Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ -நீதியரசர் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ -நீதியரசர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்,  ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

‘இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பில் இந்தியாவின் சிந்தனை மையம் ஒன்று இன்று  ஒழுங்கு செய்த இணையம் மூலமான கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன்,

“13 ஆவது திருத்த சட்டம் இந்திய-இலங்கை இருதரப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்வது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக அமையும். இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது.

ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இறுதித் தீர்வான சமஷ்டி முறையை எட்டும் வரைஇ போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளைப் பெறும்போது இலங்கை அரசு வழங்கிய ’13ம் அதற்கு மேலாகவும்’ என்ற வாக்குறுதிகளை செயற்படுத்த அது முன்வரவேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

கொடிய ஒரு யுத்தத்துக்கு பின்னர் எமது மக்களின் துன்ப துயரங்களை நீக்கும் வகையில் செயற்படக்கூடிய ஒரு இடைக்கால ஏற்பாடாகக் கூட மாகாண சபை எமது மக்களுக்கு பயன்படவில்லை என்பதும் பயன்படப்போவதில்லை என்பதுமே கசப்பான உண்மையாகும். எனது காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற கட்டமைப்பு மேலும் கலாசார ரீதியான இனப்படுகொலை செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் எதனையும் நாம் 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் கொண்டிருக்கவில்லை.

சில நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கூடியதாக இருந்ததென்றால் மக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்புக் குரலே அதற்குக் காரணமாக அமைந்தது.
ஆகவே, இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இத்தனை குறைபாடுகளுடன் 13 ஆவது திருத்த சட்டம் ஏற்படுத்தப்பட்டமை இந்தியாவுக்கு தோல்வி இல்லையா என்பது சாதாரணமாக எழக்கூடிய ஒரு கேள்வி தான்.

அதற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டமையும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றி கண்டமையும் முக்கிய காரணங்களாவன. இந்த இந்திய-இலங்கை ஒப்பந்த விடயத்தில் இந்தியா செய்த மிகப்பெரும் தவறு இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் ஒரு தரப்பாகக் கருதி செயற்படாமை ஆகும்.

அவ்வாறு தமிழ் மக்களை இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இணைத்து இந்தியா செயற்பட்டிருந்தால் இன்று அது தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பல்வேறு வழிகளிலும் அனுகூலமானதாக அமைந்திருந்திருக்கும். அதேபோல, அன்றைய உலக ஒழுங்கை மட்டும் கவனத்தில் கொண்டு இந்தியா இந்த விடயத்தில் காய்களை நகர்த்தியமை இலங்கை விடயத்தில் காலப்போக்கில் தவறுகளை சரி செய்வதற்கான சந்தர்ப்பங்களை இலகுபடுத்தவில்லை என்றும் கூறலாம்.

1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது இருந்த பூகோள அரசியலும் பிராந்திய அரசியலும் சந்தித்த மாற்றங்கள் முன்னர் போல பெரிய அண்ணன் தோரணையில் இலங்கையைக் கையாளும் நிலைமையில் இந்தியாவுக்கு கடினத்தை ஏற்படுத்தியது.

தென்னிந்தியாவில் தமிழ் மொழி உரிமைக்காக முன்னர் நடைபெற்ற போராட்டங்களையும் இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தையும் அதிகம் வேறுபடுத்தாமல் அவசியமற்றவகையில் அதீத எச்சரிக்கையுடன் இந்தியா செயற்பட்டமை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்தச் சட்டத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கு இந்தியா செயற்பட இடமளிக்கவில்லை.

எங்கே இலங்கையின் கிழக்கு சுயநிர்ணயம் தமிழ் நாட்டின் பிரிவினைவாதக் கருத்துக்களுக்கு ஆதரவு அளித்துவிடுமோ என்று அப்போது இந்தியா பயந்தது. மேலும் பின்னர் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களும் இலங்கையில் தமிழ் மக்கள் பிரச்சினையில் காத்திரமான ஒரு வகிபாகத்தை இந்தியா வகிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவில்லை.

இந்தியாவின் மாநில ஆட்சிக்கும் இலங்கையில் மாகாண ரீதியான ஆட்சிக்கும் எந்த அடிப்படையிலும் சமாந்திரம் வரைய முடியாது. இந்தியாவின் மாநிலங்களுக்குரிய சகல உரிமைகளும் எமது மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்திய சட்ட நிபுணர்கள் அப்போது கொண்டிருந்த போதும் அவ்வாறு அது நடைபெற இலங்கை அரசாங்கம் இடமளிக்கவில்லை.

இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன. இலங்கையின் ஒற்றை ஆட்சி கட்டமைப்பு வெறும் சட்ட ரீதியான பண்புகளைக் கொண்டதல்ல. அது சிங்கள பௌத்தர்களின் தனிப்பட்ட சித்தாந்தங்களில் தங்கியிருக்கின்றது. அது மகாவம்ச சிந்தனையினால் செதுக்கப்பட்ட, வழிநடத்தப்படுகின்ற ஒரு சமூக சட்ட கட்டமைப்பாகும். மகா வம்ச மனநிலையின் கீழ் இலங்கையை பொறுத்தவரையில் இந்தியாவானது வரலாற்றுக்காலம் தொட்டு ஒரு எதிரி நாடாகவே பார்க்கப்படுகின்றது.

ஆனால், மறுபுறத்தில் இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாக இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவை முற்றிலும் நேசிக்கின்றார்கள். ஆனால், இவற்றை சீர்தூக்கிப் பார்த்து இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா இன்றுவரை தவறியுள்ளது. அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்கு பின்னர் இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே இந்தச் சறுக்கல்கள் ஏற்பட்டன. அன்னை இந்திரா காந்தியின் பின்னர் தடங்காது முடிவெடுக்கும் ஒரு தலைமைத்துவம் இப்பொழுது தான் உதித்திருக்கின்றது.

ஆகவே, இந்தப் புரிதல்களின் அடிப்படையில் இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படக்கூடிய மாற்றமே இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் வகிபாகம் எப்படி இருக்கப்போகின்றது என்பதையும் தென்கோடியில் இந்தியாவின் பாதுகாப்பையும் உறுதிசெய்யப்போகின்றது. அதாவது, இந்தியாவின் பாதுகாப்பானது தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்று நான் பலமுறை கூறி வந்துள்ளேன்.

இந்தியா எத்தகைய நல்லெண்ண செயற்பாடுகளைச் செய்தாலும், எத்தனை கடன் உதவிகள் மற்றும் சலுகைகளை வழங்கினாலும் இலங்கை அரசாங்கங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கப் போவதில்லை. எவ்வளவு தான் இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கினாலும், இலங்கை அரசு இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்க்கும். ஆகவே தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமுடியாது. இந்தியா துணிந்து நீதியை நிலைநாட்டலாம். நிலையான தீர்வைக் கொண்டு வரலாம்.

என்னைப் பொறுத்தவரையில், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் பல உண்மைகளை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கில் சம்ஷடி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதே இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என்பது கௌரவ மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு புரியாத ஒரு விடயம் அல்ல.

