Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரி..! கை கொடுத்த சகோதரி..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி கிராமத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், அவனது 6 வயது சகோதரியின் கைகளை பற்றிக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், தெருவில் சென்ற வியாபாரி ஒருவரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  தோப்புப்பட்டியில் தாய் தந்தை வேலைக்கு சென்று விட வீட்டின் மாடியில் 3 வயது சிறுவன் தனது 6 வயது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மாடியின் கைப்பிடி சுற்று சுவரில் அமர்ந்திருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக இடறி விழ அவனை அருகில் நின்ற சகோதரி கை கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளாள், ஆனால் தவறிவிழுந்த சிறுவனை முழுவதுமாக மேலே தூக்க இயலவில்லை. இரண்டு பிஞ்சுகளுமே பயத்தில் அலறியுள்ளனர்.

இதனை பார்த்த பக்கத்து வீட்டுப்பெண்ணோ அந்த சிறுவனை காப்பாற்ற முயலாமல் அவசர அவசரமாக தனது செல்போனில் படம் பிடித்தபடியே அந்த வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அந்த வீட்டின் சுற்று அவர் அருகே சென்ற அவர் மனிதம் மறந்து அதனை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

இதற்கிடையே சிறுவனின் அபயக்குரல், அந்த வழியாக சைக்கிளில் ஓமதிரவம் உள்ளிட்டவற்றை விற்றுச்சென்ற இளாங்குறிச்சியை சேர்ந்த முகமதுஷாலிக் என்ற வியாபாரியின் காதுகளில் விழுந்துள்ளது. அவர் உடனடியாக தனது சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று அந்த சிறுமியை கையை விடச்செய்து மேலிருந்து கீழே விழுந்த சிறுவனை பத்திரமாக தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

இதனை படம் பிடித்த பக்கத்து வீட்டுப்பெண், கடைசிவரை காப்பாற்ற முயலாமல் வீடியோ எடுத்து, அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வியாபாரியை பாராட்டும் நெட்டிசன்கள், வீடியோ எடுத்தவரை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

யாரென்றே தெரியாத வியாபாரி நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்து விரைந்து சென்று காப்பாற்றிய நிலையில், படம் பிடித்த பக்கத்து வீடுப்பெண்ணின் அருகில் இருந்து, நன்றாக படம் பிடிக்கும்படி கூறிய உரையாடல் அந்த வீடியோவில் இடம் பெற்று உள்ளது.

வியாபாரியை போன்ற மனித நேயமிக்கவர்கள் வாழும் இதே ஊரில்தான், கடைசி வரை வீடியோ மட்டும் எடுத்துக் கொண்டு உதவிக்கு செல்லக்கூட மனமில்லா வேடிக்கை மனிதர்களும் வாழ்கின்றனர்..!

 

பாலிமர் செய்திகள்

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.