in this bloody island. Instead it is defence of the Dharma that remains the Sinhala state's raison d'etre.

Some argue that today sovereignty is not a state’s absolute right, but conditional on its responsibility. It is international pressure - either moral or tangible in the form of sanctions - that is the guarantee of a state's respect of human rights. This implies a responsibility on the international community to ensure abusive states are held to account. But leading members of the international community involved in Sri Lanka are doing precisely the opposite: funding, arming, advising and supporting the Rajapakse regime's brutality. The logic of the 'war on terror' is being prioritized over protection of international humanitarian and human rights norms. In other words, in the interests of destroying the Liberation Tigers, anything goes.

Of course each international actor vehemently rejects it is condoning or encouraging the Rajapakse administration's violence. The Western states seek cover behind the logic of sovereignty and blame the 'unlikeminded' states for the supposed impossibility of restraining Sri Lanka by sanctions. In the meantime, countries like US and UK use the opportunity provided by renewed high-intensity conflict in Sri Lanka to sell arms.

This week two Red Cross workers were murdered. The killers picked the victims up from the middle of Colombo city and dumped their bodies elsewhere. At the same time, in the interests of 'national security' Tamil neighbourhoods and houses in the sealed capital are being turned over by the security forces. The Police Chief has ordered Tamils who 'have no reason' to be in Colombo to get back to the Northeast or Upcountry areas. Bodies are dumped daily by roads and villages across the government-controlled Northeast and in parts of the South. The international community is not only aware of all this, they have a grandstand seat from which to view the bloodletting.

This contradiction has important lessons for the Tamil people. Since 2001, the panacea for Sri Lanka's ills has been 'federalism.' There is, of course, no body for this shell concept. But we are told that we will not be 'allowed' to have an independent state, so we'd better settle for something short. The Sinhalese are told they have to 'share power' but are to be assured the Tamils will be contained. We have 'grievances' and 'aspirations' the Sinhalese are told. But the core problem - the Sinhala dominated state is brutalizing and scattering our people, dismembering and colonizing our homeland and erasing our community's cohesiveness - is reduced to one of ‘unresolved conflict.’

The question now for the Tamils is a simple one: what is the guarantee of our security in the future? If the international community is refusing to make the slightest effort to restrain the Sri Lanka state today, when vicious violence against Tamils is no longer even disguised, then on what basis are we to expect it to do so in future? The present Sri Lankan state is frail and utterly dependent on foreign aid for its very functioning. Yet we are expected to believe that a Sri Lankan state reinvigorated by the kind of international aid that a peace process alone will bring will be more likely to be responsive to international counsel. That is the basis on which we are to accept a federal solution - i.e. accept the disarming of the LTTE.

In short, the Rajapakse administration and the international community are together providing the strongest reason - beyond the question of the right to self-determination - as to why Tamils cannot live safely in a Sinhala-dominated Sri Lanka. There will always be the possibility of vicious rulers like Rajapakse - and the President's steadily rising popularity amongst the Sinhalese is a solid indicator of the state of ethnic relations today. And international interests will always favour the state over the Tamils. The case for international intervention to restrain the Sri Lankan state cannot be made more clearly than by today's developments. Therefore, the question now is: in the face of international indifference, what options are the beleaguered Tamils left with?

-Tamilnet-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan court halts Tamil eviction

From correspondents in Colombo, Sri Lanka

June 08, 2007

SRI Lanka's Supreme Court today ordered an immediate halt to the eviction of minority ethnic Tamils from the capital, a day after hundreds were expelled at gunpoint.

The Court issued the order following a complaint by a political activist group that yesterday's police operation was a violation of fundamental rights.

"The court will hear the case on June 22, and in the meantime the police Inspector General was restrained from carrying out any eviction of Tamils," a court official said.

Human rights activists have said the expulsions amounted to a "collective punishment" on the Tamil community.

Sri Lanka's Defence Ministry has insisted the operation, in which hundreds were bussed out of the capital to the war-torn east and north, was necessary to prevent bomb attacks by the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

The Tamil Tigers have been fighting for separation from the Sinhalese-majority south of the island since 1972.

Nine people were killed in and around Colombo, a city of 600,000 people, in two blasts last month.

The rebel infiltrators were believed to have used cheap lodgings similar to those targeted in the police raids.

This story is from our news.com.au network Source: AFP

கொழும்பில் 20,.000 தமிழர்களா இருக்கிறார்கள்..........? வெள்ளவத்தை பம்பலபிட்டியில் மட்டும் 1இலட்சத்துக்கு மேற்பட்ட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள்

அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்க மட்டுமே தேவைப்படுவதால் அவர்கள் வாக்காளர் பதிவில் உள்ளதை மட்டுமே கூறுகின்றார்.

பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. காரணம் சிங்கள கிராமசேவகர்களின் திட்டமிட்ட புறக்கணிப்பு, மற்றும் தமிழ்மக்களின் ஆர்வமின்மை (காரணம் யாருக்கு வாக்களிப்பது என்ற விரக்தியில்)!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka slammed for deporting Tamils, bomb defused

http://in.today.reuters.com/news/newsArtic...;archived=False

SRI Lanka's Supreme Court today ordered an immediate halt to the eviction of minority ethnic Tamils from the capital, a day after hundreds were expelled at gunpoint.