கௌரவ மோடி அவர்கள் தமது முதற் சந்திப்பிலேயே இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு ஒரு கூட்டுறவு சமஷ்டியே சிறந்தது என்று கூறியிருந்தார்.

ஆகவே எந்தளவுக்கு இந்தியாவின் தென் கோடியில் உள்ள இலங்கைத் தமிழ் மக்கள் அதிகாரத்தை பெற்று பாதுகாப்பாகவும் பலமாகவும் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவுக்கும் அது பாதுகாப்பாக அமையும். என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதன் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை மிகவும் துணிச்சலான முறையில் இந்தியா இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டும்.

கடந்த ஒரு வருடகாலமாக இந்தியாவின் உள்ளீடல் அவசியம் என்பதை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். இந்தியாவின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

13 ஆவது திருத்த சட்டத்தில் எதுவும் இல்லை என்றும் இதனால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யமுடியாது என்றும் நான் இங்கு விளக்கம் அளித்ததன் அர்த்தம் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியாவோ அல்லது இலங்கைத் தமிழ் மக்களோ பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பது அல்ல.

உண்மையில் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் செய்வதன் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து எந்த ஒரு பாரதூரமான அதிகாரத்தையும் தாம் இல்லாமல் ஆக்கப்போவதில்லை என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் ஏன் அரசாங்கம் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு முயற்சிக்கின்றது என்றால், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அதிகார பகிர்வுக்கான சந்தர்ப்பங்கள் மற்றும் வாய்ப்புக்களை தற்போது அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் போதே அதனை இல்லாமல் செய்வதற்கான ஒரு அரசியல் யுக்தியாகத்தான் அதை நான் நோக்குகின்றேன்.

13 ஆவது திருத்த சட்டத்தில் எதுவும் இல்லை என்ற போதிலும் அதில் ஒரு அரசியல் இருக்கிறது. அது பூகோள அரசியலுடன் தொடர்புபட்டது.

நான் முன்னர் கூறியதுபோல, 13 ஆவது திருத்த சட்டம் இந்திய-இலங்கை இருதரப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்வது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக அமையும்.

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இறுதித் தீர்வான சமஷடி முறையை எட்டும் வரை, போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளைப் பெறும்போது இலங்கை அரசு வழங்கிய ’13ம் அதற்கு மேலாகவும்’ என்ற வாக்குறுதிகளை செயற்படுத்த அது முன்வரவேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் அதன் வரைபின் அடிப்படையிலும் நடைமுறையின் அடிப்படையிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் வகையில் அமையாமை காரணமாக தமிழ் மக்களின் தரப்புக்களும் தலைமைகளும் காலத்துக்கு காலம் தமக்கான தீர்வு எப்படி அமையவேண்டும் என்று தீர்வு திட்டங்களை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமுகத்துக்கும் முன்வைத்துள்ளனர்.

அவற்றுள் முக்கியமானவையாக வட மாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவை பொதுமக்களுடன் கலந்தாலோசித்து தீர்வு திட்டங்களை முன்வைத்துள்ளன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் இந்த தீர்வு திட்டங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். அத்துடன், எதிர்வரும் காலங்களில், தீர்வுக்கான எந்த முயற்சியும் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதன் அடிப்படையில், அவர்கள் ஒரு தரப்பாக கருதப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, 13 ஆவது திருத்த சட்ட முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகவோ அல்லது அவர்களின் ஆலோசனையோ பெறப்படவில்லை.

இந்தியாவைக் கையாள்வதில் முன்னர் போல இலங்கை அரசாங்கம் பல்வேறு ஏமாற்று வித்தைகளை மேற்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு அமைவாக இந்திய மக்களும் அதன் மத்திய மாநில அரசாங்கங்களும் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”  என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.ilakku.org/13வது-திருத்தத்தின்-இன்றை/

சமஷ்டிக்கான கருவியாக இந்திய – இலங்கை ஒப்பந்தம் உள்ளது; முழுமையாக அமுல்படுத்த இந்தியாவை வலியுறுத்தும் விக்னேஸ்வரன்

cv.w.jpg“இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது என்றும் ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்” என்ற தலைப்பில் இந்தியாவின் சிந்தனை மையம் ஒன்று இன்று ஞாயிறுக்கிழமை ஒழுங்கு செய்த Zoom மூலமான கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரதித் தலைவர் வானதி சிறினிவாசனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

“13 ஆவது திருத்த சட்டம் இந்திய-இலங்கை இருதரப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக அமையும். இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இறுதித் தீர்வான சமஷ்டி முறையை எட்டும் வரை, போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளைப் பெறும்போது இலங்கை அரசு வழங்கிய “13ம் அதற்கு மேலாகவும்” என்ற வாக்குறுதிகளை செயற்படுத்த அது முன்வரவேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு;

“கொடிய ஒரு யுத்தத்துக்கு பின்னர் எமது மக்களின் துன்ப துயரங்களை நீக்கும் வகையில் செயற்படக்கூடிய ஒரு இடைக்கால ஏற்பாடாகக் கூட மாகாண சபை எமது மக்களுக்கு பயன்படவில்லை என்பதும் பயன்படப்போவதில்லை என்பதுமே கசப்பான உண்மையாகும். எனது காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற கட்டமைப்பு மேலும் கலாசார ரீதியான இனப்படுகொலை செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் எதனையும் நாம் 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் கொண்டிருக்கவில்லை. சில நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கூடியதாக இருந்ததென்றால் மக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்புக் குரலே அதற்குக் காரணமாக அமைந்தது.

ஆகவே, இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இத்தனை குறைபாடுகளுடன் 13 ஆவது திருத்த சட்டம் ஏற்படுத்தப்பட்டமை இந்தியாவுக்கு தோல்வி இல்லையா என்பது சாதாரணமாக எழக்கூடிய ஒரு கேள்வி தான்.

அதற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டமையும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றி கண்டமையும் முக்கிய காரணங்களாவன. இந்த இந்திய-இலங்கை ஒப்பந்த விடயத்தில் இந்தியா செய்த மிகப்பெரும் தவறு இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் ஒரு தரப்பாகக் கருதி செயற்படாமை ஆகும். அவ்வாறு தமிழ் மக்களை இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இணைத்து இந்தியா செயற்பட்டிருந்தால் இன்று அது தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பல்வேறு வழிகளிலும் அனுகூலமானதாக அமைந்திருந்திருக்கும்.

அதேபோல, அன்றைய உலக ஒழுங்கை மட்டும் கவனத்தில் கொண்டு இந்தியா இந்த விடயத்தில் காய்களை நகர்த்தியமை இலங்கை விடயத்தில் காலப்போக்கில் தவறுகளை சரி செய்வதற்கான சந்தர்ப்பங்களை இலகுபடுத்தவில்லை என்றும் கூறலாம். 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது இருந்த பூகோள அரசியலும் பிராந்திய அரசியலும் சந்தித்த மாற்றங்கள் முன்னர் போல பெரிய அண்ணன் தோரணையில் இலங்கையைக் கையாளும் நிலைமையில் இந்தியாவுக்கு கடினத்தை ஏற்படுத்தியது.

தென்னிந்தியாவில் தமிழ் மொழி உரிமைக்காக முன்னர் நடைபெற்ற போராட்டங்களையும் இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தையும் அதிகம் வேறுபடுத்தாமல் அவசியமற்றவகையில் அதீத எச்சரிக்கையுடன் இந்தியா செயற்பட்டமை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்தச் சட்டத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கு இந்தியா செயற்பட இடமளிக்கவில்லை. எங்கே இலங்கையின் கிழக்கு சுயநிர்ணயம் தமிழ் நாட்டின் பிரிவினைவாதக் கருத்துக்களுக்கு ஆதரவு அளித்துவிடுமோ என்று அப்போது இந்தியா பயந்தது. மேலும் பின்னர் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களும் இலங்கையில் தமிழ் மக்கள் பிரச்சினையில் காத்திரமான ஒரு வகிபாகத்தை இந்தியா வகிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவில்லை.

இந்தியாவின் மாநில ஆட்சிக்கும் இலங்கையில் மாகாண ரீதியான ஆட்சிக்கும் எந்த அடிப்படையிலும் சமாந்திரம் வரைய முடியாது. இந்தியாவின் மாநிலங்களுக்குரிய சகல உரிமைகளும் எமது மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்திய சட்ட நிபுணர்கள் அப்போது கொண்டிருந்த போதும் அவ்வாறு அது நடைபெற இலங்கை அரசாங்கம் இடமளிக்கவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன. இலங்கையின் ஒற்றை ஆட்சி கட்டமைப்பு வெறும் சட்ட ரீதியான பண்புகளைக் கொண்டதல்ல. அது சிங்கள பௌத்தர்களின் தனிப்பட்ட சித்தாந்தங்களில் தங்கியிருக்கின்றது. அது மகாவம்ச சிந்தனையினால் செதுக்கப்பட்ட, வழிநடத்தப்படுகின்ற ஒரு சமூக சட்ட கட்டமைப்பாகும்.

மகா வம்ச மனநிலையின் கீழ் இலங்கையை பொறுத்தவரையில் இந்தியாவானது வரலாற்றுக்காலம் தொட்டு ஒரு எதிரி நாடாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால், மறுபுறத்தில் இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாக இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவை முற்றிலும் நேசிக்கின்றார்கள். ஆனால், இவற்றை சீர்தூக்கிப் பார்த்து இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா இன்றுவரை தவறியுள்ளது. அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்கு பின்னர் இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே இந்தச் சறுக்கல்கள் ஏற்பட்டன. அன்னை இந்திரா காந்தியின் பின்னர் தடங்காது முடிவெடுக்கும் ஒரு தலைமைத்துவம் இப்பொழுது தான் உதித்திருக்கின்றது.

ஆகவே, இந்தப் புரிதல்களின் அடிப்படையில் இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படக்கூடிய மாற்றமே இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் வகிபாகம் எப்படி இருக்கப்போகின்றது என்பதையும் தென்கோடியில் இந்தியாவின் பாதுகாப்பையும் உறுதிசெய்யப்போகின்றது. அதாவது, இந்தியாவின் பாதுகாப்பானது தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்று நான் பலமுறை கூறி வந்துள்ளேன்.

இந்தியா எத்தகைய நல்லெண்ண செயற்பாடுகளைச் செய்தாலும், எத்தனை கடன் உதவிகள் மற்றும் சலுகைகளை வழங்கினாலும் இலங்கை அரசாங்கங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கப் போவதில்லை. எவ்வளவு தான் இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கினாலும், இலங்கை அரசு இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்க்கும். ஆகவே தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமுடியாது. இந்தியா துணிந்து நீதியை நிலைநாட்டலாம். நிலையான தீர்வைக் கொண்டு வரலாம்.

என்னைப் பொறுத்தவரையில், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் பல உண்மைகளை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கில் சம்ஷடி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதே இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என்பது கௌரவ மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு புரியாத ஒரு விடயம் அல்ல. கௌரவ மோடி அவர்கள் தமது முதற் சந்திப்பிலேயே இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு ஒரு கூட்டுறவு சமஷ்டியே சிறந்தது என்று கூறியிருந்தார். ஆகவே எந்தளவுக்கு இந்தியாவின் தென் கோடியில் உள்ள இலங்கைத் தமிழ் மக்கள் அதிகாரத்தை பெற்று பாதுகாப்பாகவும் பலமாகவும் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவுக்கும் அது பாதுகாப்பாக அமையும். என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதன் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை மிகவும் துணிச்சலான முறையில் இந்தியா இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டும். கடந்த ஒரு வருடகாலமாக இந்தியாவின் உள்ளீடல் அவசியம் என்பதை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். இந்தியாவின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

13 ஆவது திருத்த சட்டத்தில் எதுவும் இல்லை என்றும் இதனால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யமுடியாது என்றும் நான் இங்கு விளக்கம் அளித்ததன் அர்த்தம் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியாவோ அல்லது இலங்கைத் தமிழ் மக்களோ பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பது அல்ல. உண்மையில் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் செய்வதன் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து எந்த ஒரு பாரதூரமான அதிகாரத்தையும் தாம் இல்லாமல் ஆக்கப்போவதில்லை என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் ஏன் அரசாங்கம் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு முயற்சிக்கின்றது என்றால், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அதிகார பகிர்வுக்கான சந்தர்ப்பங்கள் மற்றும் வாய்ப்புக்களை தற்போது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைஇருக்கும் போதே அதனை இல்லாமல் செய்வதற்கான ஒரு அரசியல் யுக்தியாகத்தான் அதை நான் நோக்குகின்றேன். 13 ஆவது திருத்த சட்டத்தில் எதுவும் இல்லை என்ற போதிலும் அதில் ஒரு அரசியல் இருக்கிறது. அது பூகோள அரசியலுடன் தொடர்புபட்டது.

நான் முன்னர் கூறியதுபோல, 13 ஆவது திருத்த சட்டம் இந்திய-இலங்கை இருதரப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்வது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக அமையும். இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இறுதித் தீர்வான சம~;டி முறையை எட்டும் வரை, போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளைப் பெறும்போது இலங்கை அரசு வழங்கிய “13ம் அதற்கு மேலாகவும்” என்ற வாக்குறுதிகளை செயற்படுத்த அது முன்வரவேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் அதன் வரைபின் அடிப்படையிலும் நடைமுறையின் அடிப்படையிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் வகையில் அமையாமை காரணமாக தமிழ் மக்களின் தரப்புக்களும் தலைமைகளும் காலத்துக்கு காலம் தமக்கான தீர்வு எப்படி அமையவேண்டும் என்று தீர்வு திட்டங்களை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமுகத்துக்கும் முன்வைத்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவையாக வட மாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவை பொதுமக்களுடன் கலந்தாலோசித்து தீர்வு திட்டங்களை முன்வைத்துள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் இந்த தீர்வு திட்டங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். அத்துடன், எதிர்வரும் காலங்களில், தீர்வுக்கான எந்த முயற்சியும் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதன் அடிப்படையில், அவர்கள் ஒரு தரப்பாக கருதப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, 13 ஆவது திருத்த சட்ட முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகவோ அல்லது அவர்களின் ஆலோசனையோ பெறப்படவில்லை.