The Court issued the order following a complaint by a political activist group that yesterday's police operation was a violation of fundamental rights.

நாடுகடத்தல் நாடகத்தின் திருத்தப்பட்ட இரண்டாம் பாகம்!

சர்வதேச அழுத்தம் காரணமாக இருக்கலாம்!

இதேபோல பயங்கரவாதச் சட்டத்தால் தமிழ்மக்களின் அடிப்படை உரிமை மீறலுக்கு உயர்நீதி(???) மன்றம் தடைவிதிக்குமா?

வழக்குத் தாக்கல் செய்தது கூட அரசாங்கமாகவிருக்கலாம்?

Edited by சாணக்கியன்

Sri Lanka slammed for deporting Tamils, bomb defused

http://in.today.reuters.com/news/newsArtic...;archived=False

பாரிய வீதியோர குண்டொன்றை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றைத் தொடர்ந்து செயலிழக்க செய்துள்ளனர்! 7கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு சோதனை சாவடி ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது!

ஆகவே அனுப்பப்பட்டவர்களில் குற்றவாளிகள் இல்லை!

அவர்களை மீள அழையுங்கள்!

சிறிலங்கா அரசுக்கு சோதனை மேல் சோதனை....!

Edited by சாணக்கியன்

நீதி கெட்டுப்போய் இருக்கிற நாட்டில நீதிமன்றம் சொல்லுறத யார் கேட்கப்போறாங்க?? எல்லாமே நாடகம் தான்.

சாணக்கியன் உங்களது கருத்துக்களில் ஓன்றில் மாபெரும் தவறு செய்துள்ளீர்கள்

அதனை திருத்த விரும்புகின்றேன்.

திருத்திய வடிவம்.

ஆனந்தசங்கரி - பொழுது போக்கு

திருத்திய வடிவம்.

ஆனந்தசங்கரி - கடும் கோபம் ஆத்திரம்

( காரணம் - பாடசாலையில் வாத்தியாராக இருந்த பொழுது யாழ் தேவி ரயிலில் கசுக் கொட்டை குடுத்து செற்றாக்கின அவரின் அந்தரங்க காமக் காதலியும் வெளியேற்றப்டதால் )

ஆதாரம் - 2002 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாத சக்தி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான " மின்னல் " நிகழ்ச்சியில் ஈ.பி.டி.பி யின் தவராஐh சாட்சிகளுடன் குறிப்பிட்டது.

வவுனியாவுக்கு நேற்று அனுப்பபட்டவர்கள் அனைவரும் திருப்பவும் பஸ்சில் ஏற்றி கொழும்புக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் அனுப்பிவைக்கபடபோகிறார்கள் என்று அவுஸ்ரெலியா வானொலி தற்போது அறிவித்திருந்தது அது உண்மையா?

கங்கா நமக்கு சிங்களவனே எதிரி. எம்மை கைவிட்டு விட்ட தமிழர் தலவர்களினை ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்ன தான் இருந்தாலும் தமிழர்களினை இப்படி அசிங்கமாக திட்டுவது உமக்கு கைவந்த வேலை இல்லையா!! :angry:

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 9 6:31:04 EEST 2007

மனைவி விடுங்கோ விடுங்கோ எனக் கதறி அழ... சிறுநீரக நோயாளியை இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றிய பொலிஸார்

கடந்த வியாழக்கிழமை கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பஸ்களில் தமிழர் மாவட்டங்களுக்குப் பலவந்தமாகக் கூட்டிச் சென்ற போது, பொலீஸாரும் படையினரும் மனிதாபிமானமற்ற முறையில் கர்ணகொடூரமாக நடந்து கொண்டனர் என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அந்த அடாவடித்தனத்துக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டுவிட்டு விடுதி ஒன்றில் தங்கியிருந்த நோயாளி ஒருவர் அவரது படுக்கையில் இருந்து இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றப்பட்டிருக்கின்றார்.

தமது கணவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய தேவை இருப்பதாக அவரது மனைவி அவரை "விடுங்கோ விடுங்கோ' எனக் கதறி அழுத போதிலும் அந்த நோயாளியை தள்ளிச் சென்று பஸ்ஸில் ஏற்றியிருக்கின்றனர் பொலீஸாரும் படையினரும்.

பலவந்தமாக ஏற்றிச் செல்லப்பட்ட தமிழர்கள் தாம் அணிந்திருந்த உடையுடனே உடனடியாக பஸ்ஸில் சென்று ஏறுமாறு மிரட்டப்பட்டனர். உடைகளை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசம் தரவில்லை. அவர்கள் தமது இயற்கைக் கடன் களைச் செய்துவிட்டுப் புறப்படுவதற்குக் கூட நேர அவகாசம் வழங்கப்படவில்லை என்று கண்கண்ட சாட்சிகள் பலரும் சர்வ தேச செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரி வித்திருக்கின்றனர்.

ஜேர்மனியில் ஹிட்லரின் காலத்தில் அவர் யூதர்களுக்கு எதிராக நடத்திய இனச் சுத் திகரிப்பையே, தமிழர்கள் பலவந்தமாக கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட அரசின் நடவடிக்கை ஒத்திருப்பதாக பிர தான எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி கண்டனம் தெரிவித்திருகிறது. (அ)

நன்றி . உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.