இந்தியாவைக் கையாள்வதில் முன்னர் போல இலங்கை அரசாங்கம் பல்வேறு ஏமாற்று வித்தைகளை மேற்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு அமைவாக இந்திய மக்களும் அதன் மத்திய மாநில அரசாங்கங்களும் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

https://thinakkural.lk/article/76787

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்தத்தை முழுமையாக

 

“அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியது தமிழத் தரப்பினருக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. தமக்காகக் குரல் கொடுக்க இந்தியா களமிறங்கியிருப்பதாக அவர்கள் நம்புகின்றார்கள். தமிழ்க் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் அதனை வரவேற்று அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், உண்மையில் மோடியின் இந்த நகர்வு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டுவந்து விடுமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ‘மெய்நிகர்’ சந்திப்பின் போதுதான் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என மோடி வலியுறுத்தியிருந்தார். அதனையடுத்தே 13ஆவது திருத்தம் குறித்து அனைவரது கவனமும் திரும்பியிருக்கின்றது.

“இந்தியா எம் மீது அழுத்தம் கொடுக்க முடியாது” என முன்னாள் கடற்படை அதிகாரியும், மாகாண சபைகள் அமைச்சருமான சரத் வீரசேகர கர்ஜித்திருக்கின்றார். “அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பன்மை இருப்பதால், மோடியின் கருத்துக்கு செவிமடுக்கத் தேவையில்லை” என பௌத்த பிக்கு ஒருவர் முழங்கியிருக்கின்றார். போராசிரியரான மெதகொட அபயதிஸ்ஸ தேரரே அவ்வாறு கூறியிருக்கின்றார்.

“13ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்து ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்தில் வலுவடைந்திருக்கும் பின்னணியில், இந்தியப் பிரதமர் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருப்பதன் பின்னணியில் நிச்சயமாக ஒரு அரசியல் நகர்வு இருந்திருக்க வேண்டும். அண்மைக்காலத்தில் ’13’ குறித்தோ, இனநெருக்கடிக்கான தீர்வு குறித்தோ பேசாதிருந்த இந்தியா இப்போது, அதிரடியாக இவ்வாறு கூறியிருப்பது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என்பது உண்மைதான்.

1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் குழந்தைதான் 13 ஆவது திருத்தம். இலங்கை மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தியாவிடம் இன்றுள்ள ஒரேயொரு துருப்புச் சீட்டும் அதுதான். அந்தத் துருப்புச் சீட்டு தம்மிடம் இருக்கின்றது என்பதை மஹிந்தவுக்கு, மோடி நினைவுபடுத்தியமைக்குக் காரணம் இருக்கின்றது.

சீனாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்கு இதனை இந்தியா இப்போது பயன்படுத்தியிருப்பதாகவே இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. அதேவேளையில், “13 ஐ இல்லாதொழிக்க வேண்டும்” என ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாகச் சொல்லிவருவதும் இந்தியப் பிரதமரின் இந்த அதிரடி நகர்வுக்கு ஒரு காரணம்.

மோடியின் இந்த அதிரடிக் கருத்து ராஜபக்‌ஷக்களுக்கு கடும் சீற்றத்தையும், எரிச்சலையும் கொடுத்திருக்கின்றது. மோடி இதனை வலியுறுத்திய போது, மஹிந்த ராஜபக்‌ஷ அதற்கு பிரதிபலிப்பு எதனையும் வெளியிடவில்லை. மௌனமாகவே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரு நாட்டு கூட்டறிக்கையில் மோடி சொன்னது என்ன என்பது தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட, இலங்கை அரசின் சார்பில் தனியாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அது மறைக்கப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் அந்த செய்தி வெளிவருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதையே இது பிரதிபலிக்கின்றது.

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு. தற்போதைய 13 இல் உள்ள அம்சங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுமா என்பது முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கும் பின்னணியில்தான் ’13’ இல் உள்ள அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மோடி கூறியிருக்கின்றார்.

ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மாகாண சபைகள் குறித்து இரண்டு விதமான நிலைப்பாடுகள் உள்ளன. ஒரு தரப்பினர் அது இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றார்கள். குறிப்பாக கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பு மாகாண சபைகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. மஹிந்த தரப்பு மாகாண சபைகள் இருக்கட்டும் ஆனால், அதிகாரங்களைப் பிடுங்கி விடுவோம் என நினைக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில்தான் மோடி இப்போது களமிறங்கியிருக்கின்றார். மோடியைப் பொறுத்தவரையில் இலங்கை மீது தமது பிடியை வைத்திருப்பதற்கு அவர்களுக்குள்ளது 13 மட்டும்தான். அதனால், அதனைப் பாதுகாக்க அவர்கள் விரும்புவார்கள். மோடியின் இந்த நகர்வு தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனைக் கொண்டுவருமா எனப் பார்த்தால் நிச்சயமாக இல்லை. தமது நலன்களுக்காக இந்தியா மேற்கொள்ளும் மற்றொரு காய்நகர்த்தல்தான் இது.

1980 களில் அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்க தமிழ்ப் போராளிகளை ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். இப்போது அதேபோல சீனாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை விடுவிக்க 13 ஐ மோடி பயன்படுத்துகின்றார். அதாவது மீண்டும் பகடைக்காய்களாக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். இதனைவிட, சமஷ்டி என 13 க்கு மேலாக எதிர்பார்த்த தமிழர்கள், 13ஐ பாதுகாத்தால் போதும் என்ற நிலைக்கு இப்போது வந்துவிட்டார்கள்.

மோடியின் இந்த நகர்வை எமக்குச் சார்பாகப் பயன்படுத்த தமிழ்த் தலைவர்களிடம் தந்திரோபாயங்கள் ஏதாவது உள்ளதா?

 அகிலன் –

http://www.ilakku.org/narendra-modi-sri-lanka-13th-amendment-act-india/

13ஆம் திருத்தமும் தமிழரின் பரிதாப நிலையும் – கலாநிதி அமீரலி

கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா

Dr.Ameer-Ali-2.jpgகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா? அது ஒரு புறமிருக்க, இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் அந்தத் திருத்தத்தின் ஆரம்ப கர்த்தாவான இந்தியாவுக்கும் அதனைச் செயற்படுத்த வேண்டிய இலங்கைக்குமிடையே வளர்கின்ற ராஜரீக, பொருளாதார உறவுகளுக்கு மத்தியில் இந்தத் திருத்தம் முற்றாக மறக்கப்பட்டு தமிழரைத் தவிக்க விடப்படும் ஓர் ஆபத்து எழுந்துள்ளதையே இக்கட்டுரை விபரிக்கின்றது.

1-2-1-1024x565.jpg1987ஆம் ஆண்டு இந்தியாவின் அழுத்தத்தின் மத்தியில் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தம் அமுலாக்கப்படுமானால் ஒற்றையாட்சி அமைப்பின்கீழ் மாகாண சபைகளினூடக அதிகாரம் பகிரப்பட்டு தமிழரின் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் கௌரவமானதுமான தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போர் முடிந்தபின்னர் பெரும்பான்மை இனத்துக்குள் வளர்ந்த பௌத்த சிங்கள பேராதிக்கவாதச் சக்திகள் அந்தத் திருத்தத்தை அமுல்படுத்துவதற்குச் சற்றேனும் சம்மதிக்கவில்லை. ஆகையால் அந்தச் சக்திகளின் அழுத்தத்தை மீறத் துணிவற்ற அரசாங்கங்களும் அதனை அமுல்படுத்த விரும்பாததில் ஆச்சரியமில்லை. அத்துடன் போருக்குப் பின்னர் ஆட்சிக்குவந்த ராஜபக்ச அரசு இந்தியாவை ஒதுக்கிவிட்டு சீனாவுடன் நெருங்கிய சினேகம்பூண்டு அதன்மூலம் பல பொருளாதார நன்மைகளை அடைந்த நிலையில் 13ஆம் திருத்தம் கவனிப்பாரற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

2015 இல் ராஜபக்ச அரசு கவிழ்ந்து நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டபோது தமிழ்த் தலைமைத்துவம் அவ்வரசாங்கத்துடன் கைகோர்த்து நின்று 13ஆம் திருத்தம் புத்தியிர்பெற்று அமுலாக்கப்படும் எனக் கனவு கண்டது. ஆனால் அந்த அரசாங்கமோ செயற்றிறனற்ற ஒன்றாகவும், உட்பூசல்கள் நிறைந்த ஒன்றாகவும் காணப்பட்டதால் அந்தக் கனவு நனவாகவே இல்லை. இந்த நிலையில் 2019 ஜனாதிபதித் தேர்தலும் 2020 பொதுத் தேர்தலும் பௌத்த சிங்கள பேராதிக்கவாதிகளின் பூரண ஒத்துழைப்புடன் ராஜபக்ச பரம்பரையை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளன.

இந்த அரசியல் மாற்றங்களின் மத்தியில் இரண்டு எதிர்பாராத சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து இலங்கையையும் அவை பாதித்துள்ளன. ஓன்று கொவிட்-19 கொள்ளை நோய். மற்றது அதனால் விளைந்த உலகப் பொருளாதார மந்தம். இலங்கை கொள்ளை நோயை ஒருவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வெற்றிகண்டாலும் பொருளாதார மந்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை விரைவில் விளக்குவோம்.

1-3-1-1024x682.jpgஇதனிடையே இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் மூலகாரணம் சீனாதான் என்று அமெரிக்கா ஆரம்பித்த பிரச்சாரம் இன்று மேற்கு நாடுகளையும் உள்வாங்கி சர்வதேச மட்டத்தில் சீன எதிர்ப்புப் பேரணியொன்றை உருவாக்கியுள்ளது. அந்த அணியின் ஒரு பிரதான அங்கத்துவ நாடாக ஆசியாவில் விளங்குவது இந்தியா. சர்வதேச ரீதியான இந்த நிகழ்வை மூன்றாவது நிகழ்வெனவும் கருதலாம். ஆனால் இதுவோ முதலிரண்டைப்போலன்றி பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

கடந்த நூற்றாண்டின் இறுதிக் கால்வாசியிலிருந்து எழுச்சிபெற்ற சீனா, பொருளாதாரத்திலும் படைபலத்திலும் படிப்படியாக வளர்ந்து, ஆசியப் பிராந்திய வல்லரசாக எழுச்சி பெற்றமை அமெரிக்காவின் ஏகாதிபத்திய வல்லரசுக்கு விழுந்த ஒரு பேரிடி. சீனாவின் “ஒரு பட்டை ஒரு பாதை” என்ற புதிய பொருளாதாரச் சூத்திரம் வரலாற்றுப் புகழ்மிக்க பட்டுப்பாதையின் மறுவடிவமாகி, அப்பாதை வழியாக ஆசியாவையும் ஆபிரிக்காவையும் பசுபிக் தீவுகளையும் கட்டியாண்டு, அதன் மூலம் அடுத்த உலக வல்லரசாக மாற நினைக்கும் சீனாவை எப்படியாவது தடுக்கவேண்டுமென்று அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சிக்கின்றது.

இலங்கையிலும் 2009க்குப் பின்னர் ராஜபக்சாக்களின் ஆதரவுடன் சீனா வலுவாகக் காலூன்றி இருப்பது கண்களுக்குட் தைத்த ஒரு முள்ளாக அமெரிக்காவை கரித்துக்கொண்டே இருக்கிறது. அதேசமயம், அடுத்தவீட்டு இந்திய மணமகனை ஒதுக்கிவிட்டு தூரத்து சீனாக் காதலனோடு இலங்கை தேனிலவு கொண்டாடி அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் அக்காதலனிடம் அடகுவைத்தது இந்திய ராஜதந்திரிகளின் சீற்றத்தை வளர்த்துள்ளமை கண்கூடு. எனவே இந்து சமுத்திரத்திலிருந்து சீனாவைத் துரத்த இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதை உலகமே அறியும்.

சீனாவுக்கெதிராக வளர்ந்துவரும் அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் ஒன்றுபட்ட பலமும், அதனைப் பொருட்படுத்த மறுப்பதால் சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களும், விரைந்து சரியும் உண்ணாட்டுப் பொருளாதாரமும், அச்சரிவால் தீவிரமடையும் மக்களின் கஷ்டங்களும் ஒன்று சேர்ந்து இலங்கையின் ராஜபக்ச ஆட்சியை அதன் சீன உறவை தற்போதிருக்கும் மட்டத்திலேயே வைத்துக்கொண்டு, இந்தியாவுடனான உறவை அதிகரிக்கச் செய்யத் தூண்டியுள்ளது. அந்த மாற்றத்தின் வெளிப்பாடே கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் அவசரமாக பிரதமர் மோடியைச் சந்திக்க விரைந்ததும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தில்லியிலுள்ள அவரது சகாவைத் திருப்திப்படுத்தவதற்காக தற்போது எடுக்கும் நடவடிக்கைகளுமாகும். இந்தியாவுடன் வளரும் இந்த உறவின் பின்னணியில் பதின்மூன்றாம் திருத்தத்தம்பற்றி மீண்டும் பேசப்படுகின்றது. இது தமிழினத்துக்குப் பலனளிக்குமா?

gota-modi-1024x732.jpgகடந்த வருடம் கோத்தாபய ராஜபக்ச இந்தியப் பிரதமரைச் சந்தித்தபோது அவர் 400 கோடி டொலர் நிதியுதவியை இந்தியாவிடம் பெற்றுக்கொண்டு, பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவாத உறுதியளித்ததையும், இலங்கை திரும்பியவுடன் அந்த உறுதியை காற்றில் பறக்கவிட்டதையும் யாவரும் அறிவர். இது மோடிக்கு ஏற்பட்ட ஓர் அவமானம்.

இதுவரை 960 கோடி டொலருக்கு இந்தியாவிடம் இலங்கை கடன்பட்டுள்ளது. அண்மையில் மேலும் 400 கோடி டொலர் பெறுமதிக்கு இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் பணமாற்று ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளன. இன்னும் 1000 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தம் பறற்றியும் பேச்சசுவார்த்தைகள் நடைபெறுகின்றன. மேலும் 15 கோடி டொலர் பண உதவியை பிரதமர் மோடி பௌத்த உறவினை இலங்கைக்கு வழங்கியுள்ளார். சில மாதங்களுக்குமுன் உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட குஷிநகர் விமான நிலையத்துக்கு முதன்முதலாக இலங்கைச் சுற்றுலாப் பயணிகளை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வளவு தாராண்மையுடன் உதவிகளை அள்ளி வழங்கும் இந்தியப் பிரதமர் ஏன் மகிந்த ராஜபக்சவுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதுபற்றி அழுத்தம் கொடுக்கவில்லை? வழமைபோல பேச்சோடு பேச்சாக ஏதோ புத்திமதி கூறுவதுபோல் அந்தத் திருத்தம்பற்றி மகிந்தவுக்கு ஞாபகப்படுத்தினாரே தவிர, தமிழரின் பிரச்சினையில் உண்மையான சிரத்தை இருந்திருந்தால் பொருளாதார உதவியின் ஒரு நிபந்தனையாக 13ஆம் திருத்தம் அமுலாவதை பேச்சுவாhத்தiயில் நுழைத்திருக்கலாமல்லவா? அல்லது குறைந்தபட்சம் அதை அமுல்படுத்துவதற்கு ஒரு கால வரையறையையாவது விதித்திருக்கலாமல்லவா? இலங்கையின் வங்குறோத்து நிலையை அறிந்தும் ஏன் அந்த நிலையை அவர் தமிழினத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை? இந்தத் தயக்கத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஓன்று, மோடியைப் பொறுத்தவரை அவரது நாட்டின் நலனைவிட இலங்கைத் தமிழரின் பிரச்சினை முக்கியமல்ல. இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஒரு வரப்பிரசாதம்போல் கிடைத்துள்ளது. சீனாவுடனான இலங்கையின் உறவை முற்றாக வெட்டியெறிய முடியவில்லையாயினும் அதனை மேலும் வளரவிடாமற் தடுத்து, பொருளாதார உதவிகள் மூலம் இலங்கையின் சந்தையை இந்திய முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகத் திருப்பி, இலங்கையின் வளங்களையும் இந்திய வசப்படுத்த முடியுமாயின் இந்தியாவின் பிராந்தியப் பேரரசு நோக்கம் சாத்தியப்படுமல்லவா? ஆகவே இந்திய முதலாளி வர்க்கம் மோடியின் இந்த முயற்சிக்குப் புரண ஆதரவையும் நல்கும். இந்த நோக்கம் நிறைவேற ஏன் இலங்கைத் தமிழரின் பிரச்சினை ஒரு முட்டுக்கட்டையாக வேண்டும்?

இரண்டாவதாக, இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தில்லியுடன் நேரடியாகப் பேசுவதில்லை. சென்னையினூடாகத்தான் தொடர்பு கொள்வர். அதாவது தென்னிந்திய அரசை தரகனாகக் கொண்டே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பர். ஆனால், கடந்த இந்தியத் தேர்தலில் தமிழ் நாட்டின் ஆதரவில்லாமலே மோடி, மத்திய அரசைக் கைப்பற்றியுள்ளார். எனவே சென்னையின் அழுத்தத்தைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் அவருக்கில்லை. ஆதலால் இலங்கைத் தமிழரின் பிரச்சினை மோடியின் பதவிக்கு எந்த ஆபத்தையும் கொடுக்கப் போவதில்லை.

இந்த இரண்டு காரணங்களினாலும் 13ஆம் திருத்தம் அமுலாக்கப்படுவதை இந்தியா வரவேற்குமே ஒழிய அதனைக் கட்டாயப்படுத்தி தனக்குக் கிடைக்கும் பிராந்திய ஆதிக்க வாய்ப்புகளை இழக்க விரும்பாது. இதனாலேதான் இலங்கைத் தமிழரின் நிலை வளருகின்ற இந்திய-இலங்கை உறவால் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதைவிடவும் மோசமான நிலையில் முஸ்லிம்களின் நிலை உள்ளது. மகிந்த அரசு எடுக்கும் சில நடவடிக்கைகள் முஸ்லிம் இனத்தைப் பாதித்து மோடியை திருப்திபண்ணுவதாக அமைகின்றன. உதாரணமாக, பசுமாடு அறுப்பதற்குத் தடை, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தை நீக்குதல், மதரசாக் கல்விக்கு முட்டுக்கட்டை போடுதல் என்பனவெல்லாம் என்பனவெல்லாம் மோடிக்கும் அவரின் இந்துத்துவ வாதிகளுக்கும் மதுரகானமாக அமைவன. சுருக்கமாகக் கூறின் கோத்தாபய-மகிந்த ஆட்சி ஒரு அரசில் அதிகாரத் தந்திரத்தின் அடிப்படையில் நடைபெறுவதை உணரலாம். அதாவது வடக்கிலும் கிழக்கிலும் தமிழரை நசுக்கநசுக்க தெற்கிலே அரசுக்கு ஆதரவு பெருகும், முஸ்லிம்களை நசுக்கநசுக்க மோடியின் தயாளம் பெருகும். தமிழர்களுக்காவது அவர்களின் துயரத்தை உலகறியச் செய்வதற்கு புகலிடம் புகுந்த தமிழினம் மேற்கு நாடுகளிலிருந்து அயராது உழைக்கின்றது. முஸ்லிம்களுக்கு அதுதானும் இல்லை. இஸ்லாமிய சகோதரத்துவம், முஸ்லிம்கள் ஒரே உம்மத்துகள் என்பதெல்லாம் வெறும் கற்பனையேயன்றி நிஜமில்லை.

ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை. இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. மூடி என்ற சர்வதேச பொருளாதாரக் கண்காணிப்புத் தாபனம் இரண்டொரு நாட்களின் முன்னர் வெளியிட்ட அதன் அறிக்கையில் இலங்கையின் பொருளாதாரத் தரத்தை மூன்று படிகாளாற் குறைத்தள்ளது. தாங்கொணாத கடன் பழு, ஏற்றுமதிகளின் வீழ்ச்சி, அரசாங்க நிதிநிலையிலும் சென்மதி நிலுவையிலும் ஒரே சமயத்தில் அதிகரிக்கும் பற்றாக்குறைகள், நாணய மதிப்பிறக்கம், வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு, விரிவடையும் வருமான ஏற்றத்தாழ்வு, வறுமையின் கொடுமை என்றவாறு பொரளாதாரப் பிணிகள் நாட்டைப் பீடித்துள்ளன. விரைவில் நாடாளுமன்றத்திற் சமர்ப்பிக்கப்படப்போகும் வரவுசெலவுத் திட்டம் எதிர்வரப்போகும் கஷ்டங்களுக்குக் கட்டியம் கூறுவதுபோல் அமையலாம்.

இந்தியாவின் தயாளமும் மற்றவர்களின் உதவிகளும் சொற்ப காலத்துக்குச் சுகத்தைத் தரலாம். ஆனால் அனைத்து மக்களின் ஒத்துழைப்பின்றி நாட்டுக்கு நிரந்தர சுபீட்சமில்லை. சிலரை எக்காலமும் ஏமாற்றலாம், எல்லாரையும் சிலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லாரையும் எக்காலமும் ஏமாற்ற முடியாது. பௌத்த சிங்கள மக்கள் இதனை விரைவில் உணர்வர். அவ்வாறு அவர்கள் உணரும்போது “ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ?”

 

https://thinakkural.lk/article/77539

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற வேண்டும்.

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-696x352.jpg

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் சென்றவாரத் தொடர்ச்சியை இங்கு தருகின்றோம்.

30 ஆண்டுகளாக இது பற்றிய முன்னெடுப்புகளோ அல்லது முன்னேற்றமோ இல்லாமல் தமிழ் மக்களின் கோரிக்கையாகவும், இந்திய அரசின் கோரிக்கையாகவும் இருந்ததே தவிர இதற்கு இலங்கை அரசாங்கம் – சிங்கள அரசாங்கம் – எந்த விதத்திலும் செவிசாய்க்கவில்லை. அதனால் தான் அதன் எதிர்காலம், கடந்த காலத்தில் தான் தங்கியுள்ளது.

ஒரு அரசியல் சூழலுக்காக இந்திய அரசாங்கம் இதை பேசவேண்டும் என நினைத்தால்கூட, ராஜபக்ஸ குடும்ப வீச்சு பெருமளவில் இருப்பதால், 13ஆம் திருத்தம் பற்றி எந்தவித செயற்பாட்டிலும் ஈடுபடும் நோக்கம் இருக்காதென நினைக்கிறேன். தங்களுக்கு போதிய அதிகாரம் இல்லாத போதே 13ஆம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வராத இலங்கை அரசாங்கம், தற்போது அதை கொண்டு வரும் என கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. அத்துடன் அரசியல் சாசனத்தின் மூலமோ, நிர்வாக கட்டமைப்பின் மூலமோ அதை எடுத்து வரவேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. ஆனால் புவிசார் அரசியல், பொருளாதாரம் பற்றி இலங்கை அரசாங்கம் சிறிது சிந்திக்குமேயானால், இதை இந்தியாவுடனான உரையாடல்களுக்காக பயன்படுத்தும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

அயல் நாட்டுடனான உறவுகளுக்காகவோ அல்லது இந்தியாவுடனான உறவுகளைப் பேணவோ 13ஆம் திருத்தம் மற்றும் 13 + ஐ பற்றி அவர்கள் தொடர்ந்து பேசலாம். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு எந்தவித வாய்ப்பும் கிடையாது. ஏனெனில், சிங்கள மக்களும், பௌத்த குருமார்களும், பௌத்த மதவாதிகளும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மையினரின் ஒப்புதல் வேண்டும் என கூறுவதிலிருந்து இதன் எதிர்காலத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமேயானால், அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதை ஏற்படுத்தாது 13ஆம் திருத்தத்தை ஏற்படுத்த முடியாது. இதற்காக தமிழர் பிரதேசங்களில் நிறைவேற்றப்படுகின்ற இராணுவக் கட்டுமானப் பணிகள், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் நிலம், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்புமேயானால் தான் 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேசுவதையோ, நிறைவேற்றுவதையோ தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்கலாம். இதைப் பற்றி கனவு காண்பதற்குக்கூட இதில் ஒன்றும் கிடையாது.

இது ஒரு நீர்த்துப் போன திட்டம். நாம் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்திருக்கின்றோம். நம்முடைய நிலப்பரப்பு எதிரியின் கையில் வீழ்ந்து கிடக்கிறது. நம்முடைய பொருளாதாரம் வீழ்த்தப்பட்டுள்ளது. சமூகச் சூழல் மிகப் பெரும் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கடந்து அங்கு ஒரு அதிகாரப் பகிர்வு நடக்கும் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. கிடைக்காததை கிடைக்கச் செய்வது பற்றித் தான் நாம் கனவு காண வேண்டும். என்னுடைய கனவு என்னவென்றால், இத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். அங்கு வழி நடத்துவதற்கான சிறந்த தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். இதனூடாக 13ஆம் திருத்தத்தை ஏற்படுத்த ஒரு சாதாரண நிலைப்பாட்டை ஏற்படுத்தும்.

13ஆம் திருத்தச் சட்டம் ஒரு நீர்த்துப் போன விவகாரம். அதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தால் நம் உண்மையான கனவுகள் மழுப்பப்படும் என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகின்றேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம்1987இற்கு பின்னர் தமிழர்களின் நிலைப்பாட்டை இந்தியாவும் பயன்படுத்திக் கொண்டது. அதே போல் இலங்கையும் இதைப் பற்றி பேசுவோம், நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறி 30 ஆண்டுகளை நகர்த்தி விட்டது. இது ஒரு ராஜதந்திர உரையாடலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் இது பயனளிக்கவில்லை. இதை நம்பி இருப்பது என்பது வீணாக காலத்தைக் கடத்துவது போலாகும் என்று தான் நான் நினைக்கிறேன். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு சூழல் இல்லாத போது நாம் அந்த அதிகாரத்தைப் பற்றி எப்படி சிந்திப்பது என்பது தான் எனது கருத்து.

கேள்வி

ஈழத் தமிழர்களுக்கு 13ஆம் திருத்தம் எவ்வாறான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

பதில்

1987இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக 13ஆவது திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டது என்று சொன்னாலும்கூட மக்களுக்கு இது எந்தவிதமான உரிமைகளையும் பெற்றுத் தரவில்லை என்றுதான் கூற முடியும்.

அதிகாரப் பகிர்வு என்பதில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பது ஒரு கருத்தாகும். இலங்கை உச்ச நீதிமன்றம் அது செல்லாது என்று கூறியதைத் தொடர்ந்து, நிர்வாகம், அரசியல், அதிகாரம் உட்பட எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா சொல்லிக் கொண்டிருப்பது, இந்திய வெளியுறவுக் கொள்கையின் பலவீனத்தைக் காட்டுகின்றது. இலங்கை இந்திய அரசுகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தால் போதும் என்றளவில் இருப்பதால் தான் இந்த 13ஆம் திருத்தம் அமுல்ப்படுத்தப்பட பலவீனமாக உள்ளது.

இவ்வாறு இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பேசிக்கொண்டிருப்பது, தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்கள் பற்றி அக்கறை கொண்டுள்ளது. அதனால் தான் 13ஆம் திருத்தத்தைப் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசுகின்றது. அழுத்தம் கொடுக்கிறது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றது.

இதேவேளை இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை. 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது அவர்கள் இருந்த சூழல், அதாவது அவர்கள் பன்னாட்டு சூழலில் சிக்கியிருந்த போது அவர்களை இவ்வாறு ஏற்றுக் கொள்ள வைத்துள்ளதே தவிர, இதனால் ஈழத் தமிழர்களுக்கோ, இந்தியாவிற்கோ எந்தவித பயனும் இல்லை.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து 22 ஆண்டுகளின் பின்னர் இலட்சக் கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது இந்த ஒப்பந்தத்தின் பலவீனத்தைக் காட்டுகின்றது. இந்த இலங்கை இந்திய ஒப்பந்தமும், 13ஆவது திருத்தச் சட்டமும் இலங்கையில் இந்தியப் படையினர் காலூன்றவும், அதன் ஊடாக ஒரு யுத்தம் மூளவும், 2008, 2009 காலப்பகுதிகளில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படவும் வித்திட்டது எனலாம். இலங்கை அரசு 1987 ஒப்பந்தம், 13ஆம் திருத்தத்தை வைத்து இந்தியாவை ஏமாற்றியதுடன், தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியது. இதனாலேயே இலங்கையில் ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதற்கு இந்தியாவும் பின்னணியாக செயற்பட்டது.

தற்போது 13ஆவது திருத்தத்தை சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டாலொழிய இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முடியாது என இந்தியா சொல்கின்றது. இதை நிறைவேற்ற முடியாது என்பதை இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம், இந்தியாவுடனான இராணுவ கட்டமைப்பு போன்றவற்றால் இந்தியாவின் கோபத்திற்குள்ளான நிலையில் இலங்கை இருப்பதால், இந்தியா தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டாது, இலங்கையை எவ்வாறு தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க முயல்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இராணுவக் கட்டமைப்பிற்காக அதீத செலவுகள் செய்ய வேண்டிய ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றது. கோவிட் 19 தாக்கத்தால் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பண சேமிப்புகளும் குறைந்து வருவதால், இலங்கை ஒரு பணவீக்கத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையை நிவர்த்தி செய்வதற்கு சீனாவின் உதவியை பெற முடியுமா என்றால், சீனா கொடுத்த கடனுக்கே வட்டியை பெற முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்தியாவுடன் ஒரு பொருளாதார முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் நிலையை இலங்கை கொண்டிருக்கின்றது. இவை தொடர்பாக இலங்கை இந்தியப் பிரதமர்கள் காணொளி ஊடாக பேசியிருக்கின்றனர்.

-பேராசிரியர் இரா.மணிவண்ணன்-

https://www.ilakku.org/13ஆம்-திருத்த-பரிந்துரை-பற/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என இன்று  நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுகையில்,

13 ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியுமல்ல.

தமிழ் மக்களை பொறுத்தவரையிலே அவர்கள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சர்வதேச உடன்படிக்கைகளில் ஒன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை உடன்படிக்கையாகும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இவ்வுடன்படிக்கையின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது.

தமிழ் மக்கள் இவ்வுடன்படிக்கையின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளப்படாதது இவ்வுடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாக இருப்பினும், தமிழ் மக்கள் இவ்வுடன்படிக்கையின் ஒரு தரப்பாக தவிர்க்கப்பட்டதினால் தமிழ் மக்களின் சார்பில் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவிற்கு, இவ்வுடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான மேலதிகமான ஒரு கடப்பாடு உள்ளது. ஆனால் உண்மை நிலவரமோ வேறு.

அன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட சிறீலங்கா அரசோ அவ்வுடன்படிக்கையையும், அதில் அடங்கிய சரத்துக்களையும் தான் அமுலாக்குவதாக கூறிக்கொண்டு அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தினையும், மாகாணசபைகள் சட்டத்தின் மூலத்தினையும் அறிமுகப்படுத்தியது.

இச்சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தபோது, அப்போதிருந்த முதன்மையான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போதைய இந்திய பிரதமர் இராஜிவ் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி திரு. சிவசிதம்பரம், திரு. அமிர்தலிங்கம் ஆகியோருடன் இச்சபையில் அங்கம் வகிக்கும் திரு. சம்பந்தனும் கையொப்பமிட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘இந்திய நிபுணர்களின் பங்குபற்றுதலின்றி இச் சட்டமூலம் வரையப்பட்டு நம் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சட்ட முன்வரைபை பகிரங்கப்படுவதற்கு முன் இந்திய அரசாங்கத்திடம் அதன் பிரதி சமர்ப்பிக்கப்படும் என்றே தமிழர் விடுதலைக்கு கூட்டணி எதிர்பார்த்திருந்தது. இவ்வாறு நடைபெறாது என நாம் கருதுவதனால் 1987 செப்ரெம்பர் 29ம்திகதி ஜனாதிபதி ஜயவர்தனவை நாம் சந்தித்து இந்தியாவிற்கு தெரியப்படுத்தாமலே இச்சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையிட்டு நாம் கவலையடைகிறோம் என தெரிவித்தோம்.

இது இந்தியாவை ஒரு தரப்பாக மதிக்காமல் நடத்துவதாக மாத்திரமன்றி, இவ்வொப்பந்தத்தில் உள்ள பந்தி 2.15ஐ மீறுவதாகவும் அமைந்துள்ளது.’

அக்கடிதத்தின் முடிவில், ‘இக்காரணங்களுக்காக தமிழ்மக்கள் திருப்தியடையும் வகையில் இவ்விடயங்களுக்கு தீர்வு காணப்படாமல், மேற்படி சட்டமூலங்களை இப்போதுள்ள வடிவத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஜயவர்தனவை வற்புறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டப்பட்டிருந்தது.

ஆகவே இந்திய இலங்கை உடன்படிக்கைக்கும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. நாம் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை நிராகரிக்கின்றோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் விடயத்தில் இது ஒரு ஆரம்பப்புள்ளியாக கூட அமையவில்லை என்ற காரணத்தினாலேயே நாம் பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தினை நிராகரிக்கின்றோம்.

தமிழ்மக்கள் பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனைக் காரணங்காட்டி இவ்வொப்பந்ததினை கிழித்தெறிவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக ஆளும்தரப்பினர், ஐனாதிபதியும், பிரதமரும் நினைக்கலாம். ஆனால் அது ஒருபோது நடக்கப் போவதில்லை. ஏனெனில் இநித்திய – இலங்கை உடன்படிக்கையும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை. அப்போதைய அரசாங்கம் இந்திய- இலங்கை உடன்படிக்கையை தன்னிச்சையாக வியாக்கியானப்படுத்தியதன் விளைவே பதின்மூன்றாம் திருத்தச்சட்டம்

ஆகவே, பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தை தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்விற்கான தொடக்கப்புள்ளியாகவேனும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாங்கள் அச்சட்டமூலத்தை நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இவ்வுடன்படிக்கையின் சரத்துக்களின் படி தமிழர் தேசத்தினை அங்கீகரித்து அவ்வொப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதனடிப்படையில் இத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வினை எட்டுவதற்கு இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/தமிழ்த்-தேசத்தை-அங்கீகர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.